Sunday, September 30, 2007

மாணவி தனியறையில் அடைப்பு!

9.மாணவி தனியறையில் அடைப்பு : அரசு பள்ளி ஆசிரியர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை காரையூர் மறவாமதுரையைச் சேர்ந்த மாணவி உஷா (வயது15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படிக்கிறார். செப்., 26ல் சக மாணவியருடன் பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்புக்கு சென்றார். அன்று மாலை பள்ளி முடிந்தும், உஷா வீடு திரும்பவில்லை. அவரை தேடி பெற்றோர் பள்ளிக்கு சென்றனர். சிறப்பு வகுப்பு நடத்திய ஆசிரியர் முத்து (36)விடம் விசாரித்தனர். சக மாணவியுடன் உஷா, மங்கனூர் கிராமத்துக்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.

இருப்பினும், பெற்றோர், வகுப்பறைகளை திறந்து பார்த்தனர். ஆசிரியர் தங்கும் அறையில் உஷா மட்டும் தனியாக இருந்தார். அவரை வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். ஆசிரியர் முத்து தவறான எண்ணத்துடன் தன்னை அழைத்தார். பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தனியாக அடைத்து வைத்திருந்தார் என உஷா தெரிவித்தார். ஆசிரியர் முத்து, ஏற்கனவே திருமணம் ஆனவர். இரு குழந்தைகளும் உள்ளனர். ஏற்கனவே இத்தகைய புகார்களுக்கு ஆளானவர்.

பெற்றோர், பொதுமக்கள், பள்ளியை முற்றுகையிட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். பள்ளியில் நடந்த சிறப்பு வகுப்பும் தடைபட்டது. ஆசிரியர் முத்துவை காப்பாற்ற கல்வித்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம் தலைமையில், சமாதானக்குழு அமைத்து, பெற்றோருடன் பேச்சு நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்படாததால், ஆசிரியர் முத்து மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். வேறுவழியில்லாத முதன்மைக்கல்வி அலுவலர் செல்லம், ஆசிரியர் முத்துவை சஸ்பெண்ட் செய்தார்.

நன்றிங்க, தினமலர் 30.09.2007

மாணவியின் மீது பாலியல் பலாத்காரம் தாக்குதலுக்கு தயாரான அயோக்கினுக்காக என்ன பரிந்து பேச வேண்டியிருக்கு? சட்டப்படி தண்டிக்க வேண்டியதுதானே முறை!

Saturday, September 29, 2007

2.கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்.

'கட்சி தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்' அமைச்சர் பேச்சால் சலசலப்பு!

சனிக்கிழமை, செப்டம்பர் 29, 2007

கரூர்:

கரூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட வணிக வரித்துறை அமைச்சர் எஸ்.எம்.உபையதுல்லா, கட்சி தான் முக்கியம். எம்.எல்.ஏ, அமைச்சர் பதவி எல்லாம் பிறகுதான் என்று பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

கருரில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், வணிகவரித் துறை அமைச்சர் உபயதுல்லா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சிக்கு அவர் தாமதமாக வந்தார். இதுகுறித்து தனது பேச்சின்போது கூறுகையில், என்னைப் பொறுத்தவரை இயக்கப் பொறுப்பு, கட்சிப் பணிதான் முதலில் முக்கியம்.

எம்.எல்.ஏ., அமைச்சர் பதவி எல்லாம் அதற்குப் பிறகுதான். நான் நகர செயலாளராக இருப்பதால் எங்கள் பகுதிக்கு வந்த அமைச்சர் முக ஸ்டாலினை வழி அனுப்பி வைத்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இதுதான் நான் நிகழ்ச்சிக்கு தாமதமாக வரக் காரணம் என்றார்.

ஏழைகளுக்கு இலவச நிலப் பட்டா வழங்கும் விழாவுக்கு தாமதமாக வந்ததற்கு அமைச்சர் உபையதுல்லா கூறிய இந்தக் காரணம், கூடியிருந்தவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

நன்றிங்க

பொறுப்பில்லாத அமைச்சர்,
ஏழைகளுக்கு இலவச நிலப் பட்டா வழங்கும் விழாவை தாமதப்படுத்தியது இல்லாமல் எனக்கு ஏழைகளை விட கட்சிக்கு மணியாட்டுவதுதான் ரொம்ப முக்கியம்னு தெனாவட்டான பேச்சு வேறயா..?

எல்லாம் அவரை தேர்ந்தெடுத்த மக்களைச் சொல்லனும்..!

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு!

பெண்ணின் வயிற்றில் வளர்ந்த பாம்பு! அமெரிக்காவில் பரபரப்பு!!



சனிக்கிழமை, செப்டம்பர் 29, 2007

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப் பெண்ணின் வயிற்றில் புகுந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் எடுத்துள்ளனர். அந்தப் பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும், மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாட்ரிசியா ரோஜர் என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.

அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடைகளை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவது போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினர். மேலும், பாட்ரிசியா தொடர்ந்து கடுமையாக வாந்தியும் எடுத்தபடி இருந்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை.

இதைப் பார்த்து குழம்பிய டாக்டர்கள், எக்ஸ் ரே எடுக்க முடிவு செய்தனர். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது டாக்டர்களுக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாட்ரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான்.

உடனடியாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்தனர் டாக்டர்கள். இதையடுத்து பாட்ரிசியாவை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளாக்கினர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்த பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடி வெளியே வந்தது.

இதைப் பார்த்த ஒரு நர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டார். டாக்டர்களும் கூட ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

அந்தப் பாம்பு சிறிதாக இருந்தபோதே பாட்ரிசியாவின் குடலுக்குள் புகுந்துள்ளது. பாட்ரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதுவும் வளர்ந்து வந்துள்ளது.

எப்படி இந்த பாம்பு பாட்ரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்குக் கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாட்ரிசியா, டூர் சென்றிருந்தபோது அங்கு ஆற்று நீரை அள்ளிக் குடித்துள்ளார்.

அப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் போயிருக்கலாம். அந்த பாம்புதான் தற்போது வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகப்படுகின்றனர்.

பாட்ரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு 1.83 மீட்டர் நீளம் இருந்தது. வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பின் உடலில் கருப்புப் பட்டைகள் காணப்பட்டன. வாய் அகலமாக இருந்தது.

ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது.

16ம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்க முடியாமல் அவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். பின்னர் அவரை சவப் பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டனர். ஆனால் சில நாட்கள் கழித்து அந்த சவப் பெட்டிக்குள்ளிருந்து ஒரு பாம்பு வந்தது.

அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என்பது பின்னர் தெரிய வந்தது.

இதேபோல, 1642ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த காத்தரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து பல்லிகளைக் கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்து பயங்கர சம்பவமாகும்.

இந்த நிலையில் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

பாம்பு நல்ல வசதியாக வயிற்றில் வளர்ந்திருக்கிறது, ஆச்சரியந்தான்!

04.இரட்டை டம்ளர் முறை ஒழிக!

04.இரட்டை டம்ளர் முறையை ஒழிக்ககோரி டீக்கடையில் முற்றுகை



தேனி: இரட்டை டம்ளர் முறையை ஒழிக்கக்கோரி அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் டீ கடைகளில் முற்றுகை போராட்டம் நடந்தது.தேனி, காட்டுநாயக்கன்பட்டி டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை உள்ளதாகக்கூறி, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க சின்னமனுõர் ஒன்றிய பொறுப்பாளர் சுப்பையா தலைமையில் ஆண்டிபட்டி, போடி, தேனி பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் டீ கடைகளை முற்றுகையிட்டனர். எல்லா இனத்தவரையும் போல் அருந்ததியரையும் பெஞ்சில் உட்கார வைத்து டீ வழங்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான டம்ளரில் வழங்கவேண்டும் என கூறி டம்ளர்களை உடைத்தனர்.

நன்றிங்க

பொதுவானவை.

Friday, September 28, 2007

03.ஏ.டி.எம் அட்டைகள் ஜாக்கிரதை!

03. வேலை பார்த்த வீட்டில் கிரெடிட் கார்டு திருடி ரூ.14 லட்சம் "லபக்' * ஷேர் ஆட்டோக்கள் வாங்கிய புது பணக்காரன் சிக்கினான்

சென்னை : கிரெடிட் காடு மற்றும் ஏ.டி.எம்., கார்டுகளை திருடி ரூ.18 லட்சம் மோசடி செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஷேர் ஆட்டோகள், ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல் தெருவில் வசிப்பவர் சீனிவாசன்(52). பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்.

இவரது சகோதரர் கல்யாணகிருஷ்ணன்; சாப்ட்வேர் இன்ஜினியர். அமெரிக்காவில் கட்டட கான்ட்ராக்டராக உள்ளார். சீனிவாசனின் மனைவி மற்றும் மகன்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். நெல்லை குறுக்கல்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள்(50). சென்னை தண்டையார் பேட்டையில் தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தவர், சீனிவாசனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். சீனிவாசன் சொந்தமாக கார் வைத்திருந்தார். செல்லம்மாளின் உறவினர் நெல்லையை சேர்ந்த முத்துராஜ்(32), சீனிவாசனின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார்.

கல்யாணகிருஷ்ணன் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள புதிய கிரெடிட் கார்டு பெற்றார். அதை சீனிவாசனிடம் கொடுத்து விட்டு அமெரிக்கா சென்றார். சீனிவாசனின் வீட்டில் இருந்த புதிய கிரெடிட் கார்டு செல்லம்மாளிடம் கிடைத்தது. அதை முத்துராஜிடம் கொடுத்தார். கார்டை பயன்படுத்த தெரியாத முத்துராஜ் நான்கு மாதம் வீட்டில் வைத்திருந்தார். பின்னர் நண்பரிடம் காண்பித்தார். ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை போட்டு பணம் எடுக்கும் விதத்தை முத்துராஜூக்கு அவரது நண்பர் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து சிறிது சிறிதாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.14 லட்சத்தையும் முத்துராஜ் எடுத்தார். சொந்த ஊரான குறுக்கல்பட்டியில் ரூ.2 லட்சத்தில் பழைய வீட்டை புதுப்பித்தார். ரூ.4 லட்சத்தை வட்டிக்கு விட்டார். ரூ.8 லட்சத்தில் இரண்டு ஷேர் ஆட்டோக்கள் வாங்கி சென்னையில் வாடகைக்கு விட்டார். அமெரிக்காவில் இருந்த கல்யாணகிருஷ்ணன் சென்னை திரும்பினார். அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சத்துக்கு பதிலாக ரூ.112 மட்டுமே இருந்தது. இது குறித்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அவர் புகார் அளித்தார். உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், சப்இன்ஸ்பெக்டர்கள் முத்து, ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையிலான போலீசார் புது பணக்காரனான முத்துராஜ் மற்றும் வேலைக்காரி செல்லமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி பணத்தில் வாங்கப்பட்ட ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவம்:

இதேபோன்ற மற்றொரு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. அதன் விவரம்: சென்னை ராஜாஜி சாலையில் "ஆல்பா லைன்ஸ் ஷிப்பிங்' என்ற தனியார் நிறுவனம் செயல்படுகிறது. இதன் மேலாளர் தப்பான் உபாசக். நிறுவனத்தின் பெயரில் எச்.எஸ்.பி., வங்கியில் இரண்டு ஏ.டி.எம்., கார்டுகளை பெற்றார். ஏ.டி.எம்., கார்டு மற்றும் ரகசிய குறியீட்டு எண் அடங்கிய கவரை, சிங்கப்பூரில் உள்ள நிறுவன உரிமையாளருக்கு கூரியர் மூலம் அனுப்பினார். சிங்கப்பூரில் இருந்த உரிமையாளர், உலகம் முழுவதிலும் உள்ள தனது நிறுவனத்தின் கணக்குகளை ஆன்லைனில் தினமும் சரி பார்த்து வந்தார்.

சென்னையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுக்கப்பட்டிருந்தø த கண்டுபிடித்தார். சென்னை நிறுவன அதிகாரியான தப்பான் உபாசக்கிடம் பேசினார். "வங்கி கணக்கில் ஏ.டி.எம்., கார்டு பெற்று உங்களுக்கு அனுப்பியுள்ளேன்' என அவர் கூறியுள்ளார். "சிங்கப்பூருக்கு ஏ.டி.எம்., கார்டு வந்து சேரவில்லை' என உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம், உபாசக் நேற்று முன்தினம் காலை புகார் கொடுத்தார். உதவி கமிஷனர் பன்னீர்செல்வம், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரணை நடத்தினர்.

சென்னையில் "டி.டி.டி.சி.,' கூரியர் நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த மோகன் மகன் நாகேந்திரன்(22). கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், பார்சலை உடைத்து அதில் இருந்த ஏ.டி.எம்., கார்டுகளை திருடினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுப்பாளையம் மடத்துப்பட்டி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஸ்ரீராஜ்(24) மற்றும் நாகேந்திரன் நண்பர்கள். இருவரும் சேர்ந்து ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி ரூ.4 லட்சம் எடுத்து இருந்தனர். நாகேந்திரன், ஸ்ரீராஜ் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சத்தையும் போலீசார் மீட்டனர்.

நன்றிங்க

''திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்

அதைச் சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும்

திருடராய் பார்த்து...''

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு!

குண்டுவெடிப்பு: 41 பேருக்கு 9 ஆண்டுகள் சிறை; மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை!

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 28, 2007

கோவை:

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்படுவதாக தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 41 பேருக்கு 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் ஜாமீனில் விடுதலையாக நீதிமன்றம் அனுமதித்தது.

இவர்கள் தவிர அல் உம்மா பாஷா, அன்சாரி உள்ளிட்ட 158 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இன்று அவர்களுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

முதலில் மதானி உள்ளிட்ட 8 பேரும் நிரபராதிகள் என கூறி அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி உத்திராபதி அறிவித்தார்.

இதையடுத்து சாதாரண குற்றச்சாட்டுக்கள் நிரூபணமான 80 பேருக்கான தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட ஆரம்பித்தார். முதற்கட்டமாக இன்று 41 பேருக்கு தலா 5 முதல் 9 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் 25 பேருக்கு தலா 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1000 அபராதமும், 10 பேருக்கு தலா 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனையும், 6 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்துக் கொள்ளலாம் என நீதிபதி அறிவித்தார். எனவே தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே சிறையில் 9 வருடங்களுக்கு மேலே இருந்திருப்பதால் 41 பேரும் விடுதலை ஆனார்கள்.

விடுவிக்கப்படுகிறவர்கள் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை வழக்கு குறித்து வெளிப்படையாகப் பேசக் கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தொடர்ந்து தண்டனை விவரத்தை நீதிபதி உத்திராபதி நாளை அறிவிப்பார் என்று தெரிகிறது.

தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படுவதையொட்டி கோவை நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தீவிர வாகனச் சோதனை மற்றும் ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரின் முக்கியப் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றிங்க

தண்டனை அனுபவித்து முடிந்தபின் தீர்ப்பும், விடுதலையும்.

01. ஆஸ்திரேலியா பெண் சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்!

01. ஆஸ்திரேலியா பெண் வரதட்சணை கொடுமை வழக்கில் புதிய திருப்பம் * சுமையாவை கைது செய்ய போலீசார் தீவிரம்

ராமநாதபுரம் : ஆஸ்திரேலியா பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய துபாய் கணவர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் வெளிபட்டிணத்தை சேர்ந்தவர் கரீம்கனி(67). இவரது பேத்தி சுமையா(21) பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தார். சுமையாவுக்கும் பெரியபட்டிணத்தை சேர்ந்த மொகைதீன்ஹாருனுக்கும் திருமணம் நடந்தது

கணவருக்கு ஆஸ்திரேலியாவில் விசா வாங்கியிருந்த சுமையா, 2007 மார்ச் 13ல் தனக்கும் தனது கணவருக்கும் இடையே உள்ள உறவு, கருத்து வேறுபாடால் முறிந்துவிட்டது என ஆஸ்திரேலியா ஹைகமிஷனில் முறையிட்டு, கணவரின் விசாவை ரத்து செய்யும்படி மனு செய்தார். ஆஸ்திரேலியா ஹைகமிஷன் 2007 ஏப்.2ல் மொகைதீன் ஹாருனின் விசாவை ரத்து செய்தது. அதன் பின்னர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், மொகைதீன் ஹாருன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக ராமநாதபுரம் மகளிர் போலீசில் சுமையா புகார் கொடுத்தார். மொகைதீன் ஹாருனின் வீட்டிற்கு சென்ற பெண் போலீசார், மொகைதீனின் தாயார் முகபத்பீவியை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். மொகைதீனின் தாய்மாமன் மெக்தர்அலி, சுமையாவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அவரையும் வழக்கில் சேர்த்து கைது செய்தனர்.

மறுநாள், சுமையா மற்றும் அவரது உறவினர்கள், பெரியபட்டிணத்தில் மொகைதீன் ஹாருன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக திருப்புல்லாணி போலீசார், சுமையா

உள்ளிட்ட ஆறுபேரை தேடி வருகின்றனர்.

நன்றிங்க

பெண்கள் பயன்படுத்தும் ''வரதட்சணை கொடுமை'' என்ற விஷம ஆயுதத்தால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்பட்டு பாதுகாப்பு இல்லாமல் போய்விடுகிறது.

Thursday, September 27, 2007

பெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது!

பெற்ற மகளையே கற்பழித்த காமுகன் கைது

மும்பை: தனக்கு பிறந்த பெண் குழந்தையை, எட்டு வயதில் இருந்து தாரமாக மாற்றி நான்காண்டுகளாக தொடர்ந்து கற்பழித்து வந்த காமுகன் கைது செய்யப்பட்டான்.

மும்பையைச் சேர்ந்தவன் மோதிலால் சிங். வயது 32. புறநகர் பகுதியில் வடை, பஜ்ஜி விற்பது தான் தொழில். தனது தாய், மனைவி மற்றும் குழந்தையுடன், நிர்மல் நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறான் மோதிலால் சிங். மனைவி மட்டுமின்றி, தனது சொந்த மகள் மீதும் காமம் கொண்டான் மோதிலால் சிங். சிறுமிக்கு எட்டு வயதானதிலிருந்து, அவளை கதறக் கதற கற்பழித்தான்.

இந்த விஷயம், அவன் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. மனைவி மற்றும் தனது தாய் இல்லாத சமயங்களில் தான் தனது மகளுடன் தகாத உறவு வைத்துக் கொள்வது மோதிலால் சிங்கின் வழக்கம்.சில நாட்களுக்கு முன், மோதிலாலின் மனைவியும் தாயும் ஒரு திருமணத்துக்காக வெளியில் சென்று விட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அந்த சிறுமி கெஞ்சியும், கதறியும் மனமிறங்காமல் மீண்டும் கற்பழித்தான் மோதிலால்.வீடு திரும்பிய மோதிலால் மனைவியும், தாயும், சிறுமி அழுது கொண்டிருப்பதை பார்த்தனர்.

அவளிடம் விசாரித்த போது, இதுவரை நடந்த எல்லா விஷயத்தையும் கண்ணீருடன் கொட்டித் தீர்த்து விட்டாள் அந்த சிறுமி.அதன் பிறகு என்ன? வழக்கம் போலத் தான். கணவனுடன் மனைவி சண்டை போட, மகனை தாய் திட்ட, குடும்பத்தில் தினமும் ரகளைதான். இதனால் மிரட்சியடைந்த சிறுமி, யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ஒரு ரயிலில் ஏறி, லோயர் பரேல் ரயில் நிலையத்தில் இறங்கி விட்டாள். அதன் பிறகு என்ன செய்வது என்பது தெரியாமல், ரயில் நிலையத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தாள்.சந்தேகமடைந்த பெண் போலீஸ் ஒருவர், சிறுமியிடம் விசாரித்தார்.

முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னாள் சிறுமி. இதைத் தொடர்ந்து, குழந்தைகளுக்காக பாடுபடும், "சாத்தி' என்ற சமூக சேவை நிறுவனத்தாருக்கு ரயில்வே போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள், சிறுமியிடம் விசாரித்த போது, ஓரளவு தகவல்கள் தெரிய வந்தன.மும்பை மத்திய ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, விஷயத்தை கூறினர். போலீசார் சிறுமியிடம் சகஜமாக பேச்சுக் கொடுத்து விசாரித்தனர். அப்போது எதற்காக வீட்டை விட்டு வெளியேறினாள் என்பது உட்பட எல்லா விஷயத்தையும் கூறினாள் சிறுமி. நாக்படா போலீஸ் மருத்துவமனையில் அந்த சிறுமியை பரிசோதித்தனர். அந்த சிறுமி கற்பழிக்கப்பட்டிருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து மோதிலால் சிங் மீது வழக்கு பதிவு செய்து, அவனை கைது செய்தனர். அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

நன்றிங்க

படிக்கும்போது நெஞ்சு பதறி கண்ணீர் நிறைகிறதய்யா :(((

Wednesday, September 26, 2007

04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறல்!

04.ஒன்பதாம் எண்ணை கண்டால் அலறும் கிராமம் பாப்பாபட்டியில் தான் இந்த அவலம்



உசிலம்பட்டி :உள்ளாட்சி தேர்தலால் கடந்த சில ஆண்டுகளாக கலகலத்துப் போன பாப்பாபட்டி கிராம மக்களை, இப்போது ஒரு எண் பாடாய் படுத்துகிறது. ஒன்பது என்ற எண்ணைக் கண்டாலே அலறி அடிக்கின்றனர் கிராமவாசிகள்.

ஒன்பதாம் நம்பர் என்றால் பலருக்கு உற்சாகம். வீட்டு எண் உட்பட அன்றாட உபயோக எண்ணின் கூட்டுத்தொகையாவது ஒன்பது வந்துவிட வேண்டும் என வேண்டி விரும்புபவர்கள் உண்டு.உசிலம்பட்டியிலிருந்து பாப்பாபட்டிக்கு டவுன் பஸ் இயக்கிய போது அதன் தடம் நம்பர் "9' என குறிப்பிடப்பட்டிருந்தது.

பாப்பாபட்டி கிராமவாசிகளின் வெளியூர் உறவினர்கள் இந்த எண்ணை வைத்து, கிராமத்திலுள்ள அனைவரையும் அரவாணியாக குறிப்பிட்டு கிண்டல் செய்தனர். அவதிப்பட்ட கிராமத்தினர் போராடி, இந்த எண் வழித்தட பஸ்சை பேரையூருக்கு திருப்பி விட்டனர்.அந்த பிரச்னை முடிந்தாலும், கிராமவாசிகளுக்கு புதிய எண் தலைவலி ஏற்பட்டது.

உசிலம்பட்டி வத்தலக்குண்டு ரோட்டிலிருந்து பாப்பாபட்டி செல்லும் ரோடு பிரியும் இடத்தில், "பாப்பாபட்டி ஒன்பது கிலோ மீட்டர்' என நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகை வைத்தது. ஓட ஓட விரட்டி வந்து ஒட்டிக் கொள்ளும் இந்த எண்ணை மாற்ற, கிராம மக்கள் கடும் பிரயாசம் எடுத்துக் கொண்டனர். கிராம இளைஞர்கள் ஒன்பது என்ற எண்ணை அறிவிப்பு பலகையில் அழித்து விட்டு 10 கி.மீ., என குறித்து வைத்துள்ளனர். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் படுத்திய பாட்டால் மனம் வெதும்பி புண்ணாகி போயிருந்த கிராம மக்கள், துரத்தும் நம்பர் ஒன்பதை தவிர்க்க பாடாய் படுகின்றனர்.

நன்றிங்க

அப்ப ஒன்பதாம் தேதியில் குழந்தை பிறக்காதா?

ஒன்பதாம் தேதியில் திருமணம் நடத்தமாட்டார்களா என்ன?

எஸ்எஸ்எல்சி, +2 கட்டணம் ரத்து

எஸ்எஸ்எல்சி, பிளஸ் டூ கட்டணம் ரத்து

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

சென்னை:

பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொது தேர்வு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாநில கல்வித் திட்டத்தின் கீழ் 10,12ம் வகுப்புகள் பயிலும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இது பொருந்தும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், உதவி பெறாத பள்ளிகளிலும் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 10ம் வகுப்பு தேர்வுக் கட்டணமாக ரூ. 115ம், பிளஸ் டூ தேர்வுக் கட்டணமாக ரூ.175ம் வசூலிக்கப்பட்டு வந்தது.

செய்முறை தேர்வுடன் கூடிய பாடங்கள் படிக்கும் பிளஸ் டூ மாணவர்களிடம் ரூ.205 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண ரத்து மூலம் சுமார் 6 லட்சம் எஸ்எஸ்எல்சி மாணவர்களும், 5.5 லட்சம் பிளஸ் டூ மாணவர்களும் பலனடையவுள்ளனர்.

இந்த கட்டண ரத்தால் அரசுக்கு சுமார் ரூ.16 கோடி இழப்பு ஏற்படும். ஆனாலும் இந்தச் சலுகை மூலம் மேலும் பல மாணவர்கள் தமிழ் வழிக் கல்வியை நாடுவார்கள் என்பதால் இத் திட்டம் அமலாக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

நன்றிங்க

பொதுவானவை.

ஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு!

ராதிகா செல்வி Vs கீதா ஜீவன்: ஆதரவாளர்கள் அடிதடி, அரிவாள் வெட்டு

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

தூத்துக்குடி:

தூத்துக்குடியில், மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வி ஆதரவாளர்களுக்கும், தமிழக அமைச்சர் கீதா ஜீவன் ஆதரவாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் ஒன்றிய செயலாளர் வெட்டப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றிய திமுக செயலாளராக இருப்பவர் சக்திவேல். இவர் தமிழக அமைச்சர் கீதா ஜீவனின் ஆதரவாளர். அப்பகுதியில் நடக்கும் அரசு விழா, மற்றும் கட்சி விழாக்களில் மத்திய இணை அமைச்சர் ராதிகா செல்வியின் பெயரை அழைப்பிதழ்கள் -போஸ்டரில் போடாமல் புறக்கணித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ராதிகா செல்வி ஆதரவாளர்கள் கோபத்துடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடியில் விஸ்வ ஹந்து பரிசத் முன்னாள் எம்.பி வேதாந்தியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் மற்றும் கட்சியனர் 8 பேர் ஒரு வாகனத்தில் உடன்குடி திரும்பியுள்ளனர்.

அப்போது வரண்டிவேல் விலக்கு என்ற பகுதி அருகே ஒரு கார் இவரது வாகனத்தை மறித்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றிய செயலாளர் சக்திவேலை அரிவாளால் வெட்டி வாகனத்தையும் சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனராம்.

இது குறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெட்டப்பட்ட ஒன்றிய செயலாளர் சக்திவேல் தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒரே கட்சியின் இரு பெண் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றிங்க

என்ன அநியாயங்க இது?

ஒரு கட்சிக்குள்யேயே இப்படி வெட்டுக் குத்து நடந்தால், ஒரே கட்சிக்காரங்க யாருக்காக போராட்டம் நடத்துவது?

2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்!

விமான இறக்கையில் தொங்கியபடி 2 மணி நேரம் பறந்த ரஷ்ய சிறுவன்

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

மாஸ்கோ:

ரஷ்யாவின் பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோ வரை சென்ற போயிங் விமானத்தின் இறக்கையில் திருட்டுத்தனமாக தொங்கியபடி 2 மணி நேரம் பறந்துள்ளான் 15 வயது சிறுவன். இடையில் பனி தாக்கியதால் கை, கால் விரைத்துப் போய் மாஸ்கோ விமான நிலையத்தில் மயங்கி விழுந்தான்.

ரஷ்யாவின் ஊரல்ஸ் பகுதியைச் சேர்ந்தவன் ஆண்ட்ரி. இவனது தந்தை குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவருக்கும், ஆண்ட்ரிக்கும் ஒத்துப் போகவில்லை. ஆண்ட்ரியின் தாயாரும், தனது கணவருக்கு ஆதரவாகவே பேசுவாராம்.

