Saturday, March 29, 2008

கோயில் பசு கருணை கொலை!

லண்டன் கோயில் பசு கருணை கொலை- வழக்கு

சனிக்கிழமை, மார்ச் 29, 2008

இங்கிலாந்தில் கோயில் பசுவை அத்துமீறி கருணைக் கொலை செய்த அமைப்பு மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மிகப்பெரிய இந்துக் கோயிலான பக்தி வேதாந்த மேனர் கோயில் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் என்ற இடத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான கோசாலையில் கங்கோத்ரி என்ற 13 வயது பசு இருந்தது.

ஒரு விபத்தில் கங்கோத்ரியின் கால்கள் முறிந்ததால் நிற்க முடியாமல் மாதக்கணக்கில் படுத்தே கிடந்தது. இதனால் அதன் வயிறு மற்றும் முதுகு பகுதியில் புண்கள் ஏற்பட்டு ஆறாத ரணமாகிவிட்டது.

வேதனையால் பரிதாபமான நிலையில் இருந்த கங்கோத்ரியை விஷ ஊசி போட்டு கருணைக் கொலை செய்துவிடலாம் என்று கோயில் நிர்வாகத்திடம் ராயல் சொசைட்டி என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு கோரியது. இதற்கு கோயில் நிர்வாகம் ஒத்துக்கொள்ளவி்ல்லை.

இது தொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 13ம் தேதி கோசாலைக்குள் நுழைந்த ராயல் சொசைட்டியினர் கோயில் பசுவை கருணைக் கொலை செய்தனர்.

இந்த நிலையில் இப்போது ராயல் சொசைட்டி மீது பக்திவேதாந்த மேனர் கோயில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது பற்றி கோயில் நிர்வாகத் தலைவர் கவுரி தாஸ் கூறுகையில்,

கங்கோத்ரியின் கால்களை சரி செய்ய தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. ரணங்களை ஆற்றவும் மருந்து தரப்பட்டது. நன்கு தேறி வந்தது. அதைக் கொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ராயல் சொசைட்டியினர் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்து கோயில் பசுவைக் கொன்றுவிட்டனர் என்றார்.

மேலும், கோயில் செய்தி தொடர்பாளர் ராதாமோகன் தாஸ் கூறுகையில், இந்துக்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர்கள் இப்படிச் செய்துள்ளனர். இங்கிலாந்தில் இந்துக்களுக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் இது என்றார்.

நடந்த சம்பவத்துக்காக ராயல் சொசைட்டியினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் ஜான் ரோல்ஸ் கூறுகையில்,
நாங்கள் செய்தது சரியென்றே நம்புகிறோம். சட்டப்படி நடந்த இந்த விஷயத்தை அவர்கள் (கோயில் நிர்வாகம்) வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

இந்த பிரச்னை திசை திரும்பியிருப்பது வருத்தமளிக்கிறது.
நாங்கள் எப்போதும் பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளித்துதான் நடக்கிறோம். ஆனால் விலங்குகள் இம்சிக்கப்படக்கூடாது என்பதுதான் எங்கள் வாதம் என்றார்.

நன்றிங்க

பாவிகளா!
அப்பாவி மனிதர்களை 'போர்' என்ற காரணத்தைச் சொல்லி கருணையேயில்லாமல் கொலைசெய்கிற 'மிருகங்கள்' மீது எந்த வழக்குமில்லையா..?

No comments: