Tuesday, July 31, 2007

பாஜகவின் பன்முகம்

எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் - பாஜக நிலைபாட்டில் மாற்றம்!

செவ்வாய், 31 ஜூலை 2007

புதுதில்லி: எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லர் என பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார். பாஜக தலைமையகத்தில் நடந்த பாஜக சிறுபான்மை பிரிவின் (மைனாரிட்டி மோர்ச்சா) தேசிய சமிதி கூட்டத்தைத் தொடங்கி வைத்து பேசும் பொழுது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறு அளவிலான இளைஞர்கள் மட்டுமே தவறான வழிகாட்டல்கள் மூலம் தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மை என்ன என்பதைத் தெளிவுபடுத்தி தேசிய நீரோட்டத்தில் கொண்டு வர வேண்டும். இந்த இலட்சியத்தை அடைய பாஜக சிறுபான்மை பிரிவு முயற்சிகள் செய்ய வேண்டும்" என ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்தார்.

"நாட்டில் வாழும் எவருடைய நம்பிக்கைகளையும் சிதைக்காத வண்ணம் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். பொது சிவில் சட்டத்தைக் குறித்து நாடு முழுவதும் திறந்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டியது பொருளாதாரத்தின் அடிப்படையில் ஆக வேண்டும். எல்லா மதத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

சுதந்திரம் அடைந்து பல காலமாக மதசார்பற்ற கட்சி என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் காங்கிரஸ் தான் நாட்டை ஆட்சி செய்துள்ளது. முஸ்லிம்களின் பின்தங்கிய நிலைக்கு அவர்கள் தான் காரணம்.

அயோத்தியில் இராமர் கோவில் கட்ட முஸ்லிம் தலைவர்கள் முன்முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இது மட்டும் நடந்து விட்டால், மிகப்பெரிய ஒரு தேசிய-கலாச்சார பிரச்சனைக்கு பரிகாரம் காணப்படுவது மட்டுமல்லாது மதச் சகிப்புத்தன்மையின் முன்னுதாரணமாக ஒரு சரித்திரம் படைப்பதும் இதனுடன் நடக்கும்" என ராஜ்நாத் சிங் கூறினார்.

சாதாரணமாக நாட்டில் தேர்தல் நெருங்கும் பொழுது, குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் பொழுது, RSS போன்ற சங்பரிவார இயக்கங்களின் தலைமைகள் கூறுவதற்கு மறுபேச்சின்றி தலையாட்டிவிட்டுத் தன் பாதையை தூய இந்துத்துவ பாணியில் மாற்ற முயலும் பாஜக, இம்முறை தனது நிலைபாட்டில் சற்று மாற்றம் கொண்டு வந்திருப்பது அதன் சிறுபான்மை பிரிவு தேசிய கூட்டத்தின் பொழுது வெளிப்படையாகத் தெரிந்தது.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் பயங்கரவாதிகளாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வந்துள்ள பாஜகவின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், தனது நிலைபாட்டில் மாற்றம் வந்ததைத் தெரிவித்த இதே சிறுபான்மை சமிதி கூட்டத்தின் துவக்கம் திருக்குர்ஆன் வசனங்களுடன் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தங்களது தூய இந்துத்துவ நிலைபாட்டில் உறுதியாக நிற்பதாக காட்டிக் கொள்ளும் அதேவேளை வாஜ்பாய் போன்ற முகமூடி புனிதபிம்பத் தலைவர்கள் தேர்தல் காலங்களில் தலைகளில் தொப்பி போட்டுக் கொண்டு ஏதாவது பெயர் தாங்கி முஸ்லிம்களை முன்னணியில் நிற்கவைத்து முஸ்லிம்களின் ஓட்டு வாங்கும் தந்திரம் செல்லுபடியாகாதது கடந்த பாராளுமன்ற தேர்தலில் தில்லி ஜும்ஆ மஸ்ஜித் இமாம் புகாரியின் அமோக ஆதரவை பெற்ற பின்பும் கூட தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுவங்கியில் எந்த மாற்றமும் உண்டாகாததும், சமீபத்தில் இலண்டன், கிளாஸ்கோ விமானநிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி தொடர்பாக டாக்டர் ஹனீஃபை அநியாயமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கைது செய்ததைக் கண்டித்து அவருக்காக களமிறங்கிய இந்திய அரசின் செயல்பாட்டை தீர விசாரிக்கும் முன்பே டாக்டர் ஹனீஃப் ஒரு முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் கண்ணை மூடிக் கொண்டு இந்திய அரசு தீவிரவாதத்திற்கு துணை போகின்றது என அத்வானி போன்ற பாஜக பெருந்தலைகள் பிரச்சாரம் செய்த நிலையில், டாக்டர் ஹனீஃப் தற்போது நிரபராதி என நிரூபணமாகி விடுதலை ஆனதால் பாஜகவின் தேசியவாத பிம்பம் கேவலமான முறையில் கலைந்து போனதைத் தூக்கி நிறுத்த பாஜக செய்யும் தந்திரமாகவும் தான் இப்புதிய நிலைபாட்டை காணமுடிகின்றது.

இக்கூட்டம் நடைபெற்ற மன்றத்தின் நடுவே தீனதயாள் உபாத்யாயா மற்றும் ஷியாம் சர்மா முகர்ஜியின் படங்களுக்கு நடுவே மௌலானா ஆஸாதின் படமும் மாலையிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் கூட்டம் நடந்த இடத்தில் அரபி மற்றும் உருது மொழிகளில் அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டிருந்ததும் பாஜகவின் அரசியல் நிலைபாட்டை நகைப்பிலாழ்த்தும் விதத்தில் அமைந்திருந்தது.

பாஜகவின் சிறுபான்மை சமிதியில் சில முஸ்லிம்களைப் போன்று கிறிஸ்தவர்களும் இடம்பெற்றுள்ளனர். எனினும் திருக்குர்ஆன் வசனங்களுடன் ஆரம்பமான கூட்டத்தில் பின்னர் வந்தே மாதரம் பாடப்பட்டாலும் பைபிளின் வசனங்கள் எதுவும் வாசிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றிங்க

ஆந்திராவில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்காக என்னவோ, ஆந்திராவையே முஸ்லிம்களுக்கு எழுதி வைத்து விட்ட மாதிரி இதே பாஜக இட ஒதுக்கீடை எதிர்த்து போரட்டம் நடத்தியது.

நன்றிங்க, படம் தினமலர்

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு முஸலிம்கள் கோவில் கட்டிக் கொடுக்கணுமாமே. இடித்த மசூதியை இந்த யோக்கியர்கள் கட்டித் தரலாமே என்ன நாஞ்சொல்றது!

சிக்கலில் இன்னொரு இந்திய டாக்டர்.

ஆஸி.: சிக்கலில் இன்னொரு இந்திய டாக்டர்
ஹனீப்புடன் பணியாற்றியவர் சஸ்பெண்ட்


ஜூலை 31, 2007

மெல்போர்ன்: டாக்டர் ஹனீப் கைது செய்யப்பட்டபோது அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட டாக்டர் முகம்மது அலி, பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக முகம்மது ஹனீப் கைது செய்யப்பட்டபோது, அவருடன் சேர்த்து டாக்டர் முகம்மது அலியும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோல்ட் கோஸ்ட் மருத்துவமனையில் டாக்டர்களாகப் பணியாற்றி வந்தனர்.

ஆனால் அலி மீதான புகார்களுக்கு எந்த ஆதாராமும் இல்லை என்பதால் உடனடியாக அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். அவர் சுதந்திரமாக நடமாடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்தது.

இந்த நிலையில், முகம்மது அலி பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஹனீப் உல்செஸ்ட்ன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை மாலை, அதே நேரத்தில், அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதுகுறித்து குயீன்ஸ்லாந்து மாநில சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், டாக்டர் முகம்மது அலிக்கு சம்பளத்துடன் கூடிய சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குயீன்ஸ்லாந்து காவல்துறை வழங்கிய உத்தரவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கும் தீவிரவாத புகாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் அவர்.

டாக்டர் ஹனீப்பும், அலியும் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, குயீன்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைத்து பணியில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் 457 நாள் பணி விசாவின் கீழ் பணியாற்றி வந்தனர்.

அலி மீதான விசாரணை முழுமையாக நிறைவு பெறும் வரை அலி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹனீப்பை விட்டு விட்ட ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது முகம்மது அலியை குறி வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

நன்றிங்க

இடியாப்ப சிக்கல்தான்!

சம்பளத்தோட தற்காலிக வேலை நீக்கமா..?

Monday, July 30, 2007

போலீஸ் நடத்திய நாடகம்.

ஆஸி. போலீஸ் நடத்திய நாடகம்: ஹனீப்

ஜூலை 30, 2007

பெங்களூர்: நான்கு வார கால ஆஸ்திரேலிய துயரத்திற்குப் பிறகு டாக்டர் முகம்மது ஹனீப் நேற்று இரவு பெங்களூர் வந்து சேர்ந்தார். அவரை குடும்பத்தினரும், உறவினர்களும் உணர்ச்சி பொங்க வரவேற்றனர்.

இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஜூலை 2ம் தேதி கைது செய்யப்பட்டார் ஹனீப். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுக்களில் எந்த உண்மையும் இல்லை, ஆதாரமும் இல்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து ஹனீப் மீதான வழக்கை கைவிட்டது ஆஸ்திரேலிய காவல்துறை. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்குக் கிளம்பினார் டாக்டர் ஹனீப். பாங்காக் வழியாக நேற்று இரவு 9.30 மணியளவில் விமான நிலையத்தில் ஹனீப்புக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

ஹனீப்பின் தாயார் மற்றும் பிறந்து ஒரு மாதமே ஆன மகள் ஹனியாவுடன் மனைவி பிர்தோஸ் அர்ஷியா ஆகியோர் கண்ணீர் மல்க ஹனீப்பை வரவேற்றனர்.

ஹனீப் வருகையையொட்டி விமான நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். ஹனீப்பிடம் பேசுவதற்காக நேற்று காலை முதலே பத்திரிக்கை நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் குவிந்திருந்தனர். ஆனால் ஹனீப் வந்து இறங்கியவுடன் போலீஸார் அவரை அங்கிருந்து பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விட்டனர், பேசவும் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை. இதனால் பத்திரிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

ஹனீப்புடன் அவரது உறவினர் இம்ரான் சித்திக், வழக்கறிஞர் பீட்டர் ரூஸோ ஆகியோரும் வந்துள்ளனர்.

பெங்களூரை வந்தடைந்ததும் பி.டி.எம். லேஅவுட்டில் உள்ள தனது மனைவியின் வீட்டுக்கு ஹனீப் சென்றார். அங்கு அவருக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

முன்னதாக பி.டி.எம்.லேஅவுட் வீட்டின் முன்பு பெரும் திரளான பத்திரிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹனீப்பை முதலில் ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

நீண்ட நேரம் கழித்தே அவரை பி.டி.எம். லேஅவுட் வீட்டுக்கு அழைத்து வந்தனர். அதற்கு முன்னதாக மதீனா மசூதிக்குச் சென்று ஹனீப் பிரார்த்தனை செய்தார்.

பி.டி.எம். லேஅவுட் வீட்டின் முன்பு ஹனீப், ரூஸோ, இம்ரான் ஆகியோரை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஹனீப் மீண்டும் பெங்களூர் திரும்பியது குறித்து கபீல், சபீல் அகமது சகோதரர்களின் சகோதரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கிளாஸ்கோ விமான நிலையத்தின் மீது மோதிய ஜீப்பை கபீல் அகமதுதான் ஓட்டிச் சென்றார். 90 சதவீத தீக்காயத்துடன் அவர் இங்கிலாந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது செய்யப்பட்ட சபீல் அகமது மீதும் இன்னும் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் நன்றி:

தனது மாமனார் வீட்டுக்குத் திரும்பிய பின்னர் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிக்கையை ஹனீப் செய்தியாளர்களிடம் வாசித்தார்.

அப்போது அவர் கூறுகையில், எனது கஷ்டமான காலத்தில் பெரும் ஆதரவாக இருந்த எனது குடும்பத்தினர், இந்திய அரசு, ஆஸ்திரேலிய மக்கள் ஆகயோருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய, ஆஸ்திரேலிய மீடியாக்களுக்கும் எனது நன்றிகள்.

கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இத்தனை நாள் துயரத்திற்குப் பின்னர், தேவையற்ற குற்றச்சாட்டின் மூலம் ஆஸ்திரேலிய காவல்துறையால் பழிவாங்கப்பட்ட பின்னர், மீண்டும் குடும்பத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான நேரம். ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் என்னை பலி கொடுக்க முயன்றனர். இதற்காக ஒரு நாடகத்தையும் அவர்கள் அரங்கேற்றினர். ஆனால் அதிலிருந்து நான் மீண்டு வந்துள்ளேன். இதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், சட்டக் குழுவுக்கும் எனது நன்றிகள் என்றார் ஹனீப்.

நான் தீவிரவாதி அல்ல:

முன்னதாக ஆஸ்திரேலியாவின் சேனல் 9 தெலைக்காட்சிக்கு ஹனீப் கொடுத்த பேட்டியில், நான் தீவிரவாதி அல்ல. வார்த்தையால் கூட அடுத்தவரை புண்படுத்த நினைக்காத நான் எப்படி எனது செயலால் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படுத்த முடியும்.

என்னைத் தீவிரவாதி என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறியபோது எனக்கு எதுவும் புரியவில்லை. என் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு வரும் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை.

தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளிக்கும் குணம் என்னிடம் இல்லை. சபீல் அகமது எனது குடும்ப உறுப்பினர். எனது சிம் கார்டை பயன்படுத்திக் கொள்வதாக கேட்டார். அதனால் கொடுத்தேன். தீவிரவாத செயலுக்காக வடிவமைக்கப்பட்ட சிம் கார்டு அல்ல அது.

எனது உறவினர்களால் நான் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் அகமது சகோதரர்களின் பெற்றோர் கவுரமான டாக்டர்கள், மதிக்கப்படக் கூடியவர்கள். அவர்களுக்காக நான் அனுதாபப்படுகிறேன். எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

எனக்கு எந்தத் தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை, தீவிரவாதப் பயிற்சியும் நான் எடுத்ததில்லை. பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ நான் போனதே இல்லை.

எனது மகளைப் பார்க்க விரும்புகிறேன். அவள் ஒரு தேவதை. எனது அதிர்ஷ்டம். மீண்டும் குடும்பத்தினரை சந்திக்க ஆவலாக உள்ளேன் என்றார் ஹனீப்.

வேலை கொடுக்க தயார் - குமாரசாமி:

இதற்கிடையே டாக்டர் ஹனீப் விரும்பினால் அவருக்கு பெங்களூரிலேயை வேலை தர கர்நாடக அரசு தயாராக இருப்பதாக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், டாக்டர் ஹனீப் குடும்பத்தை நாளை (இன்று) சந்திப்பேன். டாக்டர் ஹனீப்புக்கு பெங்களூரில் உயர்ந்த பதவியைத் தர அரசு தயாராக உள்ளது.

மேலும் அவர் மீண்டும் ஆஸ்திரேலியா செல்ல விரும்பினாலோ அல்லது வேறு நாட்டுக்கு செல்ல விரும்பினாலோ அதுகுறித்து பிரதமரிடம் பேசி தேவையான உதவிகளைப் பெற்றுத் தரவும் அரசு தயாராக உள்ளது என்றார் குமாரசாமி.

நன்றிங்க

நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்!

Sunday, July 29, 2007

சேது திட்ட இயக்குனர் தகவல்.

இருப்பது மணல் திட்டு தான், பாலம் அல்ல நாஸா உறுதி- சேது திட்ட இயக்குனர் தகவல்

ஜூலை 28, 2007

சென்னை: சேது கால்வாய் தோண்டப்படும் ஆதாம் பால பகுதியில் இருப்பது வெறும் மணல் திட்டுக்கள் தான் எனவும், அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதும் இல்லை எனவும் நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக இத் திட்டத்தின் இயக்குனர் ரகுபதி கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டப் பணி நடந்து வரும் இடத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் (ராமர் பாலம்) இருப்பதாகவும் அதை நாஸா உறுதி செய்துள்ளதாகவும் விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றன.

இதனால் அதை இடிக்க பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய சேது சமுத்திரத் திட்ட இயக்குனர் ரகுபதி, சேது சமுத்திரத் திட்டப் பணி நடந்து வரும் இடத்தில் இருப்பது வெறும் மணல் திட்டு தான் என நாஸா தெரிவித்துள்ளது.

அது மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக நாஸாவே சேது சமுத்திரத் திட்ட கமிஷனுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது என்றார்.

நன்றிங்க
----------------------------------------------

//அது மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என்றும் கூறியுள்ளது.//

''மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல'' என்பதுதானே பரிவாரங்களின் வாதமும், இல்லையா பின்னே...!?

Friday, July 27, 2007

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை.

அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை

வெள்ளி, 27 ஜூலை 2007

சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கருதி அவரை விடுதலை செய்ய இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அரசு தலைமை வழக்கறிஞர் டேமியன் பக் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மருத்துவர் ஹனீஃபுக்கு எதிராக அரசு தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுத் திரும்பப் பெறப்படுவதாகக் கூறினார். இவ்வழக்கைக் கையாண்டதில் அரசின் அனைத்துத் துறையினரும் பொறுப்பற்ற நிதானமின்மையை வெளிப்படுத்தினர் என அவர் ஒப்புக் கொண்டார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான தாக்குதலுக்கும் ஆளான மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்தினர் மட்டுமல்லாது பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் இச்செய்தி குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் தெரித்தனர்.

கடுமையான சூழலுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவர் ஹனீஃபிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோருமா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்டு அதற்கான சாத்தியம் இல்லை என்று பதிலளித்தார். குற்றம் சாட்டுவதும் வழக்குத் தொடுப்பதும் காவல் துறையினரதும் அரசு வழக்கறிஞரதுமான வேலை. இதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு பிரதமர் ஏன் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் ஹனீஃப் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர் இந்தியாவிற்கு புறப்படுவதற்கான முறையான அனுமதியை ஆஸ்திரேலியா இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு இந்திய அரசு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படும் என இந்திய வெளியுறவு இணை அமைச்சர் E. அஹமது தெரிவித்தார். மருத்துவர் ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் இனியும் அவருக்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் கூடாது என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பல்வேறு மனித உரிமைக்குழுக்களும், மருத்துவர் ஹனீஃபின் வழக்கறிஞர்களும் பொய்யாகப் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டி மருத்துவர் ஹனீஃபை கொடுமைப் படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

நன்றிங்க

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மரபுப்படி நிரபராதி விடுதலையடைந்தார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக டாக்டர் ஹனீஃப் மீது பயங்கரவாதி என குற்றத்தைச் சுமத்தி கைது செய்தார்கள். விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பொய் பித்தலாட்டங்கள் செய்து குழப்பங்கள் எஞ்சியது. இங்கிலாந்து சொன்னதால் நாங்கள் கைது செய்தோம் என்று ஆஸ்திரேலிய சமாதானம் சொன்னாலும் டாக்டர் ஹனீஃபை கைது செய்யச் சொன்ன இங்கிலாந்திடம் ஆதாரம் கேட்டிருக்க வேண்டும். இரு நாடுகளும் டாக்டர் ஹனீஃபின் விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்பது தெளிவு.

எல்லாம் ''இஸ்லாமோஃபோபியா''

Thursday, July 26, 2007

இஸ்லாமோஃபோபியா - ஒரு பார்வை (பகுதி 2)

தொடங்கும் முன் முதல் பகுதியைப் படித்துவிட்டுத் தொடருங்கள்.

இஸ்லாமோஃபோபியா எனும் இஸ்லாத்தின் மீதான அச்சம் இன்று உலகம் முழுக்க பரந்து விரிந்து காணப்படுகின்றது. இதற்குரிய நீண்ட பட்டியலில், சமீபத்திய உதாரணமாக கிளாஸ்கோ விமான நிலையத் தாக்குதல் தொடர்பாக இந்திய மருத்துவர் ஹனீஃப் அவர்களைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசின் அநீதியான நடவடிக்கையைக் கூறலாம்.

மருத்துவர் ஹனீஃப் அவர்களின் கைதுக்கான பின்னணி நிச்சயம் இஸ்லாமோஃபோபியா தவிர வேறில்லை. இந்தியாவிற்குப் பயணிக்கக் காத்திருக்கும் பொழுது அவரைக் கைது செய்த ஆஸ்திரேலிய அரசு, அதற்குரிய காரணமாக கிளாஸ்கோ குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களுக்கு மருத்துவர் ஹனீஃப் உதவியதாக முதலில் கூறியிருந்தது.

ஹனீஃபின் மீதான குற்றச்சாட்டுக்கான விளக்கம் கொடுக்கும் பொழுது, "இங்கிலாந்து அரசு கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே மருத்துவர் கைது செய்யப்பட்டார் எனவும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிற்கு நட்புநாடு என்பதால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது " என்றும் கடந்த 2007 ஜூலை 20ந்தேதியன்று ஆஸ்திரேலிய அரசு கூறியிருந்தது. தன் மீதான அரசின் சந்தேகங்கள் அனைத்திற்கும் உரிய விளக்கங்களை மருத்துவர் ஹனீஃப் விசாரணையின் பொழுது தெளிவாக கூறியிருந்தார்.

ஆனால் அவரின் பெயர் ஒரு முஸ்லிமை அடையாளப்படுத்திய காரணத்தினால், இங்கிலாந்து அரசு சொல்வது தான் ஆஸ்திரேலிய அரசுக்கு உண்மையாக தெரிந்திருக்கின்றது. அதுவே டாக்டர் ஹனீஃபை ஒவ்வொரு முறையில் வழக்கில் இருந்து விடுவித்து வீட்டிற்கு சென்று சேரும் முன் அள்ளிக்கொண்டு வந்து புதிய வழக்கில் விசாரணையைத் துவங்க வகையும் செய்தது.

இஸ்லாமியப் பெயர் தாங்கிகள் சிலரின் வன்செயல்களுக்கு இஸ்லாத்தின் மீதே புழுதிவாரித் தூற்றுவதில் தேர்ச்சி பெற்ற இஸ்லாத்தின் மீது வெறுப்பு கற்பிக்கும் துவேஷகுழுக்கள், ஒரு நாட்டின் அரசே ஒரு முஸ்லிம் மீது குற்றம் சாட்டும்போது வேடிக்கையா பார்த்துக் கொண்டிருக்கும்? வெறும் வாய்க்கு அவலாக, இச்சம்பவத்தை வைத்து இந்த ஆதிக்க சக்திகள் குதூகலத்துடன் பெருமளவு இலாபம் சம்பாதித்தன. குற்றம் சுமத்தப்படுபவர் ஒரு முஸ்லிமாக இருந்தாலே போதும்; அவனை அந்நிமிடமே தீவிரவாதியாக்கி அழகு பார்க்கும் அடிப்படையில், இணையத்தில் இலக்கியத்தைக் கூறு போடும் சங் பரிவார எழுத்தாளர்களில் ஒருவரான மலர்மன்னன், மருத்துவர் ஹனீஃபை தீவிரவாதியாகவே ஆக்கினார். ஆதாரமற்ற செய்திகளின் அடிப்படையில் அமைந்த மலர்மன்னனின் வெறுப்பு தோய்ந்த எழுத்துக்களைப் பிரசுரித்து, 'திண்ணை'யும் இந்திய அரசுக்கு எதிராக தன் முஸ்லிம் விரோத அடிமன வக்கிரத்தைக் கொட்டித் தீர்த்தது. மேற்கில் விதைக்கப்படும் இஸ்லாமோஃபோபியா கிழக்கின் மூலை வரை எவ்வளவு அமோகமாக அறுவடை செய்யப்படுகின்றது என்பதற்கு இது மற்றுமோர் தெளிவாகும் (தமிழக ஃபோபியாக்களைக் குறித்து விரிவாக இத்தொடரின் பிற்பகுதியில் இன்ஷா அல்லாஹ் விரிவாகக் காணலாம்.)

