Monday, March 31, 2008

கேள்வி, பதில் - நேருக்கு நேர்!

(இணையத்தில் கிடைக்கும் செய்திகளைப் பதிவேற்றி ஒப்பேற்றி வரும் முஸ்லிம் ஐயாவுடன் (நடக்காத) நேர்காணல்:)

கேள்வி: க்ளோபல் வாமிங் பத்தி என்ன நினைக்கிறீங்க?

பதில்: நான் என்னத்தை நெனைக்கிறது க்ளோபலைப் பத்திய கவலை எல்லாம் விஞ்ஞானிகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இருக்க வேண்டும். உலக சூடேற்றத்தால் நாம ஏன் கவலைப்படணும். காத்தாடி, ராட்சஸ காத்தாடி, கூலர் கீலர், ஏசி கீசின்னு வைச்சு சூட்டை முறியடிச்சிருவோம்லா.

கேள்வி: நடிகர் மன்சூர் அலிகான் பற்றி ஒரு செய்தி போட்டிருந்தீங்களே?

பதில்: ஆமாம்! ரொம்பக் கஷ்டப்படுகிறாராம். கற்பழித்த குற்றம் நிரூபிக்கப் பட்டதால் ஈட்டுத் தொகையாக ஆறு இலட்சம் கட்டறதுக்கும் காசில்லையாம். நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி உதவலாம் அல்லது சினிமாத் துறையுடன் நெருங்கிய தொடர்புடைய அரசியல் பெருந் தலைகள் உதவலாம். கலைஞர்கள் கலைஞர்களுக்கு உதவிக்கிறதுல ஒண்ணும் தப்பில்ல.

கேள்வி: தொலைக்காட்சிகளுக்கு தணிக்கை கொண்டுவரப் போவதாகக் கேள்விப் பட்டீர்களா?

பதில்: பட்டேன்! A, U, U/A என்று தரம் பிரிப்பார்களாம். A வகையைச் சார்ந்த நிகழ்ச்சிகளை இரவு 11.00மணி முதல் அதிகாலை 04.00 மணி வரைக்கும் ஒளி பரப்பலாமாம்! அதாவது 'அந்த' நேரத்தில் மட்டும் கெட்டுப் போகலாமாம்.

கேள்வி: சாராய ரெய்டுக்கு வந்தபோது போலீசை விரட்டிய பெண்மணி பற்றிய செய்தி குறித்து சொல்லுங்களேன்.

பதில்: அட! அதச்சொல்றீங்களா? சங்க காலத்துல முறத்தால புலியை விரட்டிய வீரப்பெண்கள் மாதிரி இன்றும் இருக்கிறார்கள். இது நவீனப் பெண்கள்!

கேள்வி: தமிழ்பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழக அரசு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கிறது?

பதில்: தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு லாஜிக் இல்லா மேஜிக் என்றும் மானாட மயிலாட என்றும் சுத்தத் தமிழில் பெயர் வைக்கிறார்களே அதுவே அதிகம்தான்! இதுக்கு மேலேயும் நாம எதிர்பார்க்கப்படாது என்னா நாஞ்சொல்றது?

கேள்வி: ஓவியர் ஹுசைனின் ஒரு ஓவியம் எதிர்பார்த்ததை விட அதிக விலை போயுள்ளதாமே

பதில்: ஆமாம்! இதுக்கு எல்லா பரிவாரங்களுக்கும் அவர் நன்றி சொல்லணும். விலை போக வேண்டுமென்றால் மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற கலாச்சாரம் பூமராங் ஆகத் திரும்பியுள்ளது.

கேள்வி: "டாடா" நிறுவனம் லேண்ட் ரோவர் மற்றும் ஜாக்குவார் கார் கம்பெனிகளை வாங்கியது பற்றி என்ன நினைக்கிறீங்க?

பதில்: "தாத்தா" நிறுவனம் வாங்கியிருந்தால் சந்தோஷமா இருந்திருக்கும்.

பேட்டி எடுத்தவருக்கு நன்றிங்க!

Saturday, March 29, 2008

கோயில் பசு கருணை கொலை!

லண்டன் கோயில் பசு கருணை கொலை- வழக்கு

சனிக்கிழமை, மார்ச் 29, 2008

இங்கிலாந்தில் கோயில் பசுவை அத்துமீறி கருணைக் கொலை செய்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்துக் கோயிலான பக்தி வேதாந்த மேனர் கோயில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் கங்கோத்ரி என்ற 13 வயது பசு இருந்தது.

ஒரு விபத்தில் கங்கோத்ரியின் கால்கள் முறிந்ததால் நிற்க முடியாமல் மாதக்கணக்கில் படுத்தே கிடந்தது. இதனால் அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிவிட்டது.

வேதனையால் பரிதாபமான நிலையில் இருந்த கங்கோத்ரியை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்துவிடலாம் என்று கோயில் நிர்வாகத்திடம் ராயல் சொசைட்டி என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு கோரியது. இதற்கு கோயில் நிர்வாகம் ஒத்துக்கொள்ளவி்ல்லை.

இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 13ம் தேதி கோசாலைக்குள் நுழைந்த ராயல் சொசைட்டியினர் கோயில் பசுவை கருணைக் கொலை செய்தனர்.

இந்த நிலையில் இப்போது ராயல் சொசைட்டி மீது பக்திவேதாந்த மேனர் கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது பற்றி கோயில் நிர்வாகத் தலைவர் கவுரி தாஸ் கூறுகையில்,

கங்கோத்ரியின் கால்களை சரி செய்ய தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ரணங்களை ஆற்றவும் மருந்து தரப்பட்டது. நன்கு தேறி வந்தது. அதைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ராயல் சொசைட்டியினர் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து கோயில் பசுவைக் கொன்றுவிட்டனர் என்றார்.

மேலும், கோயில் செய்தி தொடர்பாளர் ராதாமோகன் தாஸ் கூறுகையில், இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படிச் செய்துள்ளனர். இங்கிலாந்தில் இந்துக்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் இது என்றார்.

நடந்த சம்பவத்துக்காக ராயல் சொசைட்டியினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ஜான் ரோல்ஸ் கூறுகையில்,
நாங்கள் செய்தது சரியென்றே நம்புகிறோம். சட்டப்படி நடந்த இந்த விஷயத்தை அவர்கள் (கோயில் நிர்வாகம்) வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

இந்த பிரச்னை திசை திரும்பியிருப்பது வருத்தமளிக்கிறது.
நாங்கள் எப்போதும் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துதான் நடக்கிறோம். ஆனால் விலங்குகள் இம்சிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம் என்றார்.

நன்றிங்க

பாவிகளா!
அப்பாவி மனிதர்களை 'போர்' என்ற காரணத்தைச் சொல்லி கருணையேயில்லாமல் கொலைசெய்கிற 'மிருகங்கள்' மீது எந்த வழக்குமில்லையா..?

உண்மை பேசத் தெரியாத அத்வானி!

அத்வானி சொல்வது உண்மையில்லை-பெர்னான்டஸ்

சனிக்கிழமை, மார்ச் 29, 2008

டெல்லி: காந்தஹார் விமானக் கடத்தலின்போது தீவிரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் ஆப்கானிஸ்தான் சென்றது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு அதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை என்று அத்வானி கூறியுள்ளது தவறு. அனைத்து அமைச்சர்களும் கூடித்தான் அதுகுறித்து முடிவெடுக்கப்பட்டது என்று அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

மை கன்ட்ரி, மை லைப் என்ற பெயரில் அத்வானி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் அத்வானி பல்வேறு முக்கிய சம்பவங்களை வர்ணித்துள்ளார். இது பல்வேறு சர்ச்சைசகளை எழுப்பி வருகிறது. பாஜகவுக்குள்ளும் இது புயலைக் கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்துக்களுக்கு அப்போதைய வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காந்தஹார் விமானக் கடத்தல் தொடர்பாக அத்வானி கூறியுள்ள கருத்து இதுதான்: ஐ.சி.814 விமானத்தில் கடத்தப்பட்ட 189 பயணிகளை மீட்பதற்கு, இந்திய சிறையில் உள்ள பயங்கரவாதிகளை ஒப்படைக்க எடுக்கப்பட்ட முடிவின் படி, பயங்கரவாதிகளுடன் ஜஸ்வந்த் சிங் செல்வார் என்பது எனக்கு தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங்கை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் அத்வானி.

