Wednesday, March 12, 2008

கற்பழிப்புக்கு நஷ்டஈடு

சென்னை: கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்க தன்னிடம் பணம் இல்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் கைவிரித்து விட்டார்.

நடிகர் மன்சூர் அலிகானால் கற்பழிக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் மன்சூர். அங்கும் நஷ்ட ஈடு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் சிறைத் தண்டனை ரத்து செய்யபப்ட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனார் மன்சூர். அங்கு உயர்நீதிம்ன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம், உறுதி கூறியபடி இழப்பீட்டை மன்சூர் தர வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து பணத்தை வசூலிப்பதற்காக வடபழனி உதவி ஆணையர் விஜயராகவன், இன்ஸ்பெக்டர் அசோக்குமார் ஆகியோர் வடபழனி பெரியார் சாலையில் மன்சூர் அலிகான் வீட்டுக்கு சென்றனர்.

மன்சூர் அலிகானிடம் கோர்ட்டு உத்தரவைக் காட்டி ரூ.7 லட்சத்தை தருமாறு போலீசார் கேட்டனர். ஆனால், தன்னிடம் ரூ.7 லட்சம் இல்லை என்றும், தனது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.3,000 மட்டுமே இருப்பதாகவும் போலீசாரிடம் மன்சூர் அலிகான் கூறினார்.

சொந்தப் படம் எடுத்து நஷ்டமாகி விட்டது. பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னால் இந்தப் பணத்தை செலுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

மன்சூர் அலிகான் தனக்கு சொந்தமாக கார் கூட இல்லை என்று கூறியுள்ளார். அவர் பயன்படுத்தும் ஒரே ஒரு டாடா சபாரி காரும் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது.

இதையடுத்து மன்சூர் அலிகானிடமிருந்து பணத்தை வசூலிக்க முடியவில்லை என்று சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நன்றிங்க

கற்பழித்தவனுக்கு சரியான தண்டனை வழங்குவதை விடுத்து கற்பழித்ததுக்கு பரிகாரமாக நஷ்ட ஈடு கோரினால் இருப்பவனும் இல்லையென நாடகம் ஆடுவான். (அதிலும் இவன் நடிகன் வேறு)

No comments: