Monday, April 30, 2007

தேசியக்கொடி

இந்திய தேசியக் கொடியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது நம் நாட்டுச் சட்டம்.



"As per the Prevention of Insults to National Honour Act, 1971, not only is this act unethical and insensitive, but it also amounts to an offence with a maximum of three years imprisonment or fine or both.

The Act stipulates, "Whoever in any public place or in any other place within public view burns, mutilates, defaces, defiles, disfigures, destroys, tramples upon or otherwise shows disrespect to or brings into contempt (whether by words, either spoken or written, or by acts) the Indian National Flag or any part thereof, shall be punished with imprisonment for a term which may extend to three years, or with fine, or with both."

நன்றிங்க

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொண்டு வேகமாகத் திரும்பிய டெண்டுல்கர் தேசியக் கொடி போல் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

டி.வி.வர்ணனையாளர் மந்திரா பேடி உலகக் கோப்பை அணிகளின் நாட்டு கொடியை சேலையாக அணிந்திருந்தார். அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டு புடவையை மாற்றி விட்டார்.

இதெல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால் சமீபத்தில் பா.ஜ.க. விலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சாமியாரினியும் முன்னாள் மத்திய்ப் பிரதேச முதல்வருமான உமா பாரதி, சிலமதாங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது நம் நாட்டு தேசியக் கொடியில் மூக்கைச் சிந்தியது!

கிரிக்கெட்டின் மூலம் தேசபக்தி வளரும் என்று நம்பும் கூட்டம், யாராவது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட்டில் சப்போர்ட் பண்ணினால் கூட தேவையின்றி சாமியாடும் ஒரு கூட்டம், நம் நாட்டு தேசியக் கொடியை அவமதிக்கும் இத்தகைய இந்துக்களை என்ன செய்யப் போகிறார்கள்?

மந்திரா பேடியையும் டெண்டுல்கரையும் பாகிஸ்தானுக்கு போகச் சொல்வாங்களா? அல்லது சட்டப்படி மூன்று வருடம் சிறைத்தண்டனை பெறுவாங்களா?

கம்பத்தில பறக்கிறவரைக்கும் அது கொடி,






அதையே கீழே விரிச்சிட்டா...???

பட உதவிக்கு நன்றிங்க.

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.

முஸ்லீம்கள் பணத்தில் படித்து முஸ்லீம்களை வேட்டையாடிய 'என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்'

ஏப்ரல் 30, 2007

அகமதாபாத்: என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என குஜராத் காவல்துறையினரால் வர்ணிக்கப்பட்டு, இப்போது 13 பேரை போலி என்கவுண்டர்களில் கொன்று தீர்த்த கொலைகாரனாக மாறி கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் குஜராத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ்.அதிகாரி டி.ஜி.வன்சாரா.

போலி என்கவுண்டர்கள் மூலம் முஸ்லீம்களை சுட்டுக் கொன்றதாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டது, குஜராத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.

இவர்களில் ஒருவரான ராஜ்குமார் பாண்டியன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி. இன்னொரு முக்கியமான நபர் வன்சாரா.

வன்சாராவுக்கு குஜராத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என பெயராம். இதுவரை 13 பேரை என்கவுண்டர் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளார் வன்சாரா. அதிலும் 2003ம் ஆண்டில் மட்டும் 7 பேரை போட்டுத் தள்ளியுள்ளார். அத்தனை பேரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்ல சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது சொரப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீபி மற்றும் பிரஜாபதி ஆகியோரை போலி என்கவுண்டர் மூலம் கொலை செய்த விவகாரத்தில் சிக்கியுள்ள வன்சாரா, இதுவரை நடத்திய என்கவுண்டர்கள் அனைத்துமே போலியானவை என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

என்கவுன்டர்களுக்குப் பின்னர் கொல்லப்பட்ட 'தீவிரவாதிகளிடமிருந்து' பிடிபட்டதாக சில நாட்டுத் துப்பாக்கிகளை மேலிடத்தில் ஒப்படைத்துள்ளார் வன்சாரா.

வன்சாராவுக்கு பெரிய அளவில் அரசியல் தொடர்புகளும் உள்ளன. இதன் மூலம் இவர் ரூ.150 கோடிக்கு மேல் சொத்தும் சேர்த்து வைத்துள்ளார். இதுகுறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

வன்சாரா, குஜராத் மாநிலம் இலால் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். இந்தக் கிராமத்தில் உள்ள 12 ஆயிரம் மக்களில் 60 சதவீதம் பேர் முஸ்லீம்கள் ஆவர். சிறு வயதில் மிகவும் ஏழ்மையில் வாடியவர் வன்சாரா. அவரது பள்ளிப் படிப்புக்குக் கூட இந்தக் கிராமத்து மக்கள்தான் பணம் கொடுத்து உதவியுள்ளனராம்.

காரணம், வன்சாரா மட்டுமே அக்கிராமத்தில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டியவர். நமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு படிப்பார்வம் மிக்க சிறுவன் நன்கு படிக்கட்டும் என்ற ஆர்வத்தில் ஊரே சேர்ந்து வன்சாரவைப் படிக்க வைத்துள்ளது. முஸ்லீம்கள் அனைவரும் வன்சாராவை தங்களது வீட்டுப் பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்துள்ளனர்.

அதேபோல சிவில் சர்வீஸ் தேர்வுக்கு வன்சாரா தயாரானபோதும் கூட இக்கிராமத்து முஸ்லீம்கள்தான் பல வகையிலும் உதவியாக இருந்துள்ளனர். எந்த வன்சாராவை தங்களது பிள்ளையாக நினைத்துப் படிக்க வைத்தார்களோ, எந்த வன்சாரா ஐபிஎஸ் அதிகாரியாக ஆனபோது பெருமைப்பட்டார்களோ அதே வன்சாராவால் இப்போது இலால் கிராமத்து முஸ்லீம்கள் பெரும் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

வன்சாராவின் தந்தை கோபார்ஜி வன்சாரா, கழுதை மேய்ப்பவராக இருந்துள்ளார். இலால் சஹாகரி மண்டலி உயர் நிலைப்பள்ளியில்தான் வன்சாரா படித்து வந்தார். அப்போது வகுப்பிலேயே முதல் மாணவராக விளங்கினார்.

11ம் வகுப்பு வரை அங்குதான் வன்சாரா படித்தார். வன்சாரா என்பது ஜாதிப் பெயராகும். வன்சாரா சார்ந்த ஜாதியினர் மொத்தமே 25 குடும்பங்கள்தான் இலால் கிராமத்தில் வசித்து வருகின்றனர். தற்போது போலி என்கவுண்டர் விவகாரத்தில் வன்சாரா சிக்கியுள்ளதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உள்ளனர். வன்சாரா குடும்பத்தை இவர்கள் புறக்கணித்து, ஒதுக்கி வைத்துள்ளனர்.

வன்சாராவின் பள்ளித் தோழரும், வழக்கறிஞருமான நாதுபாய் படேல் கூறுகையில், வன்சாராவின் செயலால் நாங்கள் பெரும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்துள்ளோம். எங்களை வன்சாரா அவமானப்படுத்தி விட்டார்.

இளம் வயதில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம் வன்சாராவின் குடும்பம். இக்கிராமத்து முஸ்லீம்கள் கொடுத்த பணத்தில்தான் வன்சாராவும், அவரது அண்ணனும் படித்தார்கள். ஆனால் இன்று அதே முஸ்லீம் சமுதாயத்தை வேட்டையாடி எங்களை கேவலப்படுத்தி விட்டார் வன்சாரா என்றார் ஆத்திரமாக.

வன்சாராவின் ஆசிரியரான ஹசன்பாய் கரீம்பாய் ஹோல்டா கூறுகையில், சிறு வயதில் வன்சாரா நன்கு படிக்கும் மாணவராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனது வீட்டிற்கு வந்து டியூஷன் படித்துச் செல்வார்.

11ம் வகுப்பை இங்கு முடித்து விட்டு வடோடராவில் மேல் படிப்பு படிக்கப் போனார். ஐபிஎஸ் முடித்து பணியில் சேர்ந்த பின்னர் அவர் கிராமத்தை மறந்து விட்டார்.

அவர் இன்று உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ளதற்கு இந்தக் கிராமமும், இங்குள்ள அப்பாவி ஜனங்கள் செய்த தியாகமும், செய்த பண உதவிகளும்தான் காரணம். ஆனால் இவர்கள் குறித்து வன்சாரா கவலைப்படவே இல்லை, ஒதுக்கி வைத்து விட்டார். இன்றோ, இக்கிராமத்துக்கு பெரும் கெட்ட பெயரை ஈட்டித் தந்து விட்டார் என்றார் வேதனையுடன்.

இலால் கிராமம், எந்த வன்சாராவுக்காக பெருமைப்பட்டதோ, அதே வன்சாராவால் இன்று தலைகுனிந்து வேதனையில் மூழ்கிக் கிடக்கிறது. இதற்கிடையே சொரப்தீனின் மனைவி கெளசர் பீபியை இந்த போலி எண்கவுண்டர் கும்பல் ஒரு பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்து எரித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நன்றிங்க

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அப்பாவிகளை கொன்று குவித்த - ஜாதி வெறிபிடித்த இந்த அதிகாரி காவல்துறைக்கே ஒரு இழுக்கு.

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்த நன்றி கெட்ட துரோகி.

Friday, April 27, 2007

மக்கள் பாவம், விட்டு விடுங்கள்!

போலீசாருக்கு ஜெயலலிதா மிரட்டல்!!!

ஏப்ரல் 27, 2007

சென்னை: தமிழக காவல்துறை செயல் இழுந்து, உருகுலைந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக காவல்துறை மானிக் கோரிக்கை குறித்து சட்டசபையில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் என திமுக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான அவசியம் இல்லை. ஏனென்றால் ஒரு உருக்குலைந்து போன, செயல்திறன் இழந்து விட்ட ஒர் அமைப்பை பற்றி விவாதித்து இனி ஆகப்போறதென்ன.

ஒரு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது என்பது ஒரு துறை சார்ந்த நடவடிக்கை அல்ல. இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு 355ன் கீழ் ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை கண்காணிக்க வேண்டும். மாநில அரசு அதை செய்ய தவறினால் சட்டம் ஒழுங்கு சீர் கேடான மாநிலம் என்று கருதி அங்கு அரசியல் சட்டம் 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படும்.

இன்றைக்கு தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக தான். இக்கட்சியின் பொறுப்பாளர்கள் திமுக குண்டர்களால் தாக்கப்பட்டும், வெட்டப்பட்டும், கொலை செய்யப்பட்டும், பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

ஆனால் திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் திடீர், திடீர் என முடிவுக்கு வந்துள்ளது. உதாரணத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அவர் நீதிமன்றத்திற்கு போகமாலே முடிவுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் வெடிமருந்து கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பயங்கார வெடிவிபத்து. பொது விநியோகத்திற்காக அளிக்கப்படும் அரிசி, லாரி, லாரியாக தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுகின்றன.

கள்ளச்சாராயம் குடிசைச் தொழிலாய் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் பகிரங்கமாக காணப்படுகிறது. வீரப்பனை ஒழித்துக்கட்டிய காட்டில் புதிய வீரப்பனை உருவாக்கி வருகிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் நடத்த வன்முறை மூலம் சங்க காலத்து போர்களத்தை தத்ரூபமாக திமுகவினர் நடத்தி காட்டியுள்ளனர். இதற்கொல்லமாம் வெண்சாமரம் வீசிக் கொண்டு இருந்தது தமிழக காவல் துறை.

செயல் இழந்த ஒரு அமைச்சரவை மத்தியிலும் இருக்கின்றது. பயந்து நடுக்கி செயல்படும் நபர் தமிழகத்தின் ஆளுநராக இருக்கிறார். இதனால் எதைபற்றியும் கவலைப்படாமல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பாவர்கள் பொது மக்கள் தான்.

தமிழகத்திற்கு அருகில் உள்ள ஒரு அண்டை நாட்டில் ஒரு பயங்கரவாத இயக்கம் வான்வழி தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளதும் திமுக ஆட்சியில் தான். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வெடிபொருட்கள், ராணுவ தளவாடப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து கருணாநிதியின் ஆட்சியில் தடையின்றி செல்கின்றன.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு நடமாடும் பொம்மையாக காவல் துறை தலைமை இயக்குனர் இருந்து கொண்டிருக்கிறார். காவல் துறையினருக்கு மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன். கருணாநிதியின் சொல்லைக் கேட்டு மக்கள் விரோத பாணியில் செயல்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுடியிருக்கும்.

இந்த ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்து விடும். அப்போது மக்கள் விரோதியாக காவல் துறை நின்று விடக்கூடாது என்பதற்காக இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

நன்றிங்க

அம்மா தாயே!?

முன்பு,

மாசம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய நீங்கள் 15.32 கோடி சொத்துக்களை வாங்கியதாக குற்றச்சாட்டு வழக்கு.

டான்சியிடமிருந்து 3.1 ஏக்கர் நிலமும் 2.698 சதுர மீ. கட்டிட பகுதியும் ஜெயா பப்ளிகேஷன் வாங்கியது. இந்த பேரத்தில் அரசு கல்லா பெட்டிக்கு 3.51 கோடி ரூபாய் நஷ்டம்.

பஞ்சாயத்துகளுக்காக கலர் டிவி பெட்டி வாங்கியதில் சந்தை விலையைவிட அதிகமாக ரூபாய் 14.500 வீதம் 45.302 கலர் பெட்டி அரசு வாங்கியது. இதில் 8.53 கோடி ரூபாய் கமிஷனாக நீங்கள் பெற்றது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்காக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் 117 கோடி கமிஷனுக்கு திட்டம் தீட்டியது.

பிறந்தநாள் பரிசாக ஒரு அனாமதேயரிடமிருந்து 3லட்சம் டாலர் பெற்றது.

இன்னும் சென்னையிலும் ஹைதராபாத்திலும் இருக்கும் உங்கள் வீடுகளை சோதனை போட்டதில் கொள்ளை கொள்ளையாக பணமும் 30கிலோ தங்கம் - 350 ஜோடி வளையல். 800 கிலோ வெள்ளி. 90க்கும் மேற்பட்ட கைக்கடியாரங்கள். 150 க்கும் மேற்பட்ட கலை பொருட்கள். விலையுயர்ந்த கற்கள். 10.000 புடவைகள். இறக்குமதி செய்யப்பட்ட 750 ஜோடி செருப்புகளும் கிடைத்தன மொத்த மதிப்பு ரூபாய் 58 கோடியாகும் என்று கணக்கிடபட்டிருந்தது.