பெர்னாண்டஸ் மறுப்பு:

இதை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து பெர்னாண்டஸ் கூறுகையில்,

பயங்கரவாதிகளை விடுவிப்பது, காந்தகாருக்கு தனி விமானம் அனுப்புவது, அதில் ஜஸ்வந்த் சிங் செல்வது ஆகிய அனைத்தும், அனைத்து அமைச்சர்களும் இடம் பெற்ற கூட்டத்தில் தான் முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் அத்வானியும் இடம் பெற்றிருந்தார்.

பயங்கரவாதிகளை ஏற்றிச் சென்ற விமானம், முதலில் அமிர்தசரஸ் சென்று, அதன் பின், காந்தகாருக்கு சென்றது. இந்த முடிவு, ஒட்டு மொத்த அமைச்சரவையின் ஒருமித்த முடிவு தான் என்று அவர் கூறியுள்ளார்.

பி.சி.கந்தூரியும் மறுப்பு:

இதே போல, வாஜ்பாய் அமைச்சரவையில் சாலை போக்குவரத்து மற்றும்
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதைய உத்தரகண்ட் முதல்வருமான பி.சி.கந்தூரியும், அத்வானியின் கருத்தை மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், பயங்கரவாதிகளை விடுவிக்கும் ஆலோசனைக்கு தான் சம்மதிக்காததாக அத்வானி கூறியிருப்பது தவறு. அப்போதைய சிக்கலான சூழ்நிலையில், பல்வேறு சாதக, பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து தான், அமைச்சரவை கூட்டத்தில், பயங்கரவாதிகளை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதில், எவை தவறு என்றும், எவை சரியானவை என்றும் பாகுபடுத்தி பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

நன்றிங்க

என்னிக்குத்தான் அத்வானி உண்மை பேசுவாரோ...?

தருகிறயா! இல்ல மதம் மாறட்டா!!

எரையூரில் வன்னிய கிருஸ்துவர்களிடம் குறைகேட்பு

சனிக்கிழமை, மார்ச் 29, 2008

விழுப்புரம்: வன்னிய கிறிஸ்தவர்களின் மத மாற்ற மிரட்டலைத் தொடர்ந்து இன்று எரையூர் கிராமத்தில், அவர்களிடம் குறைகளைக் கேட்பதற்கு புதுவை - கடலூர் மறைமண்டலம் ஏற்பாடு செய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் எரையூர் கிராமத்தில் தலித் கிறிஸ்தவர்களுக்கும், வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே ஜாதிக் கலவரம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தனி சர்ச், தனிப் பங்கு கோரி வருகின்றனர்.

இந்த மோதல் சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்தது. எங்களுக்கு தனிப் பங்கு தர வேண்டும், இல்லாவிட்டால், நாங்கள் 20 ஆயிரம் பேரும் ஒட்டுமொத்தமாக இந்து மதத்திற்கே மாறி விடுவோம் என வன்னிய கிறிஸ்தவர்கள் அறிவிப்பு விடவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அவர்களை சமாதானப்படுத்த புதுச்சேரியிலிருந்து பாதிரியார்கள் குழு நேற்று எரையூர் வந்தது. இன்று வன்னிய கிறிஸ்தவர்களிடமும், அவர்களின் பிரதிநிதிகளிடமும் குறைகளை கேட்டறிய புதுச்சேரி - கடலூர் மறைமண்டல நிர்வாகிகள் தீர்மானித்துள்ளனர்.

எரையூரில் உள்ள செயின்ட் ரோசரி மேரி சர்ச்சில் இந்த குறை கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வன்னிய கிறிஸ்தவர்கள் தங்களது குறைகளைக் கூறலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இது தவிர ஊர்ப் பெரியவர்களையும் தனியாக சந்திக்க மறை மண்டல நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே, துப்பாக்கிச்சூட்டில் பலியான இரு வன்னிய கிறிஸ்தவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 1லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் வன்னிய கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றிங்க

இப்பல்லாம் இது ஃபஷனாகி விட்டது.

வழிப்பறி கொள்ளையர்கள் கத்தியை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டுவது போல,எனக்குத் தருவதை தா இல்லேன்னா மதம் மாறிடுவேன்னு மிரட்டுவதும் வழக்கமாகி வருகிறது என்னத்த சொல்ல !!!

Wednesday, March 26, 2008

ஆடையும் ஆயுதமாகும்!

சினிமா ஸ்டைலில் பெண் அதிரடி: போலீசுக்கு நிர்வாண போஸ்

புதன்கிழமை, மார்ச் 26, 2008

கரூர்: கரூரில் கள்ள லாட்டரி வியாபாரியை பிடிக்க சென்ற போலீசார் முன் ஆடையை அவிழ்த்துவிட்டு ஒரு பெண் நிர்வாண போஸ் கொடுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சி. அதில் போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு, ஒரு வீட்டுக்குள் மறைந்து கொண்டிருக்கும் கள்ளச் சாரய பெண் வியாபாரியை கைது செய்யப் போவார்.

யாராவது கைது செய்ய வந்தால் அணிந்திருக்கும் சேலையைக் கழற்றிவிட்டு நிர்வாணமாகிவிடுவதாக அந்த பெண் மிரட்டுவார். மீறி வீட்டுக்குள் போன வடிவேலுவுக்கு நிர்வாண போஸ் கொடுத்து மிரட்டும் அந்த பெண், வடிவேலுவின் டிரஸ்ஸையும் கழற்றி அவமானப்படுத்துவார்.

கிட்டத்தட்ட இந்தக் காட்சி உண்மையிலேயே கரூரில் நடந்துவிட்டது.

கரூரில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்தனர். இதில் செல்வராஜ் என்ற வியாபாரி ஓடிச்சென்று தன் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்.

அவரை விரட்டிச்சென்ற போலீசார் வீட்டுக் கதவை தட்டினர். அப்போது வீட்டுக்குள் இருந்த செல்வராஜின் மனைவி நிர்மலா தனது ஆடையைக் களைந்துவிட்டு போலீசுக்கு எதிராக கூச்சலிட்டார்.

வேறு மாதிரியாக கதை கட்டிவிடுவார்கள் என மிரண்ட போலீசார்
ரெய்டை கைவிட்டு விட்டு பின்வாங்கினர்.

நன்றிங்க

சினிமா துறையே இப்படி எல்லாத்துக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது. காவல் துறையையே கதிகலங்க வைத்து விட்டதே!

ஆடையை ஆயுதமாக்கிய வீரப் பெண்மணி வால்க!

Tuesday, March 25, 2008

மதம் மாறிய இஸ்லாம் தலைவர் (!?)

Sunday, 23 March, 2008 11:10 AM
.
வாடிகன், மார்ச் 23: இத்தாலியை சேர்ந்த இஸ்லாமிய தலைவர் ஒருவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்ட வாடிகனில் நடைபெற்ற விழாவில் மதம் மாறிய அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.
.
மக்தி அல்லாம் என்ற அந்த இஸ்லாமிய தலைவர் பத்திரிகை ஒன்றில் துணை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதம் ஆகியவற்றை விமர்சித்து அவர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதன் காரணமாக அவருக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் வாடிகனில் இன்று நடைபெற்ற ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கத்தோலிக்க மதத்திற்கு அவர் மாறினார். அவருக்கு போப் 16வது பெனடிக்ட் ஞானஸ்நானம் செய்து வைத்தார்.

அல்லாமுடன் சேர்ந்து மேலும் 6 இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.
எகிப்தில் பிறந்த அல்லாம் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களில் பயின்றவர். தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிங்க

//தன் வாழ்நாளில் இஸ்லாத்தை தாம் கடைபிடித்ததேயில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.//

ம்ம்ம்...

ஆள் யாருன்னு இப்போ வெளங்குது!

Saturday, March 22, 2008

முதுவை பித்அத்

சாயல்குடி - தர்ஹாக்களில் கொடியேற்றம் உற்சவம்
By முதுவை ஹிதாயத் on March 21st, 2008

தர்ஹாக்களில் கொடியேற்றம் உற்சவம்

சாயல்குடி, மார்ச் 20: சாயல்குடி அருகே தர்ஹாக்களில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கொடியேற்றம் உற்சவம் நடைபெற்றது.

எம்.மாரியூர் அல் அக்ஸô ஜூம்ஆ மஸ்ஜித் முஸ்லிம் ஜமாத்தார்கள் ஏற்பாட்டில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு எம்.மாரியூர் கடற்கரை பக்கீர் ஷாஹிப் செய்யது முஸ்தபா, செய்யது கஸ்ஸôலி ஷஹீது(வலி) தர்ஹாவில் ஜமாத் செயலரும், கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அ. முஸôபர் அடிமை கொடி ஏற்றி வைத்தார். இரவு 9 மணியளவில் செய்யது லுக்மானுல் ஹக்கீம் தர்ஹாவில் திப்ரில் மஜ்லீஸ் உற்சவம் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அல்தரஸத்துல் அமானியாவின் 21-ம் ஆண்டு விழா நடைபெற்றது. மதரஸô மாணவ, மாணவிகள் பலரும் குர் ஆன் ஓதுதல், மனனம், ஹதீஸ், பேச்சுப் போட்டி முதலியவற்றில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மடத்தாகுளம் செய்யது நூர்முகம் மது ஷஹீது(வலி) தர்ஹாவில் ஜமாத் துணைத் தலைவர் அ.யூசுப் கொடி ஏற்றி வைத்தார்.

இரவு 10 மணிக்கு நடைபெற்ற விழாவில் அல்மதரஸôத்துல் அமானியா மாணவ, மாணவிகளுக்கு பிரமுகர்கள் ஏ.செய்யது முகம்மது, எஸ்.ஹாஜா முஹைதீன், என்.அப்துல் அஜீஸ் ஆகியோர் பரிசளித்தனர்.

This post was submitted by முதுவை ஹிதாயத்.

Categories: ஆன்மீகம், சமூகம், செய்தி, விழா
Tags: சாயல்குடி, மாரியூர்

நன்றிங்க

சகோதரர் முதுவை ஹிதாயத், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இறைவன் நமக்கு நேர்வழிக் காட்டுவானாக! இப்பதிவை ஆன்மீகப் பதிவாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். தர்ஹாக்களில் கொடியேற்றும் திருவிழா இஸ்லாத்தின் ஆன்மீகத்தோடு எவ்வகையில் தொடர்புடையது என்பதை சற்று ஆதாரத்துடன் விளக்கினால் நன்று!

அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களின் ஆன்மீகமா? அதையாவது தெளிவுபடுத்துங்கள்.

நன்றியுடன்,
முஸ்லிம்

Monday, March 17, 2008

விவாகரத்தில் சம உரிமை!

ஆண்களுக்கு இருப்பது போல்
முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை உண்டு
அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு


லக்னோ, மார்ச்.17-

"ஆண்களைப்போல், முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை'' உண்டு என்று, அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்ட வாரியம் அறிவித்து உள்ளது.

முஸ்லிம் சமூகத்தில், மூன்று முறை

`தலாக்' என்ற வார்த்தையை சொல்லி மனைவியை பிரியும் பாரம்பரிய உரிமை இதுவரை ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

பெண்களுக்கும் அங்கீகாரம்

இப்போது முதன் முறையாக, முஸ்லிம் பெண்களுக்கும் கணவரை பிரியும் உரிமை உண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஷரியத் சட்டப்படி
`திருமண விதிமுறைகளை' அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி நபர் சட்ட வாரிய தலைவர் ஷெய்ஸ்டா அம்பர் நேற்று வெளியிட்டார்.

"ஷரியத் சட்ட விதிமுறைகளின்படி, பெண்களுக்கு தங்கள் கணவரை பிரிவதற்கு (குலா) முழு அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஷரியத் சட்டத்தில் ஏற்கனவே இந்த விதிமுறை இடம் பெற்று இருந்தாலும், ஆணாதிக்க சமுதாயத்தில் இதுவரை இந்த விதிமுறை அறிமுகப் படுத்தப்படவில்லை'' என்று அப்போது அவர் கூறினார்.
கணவர் முன்வராவிட்டாலும்
4 ஆண்டுகளாக கணவர் காணாமல் போய்விட்டாலோ, வேறு ஒரு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்திருந்தாலோ, திருமணத்துக்கு முன்போ அல்லது பின்போ எய்ட்ஸ் போன்ற நோய் இருந்து அதை மறைத்து இருந்தாலோ, அல்லது உணவு, உடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்காமல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட அந்த பெண், கணவரை பிரிவதற்கு இந்த விதிமுறை அனுமதி அளிக்கிறது.

அதே நேரத்தில் மனைவியை பிரிவதற்கு சம்பந்தப்பட்ட கணவர் முன்வர வில்லை என்றால், திருமணத்தின்போது கணவர் கொடுத்த `மெகர்' பணத்தை திருப்பிக்கொடுத்து விட்டு கணவரை பிரிவதற்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தலாக் முறையில் பிரிவதற்கு முன்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கணவன்-மனைவி இருவரும் 3 மாதங்கள் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

3 படிவங்கள்

முதன் முறையாக திருமணத்தின்போது 3 படிவங்களை நிரப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி, திருமணத்தை நடத்தும் அமைப்பு (பீரோ), மணமகன்-மணமகள், மற்றும் திருமணத்தை நடத்தும் காஜி ஆகியோருக்கு இந்த படிவங்கள் வழங்கப்படவேண்டும். இதன்மூலம் திருமணம் தொடர்பாக எந்த சர்ச்சைக்கும் இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் சட்டபூர்வமான ஆவணங்கள் (படிவங்கள்) இருக்கும்.

திருமணத்தை அலுவலகத்தில் பதிவு செய்வது, திருமண ஒப்பந்தத்தில் மணமகன்-மணமகள் இருவருடைய போட்டோக்களையும் ஒட்டுவதன்மூலம் ஆண், பெண் இருவருக்கும் புதிய விதிமுறைகளின்படி சம உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.

சம உரிமை

முஸ்லிம் திருமணம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டபின் நிருபர்களுக்கு பேட்டி அளித்த முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரிய தலைவர் ஷெய்ஸ்டா அம்பர், "முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியத்தின திருமண விதிமுறைகளுக்கும் புதிய விதிமுறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக'' தெரிவித்தார்.

முந்தைய சட்டத்தில் குரானில் குறிப்பிட்டுள்ளதைப்போல் பெண் உரிமைகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் புதிய விதிமுறைகளில் இரு தரப்பினருக்கும் சம உரிமை வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

நன்றிங்க

விவாக ஒப்பந்தத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் இஸ்லாம் சம உரிமை வழங்கியிருக்கிறது. விவாகத்தில் இருவரும் சம்மதம் தெரிவித்து வாழ்க்கையில் இணையும் ஆண். பெண் இருவரும் பின்னர் பிரியும் நிலை ஏற்பட்டால் விவாகரத்துக்கோருவதிலும் இருவருக்கும் சம உரிமை இஸ்லாம் வழங்கியுள்ளது. இந்த உரிமைகள் இன்று, நேற்று வழங்கியதல்ல 1400 ஆண்டுகளுக்கு முன்பே சட்டபூர்வமாக எழுத்து வடிவத்தில் இவ்வுரிமைகளை இஸ்லாம் வடித்துள்ளது.

எனினும், அறியாமையின் காரணமாக பெண்களுக்கான உரிமை மறைக்கப்பட்டு, இன்று சீர் திருத்தம் செய்வது வரவேற்கத்தக்கது.

Wednesday, March 12, 2008

கற்பழிப்புக்கு நஷ்டஈடு

சென்னை: கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க தன்னிடம் பணம் இல்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் கைவிரித்து விட்டார்.

நடிகர் மன்சூர் அலிகானால் கற்பழிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் மன்சூர். அங்கும் நஷ்ட ஈடு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சிறைத் தண்டனை ரத்து செய்யபப்ட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார் மன்சூர். அங்கு உயர்நீதிம்ன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், உறுதி கூறியபடி இழப்பீட்டை மன்சூர் தர வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து பணத்தை வசூலிப்பதற்காக வடபழனி உதவி ஆணையர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் வடபழனி பெரியார் சாலையில் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்றனர்.

மன்சூர் அலிகானிடம் கோர்ட்டு உத்தரவைக் காட்டி ரூ.7 லட்சத்தை தருமாறு போலீசார் கேட்டனர். ஆனால், தன்னிடம் ரூ.7 லட்சம் இல்லை என்றும், தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3,000 மட்டுமே இருப்பதாகவும் போலீசாரிடம் மன்சூர் அலிகான் கூறினார்.

சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி விட்டது. பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் இந்தப் பணத்தை செலுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

மன்சூர் அலிகான் தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்தும் ஒரே ஒரு டாடா சபாரி காரும் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது.

இதையடுத்து மன்சூர் அலிகானிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியவில்லை என்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றிங்க

கற்பழித்தவனுக்கு சரியான தண்டனை வழங்குவதை விடுத்து கற்பழித்ததுக்கு பரிகாரமாக நஷ்ட ஈடு கோரினால் இருப்பவனும் இல்லையென நாடகம் ஆடுவான். (அதிலும் இவன் நடிகன் வேறு)