இதனால் மனம் வெறுத்த ஆண்ட்ரி அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா வீட்டுக்கு கிளம்பிச் சென்றான். தாத்தா வீட்டுக்கு வந்த அவன் அருகில் உள்ள பெர்ம் நகருக்குக் கிளம்பினான்.

பெர்ம் வந்த ஆண்ட்ரிக்கு மாஸ்கோ போகும் எண்ணம் வந்துள்ளது. இதையடுத்து பெர்ம் நகர விமான நிலையத்திற்குள் நைசாக புகுந்து அங்கு மாஸ்கோ செல்லத் தயாராக இருந்த போயிங் விமானத்தில் ஏறியுள்ளான்.

விமானத்தின் இறக்கைப் பகுதியில் பதுங்கிக் ெகாண்டான். பெர்ம் நகரிலிருந்து அந்த விமானம் கிளம்பியதும் இறக்கையில் இறுகப் பிடித்தபடி இருந்துள்ளான். பெர்ம் நகரிலிருந்து மாஸ்கோவின் நுகோவா விமான நிலையம் கிட்டத்தட்ட 1,300 கிலோமீட்டர் தூரமாகும்.

இத்தனை தூரத்தையும் ஆண்ட்ரி இறக்கையில் தொங்கியபடி பயணித்துள்ளான். அவன் பயணித்த விமானம் மணிக்கு 900 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. வழியில் -50 டிகிரி அளவுக்கு கடும் பனி நிலவியது. இத்தனையையும் தாங்கியபடி விமானத்தில் பயணித்துள்ளான் ஆண்ட்ரி.

விமானம் மாஸ்கோ வந்து சேர்ந்ததும், அதுவரை இருந்த உறுதி குலைந்து அப்படியே தரையில் மயங்கி விழுந்தான் ஆண்ட்ரி. இதைப் பார்த்ததும் விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து அவனை மீட்டனர்.

கை, கால்கள் விரைத்துப் போன நிலையில் இருந்த அவனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவனது உடைகளைக் கூட கழட்ட முடியாத அளவுக்கு விரைத்துப் ேபாயிருந்தன கை, கால்கள்.

தற்போது ஆண்ட்ரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது பெற்றோருக்குத் தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக மாஸ்கோ விரைந்து வந்தனர்.

ஆண்ட்ரி உயிருடன் வந்தது மிகப் பெரிய அதிசயம் என்று டாக்டர்கள் வியப்பு வெளியிட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஒரு சிறுவன் விமானத்தில் ஏறி இறக்கையில் பயணிக்கும் அளவுக்கு பாதுகாப்பு குளறுபடிகள் பெர்ம் நகர விமான நிலையத்தில் இருப்பது பெரும் கேள்விக்குறியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

அதிசயந்தான்!!!

மலேசியா போய் பிச்சை எடுத்த தமிழர்!

மலேசியாவில் வேலைக்குப் போய் பிச்சை எடுத்த நெல்லை தமிழர்!

புதன்கிழமை, செப்டம்பர் 26, 2007

சுரண்டை:

அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, வெளிநாட்டு வேலைதான் வேண்டும் என்று மலேசியாவுக்கு சென்று, கடைசியில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த இளைஞர் ஒரு வழியாக சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

சுரண்டை சந்தைபஜார் செண்பகக் கால்வாய் ஓடைப் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். கட்டிட தொழிலாளியான இவர் வீட்டுக்கு கடந்த ஆண்டு கடையநல்லூர் சொக்கம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துபாண்டியன் என்பவர் வந்தார்.

மலேசியாவுக்கு கட்டிட தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் மாதம் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் என்றும் கூறியுள்ளார். மேலும் மலேசியாவிற்கு செல்லவும், வேலை செய்யும் நிறுவனத்திற்கு கொடுக்கவும் ரூ.85 ஆயிரம் செலவாகும் என்றார்.

இதை உண்மை என்று நம்பிய சந்திரன் குடும்பத்தினர், அவரை மலேசியாவிற்கு வேலைக்கு அனுப்ப சம்மதித்தனர். இதற்காக சிரமப்பட்டு பலரிடம் கடன் வாங்கி பணத்தை தயார் செய்தனர்.

பின்னர் கடந்த 10-03-2006ல் ரூ.22 ஆயிரமும், 05-06-2006ல் ரூ.60 ஆயிரமும் என மொத்தம் ரூ.82 ஆயிரத்தை சந்திரன் வீட்டார் முத்துபாண்டியனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட முத்துப்பாண்டியன் பாஸ்போர்ட், விசா தயார் செய்து சென்னைக்கு வர செய்தார்.

சென்னையில் ஒரு லாட்ஜில் அறை எடுத்து அங்கு சந்திரனை தங்க வைத்தார். அப்போது சுரண்டையை சேர்ந்த கோமுச்சாமி, காந்தி ஆகியோரும் மலேசியா செல்ல வந்திருந்தனர். சில நாட்களில் அவர்கள் 2 பேரையும் முத்துப்பாண்டியன் மலேசியாவுக்கு அனுப்பி வைத்தார்.

சில நாட்களுக்கு பிறகு சந்திரனிடம் மதுரையை சேர்ந்த அருணகிரி என்பவர் முலம் பாஸ்போர்ட், விசா கொடுக்கப்டடது. அதை பெற்றுக் கொண்ட சந்திரன், விமானம் முலம் மலேசியா சென்றார்.

அங்கு சென்ற பின் அது மலேசியாவில் தங்கி வேலை செய்யக்கூடிய விசா இல்லை எனவும், போலி விசா என்றும் சந்திரன் அறிந்தார். இது பற்றி முத்துப்பாண்டியனிடம் கேட்டபோது அருணகிரி அங்கு வருவார், அவரிடம் கேளுங்கள் என சொல்லியதோடு அவரை தொடர்பு கொள்ள முடியாதபடி போன் நம்பரையும் மாற்றி விட்டாராம்.

இதனிடையே மலேசியா சென்ற அருணகிரி சந்திரனின் பாஸ்போர்ட்டை நைசாக பேசி வாங்கி அதை ரூ.10 ஆயிரத்திற்கு விற்றுள்ளார். பாஸ்போர்ட், விசா பறிபோனதை எண்ணி கலங்கிய சந்திரன் மலேசியாவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

பல நாட்கள் பட்டினி கிடந்தும், பிச்சை எடுத்தும் வயிற்று பாட்டை கவனித்துள்ளார். பின்னர் ஒரு வழியாக ஊருக்கு திரும்பிய சந்திரன் முத்துப்பாண்டியனை சந்தித்து தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு முத்துப்பாண்டியன் மறுத்துள்ளார்.

இதனால் முத்துப்பாண்டியன் பற்றி கடையநல்லூர் போலீசில் சந்திரன் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையாம். இதையடுத்து நெல்லை கலெக்டரிடம் அவர் புகார் கொடுத்துள்ளார்.

சந்திரன் போன்று ஏராளமானோர் போலி விசா மூலம் மலேசியா அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும் சந்திரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இம்மாவட்டத்தில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்ப பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை அரசும், காவல்துறையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக..மிக..அவசியம்.

மேலும் இதே போன்று செங்கோட்டையிலிருந்து வெளிநாடுக்கு கட்டிட வேலைக்கு சென்ற 2 இளைஞர்கள் கண் பார்வை பறிபோனதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தது குறிப்பிடதக்கது.

நன்றிங்க

அவலம்.

Tuesday, September 25, 2007

3. பாவம், யானைகள் என்ன செய்யும்?



நன்றிங்க

பாவம், யானைகள் என்ன செய்யும்?

பிச்சையெடுக்க வைத்தவர்களையல்லவா கட்டிப்போட வேண்டும்! என்ன நாஞ்சொல்றது? :)

3. வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா!

வேதாந்தி தலையைத் துண்டித்தால் 6 பைசா!



செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007

சேலம்:

சேலத்தில் பல இடங்களில் நக்சல் இயக்கங்கள் சார்பில் இந்து மதத் தலைவர்களின் தலைக்கு விலை நிர்ணயித்து பகிரங்கமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக முன்னாள் எம்பியும், விஎச்பியைச் சேர்ந்தவருமான ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், ராமரை பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்காக, அவரின் நாக்கையும், தலையையும் துண்டித்து வந்தால் அதற்கு எடைக்கு எடை தங்கம் கொடுக்கப்படும் என்று 'பாத்வா' விடுத்தார்.

இதற்கு தமிழகத்தில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. இதன் விளைவாக சென்னை உட்பட பல இடங்களில் உள்ள பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்நிலையில், வேதாந்தி நான் யாருக்கும் பாத்வா விடுக்கவில்லை. நான் சொல்லியதை பத்திரிக்கையாளர்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்று அந்தர் பல்டி அடித்தார் சாமியார்.

அதே போல பாஜகவும் யாரோ ஒரு வேதாந்தி என்பவர்சொன்ன கருத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. ஏன் எங்களை தாக்குகிறீர்கள் என அழாத குறையாக அறிக்கை விடுத்தது.

இது தொடர்பாக சேலத்தில் விவசாயிகள் முன்னேற்ற முன்னணி, புதிய ஜனநாயக முன்னேற்ற முன்னணி போன்ற நக்சல் ஆதரவு இயக்கங்கள் சார்பில் இந்து மதத் தலைவர்களின் தலைகளுக்கு விலை அறிவித்து போஸ்டர் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

இதில், அயோத்தி ராமன் தலையை கொண்டு வந்தால் 2 பைசாவும், பாஜக மூத்தத் தலைவர் அத்வானி தலையை கொண்டு வந்தால் 5 பைசாவும், அசோக் சிங்காலின் தலைக்கு 6 பைசாவும் கொடுக்கப்படும். விஎச்பி தலைவர் பிரவீன் தொகாடியா தலைக்கு 6 பைசாவும், தமிழக முதல்வர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்த ராம்விலாஸ் வேதாந்தி தலைக்கு 6 பைசா நிர்ணயம் செய்துள்ளனர்.

ஆனால் தமிழகத்தை சேர்ந்த இந்து முன்னணி தலைவர் இராம.கோபாலன் தலையை கொண்டு வந்தால் எதுவும் தர மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். மொத்தம் 25 பைசா பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவித்து சேலத்தின் பல இடங்களில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது மிகவும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இந்த போஸ்டர் எங்கு அச்சடிக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. போலீசார் இந்த போஸ்டர் ஒட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

நன்றிங்க

என்னத்தே சொல்ல!!!

Monday, September 24, 2007

2. அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?

அமெரிக்காவில் வரதட்சணை கொடுமை?- கோமாவில் திருச்சி பெண்

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 25, 2007

திருச்சி:

வரதட்சணை கொடுக்காததால், தனது மகளை கொடுமைப்படுத்தி கோமா நிலைக்குத் தள்ளி விட்டதாக, அமெரிக்க மாப்பிள்ளை மீது அந்தப் பெண்ணின் தந்தை திருச்சி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் செபாஸ்டின். இவரின் மகள் ஸ்மாலின் ஜெனிட்டா (23). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வரும் சேவியர் மகன் கிறிஸ்டி டேனியல் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.

திருமணத்தின்ேபாது, மகளுக்கு 50 பவுன் நகையும், மணமகன் கிறிஸ்டிக்கு 10 பவுன் நகை போட்டும் திருமணத்தை தனது செலவில் நடத்தியுள்ளார் செபாஸ்டின்.

மணமகன் கிறிஸ்டி டேனியல் அமெரிக்காவில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கிறிஸ்டி தனது திருமணத்திற்கு பிறகு மனைவி ஜெனிட்டாவையும், தனது பெற்றோரையும் அமெரிக்காவிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அமெரிக்காவில் தனது குடும்பத்தோடு காரில் போகும் போது விபத்துக்குள்ளாகி அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் ஜெனிட்டா பல அடி தூரம் தூக்கியெறியப்பட்டு எலும்புகள் உடைந்த நிலையில் தற்போது அமெரிக்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார்.

இந்த விபத்து குறித்து ஜெனிட்டா வீட்டாருக்கு கிறிஸ்டி எந்தத் தகவலும் தெரிவிக்க வில்லையாம். தனது மகள் கோமாவில் இருப்பது, அமெரிக்காவில் இருக்கும் குடும்ப நண்பர் மூலமாகத்தான் தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியுற்ற செபாஸ்டின் இதுகுறித்து விசாரிக்க கிறிஸ்டி டேனியல் குடும்பத்தாரிடம் விசாரிக்க தொடர்பு கொள்ள முயன்று விரக்தியடைந்து விட்டார்.

இதனால் தனது மகள் வரதட்சணை கொடுமை காரணமாக சிறை வைக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணி, செபாஸ்டின் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது அவர்கள் 75 பவுன் நகையும், மாப்பிள்ளை திருமணத்துக்கு பிறகு வெளிநாடு சென்று விடுவதால் சீர்சாமான்களுக்கு பதிலாக 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் கேட்டனர்.

ஆனால் நான் 50 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு 10 பவுனும் போடுகிறேன் என்று சொன்னதற்கு சரியென்று ஒத்துக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போதே இடையில் திடீரென்று பணமும், நகையும் கேட்டார்கள்.

என்னால் கொடுக்க முடியவில்லை. திருமணத்தை என் செலவில் தான் நடத்தினேன். திருமணம் நடந்த நாளில் இருந்து என் பெண்ணிடம், கிறிஸ்டி சந்தோஷமாகவே பேசுவதில்லை.

இந்த விபத்திற்கு முன்னர் எனக்கு மெயில் அனுப்பிய ஜெனிட்டா, வரதட்சணை கேட்டு மாமியார், மாமனார், கணவர் கொடுமைப்படுத்துவதாக சொல்லியிருந்தார்.

பணத்துக்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

விபத்துக்குள்ளான தனது மகளை பார்க்க அமெரிக்கா செல்ல செபாஸ்டின் முயன்று வருகிறார். இது தொடர்பாக அமெரிக்க போலீசுடன் தொடர்பு கொண்டு உரிய விசாரணை நடத்துமாறு தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார் செபாஸ்டின்.

நன்றிங்க

யாரைத்தான் நம்புவதோ...

01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை.

01.ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கொடுமை * துபாய் கணவர் தலைமறைவு

ராமநாதபுரம் : ஆஸ்திரேலிய பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய துபாயில் பணியாற்றும் இன்ஜினியரை, ராமநாதபுரம் மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் வெளிபட்டினத்தைச் சேர்ந்தவர் கரீம் கனி(67). இவரது பேத்தி சுமையா(21), பெற்றோருடன் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். இந்திய கலாசாரத்தில் வாழ விரும்பிய சுமையாவுக்கு, ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தைச் சேர்ந்த மொகைதீன் ஹாருனை திருமணம் செய்து வைத்தனர். இவர், துபாயில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்தின் போது வரதட்சணையாக ஒரு கிலோ தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. தேனிலவுக்கு ஹாங்காங் நாட்டிற்கு பெண் வீட்டு செலவில் தம்பதியர் அனுப்பி வைக்கப்பட்டனர். கிரெடிட் கார்டை கையோடு எடுத்து வரவில்லை என்பதற்காக, மனைவியை ஹாங்காங்கில் மொகைதீன்கான் அடித்து துன்புறுத்தினார். மீண்டும் பெரியபட்டினம் வந்தவுடன் கூடுதல் வரதட்சணையாக ரூ.10 லட்சம், நூறு சவரன் நகை, நிலம், வீடு வேண்டும் என்று கேட்டு மொகைதீன் ஹாருன் குடும்பத்தினர் சுமைதாவை கொடுமைப்படுத்தினர்.

விசாரணை நடத்திய ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் வசந்தா, வரதட்சணை கேட்ட மொகைதீன் ஹாருனின் தாயார் முகபத் பீவி(50), தாய்மாமன் மெக்தார் அலி(55) ஆகியோரை கைது செய்தார். தலைமறைவான மொகைதீன் ஹாருன், அவரது பெரியப்பா அகநத் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

நன்றிங்க

இந்திய கலச்சாரத்தில் மாப்பிள்ளை வேண்டுமென்றால் மாப்பிள்ளை வீட்டாரின் வரதட்சணைக் கொடுமையையும் சகித்தாக வேண்டும்.

என்றைக்கோ வரதட்சணை இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றாக கலந்து விட்டது! :(

கர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!

கர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்

திங்கள்கிழமை, செப்டம்பர் 24, 2007

அம்பாசமுத்திரம்:

குடிப்பதற்கு பணம் கொடுக்காததால், கர்ப்பமாக இருந்த மனைவியை வெட்டி கொலை செய்தார் கணவர்.

அம்பை அருகே உள்ளது பிரம்மதேசம் என்ற கிராமம். இங்குள்ள பஞ்சாயத்து அலுவலக தெருவில் வசிப்பவர் நாராயணன் என்ற செல்வகுமார்.

இவரது மனைவி நாலாயிரத்து செல்வி. இருவரும் மூன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. செல்வக்குமார் முன்பு டிரைவராக வேலை பார்த்தார். அதில் வருமானம் போதவில்லை. அதனால் தற்போது கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.

இந்த வேலைக்கும் ஒழுங்காக செல்லாமல் செல்வகுமார் மாமனார் வீட்டில் தங்கி இருந்தார். வேலைக்கும் செல்லாமல், மனைவியிடமிருந்து குடிப்பதற்காக அடிக்கடி மனைவியிடம் பணம் கேட்டு வாங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மதியம் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு செல்வகுமார் தகராறு செய்துள்ளார். அப்போது மனைவி நாலாயிரத்து செல்வி பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் சமையலறையில் இருந்த நாலாயிரத்தை அரிவாளால் கழுத்தில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

நன்றிங்க

குடி குடியைக் கெடுத்து விட்டது!

Sunday, September 23, 2007

வேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தமில்லை

வேதாந்தியின் மிரட்டல் பேச்சு எங்களுக்குச் சம்பந்தமில்லை - பாஜக, வி.எச்.பி.

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2007

சென்னை:

முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்து வி.எச்.பியைச் சேர்ந்த சாமியார் வேதாந்தி பேசியிருப்பதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பாஜகவும், வி.எச்.பியும் கூறியுள்ளன.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறுகையில், ராமர் குறித்து முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது ஆட்சேபனைக்குரியது. இதுகுறித்து மக்கள் மன்றத்தில் விவாதிக்க பாஜக தயாராக இருக்கிறது.

இதுகுறித்து கொள்கை ரீதியாக மக்களைக் கவர்ந்திட பிரசாரம் செய்து ஆதரவு திரட்டிட வேண்டுமே தவிர, அப்பாவி மக்களின் வீடுகள் மீது கல்லெரிவதும், அதுபோலவே வன்முறையைத் தூண்டும் வார்த்தைப் பிரயோகங்களோடு சவால் விடுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

முதல்வர் குறித்துக் கூட அயோத்தியைச் சேர்ந்த யாரோ ஒருவர் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகித்தது கூட நான் அறிந்தேன். அவருக்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்களும் அல்ல. அதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

வேதாந்தி வி.எச்.பியில் உறுப்பினராகக் கூட இல்லை என்று வி.எச்.பி. அமைப்பின் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார். அவர் இதுகுறித்துக் கூறுகையில், வேதாந்தி வி.எச்.பி. அமைப்பில் உறுப்பினராகக் கூட இல்லை. அவரது கருத்து வி.எச்.பியின் கருத்து கிடையாது, அது அவரது சொந்தக் கருத்து.

அமைச்சர் வீராசாமி மிரட்டல் விடுத்துப் பேசியுள்ளார். அது நல்லதல்ல. அதை அவர் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார் வேதாந்தம்.

நன்றிங்க

அந்தோ பரிதாபம் லோரும் சேர்ந்து இப்படிக் கழட்டி விடுவார்கள் என்று வேதாந்தி கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.

நான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி.

நான் ஃபாத்வா விதிக்கவில்லை - வேதாந்தி பல்டி

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 23, 2007

டெல்லி:

முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் கொய்து வருமாறு நான் கூறவில்லை என்று திமுகவினரின் கொந்தளிப்பை சந்தித்துள்ள முன்னாள் பாஜக எம்.பியும், வி.எச்.பி. மண்டல தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.

அயோத்தியில் வேதாந்தி நேற்று வெளியிட்ட பாத்வா அறிக்கையில், ராமரைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் கருணாநிதியின் தலை மற்றும் நாக்கைக் கொண்டு வருபவர்களுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.

இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் பாஜக, இந்து முன்ணனி, வி.எச்.பி. அலுவலகங்களை அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில், தான் கூறிய கருத்து பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகளில் தவறாக வந்து விட்டது என்று வேதாந்தி பல்டி அடித்துதள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், நான் பகவத் கீதையை மேற்கோள் காட்டி கூறியிருந்தேன். மற்றபடி யாருக்கு எதிராகவும் பாத்வா விதிக்கவில்லை.

எனது அறிக்கை தவறாக பிரசுரிக்க்கபப்ட்டு விட்டது. துறவிகள் ஒருபோதும் வன்முறையை நம்புவதில்லை என்றார் வேதாந்தி.

நன்றிங்க

ஆஹா... மிஞ்சினால் பதுங்குவது நியாயம்தானே!

வாழ்க பத்வா!

Saturday, September 22, 2007

14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.

02. 14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்

புதுடில்லி: டில்லியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர், 45 வயது நடன ஆசிரியை விரித்த காதல் வலையில் சிக்கி அவருடன் தலைமறைவாகி விட்டார்.

டில்லியில், பாஷ் மாவட்டத்தில் உள்ள கல்காஜியில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது மகன், அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். 14 வயதான அவருக்கு இன்டர்நெட்டில் "சாட்' செய்யும் பழக்கம் உண்டு. இன்டர்நெட்டில் "பேசியபோது' ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான அப்பெண்ணின் வயது 45. திருமணமாகாதவர். அப்பெண், மயூர் விஹாரில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.

கமலா நகரில் உள்ள கிளாசிக் டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில், பெண் களுக்கு நடனம் கற்றுத்தரும் ஆசிரியையாக உள்ளார்.இன்டர்நெட்டில் ஆரம்பித்த இவர்களின் நட்பு, சிறிது சிறிதாக, காதலாக மாறியது. காதல் மயக்கத் தில் இவர்களுக்கு வயது ஒரு பொருட் டாக தெரியவில்லை. அடிக்கடி நேரிலும் சந்திக்க ஆரம்பித்தனர். சென்ற மாதம் இவர்கள் இருவரும் ஒன்றாக ரெஸ்ட்டாரன்டில் அமர்ந்து உணவருந்துவதைப் பார்த்த மாணவருடைய தந்தையின் நண்பர், இந்த காதல் விவகாரத்தை, தந்தையிடம் கூறினார்.

மாணவரின் தந்தை, மாணவரை அழைத்து விசாரித்தார். "அவரும், நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம்' என்றார்.கடந்த ஆக., 27ம் தேதி மாணவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து சி.ஆர்.பார்க் போலீசில் மாணவரின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், பள்ளியில் தன் மகனுக்கு பெண் தோழிகளே கிடையாது என்றும் தெரிவித்தார். போலீசாரும் பல இடங்களில் தேடி, இறுதியாக, நடன ஆசிரியையின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது 70 வயதான தாயார் தான் இருந்தார். ஆசிரியை மாயமாகியிருந்தார்.அந்த மாணவர் தன்னுடைய மொபைல் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் அந்த நடன ஆசிரியை போனை கண் காணித்தபோது, அவர் அந்த மாணவருடன் அரியானாவில் இருப்பது தெரிய வந்தது.இவர்களைத் தேடி போலீசார் அரியானா விரைந்துள்ளனர்.

நன்றிங்க

அட மக்கா!!!

இதைத்தான் காதலுக்கு வயசில்லை என்பாங்களோ!

உருவ பொம்மை எரிப்பு!

‌நெல்லையில் கருணாநிதி வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு

நெல்லை: ராமர் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தத கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நெல்லையில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்தனர். இதற்குப் போட்டியாக தி.மு.க.,வினர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் வேதாந்தியின் உருவ பொம்மைய‌ை எரித்தனர்.

நன்றிங்க, தினமலர் 22/09/2007

சபாஷ் சரியான போட்டி.

திமுக கடும் எச்சரிக்கை!

தமிழகத்தில் பாஜக, விஎச்பியினர் நடமாட முடியாத நிலை ஏற்படும்-திமுக கடும் எச்சரிக்கை

சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

சென்னை:

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என விஎச்பி தலைவர் அறிவித்துள்ளதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாஜக, விஎச்பியைச் சேர்ந்த தமிழகத்தில் தெருக்களில் நடமாட முடியாத அளவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என திமுக எச்சரித்துள்ளது.

முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி என்பவர் தலைவர் கலைஞரைத் தாக்கி ''பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும், அதில் தமிழக முதலவரின் தலையையும், நாக்கையும் யார் துண்டாடினாலும் அவர்களுக்கு அயோத்தியில் உள்ள சாமியார்களால் எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும் பேசியிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இதே அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் பெங்களூரில் முதல்வரின் மகளின் இல்லத்தில் இரவிலே வந்து தாக்கியிருக்கின்றனர். தமிழக பேருந்தை தீயிட்டுக் கொளுத்தி 2 உயிர்கள் கருகிட காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய செயல்களை செய்திடும் அமைப்புகள் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்துள்ளார்கள்.

முதல்வர் கருணாநிதியோ இது அவர் சம்பந் தப்பட்ட பிரச்சனை என்பதாலும், சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே தான் இருக்கிறோம் என்பதாலும், கழகத்தின் மாவட்டச் செயலாளர்களையும், முன்னணியினரையும் கைகளைக் கட்டிப் போட்டு எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று கடுமையாக எச்சரித்து வைத்திருக்கிறார்.

தலைவரின் எச்சரிக்கை காரணமாக அமைதியாக இருக்கும் கழகத்தவர்களை கோழைகள் என்று எண்ணிக் கொண்டு பாஜகவினரும், விஸ்வ இந்து பரிஷசத்தை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் வாய் நீளம் காட்டினால், அதே பாணியில் திமுகழகத் தோழர்களும் தன்னிச்சையாக செயலில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

கலைஞரின் தலையையும், நாக்கையும் துண்டாடுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு ஒருவனுக்கு தைரியம் வருகின்றது என்றால், தமிழ்நாட்டுத் தெருக்களில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை நடமாட முடியாத நிலைமையை உருவாக்குவோம்.

இது பெரியார் பிறந்த மண். பேரறிஞர் அண்ணா வளர்த்த தம்பிகள் நாங்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம்.

பகுத்தறிவு என்றால் என்ன என்றே தெரியாமல், மதத்தைச் சொல்லி, கடவுளைச் சொல்லி, ராமர் பெயரால் கட்சியை நடத்தி மத உணர்வுகளை தூண்டி விட்டுக் கொண்டிருக்கும் காட்டு மிராண்டிக் கும்பலைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினன் ஒருவன் உதிர்த்த வார்த்தைகளை உடனடியாகத் திரும்பப் பெறவில்லை என்றால்,

தலைமையின் அனுமதியினைப் பெற்று இன்னும் ஒரு வார காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பாஜக அலுவலகங்கள் முன்பு கழகத் தோழர்களைத் திரட்டி கருப்புக் கொடி காட்டி, மறியல் செய்திட நானே தலைமை தாங்குவேன்.

அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது சரியல்ல என்று யாராவது சொன்னால், அமைச்சர் பதவி எங்களுக்கு பெரிதல்ல. சுயமரியாதை ரத்தம் எங்கள் உடலில் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் தலைவரைப் பற்றி தவறாகக் கூறிய வேதாந்தி அல்ல. வேறு எவன் சொன்னாலும், அதை தமிழகம் கேட்டுக் கொண்டிருக்காது என்பதை இந்தியாவே புரிந்து கொள்ளச் செய்வோம்.

இந்தியா மதச் சார்பற்ற நாடு. மதத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு இயக்கம் கட்சி நடத்துவதற்கும், கண்டபடி பேசுவதற்கும் தமிழகம் தக்கவாறு பதிலளிக்க தயாராக இருக்கிறது. இன்று பெரியார் இல்லை தான். ஆனால் அவரால் வளர்க்கப்பட்ட நாங்கள் இருக்கிறோம்.

எங்களுக்கு உயிர் பெரிதல்ல. எங்கள் தலைவனைத் தாக்கிப் பேசிய பிறகும் அதைத் தாங்கிக் கொண்டு மனிதப் பிறவிகள் என்று எங்களைச் சொல்லிக் கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

தமிழ்நாட்டு மக்களே, திமுகழகத்தினைச் சேர்ந்த நண்பர்களே, வேதாந்தி என்பவனுக்கும், அவனுடைய அமைப்பைச் சேர்ந்தவர் களுக்கும் சரியான வகையில் பதில் கூறத் தயாராவோம். நம் தலைவரின் உயிரைப் பற்றி விலை பேசும் வட நாட்டுத் தருக்கன் ஒருவனுக்கு சரியான புத்தி புகட்டிட வேண்டாமா, இன்றே புறப்படுங்கள்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.

நன்றிங்க

//...கலைஞரைத் தாக்கி ''பத்வா'' ஒன்றினை அயோத்தியிலிருந்து விடுத்திருப்பதாகவும்,...//

முஸ்லிம் இமாம்கள் வழங்கினால் அதுதான் ''பத்வா'' முஸ்லிமல்லாதவர் வழங்கினால் அதுக்கு தமிழில் வார்த்தை இல்லையா?

தமிழ் நாட்டில் தமிழ் பேசுங்களய்யா! பிறகு தமிழிலிருந்து ''பத்வா'' என்ற சொல்லை நீக்க பாடுபட வேண்டியிருக்கும்.

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு!

கருணாநிதி தலையை துண்டித்தால் பரிசு-விஎச்பி

சனிக்கிழமை, செப்டம்பர் 22, 2007

அயோத்தி:

முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என பாஜக முன்னாள் எம்பியும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளார்.

அயோத்தியில் அவர் பேசுகையில்,

ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.

இவர் வேதாந்தி விஎச்பியின் மார்க்தர்ஷக் மண்டல் தலைவராக உள்ளார். 2 முறை பாஜக எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

தஸ்லீமாவின் தலைக்கு விலை வைத்த ஹைதராபாத் இமாமுக்கும், இந்து பரிஷாத் தலைவர் ராமவிலாஸ் வேதாந்திக்கும் வித்தியாசம் எதுவுமில்லை!

மத உணர்வுகள் அனைவருக்கும் பொதுவானது.

தஸ்லீமா விஷயத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள், இப்போது கூரைக்கும் பூமிக்குமாவது குதிப்பாங்களா?

ஏனென்றால். அது பயங்கர வாதம் என்றால் இதுவும் பயங்கர வாதம்தானே! கருத்துச் சுதந்திரம் என்பது எல்லாருக்கும் ஒன்றுதானே! என்ன நாஞ்சொல்றது? :)

Friday, September 21, 2007

கடன் வாங்கியவர் தற்கொலை!

01. வங்கி ஏஜென்ட்கள் சித்ரவதை : கடன் வாங்கியவர் தற்கொலை

மும்பை : மும்பையில் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஊழியர்களின் சித்ரவதையை தாங்க முடியாததால், வங்கியிலிருந்து கடன் வாங்கிய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை, எம்.ஐ.டி.சி.,பகுதிக்கு உட்பட்ட மால்பா டோங்கிரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் சர்வாங்கர்(38). இவர் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியிலிருந்து கடந்த ஜனவரி மாதம் தனி நபர் கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கிய ரூ.50 ஆயிரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர் திருப்பி செலுத்திவிட்டார். மீதமுள்ள தொகை திருப்பிச் செலுத்தப்படவில்லை.

கடந்த 13ம் தேதி, கடன் மீட்பு ஏஜென்ட்கள் பிரகாஷ் சர்வாங்கர் வீட்டுக்கு வந்து, "பணத்தை திருப்பி செலுத்தா விட்டால் கடும் விளைவுகள்' ஏற்படும் என எச்சரித்தனர். மன வேதனையடைந்த பிரகாஷ் சர்வாங்கர், திங்கள் கிழமை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது தொடர்பாக வங்கியின் கடன் மீட்பு ஏஜென்ட்களான நிஷாந்த் உத்தம்ராவ் நக்ராலே, ஹிரேன் வைத்யா, கைலாஷ் சவுத்ரி, துஷார் பட்னாகர் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.போலீஸ் துணை கமிஷனர் கே.எம்.பிரசன்னா கூறுகையில், "ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கியின் கடன் மீட்பு ஏஜென்ட்களின் தொடர் சித்ரவதையை தாங்க முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாக பிரகாஷ் சர்வாங்கர் சாவதற்கு முன் கடிதம் எழுதி வைத்துள்ளார்' என்று கூறினர்.

ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கியின் செய்தி தொடர்புத் துறை தலைவர் சாருதத்தா தேஷ்பாண்டே கூறுகையில், "பிரகாஷ் சர்வாங்கர் வங்கியிலிருந்து கடன் வாங்கிய தொகையில் ஐந்து தவணைகளை தொடர்ந்து செலுத்தவில்லை. அதற்காக வாடிக்கையாளர்களை ஏஜென்ட்கள் துன்புறுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.

நன்றிங்க

பொதுவானவை.

கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை

கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2007

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் தலை விரித்தாடுகிறது. இந்த மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன். இவரது நண்பர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தேவபிரகாஷ் கந்துவட்டிக்கு பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாரார்.

வெங்கடேசன் தனது நண்பனான பைனான்சியர் தேவபிரகாஷிடம் ரூ.2 லட்சம் கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். கந்துவட்டி என்றால் வாங்கிய நாளிலிருந்து அசல் தொகையை திருப்பி தரும் வரை தினமும் வட்டி கட்ட வேண்டும்.

ஆனால் வெங்கடேஷன் வாங்கிய கடனுக்கு அசல், வட்டி எதுவும் கொடுக்கவில்லை. இதனால் தேவபிரகாஷ் நண்பர் என்று கூட பார்க்காமல் வெங்கடேசனை மிரட்டியுள்ளார்.

மிரட்டலுக்கு பயந்து வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தேவபிரகாஷ் மீண்டும் வெங்கடேசன் வீட்டிற்கு வந்து அவரின் தந்தை ராஜேந்திரனிடம் மிரட்டியுள்ளார்.

இதனால் ராஜேந்திரன் வடசேரி போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து தேவபிரகாஷ், பாலகணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

நன்றிங்க

பொதுவானவை.

Thursday, September 20, 2007

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்.

டிவி பார்க்க வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்

வியாழக்கிழமை, செப்டம்பர் 20, 2007

சென்னை:

வீட்டிற்கு டிவி பார்க்க வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்துள்ள பெருங்குடியைச் சேர்ந்தவர் வாணி (13)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் முருகேசன் (30). முருகேசன் வீட்டிற்கு வாணி அடிக்கடி டிவி பார்க்க செல்வாராம்.

டிவி பார்க்க வந்த வாணியின் மீது முருகேசனின் வக்கிர பார்வை விழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முருகேசன் வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற வாணியை பலாத்காரம் செய்துள்ளார் முருகேசன். இதைப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.

இதனால் பயந்து போன வாணிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் போனது. பெற்றோர் வாணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாணியின் பெற்றோர் வாணியிடம் விசாரித்தபோது அழுது கொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

இதையடுத்து வாணியின் பெற்றோர் முருகேசன் மீது போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நன்றிங்க

அட சண்டாளப் பாவி!

செல்லமான படச் செய்தி!



நன்றிங்க

அடடா...!

என்ன செல்லமான படச்செய்தி.

இதுவே வேறு மதத்தவர் செய்திருந்தால் அவர்களின் இயக்க வேர் வரை ஆராய்ந்து .....பயங்கரவாத இயக்கம் என்றல்லவா தினமலரில் செய்தி வெளியாகி இருக்கும்.

இந்து அமைப்பாம், அதற்கொரு பெயரில்லையா என்ன?

''இந்துத்வ பயங்கரவாதம்'' என்று சொல்ல முடியாமல் தினமலர் முக்காடு போட்டுக்கொண்டது போலும்!

Tuesday, September 18, 2007

காதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.

சென்னை : பள்ளி, கல்லூரியை "கட்' அடித்து விட்டு மெரீனாவில் கும்மாளமிட்ட 80க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகளை போலீசார் சுற்றி வளைத்தனர்.

கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும் சென்னை மெரீனா கடற்கரையில் காதலர்களின் வரவுக்கு பஞ்சமிருக்காது. மனம் விட்டு பேச வரும் உண்மையான காதலர்களும் உண்டு. கால நேரம் பார்க்காமல் கட்டியணைத்துக் கொண்டு காமக் களியாட்டங்களில் ஈடுபடும் "கள்ள' காதலர்களைத் தான் கடற்கரையில் அதிகமாக பார்க்க முடியும். அவர்களை போலீசார் பிடித்து கடுமையாக எச்சரித்து அனுப்புவர்.

* கடந்த வாரம் சுனாமி பீதி ஏற்பட்டதற்கு, மறுநாள் காலையில் மெரீனாவில் அதிகமாக மக்களை பார்க்க முடியவில்லை. ஆனால், காதலர்கள் மட்டும் தொடர்ந்து வந்த வண்ணமிருந்தனர். கடற்கரை மணலில் அமர்ந்து கட்டியணைத்துக் கொண்டும், கடல் நீரில் விளையாடியும் இருந்ததைக் கண்டு பொதுமக்கள் எரிச்சலாக பார்த்தனர். "சுனாமி பயம் போயே போச்சு; காதலர்கள் இச்சோ இச்' என்ற பெயரில் தினமலர் இதழில் செய்தி வெளியிடப்பட்டது.

* இதையடுத்து, கடற்கரையில் காமக் களியாட்டங்கள் நடத்துபவர்களை விரட்டியடிக்கும்படி மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் மவுரியா உத்தரவிட்டிருந்தார். மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் சாந்தி, ராயப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையில் நேற்று பெண் போலீசார் மெரீனாவில் கண்காணித்தனர். மப்டியிலும் பெண் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். கடற்கரையில் நேற்று 80க்கும் மேற்பட்ட காதலர்களைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். பல இளம்பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். தங்கள் வீட்டாருக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கெஞ்சினர். பலரும் பள்ளி மற்றும் கல்லுõரிக்கு "கட்' அடித்து விட்டு கடற்கரைக்கு வந்திருந்தனர்.

* இன்ஸ்பெக்டர் சாந்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, 17 வயது கூட நிரம்பாத, பள்ளி சீருடை அணிந்திருந்த மாணவன், 15 வயது கூட நிரம்பாத சிறுமியுடன் கடற்கரைக்கு வந்தான். அவனைப் பிடித்து விசாரித்ததில், சாப்பிட வந்ததாக தெரிவித்தான்.

* போலீசார் வீட்டு முகவரியைக் கேட்க, அவன் அழ ஆரம்பித்தான். "மேடம், ப்ளீஸ் எங்கள் வீட்டிற்கு தெரியப்படுத்தாதீர்கள்' என்று கெஞ்சினான். திடீரென போலீசாரின் காலில் விழ முயற்சித்தான். அவனைத் தடுத்த போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

* ஒரே மாதிரியாக "ரோஸ்' கலர் உடையணிந்த இருவர், மடி மீது தலை வைத்திருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். சென்னையில் உள்ள பிரபல கல்லுõரியின் பெயரைச் சொன்ன மாணவி, உடன் வந்த இளைஞர் குறித்து பெயர் தவிர வேறொன்றும் தெரியாது என்று கூற போலீசார் அதிர்ந்தனர். வீட்டிற்கு காஸ் சிலிண்டர் கொடுக்க வந்தவர் என்றும் அதனால் பழக்கம் ஏற்பட்டது என்றும் வீட்டிற்கு தெரியாது என்றும் கூறி அழுதார். அவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

* கடற்கரைக்கு வந்த கணவன்மனைவி: போலீசாரிடம் சிக்கிய ஜோடிகளில் ஒன்று ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணமான ஜோடி. அவர்களை போலீசார் விசாரிக்கையில், "ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் ஆனது. இரு வீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டதால் எங்களைப் பிரித்து வைத்து விட்டனர். நாங்கள் யாருக்கும் தெரியாமல் கடற்கரையில் சந்தித்துக் கொண்டோம்' என்றனர். இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி அவர்களிடம், "உங்கள் பெற்றோரை அழைத்துக் கொண்டு ராயப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், பிரச்னைகளை பேசித் தீர்த்து வைக்கிறோம்,' என்று கூறி அனுப்பி வைத்தார்.

* ஒரு புறம் விரட்டியடிப்பு, மறுபுறம் கட்டியணைப்பு : காதல் ஜோடிகளைப் பிடித்து போலீசார் எச்சரித்தும் அறிவுரை கூறியும் அனுப்பி வைப்பது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க , உழைப்பாளர் சிலை பின்புறம் காதலர்கள் உட்கார்ந்து காதல் லீலைகளில் ஈடுபட்டனர். கடற்கரை பரப்பு முழுவதும் கண்காணிக்க போதுமான போலீசார் இல்லை என்கின்றனர் பெண் போலீசார். பரந்து விரிந்த மெரீனா கடற்கரையில் தினமும் காதலர்களை விரட்டும் பணியில் போலீசாரால் ஈடுபட முடியாது. எனவே காதலர்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு அறிவுரை கூறி திருப்பி அனுப்பவும் மாற்று ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்.

நன்றிங்க, DINAMALAR 18/09/2007

பேசாமல், ''காதலர்கள் கண்காணிப்புத் துறை'' என்று ஒன்று தொடங்கலாமே!