ஒரு விதத்தில் ஆஸ்திரேலியாவின் விருந்தினர் என்ற அந்தஸ்தில் உள்ள மருத்துவர் ஹனீஃபின் மீது ஆஸ்திரேலிய அரசு சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என ஆஸ்திரேலிய காவல்துறையே தற்பொழுது ஒப்புக்கொண்டு உள்ளது. இங்கிலாந்தோ, ஆஸ்திரேலியாவோ மருத்துவர் ஹனீஃபின் விவகாரத்தில் உலகம் முழுவதிலிருந்தும் இத்தனை நெருக்குதல் வரும் என சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒருவேளை ஏனைய பிற குற்றச்சாட்டுக்களைப் போன்று மருத்துவர் ஹனீஃபின் விவகாரத்திலும் இவர்கள் கூறுவதை வைத்து "உண்மையாகத் தான் இருக்கும்" என, இதனை பெரிய விஷயமாக எடுக்காமல் உலகம் விட்டிருந்தால் முஸ்லிம் என்ற காரணத்திற்காக மருத்துவர் ஹனீஃபும் அதிபயங்கர தீவிரவாதியாக இன்று ஆகி இருப்பார்.

தீர விசாரிக்க வேண்டும் என்று உரிய தருணத்தில் உலகமெங்கும் எழுப்பப்பட்ட நியாயவான்களின் எதிர்ப்புக் குரல், இன்று ஒரு நிரபராதியை அடையாளம் காட்ட உதவியிருக்கின்றது. கடந்த இருபது நாட்களாக உலகின் அத்தனை ஊடகங்களிலும் பாஸ்போர்ட் விபரங்கள் முதல், அவரின் இந்திய வீட்டிற்கு முன் முகாமிட்டு காட்சிகளைப் பதிவு செய்யும் மீடியாக்களின் மூலம் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்திற்கோ அல்லது அவருக்காக குரல் கொடுத்த இந்திய அரசு முதல் மற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கோ ஹனீஃபின் விடுதலை மகத்தான வெற்றியாக தோன்றலாம். தேவையெனில் ஆஸ்திரேலிய அரசின் நடுநிலை(!) நிலைபாட்டிற்கு நன்றி நவின்றதோடு இவ்விஷயத்தை இத்தோடு விட்டும் விடலாம்.

ஆனால், இதன் மூலம் அதிர்ந்து போயுள்ள முஸ்லிம் உலகம் இவ்விஷயத்தை அவ்வளவு இலகுவாக காணத் தயாராக இல்லை. ஏனெனில் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, குற்றம் சாட்டும்படியாக ஒரு துரும்பளவு தெளிவு கூட இல்லாத நிலையில், சமூகத்தில் உயர்நிலையில் உள்ள ஒரு மருத்துவரையே முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக சந்தேகக்கண் கொண்டு இறுதிவரை விடாப்பிடியாக அவரை தீவிரவாதியாக்கி விடவேண்டும் என ஒரு அரசே முனைப்புடன் செயல்பட்டிருக்கின்றது எனில், அதற்கான காரணத்தையும், இஸ்லாத்தின் மீதான இத்தகைய அதீத பயத்தின் பின்னணியையும் குறித்து ஆராய வேண்டியது மிக அவசியமாகும்.

இன்று உலகில் எந்த மூலையில் ஏதேனுமோர் அசம்பாவிதம் நடந்தாலும் அது உடனடியாக திட்டமிட்டு இஸ்லாத்துடன் தொடர்பு படுத்தப்படுகிறது. உலக மக்களை ஒருங்கிணைக்கும் "நம்பகத்தன்மை" வாய்ந்த ஊடகங்கள் இதனைச் செவ்வனே நிறைவேற்றுகின்றன. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து அரசின் கீழ் உள்ள ஊடகங்கள் உலகின் எந்த மூலையில் ஒரு அசம்பாவிதம் நடந்தாலும், அதனை உடனடியாக பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற சொற்களுடன் இஸ்லாத்தை சேர்த்துக் கொண்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகின்றன.

இது இருபத்தொன்றாம் நூற்றாண்டின் அதிபயங்கர ஆயுதமாக கருதப்படும் ஊடகங்கள், மேற்கத்தியர்களின் கைகளில் தஞ்சமடைந்ததன் விளைவு என்று இலகுவாக எடுத்துக் கொள்ள இயலாது. ஏனெனில், கடந்த நூற்றாண்டின் இறுதிகாலம் வரை உலகில் தீவிரவாதம்/பயங்கரவாதம் என்ற சொற்களோடு இஸ்லாம் பின்னப்பட்டுப் பார்க்கப்பட்டதில்லை. உலகில் இஸ்லாமியர்களுக்கு மிக கடுமையான நெருக்கடி காலமாக கருதப்பட்ட, முஸ்லிம்களை கருவறுப்பதற்காகவே நடத்தப்பட்ட சிலுவை யுத்த காலமான மத்திய காலகட்டத்தில் கூட தீவிரவாதி/பயங்கரவாதிகளாக சிலுவை யுத்த படைகளே கருதப்பட்டன. மிகக் குறுகிய கால அளவில் இஸ்லாத்துடன் இன்று உலகில் பிரபலமாக்கப்பட்டுள்ள இவ்வார்த்தையின் பின்னணி நிச்சயம் இஸ்லாத்தின் மீதான அதீத அச்சமாக இருக்கவே சாத்தியம் உள்ளது.

காலனியாதிக்கங்களுக்கு எதிராக உருவான புரட்சிகளின் மறு வெளிப்பாடான இரண்டு உலகப் போர்களுக்கு முன்னும் பின்னும் இவர்கள் பொய்யாக உருவகப்படுத்தும் இந்த இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் தோன்றியதில்லை. இரு உலகப்போர்களுக்குப் பின் பனிப்போர் மூலம் உலகில் யார் பெரியவன் என்ற போட்டியில் அமெரிக்காவும், ரஷ்யாவும் ஈடுபட்டிருந்த காலத்திலும் இவ்வார்த்தை பிரபலம் ஆகவில்லை. இன்னும் கூறவேண்டுமெனில், இன்று ஜார்ஜ் புஷ்ஷிற்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி தீவிரவாதம்/பயங்கரவாதங்களை இஸ்லாத்தோடு தொடர்புபடுத்த காரணமாகக் காட்டப்படும் உசாமா பின் லேடன், அன்றைய பனிப்போர் காலத்தில் அமெரிக்காவிற்கு சுதந்திரத்திற்காக போராடும் ஒரு வீரப்போராளியாகவும், கதாநாயகனாகவும் திகழ்ந்ததை நினைவில் கொள்ள வேண்டும்.

பனிப்போர் மூலம் ஒருங்கிணைந்த ரஷ்யாவை என்றைக்கு அமெரிக்கா வீழ்த்தியதோ அன்றிலிருந்து தான் இவ்வார்த்தைகள் உலகில் பிரபலமடைய ஆரம்பித்தன. அதாவது உலகின் சர்வாதிகார சக்தியாக தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்ளும் அமெரிக்காவை எதிர்க்க சரிக்கு சமமான வேறு நாடோ, தனிநபரோ இல்லை என்ற நிலை வந்த பின்னரே உலகில் இந்த உருவகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் என்ற சொற்கள் தலையெடுக்க ஆரம்பித்தன. சுமார் 1428 வருடங்களாக தலையெடுக்காத இஸ்லாமிய பயங்கரவாதம்/தீவிரவாதம் கடந்த 20 ஆண்டுகளில் திடீரென எங்கிருந்து தலையெடுத்தது? சாதாரணமாக சிந்திக்கும் மக்களுக்கு கூட இதில் அடங்கியுள்ள சூட்சுமம் எளிதில் விளங்கும்.

இங்கே இஸ்லாமிய பாரம்பரியத்தையும், கொள்கை சார்ந்த வரலாற்றையும் சற்று சிறிது திரும்பிப் பார்த்தல் அவசியமானதாகும். முஹம்மது(ஸல்) அவர்களால் புனர்நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கம், சுமார் 1428 வருடங்களுக்கு முந்தைய அந்த அறியாமைக் கால கட்டத்திலேயே மக்களிடையே மிகப்பெரும் எழுச்சியையும், எவருக்கும் அஞ்சாத துணிவையும், சுயமரியாதையையும் கொடுத்தது. ஒருவர் இஸ்லாத்தை மனதார ஏற்றுக் கொண்ட கணம் முதல் இவ்வுலகில் எவருக்கும் தலை குனியாத, எதற்கும் அஞ்சாத தன்னம்பிக்கையைப் பெறுகின்றார். அதன் மூலம் அவரை எத்தகைய ஓர் கொடுமையான அடக்குமுறையாளனும் எளிதில் அடக்கி அடிபணிய வைத்து விடமுடியாது என்பதே இதன் பொருள்.

ஒருவர் உண்மையிலேயே இஸ்லாத்தை மனமுவந்து பின்பற்றுகின்றார் எனில், அவர் கண்முன் எவ்வித அநியாயத்தையும் நடக்க விடமாட்டார். அநியாயம், அக்கிரமங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார். முஹம்மது(ஸல்) அவர்களால் இதனால் தான் ஒரு மிகச்சிறிய சாதாரண குழுவாகத் தொடங்கிய இஸ்லாமிய மார்க்கம், மிகப்பெரிய பரந்து விரிந்த அரபு நாட்டை பாரசீகம் முதல், ரோம் வரை பரவியது. அது மட்டுமின்றி அக்காலகட்டத்திலேயே இஸ்லாம் சென்று சேர்ந்த இடங்களில் உள்ள மக்களையெல்லாம் வெகு எளிதில் கவர்ந்து, அரசாங்கங்கள் மாறும் நிலைகள் உருவாகின.

ஒரு கட்டத்தில் ஜெரூசலேமை வெற்றி கொண்ட இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலீஃபா உமர்(ரலி) அவர்களை, அன்றைய பைத்துல் முகத்தஸின் நிர்வாகிகளாக இருந்த கிறிஸ்தவர்கள் இன்முகத்துடன் வரவேற்று அதன் சாவியை கேட்காமலே அவரிடம் வழங்கிய சம்பவம் வரை நடந்தது. இதன் தொடர்ச்சியாக உலகில் எப்பொழுதெல்லாம் தமது பகுதிகளில் அடக்குமுறையாளர்கள் கோலோச்சினார்களோ, அப்பொழுதெல்லாம் அதுவரை அமைதியாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களே அநியாயத்திற்கெதிராகப் பொங்கியெழுந்து அக்கிரமக்காரர்களை விரட்டி அடித்துள்ளனர் என்பது வரலாறு.

இதில் குறிப்பிடத்தக்கவராக ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஒரு சிறு சிற்றரசராக இருந்த அவர், பைத்துல் முகத்தஸின் சுற்றுப்புறங்களை கபளீகரம் செய்து புனித ஹரத்தை கையப்படுத்தி ஐரோப்பாவின் ஆசியோடு கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சிலுவைப் போர்வீரர்களை விரட்டியடித்து பைத்துல் முகத்தஸை மீட்ட நிகழ்வு வரலாறு மறக்க முடியாததாகும்.

இத்தகைய வீரமும், எந்த அடக்குமுறையாளனுக்கும் தலை வணங்காமையும் இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவன் அதனை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்ட தருணமே வழங்கி விடுகின்றது. இதனாலேயே ஒரு இடத்தில் ஒருமுறை இஸ்லாம் விதைக்கப்பட்டு விடுமானால், பின்னர் அது எவ்வளவு தான் வேரோடு பிடுங்கப்பட்டாலும் மீண்டும் புத்துணர்வுடன் எழுந்து விடுகின்றது. இதற்கு இக்காலகட்டத்திய உதாரணமாக ஸ்பெயினின் இஸ்லாமிய வரலாற்றை குறிப்பிடலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

ஆக்கம்: அபூ ஸாலிஹா

நன்றிங்க

என்ன செய்வது, ஒன்றை அழிக்க முயன்று இயலாத போது அதன் மீதான அச்சங்களை பொய்யாக பரப்புவது. இந்த நோக்கத்தில் எதிரிகள் பொய்யாக இஸ்லாம் மீதான அச்சங்களை உலகெங்கும் பரவச்செய்து வருகிறார்கள்.

நல்ல நிதர்சனமான ஆக்கம்.

Wednesday, July 25, 2007

ஆசானும், சிறுவனும்.

சமூக அவலம்

பிளாட்பாரத்தில் இரவில் பெண்ணிடம் சில்மிஷம்-தடுத்தவரை கொன்ற சிறுவன்


ஜூலை 25, 2007  

சென்னை: பிளாட்பாரத்தில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சிறுவனை தட்டிக் கேட்டவர், அந்த சிறுவனாலேயே கொல்லப்பட்டார்.

சமீப காலமாக சென்னையில் சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (19). ஸ்டீல் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர் வெங்கடேசனுடன் சேர்ந்து சினிமா பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அதே பகுதியை சேர்ந்தவன் மோகன்(15). இவன் இரவு நேரத்தில் கொருக்குப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களோடு கூட்டத்தோடு கூட்டமாக படுப்பதை வழக்கமாக கொண்டவன்.

நேற்று முன் தினம் இரவு பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வசந்தா என்ற பெண்ணின் பக்கத்தில் போய் படுத்து மோகன் சில்மிஷம் செய்துள்ளான்.

இதையடுத்து வசந்தா அவனை தாறுமாறாக திட்டியுள்ளனர். இவர்கள் இரவில் சண்டை போடுவதை பார்த்த வேலுவும், வெங்கடேசனும் விசாரித்து சிறுவன் மோகனை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் பக்கத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வேலுவையும், வெங்கடேசனையும் விரட்டியுள்ளான். அவர்கள் இருவரும் பயந்து ஓடியுள்ளனர்.

இதில் வேலு ஓடும்போது தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து வேலுவின் மீது ஏறி அமர்ந்து அவரது தொண்டையில் கத்தியால் பலமுறை குத்தினான்.

இதில் வேலு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதையடுத்து மோகன் அங்கிருந்து தப்பி ஓடினான். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி, கத்தியுடன் ஓடிக் கொண்டிருந்த மோகன் மீது சந்தேகப்பட்டு அவனை விரட்டிச் சென்று பிடித்தார்.

சிறுவன் மோகனுக்கு போதை பழக்கங்களும், பெண்களிடம் தகாத உறவும் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்றிங்க

------------------------------------நன்றிங்க

சிறுவனிலிருந்து, விரிவுரையாளர்வரை, அதுவும் கல்வியை போதிக்கும் ஆசிரியர் பயிற்சிக்கான வகுப்பு எடுக்கும் ஆசானாகிய விரிவுரையாளர்வரை பெண்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்,

காமம்!

அதற்குத் தடையாக குறுக்கே எவர் வந்தாலும் அவரைக் கொலை செய்ய சிறுவனும் தயங்க மாட்டான்.

கல்வியை போதிக்கும் ஆசிரியராக இருந்தாலும் காமத்திற்காக பண்பாட்டை இழக்கவும் தயாராகி விட்டார்.

நாகரீகம், கட்டுப்பாடற்ற இந்த செயல்களுக்கு, விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும், சினிமா உட்பட அனைத்து ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்.

இராணுவமா...? காவல்துறையா...?

இந்தியா நாட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புக்காக இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு சலுகைகள் அதிகமா? அல்லது மாநிலங்களில் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு சலுகைகள் அதிகமா? இந்த இரு துறைகளிலும் யார் பாவம்?

இராணுவமா?

காவல் துறையா?

இப்படி பட்டி மன்றம் தரத்தில் உங்கள் பதிவு அமைந்திருக்கிறது.

அன்பர் செந்தில் அழகு பெருமாள் அய்யா,

வாழ்க பாரதம் என்ற பதிவில் உள்ள செய்திகளை மறுபடியும் படித்துவிட்டு வாருங்கள்.

//06.சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் "கிடா' வெட்டி பூஜை: விபத்து, கொலையை தவிர்க்க "கிடா ரத்தம்' தெளிப்பு

சங்ககிரி: சங்ககிரி போலீஸ் எல்லைக்குள் அடிக்கடி நடக்கும் விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க எண்ணிய

போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை நடத்தினர்.//


சங்ககிரி காவல் நிலையம் எல்கைக்குள் நடக்கும் விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க எண்ணிய போலீசார்...

என்று கூறப்பட்டிருக்கிறது. செ.அ.பெருமாள் அய்யா நன்றாக மீண்டும் நிதானமாக வாசிக்கவும், விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க என்பதுதான் செய்தி.

செ.அ.பெருமாள் அய்யா சொல்லுகிற மாதிரி, கிடாய் வெட்டி புஜை செய்துவிட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் செல்வதாக செய்தியில் இல்லை. எப்படி இருக்கிறதென்றால் விபத்து, கொலையை தவிர்க்க - தடுக்க என்று உள்ளது. கொலையைத் தடுக்கவும், விபத்தைத் தவிர்க்கவும் புஜை செய்யப்பட்டிருக்கிறது. புஜை செய்து விட்டால் கொலைகள்
நடக்காமல் போய்விடும், விபத்துகள் நிகழாமல் தவிர்க்கப்பட்டுவிடுமாம்.

இதைத்தான் காவல் துறையின் கையாலாகத்தனம் என்று விமர்சித்தேன்.

பொதுவில்,
பில்லி சூனியம் வைக்கிற மாதிரி, பூஜைகள் செய்து விபத்துகளையும், கொலைகளையும் தடுத்து விடலாம் என்றால். பூஜைகள் செய்தால் போதுமே, காவல்துறை தேவையில்லையே என்று கேட்டிருந்தேன் அவ்வளவுதான்.

ஆன்மீகவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது வெளிப்படை. கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், தாம் செய்யத் துவங்கும் ஒவ்வொரு செயலுக்கு முன் கடவுளை நினைவு கூருவார்கள். கடவுள் துணை, ஆண்டவன் துணை, இறைவன் துணை தனது காரியங்கள் அனைத்துக்கும் கடவுளின் துணை வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வார்கள்.

இறைவனின் துணை வேண்டும் என்பது போன்ற வார்த்தைகள் ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்பதாகும். ஒரு முஸ்லிம் தனது காரியங்களை செய்யத் துவங்குமுன் இறைவனை நினைவு கூருவதே பிஸ்மில்லாஹ் என்று
சொல்லிக்கொள்வது.

காவல்துறையில் பணியாற்றும் ஒரு முஸ்லிம், துப்பு துலக்கு முன், விசாரணையைத் துவங்கு முன், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க செல்லுமுன், இவ்வாறு தம் தொழில் தொடர்பான செயல்களைத் துவங்கு முன்னும், தனது வாழ்க்கையின் செயல்களிலும் இறைவனை நினைவு கூருவதற்காகவே ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று
சொல்ல வேண்டும்.

''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று சொல்லிவிட்டால் திருட்டுகள் நடக்காமல் போய்விடும் என்று எண்ணிச் சொல்வதில்லை. இதைப் புரிந்து கொண்டிருந்தால் விபத்தைத் தவிர்க்கவும், கொலைகளைத் தடுக்கவும் எண்ணிய காவல்துறையின் கிடா வெட்டிய புஜையோடு ஒப்பிட்டு எழுதியிருக்க மாட்டீர்.

ஏற்கெனவே முதலில் மதத்தைப் பற்றி எழுதிய நீங்களே, இப்போது மதத்தைப் பற்றி எழுதமாட்டேன் என்று எழுதியிருப்பது நல்ல முன்னேற்றமான கருத்து.

மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன், ஒரு போலீஸ் பூஜை செய்யக்கூடாது, திருடனைப்
பிடிக்க போகுமுன் சாமி கும்பிடக்கூடாது என்று நான் எங்கும் சொல்லலேங்க.

குறிப்பு: தொடர்ந்து வருவது நீங்கள் எனக்கு பதிலாக எழுதியது -

//காவல் துறையினர் பற்றி...

எனது முந்தைய பதிவுக்கு பதில் எழுதிய நண்பருக்கு இது பதில் கொடுப்பது போன்று அமையும்.

எனது அன்பு இசுலாமிய நண்பருக்கு, நான் மேலும் மதத்தைப் பற்றி பேசி ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க விரும்பவில்லை, ஏன்னெனில் எமக்கு எம்மதமும் சம்மதமே! சொன்னால் நம்ப மாட்டீர் எனக்கு இசுலாமிய மதத்தில் தான் நிறைய நண்பர்கள் உள்ளனர். மதத்தைப் பற்றி பேசி நான் அவர்கள் மனதைப் புண் படுத்த விரும்பவில்லை. நான் மதத்தைவிட மனிதர்களின் மனதை மதிப்பவன். இதற்கு முன்னர் எழுதிய மடலால் எவர் மனமாவது புண் பட்டிருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும். சற்று சாதி சமயத்தை மறந்து வேறு திசையில் சிந்தித்துப் பார்ப்போம்.

நீங்கள் எப்படி காவல் துறையினர் கிடா வெட்டுவதோடு நிறுத்திவிட்டனர், குற்றாவாளிகளைக் கண்டுபிடிக்க மேற்கொண்டு முயற்சிகள் செய்ய வில்லை என்கிறீர்கள்? நீங்கள் எந்த ஒருச் செயலைச் செய்யும் முன்னே "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்" என்று சொல்லிவிட்டுதானே துவங்குகிறீர் அதைப் போல், அவர்கள் (காவல் துறையினர்) கிடா வெட்டி விட்டு அவர்கள் குல தெய்வத்திற்குப் படைத்துவிட்டு பின்னர் குற்றாவாளியை தேட ஆரம்பிக்கலாம் அல்லவா? தயவு செய்து காவல் துறையினரை பலிக்காதீர் நண்பரே. நாம் இந்தியாவில் இத்தனை சுதந்திரமாக இருக்கிறோமேயானால் அதற்கு அவர்கள் உழைப்பு தான் காரணம். நாம் நிம்மதியாக கண் தூங்குவதற்கு அவர்கள் இரவு பகல் பாராது கண் விழித்துத் தன் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.

அவர்களுக்கு இந்த சமுதாயமும் அரசாங்கமும் என்ன செய்கிறது? இராணுவத்தில் இருப்பவற்கு இலவச ரேசன், கண்டீன் வசதி, ஓய்வு பெற்றோருக்கு வேலை வாய்ப்பு போன்று பல சலுகைகள் உள்ளன. பாவம் காவல் துறையினருக்கு என்ன உள்ளது?

இராணுவத்தினருக்கு போர்க்காலத்தில் தான் வேலை, ஆனால் காவல் துறையினருக்கோ வருடம் 365 நாட்கள், வாரம் 7 நாட்கள், ஒரு நாளுக்கோ 24 மணி நேரம் வேலை!! ஆனால் இறுதியில் நாம் என்ன சொல்கிறோம் காவல் துறை தூங்குகிறது, இலஞ்சம் வாங்குகிறது, குற்றவாளிகளைப் பிடிக்காமல் கிடா வெட்டுகிறது என்று!!

ஓரிரு காவல் துறை அதிகாரி இலஞ்சம் வாங்குவதால் நாம் ஒட்டு மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்லலாகாது. அப்படிப் பார்த்தால் நாட்டைக் காக்க வேண்டிய இராணுவத்தினரும், இத்த‌னைச் சலுகைக‌ள் இருந்தும் ப‌ணம் வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்க‌வில்லையா? ஒரு உயிரைக்காக்க வேண்டிய மருத்துவரும், நீதிபதியும் காசு கொடுக்காததால் அவர்கள் கடமையைச் சரிவரச் செய்யத் தவறவில்லையா? அவர்க‌ளுக்கு காவ‌ல் துறையின‌ர் எவ்வ‌ள‌வோ மேல்.

- சம்பந்தமில்லாமல் ஏதேதோ எழுதிவிட்டீர்!

Monday, July 23, 2007

உலக மகா கள்வர்கள்!

10. டாக்டர் அனீபின் டைரியில் முகவரி: ஆஸ்திரேலிய போலீசாரே எழுதினரா?

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய டாக்டர் முகமது அனீப் விவகாரத்தில் மேலும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலர் பற்றிய தகவல்களை ஆஸ்திரேலிய போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் உள்ள பயங்கரவாத அமைப்பை சேர்ந்த கபில் அகமதுவுக்கு மொபைல் போன் சிம் கார்டு கொடுத்ததாக முகமது அனீப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ விமான நிலையம் மீது ஜீப்பை மோதி பெரிய அளவில் விபத்தை ஏற்படுத்த முயற்சித்தவர் கபில் அகமது. அந்த ஜீப்பில் இருந்து தான் சிம் கார்டு கிடைத்ததாக முதலில் தகவல் வெளியானது. பின்னர், கபில் அகமது வீட்டில் இருந்து சிம் கார்டை கைப்பற்றியதாக ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். இது ஆஸ்திரேலிய போலீசாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இத்துடன் புதிய தகவல் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. பிரிஸ்பேன் விமான நிலையத்தில் கடந்த 2ம் தேதி முகமது அனீப் கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரிடம் குயின்ஸ்லாண்டு புலனாய்வு சார்ஜென்ட் ஆதம் சிம்ஸ் மற்றும் பெடரல் போலீஸ் அதிகாரி நீல் தாம்சன் ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது முகமது அனீப்பின் டைரியில் பயங்கரவாதிகள் சிலரது பெயர்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை போலீசாரே எழுதியுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முகமது அனீப்பிடம் நடத்திய விசாரணை தொடர்பாக 142 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்ளூர் பத்திரிகைகளிடம் கிடைத்துள்ளன. அதில் இருந்தே போலீசார் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஷயம் ஆஸ்திரேலிய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசுக்கு ஆதரவு அளித்து வரும் தொழிலாளர் கட்சி எம்.பி.,க்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் டவ்னரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். முகமது அனீப் விவகாரத்தில் சர்வதேச அளவில் நகைப்பு செயலை செய்து விட்டதாக போலீசாருக்கு ஆஸ்திரேலிய பசுமை கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்துடன் முகமது அனீப்புக்கு தற்காலிக விசா வழங்க வேண்டும் என ஆஸ்திரேலிய சட்ட கவுன்சில், குடியேற்ற அமைச்சர் கெவின் ஆன்ட்ரூசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

நன்றிங்க

பொய், பித்தலாட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்தி, ஒரு தனி மனிதனுக்கு எதிராக ஆஸ்ரேலியா அரசாங்கமும், போலீஸும் செயல்பட்டிருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம். இவர்கள் உலக மகா கள்வர்கள்.

Sunday, July 22, 2007

எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரங்கள் எதுவுமில்லை - ஆஸ்திரேலியக் காவல்துறை

ஞாயிறு, 22 ஜூலை 2007

மெல்போர்ன்: டாக்டர் ஹனீஃபிற்கு எதிராக கடந்த 12 நாட்களாகத் தொடரும் மிகக் கடுமையான தேடுதல் வேட்டைகளுக்குப் பிறகு, "டாக்டர் ஹனீஃபிற்கு எதிரான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை என்றும் ஏற்கெனவே அவருக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட தகவல் பொய்யானது என்றும் இனி ஹனீஃபை காவலில் வைத்திருப்பதில் அர்த்தமில்லை" என்றும் ஆஸ்திரேலிய காவல்துறை அறிவித்துள்ளது.

இலண்டன் விமானநிலையத்தில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து டாக்டர் ஹனீஃபின் சிம் கார்ட் கண்டெடுக்கப்பட்டதையே அவர் மீதான குற்றச்சாட்டிற்கான முக்கிய காரணமாக ஆஸ்திரேலிய காவல்துறை கூறி வந்தது. அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிலும் அவருக்கு எதிரான மிக முக்கிய ஆதாரமாக இதனையே ஆஸ்திரேலிய காவல்துறை ஆவணப்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் அவர் மீதான குற்றச்சாட்டிற்கு தக்க வலுவான ஆதாரம் இல்லாத நிலையில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி, அவர் நீதிமன்றத்திலிருந்து வெளிவந்த மறுநிமிடமே மீண்டும் ஆஸ்திரேலிய காவல்துறை அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் எடுத்ததற்கு இந்த சிம்கார்டு விவகாரமே காரணமாகக் கூறப்பட்டது.

ஆனால் இலண்டனில் தாக்குதல் நடந்த இடத்திலிருந்து ஹனீஃபின் சிம் கார்டு கிடைக்கவில்லை எனவும், தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள அவரின் மனைவியின் தம்பி வீட்டிலிருந்தே அவரின் சிம்கார்ட் மற்றும் ஸ்மார்ட் கார்ட் கிடைத்தன என்றும் காவல்துறை கூறியது. இதன் மூலம் அவர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடுக்கிய காரணம் பொய்யானது என்பது தெளிவாகியுள்ளது.

எவ்வித உறுதியான ஆதாரமும் இன்றி அநீதியான முறையில் ஹனீஃப் நடத்தப்பட்டுள்ளதற்கு "பண்பாடு" மிக்க மேற்கத்திய நாடுகளின் உள்நோக்கம் தான் காரணம் ஆகும் (Haneef has been treated with gross prejudice and injustice by a purportedly "civilized" Western nation) என ஆஸ்திரேலிய மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஹனீஃபின் மீதுள்ள சந்தேகத்திற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கருதியது அவர் இலண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தாக்குதலுக்கு மறுநாள் ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தியா செல்லவிருந்தது தான். அவர் ஆஸ்திரேலியாவில் வருமானம் போதாத சூழலிலும், தன் மனைவியின் பிரவசத்திற்கு அருகில் இருக்கவுமே இந்தியா செல்லவிருந்தார் என்ற தகவல்கள் உறுதிசெய்யப்பட்ட நிலையில் காவல்துறையினரின் சந்தேகம் நீங்கி தெளிவு அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வியாழன் இரவு தன் கணவருடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறிய டாக்டர் ஹனீஃபின் மனைவி புதிதாய் பிறந்த பெண் குழந்தை பற்றி விசாரித்ததாகவும், தான் குற்றமற்றவர் என்று உறுதிபடக் கூறியதாகவும் செய்தியாளர்களிடம் உருக்கமாகத் தெரிவித்தார்.

டாக்டர் ஹனீஃப் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில் அவரது ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான ஆவணங்களில் குளறுபடி செய்து அவரது குடியுரிமை விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத நிலையில் டாக்டர் ஹனீஃபை காவலில் அடைத்து விசாரணையைத் துவக்கிய நாள் முதல் ஆஸ்திரேலிய அரசு மீது உள்ள சந்தேகத்தை உலக ஊடகங்கள் எழுப்பி வந்திருந்தன. அது இப்போது சந்தேகமற நிரூபணம் ஆகியுள்ளது.

ஆஸ்திரேலிய சட்டக்குழுமமும் (Australian Law Council) மற்றும் சர்வதேச மனித உரிமை இயக்கமும் (Amnesty International) இணைந்து ஆஸ்திரேலியாவின் இந்த அநீதியான செயலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

நன்றிங்க

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தள்ளி டாக்டர் ஹனீஃபின் சிம் கார்டு மட்டும்தான் கிடைத்திருக்குமா?

ஆஸ்திரேலியா காவல்துறை, வேடிக்கையான காவல்துறை!

Saturday, July 21, 2007

அல்குர்ஆன் மனப்பாடப் போட்டி.

குர்ஆன் மனப்பாடப் போட்டி!

ஜூலை 19, 2007

திருச்சி: திருச்சியில் வருகிற 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் குர்ஆன் மனப்பாடப் போட்டி நடைபெறுகிறது.

திருச்சி மாநகர ஜமாஅத்தூல் உலமா சபையும், உறையூர் இஸ்லாமிய நலவாழ்வு சங்கமும் இணைந்து மாநில அளவிலான குர் ஆன் ஷரீஃப் மனப்பாடப் போட்டியை நடத்தவுள்ளன.

30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ரோஷன் மஹால் திருமண அரங்கம் மற்றும் ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தப் போட்டி நடைபெறும்.

முதல் பரிசாக ரூ. 15,000, 2வது பரிசாக ரூ. 10,000, 3வது பரிசாக ரூ. 8000 மற்றும் ஆறுதல் பரிசாக ரூ. 5000 அறிவிக்கப்பட்டுள்ளது. உற்சாக அன்பளிப்பாக 20 பேருக்கு தலா ரூ. 1000 அளிக்கப்படும்.

நன்றிங்க

Friday, July 20, 2007

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள்!

16. அனீப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுப் பொய்யாக இருக்கலாம்: ஆஸ்திரேலிய பத்திரிகைகள்

மெல்போர்ன்: லண்டன் கிளாஸ்கோ விமான நிலைய தகர்ப்புத் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்த பெங்களூரூவைச் சேர்ந்த டாக்டர் அனீப் முகமது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு கிளாஸ்கோ விமான நிலைய பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சாட்டினார். ஆனால் அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. அதனால் அனீப் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பயங்கரவாதிகளுக்கு சிம் கார்டு வாங்கிக் கொடுத்ததாக அனீப் மீது ஆஸ்திரேலிய போலீசார் குற்றம் சுமத்தினர். தற்போது இக்குற்றச்சாட்டும் பொய்யானதாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. அதனால் அனீப் விரைவில் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

நன்றிங்க

முஸ்லிம் என்றாலே சும்மா உப்பில்லாமல் குற்றச் சாட்டுகளை சுமத்துவது உலகமெங்கும் வழக்கமாகி விட்டது. இதிலே ஆஸ்திரேலியா போலீஸ் மட்டும் என்ன விதிவிலக்கா?

Thursday, July 19, 2007

அரை குறையாக விளங்கிய விமர்சனம்.

நான் எழுதிய ''வாழ்க பாரதம்'' என்ற பதிவைப் படித்துவிட்டு, இஸ்லாத்தையும் அரைகுறையாக விளங்கி, சற்று உணர்ச்சி வயப்பட்டு இஸ்லாத்தை விமர்சித்திருக்கிறார் மாற்றுமத அன்பர். அவர் புரிந்து கொள்ளவும் - அவரிடம் விளக்கம் கேட்டும்,

அன்பர் செந்தில் அழகு பெருமாள்,

அரசாங்கத்தில் சம்பளம் பெற்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு பணியாற்றும் காவல் துறையைத்தான் நான் விமர்சித்திருந்தேன். சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்கிறது என்றால் அதைக் குறைப்பதற்கான வழிகளை ஆலோசனை செய்து மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே காவல் துறையிலேயே போக்குவரத்துத் துறை என்ற பிரிவு இயக்கப்படுகிறது.

(சாலை விபத்துக்கள் அதிகமாக நிகழ்வதைத் தவிர்க்க என்னிடம் கேட்டாலும் அதற்கான சிறந்த ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கிறேன்)

அதை விட்டு கிடாய் வெட்டி ரத்தத்தைத் தெளித்தால் விபத்துக்கள் இல்லாமல் போய்விடும் என்று அரசாங்க காவல்துறை ஊழியர்கள் எண்ணி செயல்படுவது பொறுப்பற்றத்தனம். இந்த செயல்களுக்கு காவல் துறை தேவையில்லை கிடாய் வெட்டினாலே போதும் என்று சொல்லியிருந்தேன்.

கொலைகள் குறைய வேண்டுமானால் உண்மையான குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும். அதை விடுத்து கிடாய் வெட்டி ரத்தத்தைத் தரையில் கொட்டி அதில் மண்ணைத் தூவினால் குற்றவாளிகள் தானாக வந்து சரணடைந்து விடுவார்கள் - குற்றங்கள் குறைந்துவிடும் என நம்புவதும் சோம்பேறித்தனம், மற்றும் காவல் துறையின் கையாலாகத்தனம்.

என்னுடைய விமர்சனத்தை அரைகுறையாக விளங்கிக்கொண்டு, நான் முஸ்லிம் என்பதால் இஸ்லாத்தைத் தாக்க துவங்கி விட்டீர்களே! உங்கள் கேள்விகளைப் பார்ப்போம்.

 //1, ஹஜ் யாத்திரை சென்றால் நாம் செய்த பாவங்கள் தீரும். சரி அப்படியென்றால் நாம் கொலை கற்பழிப்பு எல்லாம் செய்து விட்டு ஹஜ் யாத்திரை செல்வோம். நம் பாவம் தீர்ந்து விடும் தானே.//

4, உம்ரா செய்தால் புண்ணியம் கிட்டும். சரி கொலைகாரர்களை சிறையில் அடைப்பதற்கு பதில் உம்ரா செல்லச் சொல்வோம்.

யாரிடமிருந்தாவது ஒரு ரூபாய் கடன் பெற்றிருந்து அந்த ஒரு ரூபாய் கடனைத் திரும்ப செலுத்தாமல் கடன் பெற்றவர் மரணம் அடைந்து விட்டால் அதை இஸ்லாம் மன்னிப்பதில்லை. அவர் ஹஜ் செய்திருந்தாலும் அது மன்னிக்கப்படாது. அப்படி இருக்க கொலை, கற்பழிப்பு போன்ற பாவங்களை செய்து விட்டு ஹஜ், உம்ரா யாத்திரை சென்றால் அது மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் எங்கே குறிப்பிட்டுச் சொல்கிறது என்பதை தெரியப்படுத்துங்கள்!

2, கிடா வெட்டுவது உங்கள் மதத்திலும் தானே உள்ளது. ஹஜ் யாத்திரையின் போது நீங்களும் குர்பானி தருவீர்கள் தானே!!

கிடாய் வெட்டுவது இஸ்லாத்திலும் உண்டு. ஹஜ் கிரியைகளின் நினைவுகளாக இந்த குர்பானிகள் நிகழ்த்தப்படுகிறது. அப்படி கிடாய் வெட்டுவதால் மாங்காய் விழுந்து விடும் என்று எந்த முஸ்லிமும் நம்புவதில்லை. நம்புபவர் இஸ்லாத்தை அறியாதவராக இருப்பார்.

3, ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் அதை எதிர்க்க‌ கல் எறிவார்கள். சரி சாத்தான் வந்தால் அதைக் காட்டுங்கள். அதை ஏன் நீங்கள் எதிர்கிறீர்கள் அல்லாஹ் பார்த்துக் கொள்ளமாட்டாரா?

ஹஜ் யாத்திரையின் போது சாத்தான் வரும் என்று நீங்கள் புதிய இஸ்லாத்தை கற்பிக்கிறீர்கள். அப்படி எங்கும் இஸ்லாம் கூறவில்லை! இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்களின் நினைவாக நிறைவேற்றப்படும் ஹஜ் செயல்பாடுகளில் அவர்கள் ஷைத்தானுக்குக் கல்லெறிந்த நிகழ்ச்சியின் நினைவாகவே அதே இடத்தில் ஹாஜிகள் கல்லெறிகிறார்கள்.

சத்தான் வரும் அதை எதிர்க்க கல் எறிவார்கள் என நீங்கள் சொல்வதை இஸ்லாத்தில் படித்திருந்தால் அதையும் எழுதுங்கள். சாத்தானை எதிர்க்க வேண்டும் என்றால் என்ன? என்பதை பிறகு எழுதுகிறேன். அல்லாஹ் எதிர்க்கமாட்டாரா? என்ற உங்கள் கேள்விக்கும் விளக்கம் எழுதுகிறேன்.

5, இந்தியாவில் உள்ள தர்கா சென்று வழிபடுவது. அந்த சமாதியில் இருப்பவன் எப்போதோ இறந்து விட்டான் அவன் எப்படி உங்களுக்கு அல்லாஹ்விடம் துவா கேட்பான்!!

தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு எதிரானது. தர்காவுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதைக்கூட விளங்காமல் தர்காவை இஸ்லாத்தோடு சேர்த்து எழுதியிருக்கிறீர்களே!

சொல்லுங்கள் சமாதிஈ மண்ணறை வழிபாட்டை இஸ்லாம் எங்கு ஆதரிக்கிறது?

Wednesday, July 18, 2007

வாழ்க பாரதம்!மதசார்பற்ற பாரதநாடு வாழ்க!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

06.சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் "கிடா' வெட்டி பூஜை: விபத்து, கொலையை தவிர்க்க "கிடா ரத்தம்' தெளிப்பு

சங்ககிரி: சங்ககிரி போலீஸ் எல்லைக்குள் அடிக்கடி நடக்கும் விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க எண்ணிய போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை நடத்தினர்.

சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள், சமீப காலமாக கொலை, வாகன விபத்துகள் தொடர்ந்து நடக்கின்றன. 15க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். அதை தடுக்க எண்ணிய சங்ககிரி போலீசார், கிடா வெட்ட ஏற்பாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவில் போலீஸ் ஸ்டேஷன் முன் மஞ்சள், அருகம்புல், கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். அங்கு கிடா வெட்டி, வாசலில் ரத்தத்தை விட்டு, அதன் மீது மண்ணை தூவி மறைத்தனர். கிடா ரத்தம் ஸ்டேஷனை சுற்றிலும் தெளிக்கப்பட்டது. போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் கிடாவை சமையல் செய்து, போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் விருந்து பரிமாறினர். இன்ஸ்பெக்டர் அண்ணாமலை, எஸ்.ஐ., வெங்கடேசன், பன்னீர்செல்வம், ஏட்டுகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், கிடா விருந்து உண்டனர். டி.எஸ்.பி., சிவக்குமார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

------------------------------------------

மொத்த இந்தியாவிலும் காவல் துறையை சுத்தமாக தூக்கி, துடைத்தெறிந்து விட்டு, பேசாமல், ஆட்டு ரத்தத்தைத் தெளித்தே குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கலாமே என்ன நாஞ்சொல்றது?

சமூக அவலம்
ஈரோடு: வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் 75 வயது பாட்டியை சொந்த பேரன்களே குப்பை மேட்டில் வீசிச் சென்ற பரிதாப சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள்(75). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரு மகள்கள் லக்காபுரத்திலும், ஒரு மகள் திண்டலிலும் வசிக்கின்றனர். சின்னம்மாளின் கணவர் பழனியப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். திண்டலில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த சின்னம்மாள் நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகவே இருந்தார். பெற்ற தாயை கவனிக்காமல் தினம்தோறும் மகளே வசைபாடியபடி இருந்துள்ளார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், சகித்துக் கொள்ள முடியாத மகள் மற்றும் குடும்பத்தினர் பாட்டியை எங்காவது விட்டுவிட முடிவு செய்தனர். சின்னம்மாளின் பேரன்கள் இருவரும் சனிக்கிழமை இரவு அவரை துணியில் சுற்றி, ஒரு ஆட்டோவில் துõக்கி வந்தனர். திண்டல் அடுத்த மேட்டுக்கடை அருகே குப்பை மேட்டில் சின்னம்மாளை படுக்க வைத்து விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால், பாட்டியும் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியாமல் விடியும் வரை குப்பை மேட்டிலேயே முனங்கியபடி படுத்திருந்தார்.

அப்பகுதியில் வசித்து வரும் மோகனசுந்தரியும், அவரது கணவர் பெரியசாமியும் குப்பை மேட்டில் பாட்டியின் முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பேசுவதற்கு கூட திராணியின்றி படுத்திருந்த பாட்டிக்கு உணவு கொடுத்து விசாரித்தனர். "எனது மகளால் என்னை கவனிக்க முடியாததால், பேரன்கள் இருவரும் என்னை இங்கு வந்து அனாதையாக விட்டு சென்றனர்' என தழுதழுக்கும் குரலில் சின்னம்மாள் கூறியுள்ளார்.

மோகனசுந்தரி, "ஜெய்பாரத்' சமூகநல விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முருகேசன் மற்றும் அப்பகுதியினர் பாட்டிக்கு தேவையான உணவை கொடுத்து கவனித்து வந்தனர். குப்பையில் படுத்திருந்த பாட்டிக்கு, சேலை, படுக்க கட்டில் கொடுத்து எதிரே இருந்த மரத்தடியில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

மூன்று நாட்களாக பாட்டிக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்தவர்கள் நேற்று காலை சமூகநலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சமூகநல அலுவலர்கள் விசாரித்து பாட்டியை துõக்கி சென்று கே.கே.நகரில் உள்ள கருணை இல்லத்தில் சேர்த்தனர்.

நன்றிங்க: தினமலர்

அட கல்நெஞ்சக்காரங்களா!

தமிழக அரசு நடத்திய வழக்கு!

காவிரி: வக்கீல்களுக்கு இதுவரை ரூ.25 கோடி தாரை!

ஜூலை 18, 2007

சென்னை: காவிரிப் பிரச்சினை தொடர்பாக இதுவரை நடந்த வழக்குகளுக்காக வக்கீல்களுக்கான கட்டணம் மற்றும் அதிகாரிகளுக்காக ரூ. 25 கோடி பணத்தை தமிழக அரசு செலவிட்டுள்ளது.

தமிழகத்துக்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான காவிரி நதிநீர்ப் பிரச்சனை வழக்கு நடுவர் மன்றத்தில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதுதவிர உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.

காவிரி வழக்கு விசாரணைக்காக இதுவரை தமிழக அரசு செலவிட்ட தொகை குறித்த விவரத்தை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் டி.டி. நாயுடு என்பவர் கேட்டு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 1990ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை காவிரி நதிநீர் வழக்குக்காக, வழக்கறிஞர்களுக்கு ரூ. 22.69 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பாக விடுதிகளில் தங்கி ஆலோசனை நடத்த செலவிடப்பட்ட தொகை ரூ. 2.39 கோடி.

காவிரி வழக்கு தொடர்பாக இதுவரை செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

வக்கீல்களுக்காக தமிழக அரசு செலவிட்டுள்ள தொகையும், அவர்களின் ஹோட்டல் செலவுகளையும் பார்த்தால் பொதுப்பணித்துறையின் பட்ஜெட்டுக்கு இணையாக உள்ளது.

மொத்தமாக கூட்டிப் பார்த்தால் ரூ. 25 கோடிக்கும் மேல் தமிழக அரசு இதுவரை செலவிட்டுள்ளது. இது மிகவும் அநியாயமானதாகும். ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு வரும்போதும் பொதுப்பணித்துறையிலிருந்து 10 பேர் டெல்லி செல்கிறார்கள்.

இவர்களுக்கான செலவுத் தொகை இந்த கணக்கில் வரவில்லை. உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் தமிழக அரசுக்காக வாதாடும் வக்கீல்களுக்கு தினசரி ரூ. 1,000 மட்டுமே வழங்கப்படும்போது காவிரி வழக்குக்கான வக்கீல்களுக்கு மட்டும் இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டது ஏன் என்பதை அரசு விளக்க வேண்டும்.

காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் வறட்சியில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசு வக்கீல்களுக்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகைய செலவிட்டிருப்பது வருத்தமாக உள்ளது.

காவிரி வழக்கில் வாதாடிய வக்கீல்களிலேயே அதிக சம்பளம் பெற்றவர் சி.எஸ்.வைத்தியநாதன்தான். இவருக்கு மட்டும் ரூ. 6.07 கோடி தரப்பட்டுள்ளது.

ஏ.கே.கங்குலிக்கு ரூ. 4.08 கோடி, சி.பரமசிவத்திற்கு ரூ. 2.64 கோடி, ஜி.உமாபதிக்கு ரூ. 2.54 கோடி, கிருஷ்ணமூர்த்திக்கு ரூ. 1.39 கோடி, முத்துக்குமாரசாமிக்கு ரூ. 1.03 கோடி, பராசரனுக்கு ரூ. 91.69 லட்சம் சம்பளமாக தரப்பட்டுள்ளது

இவ்வளவு பணத்தை தண்ணீராக செலவழித்தும் காவிரிப் பிரச்சினை இன்னும் தீரவில்லை. கர்நாடகத்திலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெற முடியாமல் தமிழகம் தவிக்கும் அவல நிலை தொடருகிறது.

இந்த அநியாய நிலை குறித்து விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன் என்றார் நாயுடு.

நனறிங்க

தண்ணீராக பணத்தை செலவழித்தும் கர்நாடகத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு சொட்டுத் தண்ணீரைப் பெற முடியவில்லையே கவர்மெண்ட் கேஸ் நடத்தியே இந்த கதின்னா! சதாரண குடிமக்களின் நிலையைப் பற்றி என்னத்த சொல்றது!?

Monday, July 16, 2007

அதென்னமோ தெரியலீங்க!

கள்ள உறவு வைத்திருக்கும்

19.07.07 மற்றவை

முன்பு மேலப்பாளையம் மும்தாஜ்... கடந்த 6_ம் தேதி கோவை ஆமீனா.. இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக ஓர் இஸ்லாமியப் பெண்ணின் பெயர் இடம் பெற்றுவிட்டது. கள்ள உறவு வைத்திருக்கும், விபசாரம் செய்யும் முஸ்லிம் பெண்களின் கதை இதுதான் என்று, அவர்களைத் தேடித் தேடித் தீர்த்துக் கட்டும் முஸ்லிம் தீவிரவாதிகளின் முயற்சிக்கு மேலும் ஒரு பெண் பலியாகி விட்டார். அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணின் பெயர் பஷீரா கனி.

கடந்த 26_ம் தேதி! பெரம்பலூர் மாவட்டம் பெரிய நெசிலூர் காட்டுப்பகுதியில் அறைநிர்வாணப் பெண் பிணம் ஒன்று கிடப்பதாகத் தகவல் வந்ததும், ஆடிப்போனது வேப்பூர் காவல்நிலையம். அந்தப் பெண்ணுக்கு சுமார் இருபத்திரண்டு வயது இருக்கலாம். அவளது அருகில் கிடந்த துப்பட்டா அவரை ஒரு முஸ்லிம் பெண் என்று அடையாளம் காட்டி விட்டது. கட்டியிருந்த சேலை, கால் கொலுசு, கையில் அணிந்திருந்த வாட்ச் ஆகியவை அவரை பணக்காரப் பெண்ணாகக் காட்டியது. முகம் ஒரு பாறாங்கல்லால் பலமுறை அடித்து சிதைக்கப்பட்டிருந்ததால் அவரை அடையாளம் காண முடியவில்லை.

அந்தப் பெண் மேலாடையின்றி, அரை நிர்வாணமாகக் கிடந்ததால், இது கற்பழிப்பு அல்லது நகைக்காக நடந்த கொலையாக இருக்கலாம் என்று வேப்பூர் போலீஸார் வழக்கம் போல் யோசித்தனர். அந்தப் பெண்ணின் புகைப்படத்தை துண்டுப் பிரசுரங்களாக்கி பெரம்பலூர் முழுவதும் தூவினர்.

அதன்பின் நடந்ததை வேப்பூர் இன்ஸ்பெக்டர் இசையழகன் நம்மிடம் விவரிக்கிறார்.

''இறந்த பெண் யார் என்று நாங்கள் தோண்டித் துருவிக் கொண்டிருந்த போது, பெரம்பலூர் மாவட்டம் கல்லக்குடியைச் சேர்ந்த ஷேக்தாவூத் என்பவர் வந்தார். கொலையுண்ட பெண்ணின் உடைகளை வாங்கிப் பார்த்தவர் 'இது என் தங்கை பஷீராகனியின் உடை' என்று கதறினார். இறந்த பெண் அவரது தங்கைதான் என்பது உறுதியாகி விட்டது.

யார் மீது சந்தேகம் என்று ஷேக்தாவூத்திடம் கேட்டபோது, அவர் சுட்டிக்காட்டிய நபர் துரைமங்கலம் பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்த அகமது பாஷா. த.மு.மு.க.வின் செய்தித் தொடர்பாளரான அவரை உடனே அள்ளிக் கொண்டு வந்தோம். எடுத்த எடுப்பிலேயே நான்தான் கொலையாளி' என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்து அகமது பாஷா எங்களை அதிர்ச்சியடைய வைத்து விட்டார்'' என்றவர், கொலைக்கான காரணத்தைப் பற்றி நம்மிடம் விவரித்தார்.

''அரியலூர் அருகேயுள்ள கல்லக்குடியைச் சேர்ந்தவர்தான் பஷீராகனி. கணவர் அப்துல்லா, அரபு நாட்டில் வேலை செய்கிறார். பஷீராகனிக்கு பாத்திமாகனி, ஆஸியா என்று இரண்டு சின்ன வயது மகள்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்புவரை அகமது பாஷாவை, பஷீரா கனிக்குத் தெரியாது. ஊரில் உள்ள அவரது கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டுவதில் பஷீரா கனிக்கும் பக்கத்து நிலத்துக்காரர் பெரியசாமி என்பவருக்கும் பிரச்னை ஏற்பட, கணவர் வெளிநாட்டில் இருப்பதால் இந்த பிரச்னைக்காக த.மு.மு.க.வின் மாவட்டச் செயலாளர் மீரா மைதீனின் உதவியை நாடினார், பஷீரா கனி. அவர் மூலம் அறிமுகமானவர்தான் அகமது பாஷா. இவர் அந்த இயக்கத்தின் மாவட்ட செய்தித் தொடர்பாளர்.

அகமது பாஷா தலையிட்டதும் அதிசயம் நடந்தது போல கரும்பு வெட்டு பிரச்னை தீர்ந்தது. இதனால் அகமது பாஷாவின் மீது பஷீரா வைத்திருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்தது. அதையே சாக்காக வைத்து பஷீரா கனியின் குடும்ப நண்பராக மாறினார் பாஷா. கொடுக்கல் வாங்கல், அவசரத்துக்கு நகையைக் கழற்றித் தருவது என்ற அளவுக்கு அவர்களது நட்பு வளர்ந்தது'' என்றார் இசையழகன்.

அதன்பின் நடந்தது என்ன? கொலையாளி அகமது பாஷா கொடுத்த வாக்கு மூலத்தின் படி அதைப் பார்ப்போம்.

''பஷீரா கனியிடம் நான் பழக ஆரம்பித்த போது அவள் பலபேருடன் கள்ள உறவு வைத்திருக்கும் தகவலை, என்னிடம் சொன்னாள். அதுமட்டுமல்ல! 'உன் மீதும் எனக்கு ஆசையாக இருக்கிறது. உல்லாசமாக இருக்கலாம் வா!' என்று அடிக்கடி வற்புறுத்த ஆரம்பித்தாள். 'கணவன் இருக்கும்போது அந்நிய ஆடவனுடன் ஓர் இஸ்லாமியப் பெண் உறவு கொள்வது தவறு. இது மார்க்கத்துக்கு எதிரானது' என்று நான் அறிவுறுத்தி வந்தேன். இதனால் பஷீராகனி என்மேல் எரிச்சலானாள்.

அவளிடம் அவசரத் தேவைக்காக நான் பத்தரை பவுன் தங்க நகைகளை வாங்கியிருந்தேன். அதை அவசரமாகக் கேட்டு அவளது உறவினர் ஒருவருடன் என் வீட்டுக்கே வந்து தகராறு செய்தாள். அவளிடம் உடனே நகையைக் கொடுத்து அனுப்பி விட்டேன். நன்றி கெட்டவள். நாம் செய்த உதவியை மறந்து இப்படி நடந்து கொள்கிறாளே!? என்று நானும் எரிச்சலானேன்.

இந்த நிலையில், பஷீராகனி மீண்டும் என்னிடம் ஓர் உதவி கேட்டு வந்தாள். சென்னையில் உள்ள த.மு.மு.க. நிர்வாகிகளை நேரில் போய் பார்த்தால்தான் வேலை நடக்கும் என்று அவளிடம் சொல்லி வைத்தேன். கடந்த மாதம் 25_ம் தேதி காது குத்து விழாவுக்காக அவளது அண்ணன் வீட்டுக்கு பஷீராகனி வந்திருந்தாள். அங்கிருந்து அவளை சென்னைக்கு அழைத்துப் போவதாகக் கூறினேன். சம்மதித்தாள். பெரம்பலூரில் இருவரும் பஸ் ஏறினோம். தொழுதூர் வந்தபோது 'மகள்கள் என்னைத் தேடுவார்கள். இன்னொரு நாள் நாம் சென்னைக்குப் புறப்படலாம்' என்று பஷீராகனி நச்சரிக்க ஆரம்பித்தாள். இருவரும் வேப்பூரில் இறங்கிக் கொண்டோம்''.

'நள்ளிரவு நேரம் என்பதால் இனி ஊருக்குப் போக பஸ் கிடையாது. இங்கே பக்கத்தில் என் நண்பர் வீட்டில் தங்கிவிட்டு காலையில் வீட்டுக்குப் போகலாம்' என்றேன். அவள் சம்மதித்தாள். அதன்பிறகு ஓர் ஆட்டோ பிடித்து பெரிய நெசலூர் கைகாட்டி அருகே இறங்கி வயல் வழியாக நடந்து சென்றோம்.

அப்போது நான் 'நீ என்மீது அடிக்கடி ஆசைப்பட்டாயே! இப்போது பார். தனிமையாக நல்ல சந்தர்ப்பம் அமைந்து விட்டது. வா இருவரும் உல்லாசமாக இருக்கலாம்' என்றேன். பஷீராகனி உடனே சம்மதித்தாள். ஒதுக்குப்புறமாக அவளை அழைத்துச் சென்றேன். அவள் மேலாடையைக் களைந்தாள். நான் உல்லாசத்துக்கு முயல்வது போல நடித்து அவள் கழுத்தைத் துப்பட்டாவால் நெரித்துக் கொலை செய்தேன். முகத்தில் பாறாங்கல்லால் மூன்று முறை அடித்து அடையாளம் தெரியாமல் உருக்குலைத்தேன். 'நகைக்காகத்தானே என்னை வீடு தேடி வந்து அசிங்கப்படுத்தினாய்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, அவள் அணிந்திருந்த பத்தரை பவுன் நகைகளைக் கழற்றிக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டேன்.

பஷீராகனி போன்ற வேலிதாண்டும் வெள்ளாடுகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. கணவன் இருக்கும்போதே அந்நிய ஆடவர்களை இச்சிக்கும் அவளைக் கொல்வதில் தவறு இல்லை என்றுதான் கொலை செய்தேன். தவறு செய்யும் மற்ற இஸ்லாமிய சமூகப் பெண்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்.'' இப்படித்தான் வாக்கு மூலத்தில் கூறியிருக்கிறான் அகமது பாஷா.

இந்த அகமது பாஷாவின் சொந்த ஊர் மதுரை. இவர் இஸ்லாமியராகப் பிறந்தவர் இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பு சவூதியில் வேலை பார்த்து விட்டு வந்த பிறகுதான் இவர் முஸ்லிமாக மாறியிருக்கிறார். அகமது பாஷாவின் இயற்பெயர் நீதி மன்னன். இவர் மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த நண்பரின் தங்கை நர்கீசை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பஷீரா கனிக்கு இருப்பதைப் போல இவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள்.

மதம் மாறியது பெற்றோருக்குப் பிடிக்காததால் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக் குடிக்கு வந்து விட்ட அகமது பாஷா அங்குள்ள இஸ்லாமிய இளைஞர்களிடம் தீவிர மதப் பிரசாரமும் செய்து வந்திருக்கிறார்.

நன்றிங்க: kumudam reporter 19.07.07

அதென்னமோ தெரியலீங்க, இந்த மாதிரி விஷயத்தில மட்டும் முஸ்லிம்கள் பொசுக்கு, பொசுக்குன்னு மாட்டிகிறங்கன்னு செய்தி வருதுங்க! இதுக்குன்னே முஸலிம் ஆவுறதும் அதிசயமா இருக்குங்க என்னத்த சொல்ல!?

Monday, July 09, 2007

விவாகரத்து சர்ச்சை.

05. தபால் மூலம் "தலாக்' முஸ்லிம் பெண் சர்ச்சை

டாங்க் (ராஜஸ்தான்): முஸ்லிம் மதத்தினரில் பெண்கள் விவாகரத்து கோருவது மிக அரிது. அதிலும் தபால் மூலம் "தலாக்' அனுப்பி, விவாகரத்து பெறுவது அரிதிலும் அரிது. அப்படி தபாலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ராஜஸ்தான் பெண் ஒருவர்.

ராஜஸ்தானில் உள்ள டாங்க் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் ஹசீனா. இவரது கணவர் முகமது ஷரீப். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்த கணவரை சகித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். கேட்டபோதெல்லாம் பிறந்த வீட்டில் இருந்து பணம் பெற்று தந்தார். மீண்டும் ஒரு லட்ச ரூபாய் வாங்கி வரும்படி, ஹசீனாவை அடித்து உதைத்துள்ளார் ஷரீப். ஆவேசமடைந்த ஹசீனா, தனது பிறந்த
வீட்டில் இருந்து, தபால் மூலம் கணவருக்கு "தலாக்' நோட்டீஸ் அனுப்பிவிட்டார். ஆனால், இந்த விவாகரத்தை ஏற்க மறுக்கிறார் ஷரீப். "தவறு செய்வது மனித இயல்பு தான். நான் தவறை திருத்திக் கொள்கிறேன். ஏழு குழந்தைகளுடன் நான் தனியே வசிப்பது முடியாத காரியம். எனக்கு இன்னொரு வாய்ப்பு வேண்டும்' என்று வாதிடுகிறார்.

ஷரீப்புக்கு முஸ்லிம் மத குருக்களும் ஆதரவாக உள்ளனர். முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் மஞ்சூர் அலாம், ""தபால் மூலம் தலாக் நோட்டீஸ் அனுப்பியது சரியானது அல்ல,'' என்று கூறுகிறார். டாங்க், காந்தெனா அமேரியா மசூதியின் மதகுரு உமர் நத்வி, ""ஆண்கள் மட்டுமே இது போன்ற முறையில் "தலாக்' நோட்டீஸ் அனுப்பி விவாகரத்து செய்ய முடியும். பெண்களுக்கு முஸ்லிம் சட்டத்தில் இதுபோன்ற செயல்களுக்கு இடம் இல்லை,'' என்கிறார்.

இது தொடர்பாக இஸ்லாமிய பண்டிதர்களிடம் கேட்ட போது, "பெண்கள் விவாகரத்து கோரும் போது, அதற்கு முஸ்லிம் மதத்தில் சில நிபந்தனைகளும், விதிமுறைகளும் உள்ளன. ஹசீனா விஷயத்தில், அவர் செய்தது சரியானது தானா என்பதை முஸ்லிம் சட்டப்புத்தகத்தை அலசி ஆராய்ந்து தான் முடிவு சொல்ல முடியும்' என்றனர். ஹசீனாவுக்கு
ஆதரவாக அவரது தந்தை உறுதியுடன் உள்ளார். ஹசீனாவும், யார் என்ன சொன்னாலும், இனி ஷரீப்புடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

நன்றிங்க 08.07.07 தினமலர்.

தலாக் எனும் விவாகரத்து செய்து கொள்ளும் சட்டம் கணவன், மனைவி இருவருக்குமே பொதுவானதாக இருக்கிறது. விவாகரத்து செய்து கொள்ளும் முறைகளில் வேண்டுமானால் சற்று வித்தியாசம் இருக்கிறது. மற்றபடி கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பொருந்திப் போகவில்லையென்றால் இருவருக்குமே பிரிந்து கொள்ளும் உரிமையை இஸ்லாம் வழங்கி இருக்கிறது.

எழுத்து மூலம் விவாகரத்து செய்யக்கூடாது என்று இஸ்லாத்தில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் எழுத்து மூலம் விவாகரத்தைத் தெரிவிக்கும் முறைக்கு ஒரு நிபந்தனை உண்டு. திருமணத்துக்கு எவ்வாறு இரு சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்கிறோமோ அதே முறையில் எழுத்து மூலம் தெரிவிக்கும் விவாகரத்துக்கும் இரண்டு சாட்சிகளை ஏற்படுத்தி உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தன் கணவரிடமிருந்து பிரிந்து விட வேண்டும் என்பதில் ஹஸீனா உறுதியாக இருக்கும் நிலையில், அதை மறுக்கும் உரிமை கணவனுக்கு இல்லை. அவருடைய கணவருடன் சேர்ந்து வாழ வற்புறுத்தும் உரிமையும் எவருக்கும் இல்லை. இஸ்லாம் இதில் தலையிடுவதில்லை.

பெண்கள் குலா முறையில் விவாகரத்து பெற முன் வரும்போது அதை புறக்கணித்து கண்டிப்பாக உன் கணவருடன் நீ வாழ்ந்தாக வேண்டும் என்று சொல்லவும் இஸ்லாமிய மத பண்டிதர்களுக்கும் உரிமை இல்லை. அப்படி உரிமை உள்ளது என்று சொல்ல வருபவர்கள் தமது தரப்பு வாதத்திற்கான ஆதாரங்களை இஸ்லாத்திலிருந்து எடுத்தெழுதலாம்.

தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய படவா முகமது ஷரீபை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Wednesday, July 04, 2007

பத்மலட்சுமி விவாகரத்து செய்கிறார்!

சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்கிறார் பத்மலட்சுமி?

லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 2 ஜூலை 2007 ( 17:52 IST )

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவரது மனைவி பத்மலட்சுமி விரைவில் வி வாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (60). இவரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், மாடல் அழகியுமான பத்மலட்சுமியும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்துகொண்டனர்.

எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்ய பத்மலட்சுமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் ருஷ்டியை திருமணம் செய்ததன் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டதாகவும், இதனால் விரைவில் முறைப்படி அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தனது நணபர்களிடம் பத்மலட்சுமி கூறியதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றிங்க

விவாகரத்து செய்த கொண்ட மாடல் அழகியை திருமணம் செய்ய பலர் முன் வருவர். விவாகரத்தான ருஷ்டியின் நிலை...???

ஜீவனாம்சம் சம்பள உயர்வா?

விவாகரத்தானவருக்கு சம்பள உயர்வா? மாஜி மனைவிக்கு அதிக ஜீவனாம்சம்

மும்பை: விவாகரத்தான ஆண்களுக்கு சம்பள உயர்வு கிடைத்தால், மாஜி மனைவிக்கு ஜீவனாம்ச தொகையை அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.விவாகரத்தான ஆண்களுக்கு இனிமேல் சம்பள உயர்வு கிடைத்தால், அது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்காது. மாஜி மனைவிக்கு இன்னும் அதிகமாக ஜீவனாம்சத்தை கொடுக்க வேண்டுமே என்ற வருத்தம் தான் இருக்கும்.மும்பையைச் சேர்ந்த அரசு ஊழியர் மோகன் ஹரி மோரே .

குடும்பப் பிரச்னையால் அவருக்கும், மனைவி சுஜாதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதனால், கடந்த 1999ல், அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். அப்போது, சுஜாதாவுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் ஜீவனாம்சமாக மோகன் கொடுக்க வேண்டும் என்று குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மோகன் ஜீவனாம்சம் கொடுத்து வந்தார்.இந்நிலையில், சுஜாதா சமீபத்தில் குடும்பநல கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "என்னை விவாகரத்து செய்த போது, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.மூன்று ஆயிரம் மட்டுமே. அத்துடன், அவருடைய வயதான பெற்றோர் அவருடன் இருந்தனர். அவர்களையும் பராமரிக்க வேண்டி இருந்தது. அதனால், அப்போது ஆயிரம் ரூபாய்

தான் ஜீவனாம்சம் தர முடியும் என்று கூறி விட்டார். சில ஆண்டுகள் கடந்த பிறகு, ஐந்தாவது சம்பள கமிஷன் பரிந்துரையின்படி, எனது மாஜி கணவருக்கு சம்பளம் ரூ.எட்டு ஆயிரமாக உயர்ந்தது. ஆனால், எனக்கு கொடுத்து வந்த ஜீவனாம்ச தொகையை மட்டும் உயர்த்தவில்லை.

மேலும், அவருக்கு சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்த போது, நிலுவைத் தொகையாக ஆயிரக்கணக்கில் பணம் கிடைத்தது. அவருடைய வயதான பெற்றோரும் இப்போது இறந்து விட்டனர். அதனால், அவருக்கு நிதி நெருக்கடி எதுவும் கிடையாது. எனக்கு கொடுக்கும் ஜீவனாம்சத்தை அதிகரித்து கொடுக்க வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.அந்த மனுவை விசாரித்த குடும்பநல கோர்ட், "சுஜாதாவுக்கு கொடுக்கும் ஜீவனாம்ச தொகையில், மோகன், இனிமேல் ரூ.500 அதிகமாக கொடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டது. அதைக் கேட்டு பதறிப் போன மோகன், மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.

மோகனின் மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜே.என்.பாட்டீல் மற்றும் ஏ.ஏ.சையது அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, "விலைவாசி உயர்ந்து வருவதால் தான் அரசு, மோகனுக்கு சம்பள உயர்வை அளித்தது. அதே போல, விலைவாசி உயர்வு சுஜாதாவுக்கும் உண்டு. அதை சமாளிக்க, அவருக்கு வேறு எந்த ஆதாயமோ அல்லது ஆதரவோ கிடையாது. அதனால், மோகன் அதிகப்படியாக ஊதியம் பெறும் போது, அவருடைய மனைவிக்கும் ஜீவனாம்ச தொகையை ரூ.500 அதிகரித்து தான் கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொடுக்கும் ஆயிரம் ரூபாயில், உணவு, உடை, தங்குமிடம், மருத்துவ செலவு மற்றும் பிற செலவுகளை சுஜாதா சமாளிக்க முடியாது. அதனால், சுஜாதாவுக்கு இனிமேல் மோகன் ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ.ஆயிரத்து 500, கொடுத்து தான் ஆக வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.

நன்றிங்க

சட்டங்களில் இருக்கும் பல ஓட்டைகளில் இது பெரிய ஓட்டை என்று சொல்லலாம்.

மணமுடித்து இல்லற வாழ்வில் தம்பதியராக இணையும் ஆண், பெண் இருவருக்கும் கணவன், மனைவி என்ற உறவு ஏற்படுகிறது. இந்த உறவினால் சுக, துக்கம். லாப. நஷ்டம் என வாழ்க்கையில் ஏற்படும் இன்பம் துன்பங்களில் இருவரும் பங்கேற்கிறார்கள்.

கணவனுக்கு மனைவி உதவுவது, மனைவிக்கு கணவன் உதவுவதும் பரஸ்பரம் இருவர் மீதும் கடமை.

திருமணத்திற்கு பின் இருவரும் கருத்து வேறுபாடு கொண்டு இனி கணவன் மனைவியாக இணைந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விவாகரத்துக்கு செய்து கொண்டு பிரிந்த பின் அவன் யாரோ அவள் யாரோ என்று ஆகிவிடுகிறார்கள்.

இப்படி நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்த பின்னும் மனைவி என்ற அந்தஸ்தை முற்றாக முறித்துக் கொண்ட பெண்ணுக்கு கொஞ்ச காலம் மனைவியாக இருந்திருக்கிறாள் என்ற ஒரே காரணத்திற்காக அவளுக்கு காமெல்லாம் ஜிவனாம்சம் என்ற பெயரில் ஒரு தொகையை கணவனாக இருந்தவன் கொடுத்து வரவேண்டும் என்பது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஆண்களுக்கு இழைக்கப்படும் ஒரு அநீதி.

இங்கே நீதி மன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாக கருதாமல் விவகாரத்து பெற்றுக்கொண்ட ஒரு பெண் இனிமேல் கணவன் என்ற குறுக்கிடு இல்லாமல் தன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ள முடியும். திருமணத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே சுதந்திர நிலையை அந்தப் பெண் பெற்று விடுகிறார்.

இந்த நிலையில் தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணுக்கு ஜிவனாம்சம் என்ற பெயரில் மாத மாதம் ஒரு தொகையை கொடுப்பது எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?

உழைப்புக்கு கிடைப்பதே ஊதிய உயர்வு.

விவாகரத்து செய்துகொண்ட பெண் என்ன உழைக்கிறார் என்று அவருக்கும் மாஜி கணவனின் ஊதிய உயர்விலிருந்து பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்வதை எப்படி நேர்மைப்படுத்த முடியும்?