Saturday, March 22, 2008

முதுவை பித்அத்

சாயல்குடி - தர்ஹாக்களில் கொடியேற்றம் உற்சவம்
By முதுவை ஹிதாயத் on March 21st, 2008

தர்ஹாக்களில் கொடியேற்றம் உற்சவம்

சாயல்குடி, மார்ச் 20: சாயல்குடி அருகே தர்ஹாக்களில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கொடியேற்றம் உற்சவம் நடைபெற்றது.

எம்.மாரியூர் அல் அக்ஸô ஜூம்ஆ மஸ்ஜித் முஸ்லிம் ஜமாத்தார்கள் ஏற்பாட்டில் புதன்கிழமை மாலை 4 மணிக்கு எம்.மாரியூர் கடற்கரை பக்கீர் ஷாஹிப் செய்யது முஸ்தபா, செய்யது கஸ்ஸôலி ஷஹீது(வலி) தர்ஹாவில் ஜமாத் செயலரும், கடலாடி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான அ. முஸôபர் அடிமை கொடி ஏற்றி வைத்தார். இரவு 9 மணியளவில் செய்யது லுக்மானுல் ஹக்கீம் தர்ஹாவில் திப்ரில் மஜ்லீஸ் உற்சவம் நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை 10 மணிக்கு அல்தரஸத்துல் அமானியாவின் 21-ம் ஆண்டு விழா நடைபெற்றது. மதரஸô மாணவ, மாணவிகள் பலரும் குர் ஆன் ஓதுதல், மனனம், ஹதீஸ், பேச்சுப் போட்டி முதலியவற்றில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மடத்தாகுளம் செய்யது நூர்முகம் மது ஷஹீது(வலி) தர்ஹாவில் ஜமாத் துணைத் தலைவர் அ.யூசுப் கொடி ஏற்றி வைத்தார்.

இரவு 10 மணிக்கு நடைபெற்ற விழாவில் அல்மதரஸôத்துல் அமானியா மாணவ, மாணவிகளுக்கு பிரமுகர்கள் ஏ.செய்யது முகம்மது, எஸ்.ஹாஜா முஹைதீன், என்.அப்துல் அஜீஸ் ஆகியோர் பரிசளித்தனர்.

This post was submitted by முதுவை ஹிதாயத்.

Categories: ஆன்மீகம், சமூகம், செய்தி, விழா
Tags: சாயல்குடி, மாரியூர்

நன்றிங்க

சகோதரர் முதுவை ஹிதாயத், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

இறைவன் நமக்கு நேர்வழிக் காட்டுவானாக! இப்பதிவை ஆன்மீகப் பதிவாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். தர்ஹாக்களில் கொடியேற்றும் திருவிழா இஸ்லாத்தின் ஆன்மீகத்தோடு எவ்வகையில் தொடர்புடையது என்பதை சற்று ஆதாரத்துடன் விளக்கினால் நன்று!

அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களின் ஆன்மீகமா? அதையாவது தெளிவுபடுத்துங்கள்.

நன்றியுடன்,
முஸ்லிம்

3 comments:

முதுவை ஹிதாயத் said...

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

இதுபோன்று இஸ்லாத்தில் இருக்கிறதென்று கூறவில்லை. இதுபோல் நிகழ்வுகள் நடக்கின்றன என்பதை மட்டுமே பதிவு செய்துள்ளேன் நண்பரே.

தவறான விமர்சனங்கள் செய்ய வேண்டாம் அன்பரே.

முதுவை ஹிதாயத்
துபாய்

Asalamsmt said...

உங்கள் செய்தியை பார்க்கும் பொழுது ரொம்ப முக்கியம் கொடுத்தது போல் இருக்கிறது. அதுதான் சகோதரர் முஸ்லிமும் கேட்டுஇருப்பாரே ஒழிய வேறு இல்லை.
அதனால் இனி இந்த மாதிரி செய்திகளை முக்கிய படுத்தாமல் இஸ்லாமிய மக்களுக்கு நேரான வழியை காண்பிப்பதும் நமக்கு கடமையாக இருக்கிறது நான் நினைக்கிறேன்.

சகோதரரும் தவறாக எடுத்துக்கொள்ளாமல், சுட்டி காட்டுகிறேன். அன்புடன்
அசலமோன்

முஸ்லிம் said...

//தவறான விமர்சனங்கள் செய்ய வேண்டாம் அன்பரே.//

முதுவை ஹிதாயத் உங்கள் வரவுக்கு நன்றி.

பித்அத் விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை மக்களிடம் பரப்பி வருகிறீர்கள். அதைக் கைவிட்டு நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள். இதுவே இஸ்லாத்துக்கும் விருப்பமானது.

இதில் ''நான் தவறாக விமர்சிக்கிறேன்'' என்று என் மீது குற்றச்சாட்டு வேறு.