மூக்குத்தி போட்டதால் வேலையை இழந்தார்.

லண்டன்: மூக்குத்தி போட்டதால் விமான நிலைய வேலையை இழந்த இந்து பெண்!!

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 18, 2007

லண்டன்:

மூக்குத்தி போட்டுக் கொண்டு வேலைக்கு வந்ததால், விமான நிலைய வேலையிலிருந்து இந்துப் பெண் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.

வட மேற்கு லண்டனில் உள்ள ஸ்டேன்மோர் பகுதியில் வசித்து வருபவர் அம்ரித் லால்ஜி (43). இந்தப் பெண்மணி, லண்டன் ஹூத்ரூ விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விஐபிக்கள் பிரிவின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார்.

இந்துப் பெண்கள் மூக்குத்தி அணிவது சாதாரணமான விஷயம். அதுபோலவே அம்ரித்தும் மூக்குத்தி அணிந்திருந்தார். ஆனால் மூக்குத்தியுடன் வேலைக்கு வரக் கூடாது என அவரை வேலையில் நியமித்த யூரெஸ்ட் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் அதை ஏற்க மறுத்து விட்டார் அம்ரித். இந்து மத சம்பிரதாயப்படி பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும். எனவே நான் மூக்குத்தியை அகற்ற மாட்டேன் என்று கூறி விட்டார் அம்ரித்.

ஆரம்பத்தில் இதை அந்த நிறுவனம் விட்டு விட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் மூக்குத்தி அணிந்தபடியே வேலை பார்த்து வந்தார் அம்ரித். அவரது மூக்குத்தி குறித்து எந்தப் புகாரும் வாடிக்கையாளர்களிடமிருந்து வரவில்லை என்பதால் யூரெஸ்ட் நிறுவனமும் பிரச்சினையை விட்டு விட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர், அம்ரித் மூக்குத்தியுடன் பணி புரிவதற்கு ஆட்சேபனை தெரிவித்து யூரெஸ்ட் நிறுவனத்திடம் புகார் கொடுத்தார். இதைடுத்து யூரெஸ்ட் நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியது.

ஒன்று மூக்குத்தியை விட்டு விட வேண்டும் அல்லது வேலையில் நீடிக்க முடியாது என்று அது அம்ரித்திடம் தெரிவித்தது. ஆனால் தனது மூக்குத்தியை எடுக்க முடியாது என்று அம்ரித் உறுதியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி அம்ரித்தை வேலையை விட்டு நீக்கி விட்டது யூரெஸ்ட்.

இந்த நடவடிக்கையில் அம்ரித் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த நடவடிக்கை என்னை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக உணர்கிறேன். நான் சார்ந்த இந்து மதத்தின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் மூக்குத்தி அணிந்தேன்.

நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. எனது மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று மட்டுமே எதிர்பார்த்தேன். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நிர்வாகம் இருப்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றார் அம்ரித்.

அம்ரித் லால்ஜிக்கு ஆதரவாக இங்கிலாந்து இந்து கவுன்சில் களம் இறங்கியுள்ளது. இந்து திருமண சம்பிரதாயப்படி கல்யாணமான பெண்கள் மூக்குத்தி அணிவது ஒரு வழக்கமாகும். எப்படி கிறிஸ்தவர்கள் திருமணத்தின்போது மோதிரங்களை மாற்றிக் கொள்கிறார்களோ, அது போலத்தான் இந்து சமூகத்தில் மூக்குத்தி அணியும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.

கிறிஸ்தவர்கள் திருமண மோதிரங்களை அணிந்து கொள்வதில் யூரெஸ்ட் நிறுவனத்திற்கு நம்பிக்கை இருக்கும்போது, அதை மதிக்கும்போது, மூக்குத்தி அணிவதை மட்டும் அது எதிர்ப்பது நியாயமற்றது என்று கோபமாக கேட்டார்.

இந்த விவகாரம் குறித்து யூரெஸ்ட் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், நிறுவன விதிமுறைப்படி, பணி நேரத்தின்போது திருமணமான பெண்கள், சிறிய அளவிலான மோதிரம், தோடு போன்றவற்றை மட்டுமே அணியலாம். உடலைத் துளைத்து அணியப்படும் பிற நகைகளுக்கு அனுமதி கிடையாது என்பதை பலமுறை அம்ரித் லால்ஜிக்கு எடுத்துக் கூறினோம்.

இதுபோன்று அணியப்படும் நகைகளால் பாக்டீரியாக்கள் பரவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் எங்களது நிறுவனம் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒன்று. இப்படிப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு வேலை பார்த்தால், உணவில் பாக்டீரியாக்கள் பரவி பெரும் பிரச்சினையாகி விடும்.

மூக்குத்தி அணியாமல் வேலைக்கு வர வேண்டும் என்று அவரிடம் கூறினோம். அவர் ஏற்கவில்லை. இதனால்தான் வேலையிலிருந்து நீக்கினோம் என்றார் அவர்.

பேசாமல், யூரெஸ்ட் நிறுவனத்தினரை இந்தியாவுக்கு ஒரு மாதம் இன்டர்ன்ஷிப் கொடுத்து அழைத்து வந்து, மூக்குத்தி அணிந்த நமது நாட்டு இல்லத்தரசிகள் எப்படி பாக்டீரியா பரவலின்றி சமைக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை கற்றுக் கொடுக்கலாம்.

நன்றிங்க

//பேசாமல், யூரெஸ்ட் நிறுவனத்தினரை இந்தியாவுக்கு ஒரு மாதம் இன்டர்ன்ஷிப் கொடுத்து அழைத்து வந்து, மூக்குத்தி அணிந்த நமது நாட்டு இல்லத்தரசிகள் எப்படி பாக்டீரியா பரவலின்றி சமைக்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதை கற்றுக் கொடுக்கலாம்.//

அதானே,

மூக்குத்திப் போட்டால் பாக்டீரியா வருமா..?

நல்ல காது குத்தல்! :)

Monday, September 17, 2007

கொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார்.

கொல்லப்பட்ட கொள்ளையர்கள் உடலை கங்கையில் வீசிய போலீஸார் சஸ்பெண்ட்

திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2007

பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்ட 10 கொள்ளையர்களின் உடல்களை கங்கை ஆற்றில் வீசிய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரில் உள்ள வைசாலி என்ற கிராமத்தில், கடந்த வாரம் கொள்ளையடிக்க 10 திருடர்களை கிராம மக்களே அடித்துக் கொன்றனர். ஒரு திருடன் மட்டும் உயிருக்கு ஆபத்தான முறையில் போலீஸாரால் மீட்கப்பட்டான்.

கொல்லப்பட்ட 10 பேரின் உடல்களையும் வாங்க யாரும் முன்வரவில்லை. இதையடுத்து உடல்களை போலீஸாரே தகனம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்காக 3 பேரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் 10 பேரின் உடல்களையும் எரிப்பதற்குப் பதில், அவற்றை கங்கை ஆற்றில் வீசி விட்டுச் சென்றுள்ளனர் இந்த இதயமற்ற காக்கிகள். இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்குத் தெரிய வந்து அதிர்ந்துள்ளனர்.

உடனடியாக 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். கொள்ளையர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை விட போலீஸாரின் இந்த செயல் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றிங்க

மனித சடலத்துக்கு நேர்ந்த அவலத்தைப் பாருங்கள்.

என்னய்யா இது?

பிகார் மாநில பொது மக்களுக்குத்தான் அனுதாபம் இல்லையென்றால் போலீஸுக்குமா மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது!

அது சரி! போலீஸும் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தானே!!

Sunday, September 16, 2007

06. பொய் கற்பழிப்பு வழக்குகள்!

06. பொய் கற்பழிப்பு வழக்குகள் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

புதுடில்லி : "பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இது போல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

ம.பி., மாநிலத்தை சேர்ந்தவர் ராது. கடந்த 1991ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, ராது தனது தாயின் உதவியுடன், 14 வயதான தனது முறைப்பெண் சுமன்பாய் என்பவரை கற்பழித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ம.பி., கோர்ட், ராதுவுக்கும் அவரது தாய்க்கும் ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து ம.பி., ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

அப்பீல் வழக்கு விசாரணைக்கு இடையில் ராதுவின் தாய் இறந்து விட்டார். அப்பீல் வழக்கில், ராதுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்டது.இதை எதிர்த்து ராது மற்றும் அவரது தாய் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் சுமன்பாயின் தந்தை மாங்கிலால் என்பவர், ராதுவின் தந்தை நாதுவிடம் கடன் வாங்கியிருந்தார்.

அந்த கடன் தொகையை ரத்து செய்யும் படி வலியுறுத்தி வந்தார் மாங்கிலால். இதற்கு நாது சம்மதிக்காததால், பொய் புகார் கூறி, மாங்கிலால் பொய் வழக்கு தொடர்ந்திருப்பதாக ராகு தரப்பில் வாதிடப்பட்டது.இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் கொண்ட பெஞ்ச், ராதுவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

ராது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் எங்களுக்கு திருப்தி அளித்துள்ளது. ராது குற்றம் செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கீழ் கோர்ட்டும், ஐகோர்ட்டும் தவறை கண்டுபிடிப்பதில் தவறி விட்டன.எனவே, இந்த அப்பீல் மனுவை ஏற்று, கீழ் கோர்ட்டுகள் மற்றும் ம.பி., ஐகோர்ட் விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

கற்பழிப்பு வழக்குகளை விசாரிக்கும்போது, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பழிவாங்குவதற்காகவும், மிரட்டி பணம் பறிப்பதற்காகவும், சொத்துக்களை அபகரிப்பதற்காகவும் கூட பொய்யான கற்பழிப்பு வழக்குகள் தொடரப்படுகின்றன. இதுபோல பொய்யாக குற்றம் சாட்டப்படுவோர் தண்டிக்கப்படாத வகையில் கோர்ட்டுகள் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நன்றிங்க

பொய் வழக்குகளில் ஆண்களுக்கும் பாதுகாப்பு தேவைப்படுகிறது.

பொய் வழக்கு என உறுதி செய்யப்பட்டால் பொய்யான வழக்கு தொடர்ந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதனால் பொய் வழக்குகள் குறையலாம்.

4. வெடிக்கும் ராமர் பால சர்ச்சை!

வெடிக்கும் ராமர் பால சர்ச்சை:
அமைச்சர்கள் மோதல் - சங்கடத்தில் காங்.!


ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007

டெல்லி:

ராமர் பாலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில், தொல்பொருள் துறை தாக்கல் செய்த தவறான அறிக்கைக்கு பொறுப்பேற்று கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ராமர் பாலம் தொடர்பான வழக்கில் மத்திய கலாச்சாரத்துறைக்கு உட்பட்ட மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறை உச்சநீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதில், ராமர் இருந்ததற்கான ஆதாரம் இல்லை. ராமாயணத்தில் நடந்தவை உண்மை என்பதற்கான ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

பெரும் எதிர்ப்பு கிளம்பியதால், அந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் அமைச்சர்களுக்குள் தற்போது மோதல் மூண்டுள்ளது.

இந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், நான் கலாச்சாரத்துறை அமைச்சராக இருந்திருந்தால், எனது பதவியை ராஜினாமா செய்திருப்பேன். எங்கேயோ அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அப்படிப்பட்ட நிலையில் இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டதற்காக கலாச்சாரத் துறை அமைச்சர் ஏன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது.

இது ஒரு சமூக மக்களின் உணர்வுகளை கடுமையாக பாதித்துள்ளது. இது தவறான அறிக்கை என்று கோபமாக கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், மத்திய அமைச்சரவையிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ரமேஷின் இந்த பேச்சு குறித்து கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், நான் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், பிரதமரும் உத்தரவிட்டால் அடுத்த நிமிடமே அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

ஜெயராம் ரமேஷ் சொல்வதற்காக எல்லாம் ராஜினாமா செய்ய முடியாது. இந்த விஷயத்தில் எனது துறை தவறு செய்யவில்லை. பதில் அறிக்கை தொடர்பாக 3 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 2 செய்யப்பட்டன. ஒன்று விட்டுப் போய் விட்டது.

இந்த பதில் அறிக்கையை தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனுப்பினார். தவறு காரணமாக தொல்பொருள் துறை அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் ஆய்வுத் துறை தலைவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட முக்கியமான திருத்தத்தை செய்யாமல் விட்டதுதான் தவறாகி விட்டது. இது மிகப் பெரிய தவறு. கவனக்குறைவு. இதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இந்தத் தவறு காரணமாக துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தரப்பட்டுள்ளது என்றார் சோனி.

இதற்கிடையே, சேது சமுத்திரத் திட்டத்தை அமல்படுத்தி வரும் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் தான் இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆய்வுத் துறை கூறுகிறது.

காங்கிரஸ் அமைச்சர்கள் இருவர் ராமர் பாலம் தொடர்பாக மோதிக் கொண்டிருப்பதால் இந்தப் பிரச்சினை மேலும் சூடு பிடித்துள்ளது.

நன்றிங்க

சோதனை மேல் சோதனை
போதுமடா ஐயா!

தர்ம சங்கடத்தில்...
- காங்கிரஸ்

ராமர் பாலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொல்பொருள் துறை தாக்கல் செய்த அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அரசில் பொறுப்புள்ள அதிகாரிகள் மற்றும் முந்திரிகள் யாரும் பார்க்கவில்லையா?

இதைக்கூட கவனிக்காமலா அரசாங்கம் நடத்துறாங்க???

அதிகாரிகள் 2 பேர் தற்காலிக வேலை நீக்கம்!

அய்யோ பாவம் அதிகாரிகள்!!

3. கல்யாணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்.

கல்யாணம் செய்வதாக கூறி பெண்ணைக்
கற்பழித்து ஏமாற்றிய என்ஜீனியர்!

ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007

தூத்துக்குடி:

தூத்துக்குடி பெண்ணை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி சென்னைக்கு அழைத்துச் சென்று கற்பழித்து விட்டுத் தலைமறைவான மின்வாரிய பொறியாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆயிரம் காத்தான். இவரது மகள் ஜெயலெட்சுமி. புளியம்பட்டியில் உள்ள ஃபேன்ஸி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

தூத்துக்குடி தெர்மல் நகர் அனல் மின் நிலைய குடியிருப்பு 2-ஐ சேர்ந்தவர் சித்திவிநாயகமூர்த்தி. புளியம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2005ம் ஆண்டு ஜெயலட்சுமி வேலை பார்த்து வந்த கடைக்கு சித்திவிநாயகமூர்த்தி வந்தார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இதை தொடர்ந்து சித்திவிநாயகமூர்த்தி, ஜெயலட்சுமி வீட்டிற்கு மின் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 7-10-2005ல் ஜெயலட்சுமியை சென்னைக்கு அழைத்து சென்று சித்திவிநாயகமூர்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் தெர்மல் நகரில் உள்ள தனது வீட்டிற்கும் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

நட்பு நெருக்கமான பழக்கமானதால், தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஜெயலட்சுமி வற்புறுத்தினார். ஆனால் சித்திவிநாயகமூர்த்தி கல்யாணம் செய்ய மறுத்து விட்டார். மேலும், தொடர்ந்து தொல்லை கொடுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து ஜெயலட்சுமி புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சித்திவிநாயகமூர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நன்றிங்க

எமாறும் பெண்கள் இருக்கம்வரை ஏமாற்றும் ஆண்களும் இருப்பார்கள்!

பெண்களே உஷார்!!

Saturday, September 15, 2007

20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்...!

ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்
தவித்து வரும் 200 தொழிலாளர்கள்!


ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007

ஷார்ஜா:

ஷார்ஜாவில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமில், கடந்த 20 நாட்களாக கடும் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஷார்ஜாவின் தேசிய பெயின்ட்ஸ் ரவுன்ட் அருகே இந்த முகாம் உள்ளது. இங்கு இரு பெரும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அனைவரும் செக்யூரிட்டிக்களாக பணியாற்றுபவர்கள்) தங்கியுள்ளனர்.

முன்னணி செக்யூரிட்டி நிறுவனமான பென்ட்லி செக்யூரிட்டி மற்றும் சேப்ட்டி சர்வீஸஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 100 தொழிலாளர்கள் இவர்களில் அடக்கம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லையாம். இதனால் தொழிலாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளர் கூறுகையில், ரமலான் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தண்ணீர் சப்ளை இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். புனித மாதமான இந்த நாளில், தங்களது கடமைகளைச் செய்ய முடியாமல் அனைவரும் தவித்து வருகிறோம்.

பென்ட்லி நிறுவனம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் கட்டணத்தை செலுத்தாததால், தண்ணீர் விநியோகத்தை நகராட்சி துண்டித்து விட்டது. தற்போது தண்ணீர் சப்ளையை சீராக்கக் கோரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பல தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் உள்ளனராம். குளிக்காமல் கொள்ளாமல் எப்படி வேலைக்குப் போக முடியும். அதனால்தான் போகவில்லை. மேலும் எங்களில் சிலர் வேலைய விட்டே போய் விடலாமா என்று சிந்தித்துக் கொண்டுள்ளனர் என்று ஒரு தொழிலாளர் கூறினார்.

ஆனால் முகாமில் தண்ணீர்ப் பிரச்சினை இல்லை என்று பென்ட்லி நிறுவனம் மறுத்துள்ளது. முகாமில் ஒரு பிரச்சினையும் இல்லை, தொழிலாளர்கள்தான் பெரிதுபடுத்திக் கூறுகிறார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றிங்க

இவங்களையெல்லாம் தண்ணீரில்லாத காட்டுக்கு மாத்தனும்னு சொல்வாங்களே...!

இதைத் தண்ணீரில்லாத வீட்டுக்குன்னு, மாத்தி சொல்லிக்கோங்க!! :)

1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்!

1. எச்.ஐ.வி. மருந்தினால் புற்று நோய் ஏற்படும் அபாயம்

டில்லி : எச்.ஐ.வி. நோய்க்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளினால் புற்று நோய் ஏற்படுகிறது. பெத்திஸ்டாவில் உள்ள தேசிய புற்று நோய் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எச்.ஐ.வி. நோய்க்கு உட்கொள்ளும் மருந்துகளினால் புற்று நோயை ஏற்படுத்தும் செல்கள் உருவாகின்றது என அறிக்கை தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி.க்கு முக்கிய மருந்தான நெல்பின்விர், புற்று நோய் கிருமிகளை உடலில் உருவாக்குகிறது.

நன்றிங்க, தினமலர் 16.09.2007

பொதுவானவை

Friday, September 14, 2007

"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'

"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'

தஞ்சாவூர் : "முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அதை எதிர்ப்போம்' என்று பா.ஜ., தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

அவர் தஞ்சாவூரில் கூறியதாவது: ராமர், ராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் கூட மதிக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசன முதல் பிரதியில் கூட ராமாயணப் படம் உள்ளது. காந்தி கூட ராமராஜ்யம் அமைய வேண்டும் என்றார். மத்திய அரசு ராமர், சீதை இருந்தார்களா என கேள்வி எழுப்புகிறது. ராமர் சிறந்த அரசர். ராமர் சேது பிரச்னையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அதை தாக்கல் செய்த அமைச்சரும், அதிகாரியும் நீக்கப்பட வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை வரவேற்கிறோம். ராமர் சேது பாலம் பாதிக்காமல் மாற்று திட்டம் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் வகுப்புவாத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஓட்டு அரசியலுக்காக தாக்கல் செய்துள்ளனர். அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டபோதே, சமூக அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது நாட்டை பிளவுபடுத்தும். முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அதை கடைசி வரை எதிர்ப்போம். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

நன்றிங்க, DINAMALAR 14/09/2007

அதானே பார்த்தேன், என்னடா இது? முஸ்லிம்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு அறிவித்து இவ்வளவு நேரமாச்சே இந்த பா.ஜ.க காரங்களை இன்னும் காணலியே என்றிருந்தேன்!

1. அள்ளுங்கள், பாவம் போகும்!

அள்ளுங்கள், பாவம் போகும் - தா.பா தாக்கு

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007

சென்னை:

காவல்துறையினர் செய்த பாவங்கள் கொஞ்சமா, நஞ்சமா. அந்தப் பாவங்களை போக்க வேண்டும் என்றால் அவர்கள் குப்பைகளை அள்ள வேண்டும். அப்போதுதான் பாவம் போகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

சென்னை அருகே தாம்பரத்தில் நடந்த ஒரு கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தா.பாண்டியன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

காவல் துறையினர் செய்த பாவங்கள் ஏராளம். அவர்கள் அந்த பாவங்களை போக்க வேண்டும் என்றால் சென்னையில் குப்பைகளை அள்ளி புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும். குப்பையும் போகும், அவர்களது பாவங்களும் நீங்கும்.

ஒரு அணியில் சேர்வதும், விலகுவதும் ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை. அத்வானிக்கு ஜெயலலிதா விருந்து கொடுக்க இருப்பதாக தகவல் வந்திருப்பதைப் பார்த்தால், அவர் 3வது அணியில் இல்லை என்றே தெரிகிறது என்றார் தா.பாண்டியன்.

நன்றிங்க

ஆஹா... பரவாயில்லையே பாவங்களை செய்துவிட்டு குப்பையை அள்ளினாப் போச்சு!

வாழ்க தா.பாண்டியன்

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு.

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு

வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007

சென்னை:

சென்னை அருகே வேலம்மாள் சர்வதேசப் பள்ளியில் பிளஸ்-1 மாணவன் படித்து வந்த மர்மமான முறையில் இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகேயுள்ள அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது ஒரே மகன் முகமது பிலால் (19). பொன்னேரி அருகில் உள்ள வேலம்மாள் இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை 7.30 மணிக்கு, பள்ளி நிர்வாகத்தினர், மண்ணடியில் உள்ள சாகுலின் தாத்தா அசேனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிலால் அவனது அறையில் மயங்கிக் கிடந்தான். அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியிலேயே இறந்து விட்டான் என்று கூறினர்.

இதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த அசேன், உறவினர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிலாலின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி பிலாலின் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் புரிந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

சாகுல் ஹமீதின் குடும்ப நண்பரான காங்கிரஸ் எம்.பி. ஆருண் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பிலாலின் பெற்றோர் சவுதியில் இருந்து வந்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதுவரை உடல் அப்போலோ மருத்துவமனையில் வைத்திருக்க போலீசார் அனுமதித்தனர்.

நன்றிங்க

பொதுவானவை

Thursday, September 13, 2007

ஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை!

ஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை
உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு


வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

சென்னை:

தமிழக அரசின் கட்டாய ஹெல்மட் சட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு சமூக சேவகி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில் கட்டாய ஹெல்மட் சட்டத்தால், பெண்கள், நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த சட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார்.

இதை இன்று விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் கட்டாய ஹெல்மட் சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

நன்றிங்க

அப்படிப் போடுங்க ஹெல்மெட்டை!

சரி, இந்த சட்டம் இறுதிவரை நீ...டிக்குமா..?

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு!

முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5%
இட ஒதுக்கீடு - கருணாநிதி அறிவிப்பு




வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

சென்னை:

தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கை மற்றும் 2006-07ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனை செயல்படுத்துவதன் முதல் கட்டமாக இதுகுறித்து விரிவான ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டு பரிந்துரைக்குமாறு நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான தமிழக அரசின் பிற்பட்டோர் நல ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டிலிருந்து முஸ்லீம்களுக்கு 3.5 சதவீதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு செய்யப்படும்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வருகிற 15ம் தேதி முதல் இந்த தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும். இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றிங்க

தமிழக அரசுக்கு நன்றி.

- முஸ்லிம்

இதை எதிர்க்கும் போராட்டங்களை எதிர்பார்க்க.. லாமா? :)

பீகாரில், 10 திருடர்கள் அடித்துக் கொலை!

பீகாரில் பயங்கரம்: 10 திருடர்கள் அடித்துக் கொலை!

வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

ஹாஜிபூர்:

பீகாரில் திருடர்கள் என சந்தேகப்படும் 10 பேரை கிராம மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் சமீப காலமாக மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஒரு நகைத் திருடனை பொதுமக்கள் கடுமையாக அடித்து உதைத்தனர். போலீஸாரும் சேர்ந்து கொண்டு அந்தத் திருடனைத் தாக்கியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.

அதேபோல நவடா மாவட்டத்தில், கடந்த திங்கள்கிழமை செயின் திருடி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய 3 பேரைப் பிடித்த பொதுமக்கள் அவர்களின் கண்களைப் பறித்து மிகக் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த நிலையில் பீகாரின் வைஷாலி மாவட்டம், தேல்புர்வா கிராமத்தில், 10 திருடர்களை கிராம மக்கள் விரட்டி விரட்டி அடித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கிராமத்தில் அதிகாலையில் சிலர் கும்பலாக நடமாடியதைப் பார்த்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அவர்களைப் பிடித்தனர். அவர்களிடமிருந்து தப்ப அந்த நபர்கள் முயன்றுள்ளனர்.

ஆனால் கத்தி, கட்டை போன்ற ஆயுதங்களால் துரத்திய கிராம மக்கள் 10 பேரை சரமாரியாக அடித்து உதைத்தும், குத்தியும் கொன்றனர். ஒருவர் இந்தத் தாக்குதலில் மிகக் கடுமையாக காயமடைந்தார்.

தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். 10 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் திருடர்களாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை.

நன்றிங்க

பொதுவானவை

Wednesday, September 12, 2007

குமரன் பத்மநாதன் கைதாகவில்லை!

குமரன் பத்மநாதன் கைதாகவில்லை
- தாய்லாந்து அரசு மறுப்பு


புதன்கிழமை, செப்டம்பர் 12, 2007

கொழும்பு:

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்து 3வது இடத்தில் இருக்கும் முக்கியத் தலைவரான குமரன் பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுவதில் உணமை இல்லை. தாய்லாந்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

கேபி என்று விடுதலைப் புலிகள் வட்டாரத்தில் அழைக்கப்படுபவர் குமரன் பத்மநாதன். கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் இனக் கலவரம் வெடித்ததும் குமரன் மலேசியாவுக்கு தப்பினார். அங்கு 1987ம் ஆண்டு கப்பல் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

பின்னர் 1995ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்காக 6 கப்பல்களை வாங்கி அனுப்பினார். குமரனின் முக்கிய வேலையே விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பல்வேறு இடங்களிலிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அனுப்புவதுதான்.

குமரன் தவிர அய்யண்ணா என்பவரும் ஆயுதக் கொள்முதலில் ஈடுபட்டுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருந்து வருகிறார் குமரன். இவருக்கு தாய்லாந்து குடியுரிமை உள்ளது.

குமரன் பத்மநாதனுக்கு லண்டன், பிராங்க்பர்ட், ஏதென்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய இடங்களில் வங்கிக் கணக்குகள் உள்ளன. யாங்கூன், சிங்கப்பூர் மற்றும் ஜோஹன்னஸ்பர்க் ஆகிய இடங்களிலிருந்துபடி செயல்பட்டு வந்தார் குமரன்.

இன்டர்போல் போலீஸாரால் தேடப்பட்டு வரும் விடுதலைப் புலிகள் தலைவர்கள் பட்டியலில் குமரனும் இடம் பெற்றிருந்தார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு இன்டர்போல் போலீஸாரால் குமரன் கைது செய்யப்பட்டதாக பாங்காக்கிலிருந்து வெளியாகும் பாங்காக் போஸ்ட் என்ற இதழில் செய்தி வெளியானது.

மேலும் குமரனை தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசு தாய்லாந்து இன்டர்போலை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் செய்தி வெளியானது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவுக்கு
குமரனை கொண்டு வர சிபிஐ முயற்சிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

தாய்லாந்து மறுப்பு:

ஆனால் இந்த செய்தியை தற்போது தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து தாய்லாந்து வெளியுறவு அமைச்சக துணை செய்தித் தொடர்பாளர் பியிரா கெம்பான் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்பட்டதாக எங்களுக்கு தகவல் இல்லை. பாங்காக்கில் கடந்த ஒரு வாரத்திற்குள் யாரும் இதுபோல கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல இன்டர் போல் அமைப்பின் தாய்லாந்து பிரிவும் குமரன் கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் இதுகுறித்துக் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த யாரும் கைது செய்யப்படவில்லை.

குறிப்பாக குமரன் பத்மநாதன் கைது செய்யப்படவில்லை. அவரை ஒப்படைக்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுவதும் தவறானது என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதன் மூலம் குமரன் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

நன்றிங்க

திருந்துமா? தினமலர்

தாய்லாந்தில் கேபி கைது செய்யப்பட்டதாக தினமலரில் தவறான செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

ராஜிவ் கொலை சதிகாரன் தாய்லாந்தில் கைது.

ராஜிவ் கொலை சதிகாரன் "கேபி' தாய்லாந்தில் கைது

புதுடில்லி: ராஜிவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சி.பி.ஐ., அதிகாரிகளாலும், சர்வதேச போலீசாராலும் தேடப்பட்டு வந்த குமரன் பத்மநாதன் என்ற கே.பி., தாய்லாந்தில் கைது செய்யப் பட்டான். அவனை உடனடியாக ஒப்படைக்கும் படி தாய்லாந்து அரசிடம் சி.பி.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு இரண்டு சர்வதேச பிரிவுகள், பல்வேறு நாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன. கே.பி., பிரிவு மற்றும் அய்யனா குழு என்று அவை அழைக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பெயர்களில் பல்வேறு நாடுகளில், விடுலைப் புலிகளுக்காக ஆயுதம் சேகரித்து கடத்துதல், நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான் கேபி. இவன் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு இருந்தான்.

தாய்லாந்தின் ரனாங் மாகாணத் தில், நேற்று முன்தினம் குமரன் பத்மநாதனும், விடுதலைப்புலி அமைப்பை சேர்ந்த மேலும் இருவரும், துப்பாக்கிகளும் 45 ஆயிரம் தோட்டாக்களும் வாங்க முயன்றபோது பிடிபட்டனர்.ராஜிவ் கொலையாளிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி அளித்தவர் குமரன் பத்மநாதன். ராஜிவ் கொலை வழக்கில் பல ஆண்டுகளாக இவனை சி.பி.ஐ., தேடி வருகிறது. இது தொடர்பாக 23 நாடுகளிடம் தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தியது.

சுவீடனில் இவனைப் பிடிக்க சி.பி.ஐ., முயன்றபோது அவன் தப்பி விட்டான். இந்நிலையில், பாங்காக்கில் கைது செய்யப்பட்ட குமரன் பத்மநாதனை உடனடியாக ஒப்படைக்கும் படி சி.பி.ஐ., அந்த அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ராஜிவ் வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் தாய்லாந்து அரசிடம் சி.பி.ஐ., அளித்துள்ளது. இதனையடுத்து சி.பி.ஐ., அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தும் போது 16 ஆண்டுகளுக்கு முன் நடந்த பல்வேறு சதிப் பின்னணிகள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிங்க, தினமலர் 12/09/2007

பலநாள் கள்ளன் ஒருநாள் அகப்படுவான்!

மண்ணுக்கு மரம் பாரமா..?

குப்பை தொட்டியில் ஆண் குழந்தையை வீசிய தாய் கைது

சென்னை : குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஆண் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டார். "திருமணம் நிச்சயிக்கப்பட்டவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்து குழந்தை பெற்றேன்' என அப்பெண், போலீசாரிடம் கூறினார். தாயுக்கும், குழந்தைக்கும் மருத்துவச் சோதனை நடைபெற உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை, ஜோன்ஸ் லேன் சடையப்பன் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி; "கேட்டரிங்' தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி(38) சமையல் வேலை செய்கிறார். இவர்களது மகள் சிந்துஜா(20); பிளஸ் 2 படித்தவர்.கும்பகோணத்தைச் சேர்ந்தவர் பழனி(27). சென்னையில் டிரைவாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், சிந்துஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதால் காதலித்து வந்தனர். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த பின்பும், காதலர்கள் உறுதியாக இருந்தனர்.பின்னர், இரு வீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். சென்னையில் வரும் ஞாயிற்றுக் கிழமை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருங்கால கணவருடன் "நெருங்கி' பழகிய சிந்துஜா கர்ப்பம் அடைந்தார். இவ்விவரத்தை பழனியிடம் தெரிவிக்கவில்லை. தாயிடம் கூட விஷயத்தை சொல்லாமல் சிந்துஜா மறைத்தார்.

வயிறு பெரிதாக இருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளாமல் உடை அணிந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சிந்துஜாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தன்னந்தனியாக போராடி, சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவ்விவரம் வெளியில் தெரிந்தால் உறவினர்கள் அசிங்கமாக பேசுவர் என சிந்துஜா பயந்தார்.குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் கேரி பேக்கில் வைத்து, வீட்டின் சமையல் அறையில் வைத்து விட்டார். வீடு திரும்பிய அவரது தாய் சாந்தியிடம், "கேரி பேக்கில் பூனைக் குட்டி உள்ளது. அதனை மெதுவாக வெளியில் விட்டு விடுங்கள்; தூக்கி போட்டு விடாதீர்கள். பாவம் அடிபட்டு விடும்' என கூறினார்.

கூலி வேலை செய்து வரும் பக்கத்து வீட்டுக்காரர் சாலியா(55) என்பவரிடம் கேரி பேக்கை சாந்தி கொடுத்தார். அவர், குப்பை தொட்டி அருகே கேரி பேக்கை வைத்துவிட்டு சென்று விட்டார். அதில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.குப்பை தொட்டி அருகேயுள்ள வீட்டில் இருந்த கஸ்துõரி, குழந்தையை தூக்கினார். சுத்தம் செய்து, சட்டை அணிவித்து புட்டிப் பால் கொடுத்தார். இத்தகவல் குமரன் போலீசாருக்கு சென்றது. செனாய் நகரில் உள்ள "புரபஷனல் சைல்டு வெல்பேர்' என்ற தொண்டு நிறுவனத்தில் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில் சாந்தியும், அவரது மகள் சிந்துஜாவும் சிக்கினர். "குப்பை தொட்டியில் வீசிய குழந்தை தன்னுடையது தான்' என போலீசாரிடம் சிந்துஜா ஒப்புக் கொண்டார்.சிந்துஜா அளித்த வாக்குமூலத்தின் விவரம்: எனக்கும், எனது காதலர் பழனிக்கும் வரும் 16ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பெற்றோர் இருவரும் சமையல் வேலைக்கு சென்று விடுவதால், பழனி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றார். வருங்கால கணவர் என்பதால் அவரை அனுமதித்தேன்.கர்ப்பமடைந்த நான், வீட்டில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தேன். குழந்தை பிறந்த விவரம் வெளியில் தெரிந்தால், எனது பெற்றோர் தற்கொலை செய்து கொள்வர் என பயந்தேன்.

அதனால், குழந்தையை கேரி பேக்கில் வைத்து நாடகமாடினேன்.இந்த விவரம், எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு தெரிந்து விட்டது. என்னையும், எனது குழந்தையையும் பழனியும் அவரது குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ள சம்மதித்து விட்டனர். எனது கணவர் கும்பகோணத்தில் இருந்து நாளை(இன்று) சென்னை வருகிறார். எங்களது திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.இவ்வாறு சிந்துஜா போலீசாரிடம் கூறினார். சிந்துஜா, குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை:

தி.நகர் துணை கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில், அசோக் நகர் உதவி கமிஷனர் சுப்புலட்சுமி இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். குழந்தையை பெற்றெடுத்ததாக சிந்துஜா ஒப்புக் கொண்டார். அவர் மீது 317(குழந்தையை பெற்றெடுத்து அனாதையாக தெருவில் விடுதல்) பிரிவின் கீழ் சப்இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்தார். கைது செய்யப்பட்ட சிந்துஜா, இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சிந்துஜாவுக்கும், குழந்தைக்கும் மருத்துவச் சோதனை நடைபெற உள்ளது. அதன் பின், தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தை சிந்துஜாவிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளது.

நன்றிங்க, தினமலர் 12/09/2007

''மலடி மலடியென்று வையகத்தார் ஏசாமல்

தாயென்ற பெருமையினை மனங்குளிரத் தந்தவனே

கொடிக்குக் காய் பாரமா..?

பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா..?''

இந்தோனேசியாவில் பூகம்பம்.

இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்
- சுனாமி அபாயம் இல்லை


புதன்கிழமை, செப்டம்பர் 12, 2007

ஜகார்தா:

இந்தோனேசியாவின் பெங்குலு என்ற இடத்தில் இன்று மாலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இருப்பினும் தற்போது அந்த எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு விட்டது.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவுக்கு தென் மேற்கில், சுமத்ரா தீவுப் பகுதியில் உள்ள பெங்குலு என்ற இடத்தில் இரண்டு சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டன.

இந்திய நேரப்படி மாலை 6.10 மணிக்கு முதல் பூகம்பம் நிகழ்ந்தது. இது 7.9 ரிக்டராக இருந்தது. இரணண்டாவது நிலநடுக்கத்தின் அளவு 8 ரிக்டராக இருந்தது. மேலும் ஒரு பூகம்பமும் ஏற்பட்டது. இதன் அளவு 6.1 ரிக்டராக இருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இந்தியக் கடலோரம் உள்ள அனைத்து நாடுகளிலும் சுனாமி அலைகள் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்தந்த நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகள் விடப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி அலைள், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவை ஒரு மணி நேரத்தில் தாக்கக் கூடும். இந்தியா, இலங்கையை 3 மணி நேரங்களில் தாக்கக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இருப்பினும் இந்தோனேசிய கடல் பகுதியில் எதிர்பார்த்தபடி சுனாமி அலைகள் எழவில்லை. இதையடுத்து சுனாமி அபாய எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டு விட்டது.

பூகம்பத்தால் பெங்குலு பகுதியில் உள்ள பல வீடுகள் கட்டடங்கள் இடிந்துள்ளன. உயிரிழப்பு குறித்துத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் பெரும் பீதி நிலவுகிறது.

தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகக் கடலோரப் பகுதிகளில் காவல்துறையும் மாவட்ட நிர்வாகங்களும் விரைந்து நடவடிக்கையில் இறங்கின.

தமிழத்தில் உள்ள அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மின்னல் வேகத்தில் நடவடிக்கையில் இறங்கினர்.

கடலோரப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான தூரங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

சென்னையில் மெரீனா கடற்கரைக்கு வந்த மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். மெரீனா கடற்கரையோரம் உள்ள கட்டடங்கள், வீடுகளில் உள்ளோரும் கூட அப்புறப்படுத்தப்பட்டனர்.

கடந்த சுனாமியில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் முழு வேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்கும் அளவுக்கு தயார் நிலையில் இருக்குமாறு கடலோர மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதேபோல அந்தமானிலும் முழுமையான அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என மத்திய உள்துறை அமைச்சகமும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

சென்னை, மும்பை, மங்களூர், கட்ச் வளைகுடா, அந்தமான் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் அது கேட்டுக் கொண்டது.

கடந்த முறை வந்த சுனாமியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை மற்றும் கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெரும் பீதி நிலவியது. கடந்த சுனாமியின் நினைவுகளே இன்னும் அகலாத நிலையில் இந்த இரு மாவட்டங்களின் கடலோரப் பகுதி மக்களும் தங்களது வீடுகளை விட்டு வேகமாக வெளியேறினர்.

கடந்த முறையை விட இந்த முறை குறைந்த அளவிலேயே பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்றாலும் கூட இப்பகுதி மக்கள் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உவரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் மைக் மூலம் மக்களை எச்சரிக்கை செய்து பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பினர்.

இதேபோல நெல்லை மாவட்டத்திலும் கடந்த முறை சுனாமி பாதித்த கடலோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளிலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இருப்பினும் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை, யாரும் பயப்படத் தேவையில்லை என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2004ம் ஆண்டு சுமத்ரா தீவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் எழுந்த சுனாமி அலைள் ஆசிய நாடுளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரை பழி வாங்கியது நினைவிருக்கலாம்.

நன்றிங்க

பொதுவானவை

Tuesday, September 11, 2007

14.சிவகங்கையில் திறந்தவெளி சிறை!

14. சிவகங்கையில் ரூ.1.25 கோடியில் திறந்தவெளி சிறை

மதுரை : சிவகங்கையில் திறந்தவெளி சிறை அமைக்க தமிழக அரசு ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறை,

இரண்டு பெண்கள் சிறை,

114 கிளைச் சிறை,

ஒரு சிறுவர் சிறை,

ஆறு சிறப்பு சிறை,

ஒரு திறந்தவெளி சிறை

ஆகியவை உள்ளன. கோவையில் திறந்தவெளி சிறை உள்ளது. இங்கு கைதிகள் விவசாயம் செய்கின்றனர். மதுரை மண்டலத்தில் ஒரு திறந்தவெளி சிறையை அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் 98 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. சிறை அமைக்க ரூ.1.25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பணிகள் பொதுப்பணித்துறை மூலம் விரைவில் துவங்கப்படவுள்ளது.

நன்றிங்க, தினமலர் 12.09.2007

எல்லாரும் திருந்தி ஒழுங்க இருங்கப்பா!

தமிழகத்தில் சிறைகள் மேலும் அதிகரிப்பது ஏன்...?

ஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்!

11.உத்திரபிரதேசத்தில் ஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ்

லக்னோ : உத்திரபிரதேசத்தில் ஒரேநாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ் செய்து முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் ஆட்சி காலத்தில் நடந்த போலீஸ் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தியதில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 6500 போலீசாரை டிஸ்மிஸ் செய்து முதல்வர் மாயாவதி உத்தரவிட்டார். மேலும் 12 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றிங்க, தினமலர் 12.09.2007

எம்மாடி!

''எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்''

- முலாயம் சிங்!