இப்படி உங்கள் மீது பல வழக்குகள் இருந்தும் அப்போதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் சட்ட ஒழுங்குகள் உருக்குலைந்துதான் இருந்தது என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதிலே மக்கள் விரோதியாக காவல்துறை நின்று விடக்கூடாதுன்னு நீங்கள் சொல்வது தப்புங்க தாயே!?

வேணும்னா,

நீங்கள் ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சியாக இருக்கும்போது அதிமுகவுக்கு விரோதமாக காவல்துறை நிற்க கூடாதுன்னு நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.

நீங்கள் ஆட்சியிலிருக்கும்போது திமுகவுக்கு விரோதமாக காவல்துறை நிற்க கூடாதுன்னு அவங்க சொல்லிக் கொள்ளட்டும்.

வீணாக,
மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் போல மாறி மாறி நீங்கள் அறிக்கை விடுவது உண்மையிலேயே சகிக்கவில்லையம்மா.

மக்கள் பாவம் அவர்களை விட்டு விடுங்கள் தாயே!?

Wednesday, April 25, 2007

25.இப்படியும் சில முஸ்லிம்கள்.

05.உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை

உடுமலை: பெற்ற மகனையே நரபலி கொடுப்பதற்காக அமராவதி ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை அருகே சோழமாதேவியை சேர்ந்த முகம்மது அலி மகன் முகம்மது இக்பால் (32).மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதே பகுதியில் வசிக்கும் மாந்திரீகர் ஜாபருடன் சேர்ந்து மாந்திரீகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால், இக்பால் மனைவி ஜமீலா தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் சோலக்கரைக்கு சென்றுவிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து திண்டுக்கல்லில் அமைதியாக குடும்பம் நடத்தினார். இந்நிலையில், இவரின் மகன் ஆரீப்கான் (3) பிணமாக அமராவதி ஆற்றில் மிதந்தார்.

இச்சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, குழந்தையின் தந்தை முகம்மது இக்பால் மற்றும் மாந்திரீகவாதி ஜாபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதில், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.

குழந்தை நரபலி : கொலை நடந்த அமராவதி ஆற்றுக்கு முகம்மது இக்பாலை போலீசார் அழைத்து சென்று, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டனர். அப்போது, ஜாபர் முதலில் குழந்தையை ஆற்றுக்கு அழைத்து வந்ததை மட்டும் கூறியுள்ளார். பின்னர், குழந்தையை பாறை மீது அமரவைத்து தண்ணீருக்குள் தள்ளியதாகக் கூறியுள்ளார்.

போலீசார் கூறும் போது, "அதிக மாந்திரீக ஈடுபாடு காரணமாக கொலை நடந்துள்ளது. முகம்மது இக்பால் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. பிரேத பரிசோதனையிலும், குழந்தை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கொலைக்கான காரணம், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விரைவில் தெரியவரும்' என்றனர்.

24.04.2007 தினமலர் செய்திக்கு நன்றிங்க.

பெற்ற பிள்ளையாகட்டும் மற்ற பிள்ளைகளாகட்டும், பிள்ளைகளை பலியிடுவது இஸ்லாத்தில் இல்லை. மந்திர சடங்குகள் ஒருவனை எந்த அளவுக்கு மூடனாக்கி விடுகிறது. பெற்ற பிள்ளையை மாந்தீரிகத்துக்காக நரபலி கொடுக்க முன் வருபவன் கல்நெஞ்சகனாகவே இருப்பான்.

மாந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம் என்ற மூடநம்பிக்கைகளுக்கு முஸ்லிம்களும் விதிவிலக்கானவர்கள் இல்லை. இதற்கு இந்த செய்தியே சான்றாக இருக்கிறது.

குழந்தைகளின் மீதான அன்பு பாசம் இரக்கம் இந்த பண்புகளை இவர்களிடமிருந்து இறைவன் பறித்து விட்டான்!

இப்படியும் சில முஸ்லிம்கள்!!!

Tuesday, April 24, 2007

பின்னே வல்லரசுன்னா சும்மாவா!

அமெரிக்கா பாசிசப்பாதையில்: 10 அறிகுறிகள்

புதன், 25 ஏப்ரல் 2007

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மிக உன்னத நாடாகத் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா எப்படி பாசிசப் பாதையில் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை கார்டியன் பத்திரிக்கை அலசியுள்ளது.

1. மிகப்பயங்கரமாக நாட்டு மக்களைப் பயமுறுத்துதல்

'இஸ்லாமியத் தீவிரவாதம்' என்ற சொல்லை மந்திரம் போல் சொல்லி அதன் மூலம் பேரழிவு ஏற்படப் போவதைப் போல் ஒரு தோற்றத்தை உருவாக்குதல்.

2. மோசமான சூழலில் சிறை ஒன்றை உருவாக்குதல்

எல்லோரையும் பயமுறுத்தியாகிவிட்டதா, சட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறை உருவாக்கி அதில் மோசமான சூழலில் வழக்கே இல்லாமல் தனக்குப் பிடிக்காதவர்களைப் பிடித்து அடைத்துத் துன்புறுத்தல்

3. ரவுடிக்கூட்டத்தை உருவாக்குதல்

காவல் ரோந்து என்ற பணிக்கு ரவுடிக்கூட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பும் அழித்தல். இந்தக் கூட்டம் வீடு புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யும் நீங்கள் சந்தேக வளையத்தில் வந்தால்..

4. உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் எல்லாவற்றையும் கண்காணித்தல்

ஒரு தனிமனிதனுக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம், தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி தனிமனித சுதந்திரத்தில் தலையிடுதல்

5. மக்கள் உரிமைக் குழுக்களைச் சித்திரவதை செய்தல்

இதெல்லாம் என்ன நியாயம் என்று எந்த தனிநபரோ இயக்கமோ கேள்வி கேட்டால் அவர்களுக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தைக் கிளப்பி சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல்

6. மனதுக்குத் தோன்றியபடி கைது செய்தல், விடுவித்தல்

ஒருவர் சந்தேக வளையத்தில் வந்துவிட்டாரா அவரை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்தல், பின்னார் வழக்கு ஏதும் அவர் மீது போட இயலாமல் விடுவித்தல் இதையே தொடர்ந்து செய்தல்.

7. முக்கிய ஆர்வலர்கள் / அரசு அலுவலர்களைக் குறிவைத்தல்

யாரேனும் மனித உரிமைச், சுதந்திரம் என்று பேசிவிட்டார்கள் எனில் அவர்களைப் பயமுறுத்தல், அரசு ஊழியர்கள் என்றால் அவர்களைத் தங்கள் ஆணைப்படி நடக்கவேண்டும் என்று மிரட்டுதல்

8. ஊடகங்களைக் கட்டுப்படுத்தல்

கருத்துச் சுதந்திர சொர்க்கமான அமெரிக்காவில் ஊடகக்கட்டுப்பாடா என்று வியக்க வேண்டாம். உண்மையில் அமெரிக்காவில் ஊடகங்களைக் கட்டுப்படுத்த இயலாது ஆனால் உண்மைகளை விட அதிகமான பொய்களைப் பெருமளவில் கலக்க விடுதலும் ஒரு வகையில் கட்டுப்படுத்தல் தானே?

9. விமர்சனம் என்பது தேசதுரோகம் என அறிவித்தல்

ஆட்சியில் இருப்பவர் செய்யும் அனைத்தையும் ஒத்துக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் இல்லையேல் தேசதுரோகிப் பட்டம் கட்டி மூலையில் கிடத்தி விடுதல்.

10. சட்டம் ஒழுங்கு எல்லாம் ஏட்டளவிலேயே

புதிது புதிதாக சட்டத் திருத்தம் என்ற பெயரில் சட்டத்தையே இல்லாமல் செய்து விடுதல். அதாவது அமெரிக்க அதிபர் விரும்பினால், போர், இயற்கைச் சீரழிவு அல்லது அவர் தேவை என நினைக்கும் எந்த சூழலுக்கும் அமெரிக்கப் படையைப் பணியில் ஈடுபடச்செய்ய இயலும் என்பது போன்ற திருத்தங்கள் கொண்டுவருதல்.

இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கா பாசிசப்பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

நன்றிங்க

சட்ட ஒழுங்கை வெறும் ஏட்டளவில் வைத்து கொண்டு நான் வைச்சதே சட்டம் என்று அடக்கியாள்வதற்கு பெயர்தான் வல்லரசு.

சர்வாதிகாரத்துக்கு ஜனநாயக சாயம் பூசிக்கொண்டிருக்கிறது வல்லரசு அவ்வளவுதான்.

தமிழ்மணத்தை ஆதரிப்போம்.




தமிழ்மணத்தின் மீதான ஆதிக்க வெறியர்களின் ஆதாரமற்ற அவதூறுக் குற்றச் சாட்டுக்களை புறக்கணித்து தமிழ்மணத்தை ஆதரிப்போம்.

Sunday, April 22, 2007

ஆள் கடத்தல் குற்றவாளிகளின் சங்கிலித்தொடர்.

ஆள் கடத்தல்: மேலும் 3 எம்.பிக்களுக்குத் தொடர்பு கைதான கத்தாராவின் பி.ஏ பரபரப்பு தகவல்

ஏப்ரல் 22, 2007 

டெல்லி: வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்துவதில் மேலும் 3 எம்.பிக்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், இந்த வேலை கடந்த 1993ம் ஆண்டிலிருந்தே நடந்து வருவதாகவும் டெல்லியில் கைதான பாஜக எம்.பி பாபுபாய் கத்தாராவின் உதவியாளர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மனைவி மற்றும் மகன் ஆகியோரின் பாஸ்போர்ட்டில் வேறு பெண்ணையும் ஒரு பையனையும் கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற குஜராத் மாநில பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிடிபட்டார். 3 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாபுபாயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதை சில வருடங்களாகவே அவர் செய்து வருவதாகவும், ஆள் கடத்தல் ஏஜென்டுகளுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் பாபுபாயின் உதவியாளர் ராஜேந்திர சிங் நேற்று கைது செய்யப்பட்டார். இவர்தான் பாபுபாயின் ஆள் கடத்தல் மோசடி வேலைகளுக்கு வலது கரம் போல செயல்பட்டவர்.

டிராவல் ஏஜென்டுளுக்கும், பாபுபாய்க்கும் இடையே பாலம் போல செயல்பட்டு வந்துள்ளார் சிங். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பலரை இதுபோல பாபுபாய் கடத்திச் செல்ல உதவியாக இருந்துள்ளார்.

இதேபோல ராஜேந்திர சிங்கின் தங்கை கிரண், டெல்லியில் பான் பீடா கடை நடத்தி வரும் சுரேந்தர் லால் யாதவ் ஆகியோரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இவர்களில் கிரணுக்கு முக்கிய வேலை தரப்பட்டுள்ளது. அதாவது பாபுபாயுடன் மனைவி வேடத்தில் செல்லும் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது இவரது வேலை. அதாவது குஜராத்திப் பெண்கள் போல எப்படி நடந்து கொள்வது, சேலை கட்டுவது, பேசுவது என்பது உள்ளிட்டவற்றை கிரண்தான் சொல்லிக் கொடுப்பாராம்.

சுரேந்தர் லால் யாதவும் இந்த ஆள் கடத்தல் வேலையில் முக்கியப் புள்ளி. இவர்தான் ராஜேந்தர் சிங்கிடம் ஆட்களைப் பிடித்துக் கொடுப்பவராம். ஏஜென்டுகள் பலருடனும் இந்த பீடாக் கடை யாதவுக்குத் தொடர்பு உள்ளதாம்.

யாதவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ராம்சொரூப் கோலி, உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. முகம்மது தகீர் கான், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பியுமான சந்திரசேகர் ராவ் ஆகியோரின் பெயர்களை யாதவும், ராஜேந்தர் சிங்கும் தெரிவித்துள்ளனர்.

யாதவ் உள்ளிட்ட கைதான 3 பேரையும் டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அங்கு யாதவ் அளித்த வாக்குமூலத்தில், இந்த மூன்று எம்.பிக்கள் தவிர மறைந்த எம்.பி. ராவ் அவத் ஆகியோரிடம், டிராவல் ஏஜென்டுகள் மகேஷ்குப்தா, ரஷீத் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தேன்.

எம்.பிக்களிடம் எங்களை அறிமுகம் செய்து வைக்குமாறு இரண்டு பேரும் கேட்டுக் கொண்டனர். இதற்காக ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை எனக்குக் கூலியாக கிடைத்தது. ஆனால் அவர்கள் டிராவல் ஏஜென்டுகள் என அப்போது எனக்கு தெரியாது.

முன்னாள் மத்திய அமைச்சரான சந்திரசேகர் ராவை, அவரது முன்னாள் செயலாளர் மந்திரமூர்த்தியின் மூலமாக ரஷீத்துக்கு அறிமுகம் செய்து வைத்தேன்.

அதேபோல கட்டாராவிடம் ராஜேந்தர் சிங்கையும் நான்தான் அறிமுகப்படுத்தி வைத்தேன் என்றார்.

இதையடுத்து யாதவுக்கு 3 நாட்களும், ராஜேந்தர் சிங்குக்கு 5 நாட்களும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். கிரணுக்கு போலீஸ் காவல் மறுக்கப்பட்டு அவரை 10 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தங்களது கட்சித் தலைவர் சந்திரசேகர் ராவ் மீதான புகாரை தெலுங்கான கட்சி மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில சந்திரசேகர் ராவுக்கு சற்றும் தொடர்பு இல்லை. அதேபோல மந்திரமூர்த்தி என்ற பெயரிலும் யாரும் ராவிடம் வேலை பார்க்கவில்லை என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, எம்.பிக்கள் மீதான இந்த பரபரப்பு புகார்கள் குறித்து நாடாளுமன்ற லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் கூறுகையில், இந்தப் புகார்கள் மிகவும் கடுமையானவை. இவை குறித்து 25ம் தேதி நடக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார் சாட்டர்ஜி.

அமெரிக்காவுக்கு 25 - அரபு நாடுகளுக்கு 5

ஒவ்வொரு நாட்டுக்கும் ஆட்களை சட்டவிரோதமாக கொண்டு போய் விடுவதற்கு விதம் விதமாக ரேட் நிர்ணயித்து வைத்துள்ளது இந்த டிராவல் ஏஜென்டுகள் மற்றும் எம்.பிக்கள் குழு.

அதன்படி அமெரிக்காவுக்கு கொண்டு போய் விடுவதற்குத்தான் அதிகபட்ச ரேட்டாம். அமெரிக்காவில் உள்ள எந்த நகருக்கும் கொண்டு போய் விடுவதற்கு ஒரு ஆளுக்கு ரூ. 25 லட்சம் வரை வாங்குகிறார்களாம்.

கனடா என்றால் 20 லட்சம் ரூபாயும், ரஷ்யாவுக்கு 7 லட்சமும், ஐரோப்பிய நாடுகளைப் பொருத்தவரை இங்கிலாந்து என்றால் 15 லட்சம், மற்ற நாடுகள் என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் வசூலிக்கின்றனர். அரபு நாடுகளுக்கு போக வேண்டும் என்றால் 5 லட்சம் கொடுத்தால் போதுமாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 900 பேர் வரை இவ்வாறு சட்டவிரோதமாக போயிருப்பதாக கூறப்படுகிறது.

நன்றிங்க

பேரம் பேசி அயல் நாட்டுக்கு ஆட்களை கடத்தும் எம்.பிக்கள் டிராவல் ஏஜெண்டுகளென குற்றவாளிகளின் பட்டியல் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

காத்திருப்போம்!

Saturday, April 21, 2007

மதசார்பின்மையின் வக்கிரம்

மதசார்பின்மையின் 'வக்கிரம்'-இல.கணேசன் தாக்கு

ஏப்ரல் 21, 2007

சென்னை: பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்க முயற்சி நடப்பதாக பாஜக மாநிலத் தலைவர் இல.கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பொதிகை தொலைக்காட்சி ஒரு வேண்டுகோளை விளம்பரப்படுத்தி வருகிறது. போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்து வருகிறது.

போட்டிக்கான தலைப்புகளைப் பாருங்கள்

1. தேசபக்தி பாடல்கள்
2. இஸ்லாமிய பாடல்கள்
3. கிருஸ்துவ மத பாடல்கள்


இதில் இந்து பக்தி பாடல்களுக்கு வாய்ப்பில்லை. ஒருவேளை தேசபக்தி என்பது இந்துக்களுக்கு மட்டும் தான் என பொதிகை டிவி நினைத்துவிட்டதோ என்னவோ

பொதிகை நிலைய பொறுப்பாளர் எவராவது தனது மத உணர்வை அல்லது மத எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தியிருந்தால் அது நடவடிக்கைக்கு உரியது.

அல்லது அரசே இந்த விஷயத்தில் கொள்கைரீதியிலான முடிவை எடுத்திருக்குமானால் அது மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனை என்று தான் கொள்ள வேண்டும்.

நாடு பிளவுபட்டபோது எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் பெருவாரியாக வாழ்கிறார்களோ அந்தப் பகுதி பாகிஸ்தானாக ஆகிவிடும் என்பது அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

ஆனால், சுதந்திர பாரதத்துக்குள் உள்ள பகுதி தனியாகப் போக வேண்டுமானால் அந்தப் பகுதியில் முஸ்லீம்கள் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற நோக்கோடு சில சக்திகள் பணிபுரிந்து வருகின்றன.

ஏற்கனவே காவல்துறை அத்தகைய பகுதிகளில் இந்து ஊர்வலங்களை, பொதுக் கூட்டங்களை அனுமதிக்க மறுத்து அந்த பகுதிகளுக்கு தனி அந்தஸ்து வழங்கி வருகிறது.

இந் நிலையில் ஒட்டுெமாத்த தேசத்தின் பொருளாதாரம் குறித்து கவலைப்பட வேண்டிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 103 மாவட்டங்களில் புதிய வங்கிக் கிளைகளை தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

இது பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்கும் முயற்சி.

ஏற்கனவே நகைகளை வைத்து கடன் பெறும்போது இந்துவுக்கு 8.5 சதவீதமும் முஸ்லீமுக்கு 5 சதவீதமும் வட்டி வசூலிக்கப்படுகிறது. இவைகள் மதசார்பற்ற தன்மையின் வக்ர சிந்தனைக்கு மற்றொரு உதாரணங்கள்.

தேர்தலில் மதத்தின் பெயரால் வாக்கு கேட்பது குற்றம். ஆனால், உபி தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த அைமச்சர் சைபுதீன் சோஸ் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதாக உறுதி தந்து வாக்கு கேட்டது மதசார்பின்மையா அல்லது மத சார்பின்மையின் வக்கிரமா

பொது மக்கள் இது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார் இல.கணேசன்.

நன்றிங்க

//இது பாரதத்துக்குள் பல குட்டி பாகிஸ்தான்களை உருவாக்கும் முயற்சி.//

எபா முடியலப்பா :(((

Wednesday, April 18, 2007

பாஜக எம்.பியின் பித்தலாட்டம்.

மனைவி பாஸ்போர்ட்டில் வேறு பெண் : டில்லி விமான நிலையத்தில் பா.ஜ.க.எம்.பி.கைது

புதுடில்லி : மனைவி பாஸ்போர்ட்டில் வேறு பெண்ணை கனடாவுக்கு அழைத்து செல்ல புதுடில்லி விமான நிலையம் வந்த பா.ஜ.க.எம்பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.எம்பி பாபுபாய் கட்டாரா. இன்று அதிகாலை அவர் ஒரு பெண்ணுடன் புதுடில்லி விமான நிலையம் வந்தார். கூடவே 14 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் வந்தான். இவர்கள் மூவரும் கனடாவில் உள்ள டோரன்டோ நகருக்கு பயணம் செய்ய இருந்தனர். இம்மிகிரேஷன் பிரிவிற்கு அவர்கள் வந்தபோது அந்த பெண்னை தன் மனைவி சாரதாபென் என்று எம்பி கூறினார். இதில் சந்தேகமடைந்த இம்மிகிரேஷன் அதிகாரிகள் துருவி துருவி விசாரித்ததில் அந்த பெண் சாரதாபென் இல்லை என்றும், அவரது உண்மையான பெயர் பரம்ஜித் என்றும் தெரியவந்தது. பரம்ஜித் என்ற பெண்னை தன் மனைவி சாரதாபென் என்று பொய் சொல்லி, போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு கூட்டிச்செல்ல முயன்ற எம்பி பாபுபாய் கட்டாரா போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். அந்த
பெண்னை பாபுபாய் கட்டாரா கனடா கூட்டி செல்வதற்கு ரூ.30 லட்சம் பெற்றதாக தெரிகிறது.

நன்றி: இன்றைய தின மலர், 18,04.2007

ஒரு பொறுப்புள்ள நாடளுமன்ற உறுப்பினரின் யோக்கியதையை பாருங்கள்.

ரூபாய் முப்பது லட்சங்களை வாங்கி கொண்டு தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல பித்தலாட்டம் செய்தவருக்கு எம்பி பதவி வகிக்க தகதியுள்ளவரா?

வலை பதிவு உறுப்பினரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை ஆள் மாறாட்டும் செய்யும் இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

மதசார்பற்ற அரசியில் கட்சிகளுக்கே முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் எனது செல்வாக்கை பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், மேற்கண்ட எனது நிலைப்பாட்டிலிருந்து மாறும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ இனவாத கட்சிகளுடன் மதச்சார்பற்ற அரசியல்வாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் இணைந்து அல்லது ஆதரவளித்து முஸ்லிம்களுக்கு செய்த துரோகம், இந்திய முஸ்லிம்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு நிரந்தர தீர்வுதான் என்ன என்பது குறித்து என்னை ஆய்வு செய்யத் தூண்டியது. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஒரு நிரந்தர தீர்வு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கட்டுரையை படிக்கும் நீங்கள் இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு நிரத்தர தீர்வு என்ன என்பதை அறிந்து கொள்வீர்கள்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய முஸ்லிம்களின் நிலை:

இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின்பு இன்றுவரையுள்ள எந்த ஒரு அரசும் இந்திய முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை வழங்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொண்டதில்லை என்பதே உண்மை. இந்திய பாகிஸ்தான் பரிவினையின்போது முஹம்மது அலி ஜின்னா மாத்திரம் பிரிவினைக்கு ஆதரவு அளித்தபோது, மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்களுடன் கைகோர்த்து கொண்டார்கள். தனிமனிதராக நின்ற முஹம்மது அலி ஜின்னா, தான் நினைத்ததைச் சாதித்துக் கொண்டார். ஆனால் இந்திய மக்களுடன் கைகோர்த்த மௌலானா அபுல்கலாம் ஆஸாத், ஜாஹிர் ஹுஸைன், பக்ருதீன் அலி அஹமது போன்ற முஸ்லிம் பெரும் புள்ளிகள் உள்ளடங்கிய இந்திய முஸ்லிம் சமுதாயம் சாதித்தது என்ன என்பதை இன்றைக்கும் நாம் கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம்.

இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 10 கோடியாக இருந்தது. முஹம்மது அலி ஜின்னாவின் பின்னால் சென்ற மூன்றுகோடி முஸ்லிம்கள் தங்களது அடிப்படை உரிமைகளை(குறிப்பாக தங்களது வணக்க வழிபாட்டு உரிமைகளைப்) பெற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பிரிவினையை எதிர்த்து அல்லது பரிவினைக்கு ஆதரவு அளிக்காமல் இந்தியாவிலேயே வாழ்ந்து வரும் எஞ்சியுள்ள முஸ்லிம்கள் மிரட்டப்படுவதோடு மட்டுமில்லாமல், மூன்றாம்தர குடிமக்களாகவும் நடத்தப்படுகிறார்கள். மதச்சார்பின்மை காற்றோடு பறக்கவிடப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 9 கோடிபேரை மக்கள் தொகையாக கொண்டிருந்த தலித் இயக்கம் டாக்டர் அம்பேத்கார் என்ற தனி மனிதரின் தலைமையில் 150 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 7 கோடிபேரை மக்கள் தொகையாக் கொண்டிருந்த முஸ்லிம் இயக்கங்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமல் தலைகுனிவைச் சந்தித்தது. முஸ்லிம்கள் மாத்திரம் ஒரே தலைமையின்கீழ் ஒரு தனிக்கட்சியில் நின்று தேர்தலைச் சந்தித்து இருந்தால் அநேகமான தொகுதிகளில் நாம் நிச்சயமாக வெற்றி பெற்றிருப்போம். ஆனால் மதச்சார்பற்ற மற்ற கட்சிகளுக்கு கொடி தூக்கியதன் விளைவு கட்சிகள் வெற்றிபெற்றதேத் தவிர, அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பதே உண்மை நிலையாக இருந்தது.

இந்தியர்களுடன் தோளோடு தோள் நின்ற காஷ்மீரத்து சிங்கம் ஷேக்அப்துல்லா தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வடகோடியாம் காஷ்மீரில் கைது செய்யப்பட்டு தென்கோடியாம் தமிழகத்தில் உள்ள கோடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார். ஹைதராபாத் நிஜாம், ஆற்காடு நவாப் போன்றவர்கள் ராஜ பரம்பரையைத் துறந்து, இந்திய ராணுவத்திற்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள். முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு, சீக்கியர்கள் மற்றும் கூர்க்கா போன்றவர்களுக்கு மாத்திரம் ராணுவத்தில் தனி மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களுக்கென்று ராணுவத்தில் தனிப்பிரிவுகளே உருவாக்கப்பட்டன. கேரள முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தப்பட்டு ஓரங்கட்டப்பட்டனர். மராத்திய மாநில முஸ்லிம்கள் குடிசைகளில் தஞ்சம் புகுந்தனர். உத்திரபிரதேசம், பீகார் மற்றும் குஜராத் மாநில முஸ்லிம்கள் அனைவரும் மதக்கலவரங்களால் மிரட்டப்பட்டு, முடமாக்கப்பட்டனர். இன்னும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தலைதூக்க முடியாத அளவுக்கு மிரட்டப்பட்ட நிலையிலேயே தங்களது வாழ்வைத் தொடர்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் மாற்றமாக கேரள மாநில முஸ்லிம்களின் நிலை இருக்கின்றது. இதற்கு காரணம் கேரள மாநிலத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், தேர்தல் நேரங்களில் மற்ற அரசியல் கட்சிகள் முஸ்லிம்களைத் தேடி ஓடிவருகின்றன.

1984 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகு டெல்லியில் நடந்த கலவரத்தில் ஏரத்தாள 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வெறும் 2கோடி மட்டுமே மக்கள் தொகையினைக் கொண்ட சீக்கியர்களின் அரசியில் பிரிவான அகாலிதளம் நீதிமன்றத்தில் போராடி கலவரத்தில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொடுத்ததோடு மட்டுமின்றி முன்னாள் மத்திய அமைச்சரான பி. சி. சுக்லா மற்றும் அவரது ஆதரவாளர்களையும் சிறையில் கம்பி எண்ண வைத்தது. பீவண்டி, மீரட், பகல்பூர், மும்பை, லக்னோ, டெல்லி, குஜராத், கோயம்புத்தூர் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்களில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் சொத்துக்கள் சூரையாடப்பட்டன. அரசு பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காதது மட்டுமில்லாமல், மேற்கூறப்பட்ட இடங்களில் நடைபெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களில் ஒருவர் கூட இதுவரை தண்டிக்கப்படவேயில்லை என்பதே உண்மை நிலை.


மகாத்மா காந்தி பிராமணர்களால் கொல்லப்பட்டார்.

இந்திரா காந்தி சீக்கியர்களால் கொல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழ்பேசும் இந்துக்களால் கொல்லப்பட்டார்.


அவர்களெல்லாம் இன்றைக்கு தேசாபிமானிகளாக கருதப்படுகிறார்கள். ஆனால் எந்த பாவமும் அறியாத எந்த குற்றமும் செய்யாத, இந்திய அரசியல் பிரிவுச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டவர்களாகிய நாம் தேசிய எதிரிகளாக முத்திரைக் குத்தப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் நிலைமைகளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பாகிஸ்தானோடு எந்;த சம்பந்தமும் இல்லாத ஒன்றுமறியாத அப்பாவி முஸ்லிம்களை தண்டிக்கின்றன. இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் செய்யும் செயல்பாட்டுக்கு இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எப்படி பொறுப்பாவார்கள்?

இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை

இன்றைய இந்திய முஸ்லிம்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் காரணமாக முற்றிலும் வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கென இருந்த அடிப்படை உரிமைகளைக் கூட கேட்டுப் பெறத் தகுதியில்லாத அளவுக்கு வலுவிழந்து போவதற்கு முன்னால், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியில் கீழ் ஒன்றுபடுவது இன்றைய சூழ்நிலையில் மிக மிக அவசியம். மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும் மதவாத கட்சிகளின் வளர்ச்சியை முறியடிக்க வேண்டுமெனில், இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு அணியின் கீழ் ஒன்றுபடுவது அவசியம். ஆனால் நாம் ஒன்றுபடுவதற்கு பதிலாக, சிறு சிறு கூட்டங்களாக பிரிந்துபோய், சிதறுண்டு கிடக்கும் மதவாத கட்சிகள் ஒன்றுபட்டு செயல்பட உதவிக்கொண்டிருக்கிறோம். இன்னும் காலம் கடந்து செல்லும் முன்பு இந்தியாவின் இன்றைய சூழ்நிலையிலாவது முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியின் கீழ் ஒன்று படுவோம்.

சிறுபான்மையினமான முஸ்லிம்களின் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து அரசியில் கட்சிகளும் முஸ்லிம்களுக்கான நலன் தரும் திட்டங்களை தேர்தல் கால வாக்குறுதிகளாக வழங்குகின்றன. ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் அளித்த வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற பின்பு, முஸ்லிம்களின் முதுகில் குத்தும் வேலையே தொடர்ந்து செய்து வருகின்றன இந்திய அரசியில் கட்சிகள். தேர்தலுக்கு முன்பு முஸ்லிம்களின் நலன் காக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றமோ அல்லது நாடாளுமன்றமோ சென்ற பிறகு தங்களது சொந்த நலனுக்கு பயன்தரும் திட்டங்களுக்கு மாத்திரமே தலைசாய்க்கிறார்கள். இவைகளையெல்லாம் சிந்தித்து கொண்டிருப்பதைவிட நமக்கென்று இந்திய அளவில் ஒரு தனி அமைப்பை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதே சாலச் சிறந்தது.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய பெயர் தாங்கிய அரசியல் அமைப்புகள் பிற அரசியில் கட்சிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி முஸ்லிம் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற ஒன்றிரண்டு தொகுதிகளை பெற்றுக்கொள்கின்றன. தொகுதிகளை ஒதுக்கும் அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஏதோ ஒரு நல்ல காரியம் செய்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் முஸ்லிம்களுக்கு தொகுதிகளை வழங்கும் இக்கட்சிகள் செய்யும் இச்செயல் முஸ்லிம்களுக்கு செய்யும் நன்மையான காரியமா என்றால் இல்லை. முஸ்லிம்கள் நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்கிற காரணத்தால் வழங்கப்பட்டதேத் தவிர, முஸ்லிம்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை.

எந்த அரசியில் கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை அவர் முஸ்லிம் என்கிற காரணத்தால் மாத்திரம் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு நம் வாக்குகளை அளித்து வெற்றிபெறச் செய்வோம் எனில், சட்டமன்றமோ, நாடாளுமன்றமோ செல்லும் இதுபோன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு கஷ்டமான சூழ்நிலை என்றால் தாம் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து அல்லது பதவியிலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்கிற பயத்தின் காரணத்தால் முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பமுடியாத சூழ்நிலை. இதுபோன்ற மக்கள் பிரதிநிதிகளை சட்டசபைக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தேர்ந்தெடுத்து அனுப்புவதால் உள்ள பயன்தான் என்ன? இதுபோன்ற முஸ்லிம் அரசியில்வாதிகள் அவைகளில் பேச அனுமதிக்காத, தம்மை மதிக்காத அரசியல் கட்சிகளில் ஏன் இருக்கிறார்கள்? இதுபோன்ற பிரதிநிதிகள் இருப்பதும் இல்லாமலிருப்பதும் ஒன்றே. அதில் எந்த வித்தியாசமும் இல்லை.

முஸ்லிம்களின் வாக்கு வங்கிகள் அதிகமாக இருக்கின்ற தொகுதிகளில், எல்லா அரசியில் கட்சிகளும் முஸ்லிம் பெயர்தாங்கிகளை வேட்பாளர்களாக நிறுத்தும். இவ்வாறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துவதால் முஸ்லிம்களுக்கு ஏதேனும் பயன் உண்டா என்றால் இல்லை. முஸ்லிம் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டால் மாத்திரமே இத்தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்திருக்கும் அவர்கள் தங்களது சுயநலம் கருதி இச்செயலை செய்கிறார்களேத் தவிர, வேறில்லை. முஸ்லிம்கள் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என கண்கூடாகத்தெரியும் இது போன்ற தொகுதிகளில் முஸ்லிம்கள் அனவைரும் ஒன்றுகூடி ஒரு பொது வேட்பாளரை ஏன் நிறுத்தக்கூடாது?

எனதருமை முஸ்லிம்களே! மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி ஓரங்கட்டியதேத் தவிர, வேறு சாதித்தது என்ன? முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டாலும், சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆதரவு யாருக்காக? எதற்காக? என்பது இவ்வாறு ஆதரவு அளிப்பவர்களுக்கே வெளிச்சம். திறந்த மனதுடன், சார்பற்ற நிலையில் உங்கள் அறிவாற்றலைப் பயன்படுத்தி இந்திய முஸ்லிம்களின் இன்றைய நிலை குறித்து சற்றே சிந்தனை செய்து பாருங்கள். இந்திய முஸ்லிம்களின் பிரச்னைகளுக்கு உண்டான தீர்வு தெளிவாகக் தெரியவரும்.

1.இதற்கான தீர்வுதான் என்ன?

2.இந்த தவறான அச்சுறுத்தலுக்கான தீர்வுதான் என்ன?

3.நாம் இழந்த உரிமைகளை மீண்டும் திரும்பப் பெறுவது எப்படி?


இந்திய மக்கள் தொகையில் 30கோடி பேர் முஸ்லிம்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வெறும் 10க்கு மேல் ஒருபோதும் இருந்ததில்லையே. ஏன்?

இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு கட்சிக்கு மாத்திரம் வாக்களிப்போம் எனில், நிச்சயமாக இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் நாம் நமக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிந்து, இந்திய அரசியல் கட்சிகளில் பல கட்சிகளுக்கும் வாக்களிப்பதால் நம்முடைய வாக்கு வங்கி சிதறடிக்கப்பட்டு, நமக்குள்ளேயே வலுவிழந்து போகிறோம். இதற்கு உதாரணமாக சீக்கியர்களை (ஒருசில தனி நபர்களைத் தவிர) எடுத்துக் கொள்வோம். இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதம் மாத்திரம் இருக்கும் சீக்கியர்கள், இந்திய அரசியலில் கோலோச்ச முடியும் என்றால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் இருக்கும் நாம் ஏன் மற்றவர்களிடம் மண்டியிட வேண்டும்? இது ஏனென்றால் நாம் நமக்குள்ளேயே ஒற்றமையின்றி பல பிரிவுகளாக பிரிந்து, தலா 1 சதவீதம் வீதம் இந்திய அரசியல் கட்சிகள் 25க்கும் வாக்களிப்பதால் இந்திய மக்கள் தொகையில் 25 சதவிகிதம் உள்ள நம்முடைய பலம் 1 சதவிகிதமாக வலுவிழந்து விடுகிறது. ஏதேனும் ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் நம்முடைய பலம் வெறும் 1 சதவிகிதமாகவே பிரதிபலிக்கிறது. இந்திய மக்கள்தொகையில் 25 சதவீதம் இருக்கும் நம்முடைய பலம் ஆட்சி மன்றம் என்று வரும்போது வெறும் 1 சதவிகிதம் மட்டும்தான் பிரதிபலிக்கப்படுகிறது என்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்நிலையைக் காணும் முழு உலகமும் நம்மைப் பார்த்து நகைப்பது நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. மதச்சார்பற்ற இந்திய அரசியல் கட்சிகளின் பிரித்தாளும் சூட்சிக்கு முஸ்லிம்களாகிய நாம் பலிகிடாவாக மாறிக் கொண்டிருக்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம், தமிழகத்தில் உள்ள திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் தங்களது ஆதரவு இன்றி மத்தியில் எந்த ஒரு ஆட்சியும் அமைய முடியாது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. காங்கிரஸும், பிஜேபியும், மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமெனில் மேற்கூறப்பட்ட மாநில கட்சிகளின் காலடியில் வந்து விழுந்து கிடக்கின்றன. தெலுங்கு தேசம், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அகாலிதளம் உள்ளிட்ட பல மாநில கட்சிகள் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுக்கும் முன்னால் தங்களுக்குத் தேவையானவைகள் கொடுக்கப்பட வேண்டும், இல்லையெனில் ஆதரவு திரும்பப் பெறப்படும் என்பதை நிபந்தனையாக வைத்து தாங்கள் நினைப்பதைச் சாதித்துக் கொள்கின்றன. இதற்கு காரணம் நாடாளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை. இதே நிலையை நாம் மேற்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியும். நமக்கென்று ஒரு தனி அமைப்பு கண்டு, அந்த அமைப்பின் மூலமாக மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பினால் நாமும் நம்முடைய முக்கிய பிரச்னைகளுக்கான தீர்;வுகளை பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக பாதுகாப்பு, சமநீதி, சட்ட உரிமை, இடஒதுக்கீடு, கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண உதவி போன்ற பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

தமிழகத்தில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நடத்தப்பட்ட வகுப்பு கலவரத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் இந்து தீவரவாதிகளால் கொல்லப்பட்டனர். அக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் எவருக்கும் இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எந்த ஒரு உதவித் தொகையும் வழங்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னால் அதே கோவை மாநகரில் நடைபெற்ற வகுப்புக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் வீதம் அரசுத் தரப்பிலிருந்து உதவித் தொகை வழங்கப்பட்டது. ஏன் இந்த பாரபட்சம்? நம்முடைய உரிமையை சட்டசபையில் எடுத்துரைக்க சரியான பிரதிநிதித்துவம் நம்மிடையே இல்லாததே காரணம். ஆனால் அதேசமயம் இந்து மக்களின் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கையை சட்டசபையில் எடுத்துரைத்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென்றால், அரசுக்கு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படும் என்ற எச்சரிக்கை வேறு. ஆட்சி கவிந்துவிடும் என்று அச்சம் கொண்ட அரசு, இந்துக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 1 இலட்சம் என உதவித் தொகை வழங்கியது.

இந்திய முஸ்லிம்களுக்கென தனியாக ஒரு அரசியல் அமைப்பு காண்பது இவ்வேளையில் மிகவும் அவசியமாகிறது. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு இல்லையென்றால், மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி அமைக்க முடியாது என்கிற சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். இந்நிலை உருவாக்கப்பட முற்றிலும் அவசியம் முஸ்லிம்களிடையே ஒற்றுமை. சமுதாய நலனை கருத்தில் கொண்டு நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதியளிக்கும் கட்சிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்க நம்முடைய ஆதரவை வழங்கலாம். அல்லது நமக்கென்று ஒரு தனி அரசியல் அமைப்பு இருந்திருந்தால், இன்றைக்கு முஸ்லிம்களாகிய நாம் அனுபவிக்கும்; இந்த சித்திவதைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. நாட்டை ஆள வேண்டுமெனில் முஸ்லிம்களின் ஆதரவு வேண்டும் என்ற நோக்கத்திற்காவது, ஆளும் கட்சிகள் நம்மை சிறப்பாக நடத்தியிருக்கும்.

இழைக்கப்படும் கொடுமைகளையும், நடத்தப்படும் சித்திரவதைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன? இதற்கான சரியான தீர்வு இல்லையா? அல்லது நேரான வழிகாட்ட சரியான தலைமை இல்லையா? மத்திய மற்றும் மாநில அரசை எதிர்த்து நடத்தப்படும் கண்டன ஊர்வலங்களும், கோரிக்கைப் பேரணிகளும் பொன்னான நம் நேரத்தை வீணடிக்கும் செயல்களாகும். நாம் நடத்தும் கோரிக்கைப் பேரணிகளும் - கண்டன ஊர்வலங்களும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறும். எப்போதும்போல் முஸ்லிம்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்;டப்படுவர் என்பது நிச்சயம்.

பிரச்னைகளுக்கான தீர்வும் அடுத்த கட்ட நடவடிக்கையும்

நாம், நம்முடைய உரிமைகளைப் பெற வேண்டும். அதற்குரிய சரியான வழிமுறை என்ன? இக்கேள்விக்கான விடையை கண்டறிய பல நாட்களாக சிந்தித்து, ஆய்வு செய்து, அறிந்த விதத்திpல் கிடைத்த தீர்வுகள் இரண்டுதான்.

1. அறிவு

2. ஆயுதம்


ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்ற வரலாறு உலகில் ஒரு சில நாடுகளில் சாத்தியப்பட்டிருக்கலாம். ஆனால் ஆயுதம் ஏந்தியவர்கள் ஆயுதத்தாலேயே அழிவார்கள் என்பது நிச்சயம். இன்றைய சூழ்நிலையில் ஆயுதம் ஏந்தி போராடி கிடைக்க வேண்டிய உரிமையைப் பெற்றுக் கொள்வது என்பது சாத்தியக்கூறானது அல்ல. ஆசியாவிலேயே அதிநவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த சீக்கியர்கள், ஆயுதப் போராட்டத்தில் தோல்வியடைந்ததை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இன்றைக்கு அவர்கள் புத்திசாலித்தனமாக அறிவு என்னும் ஆயுதம் ஏந்தியுள்ளார்கள். பிளவுபட்டிருந்த சீக்கியர்கள் அனைவரும் ஒன்றிணைந்தார்கள். தமக்கென ஒரு அரசியல் இயக்கம் கண்டார்கள். தமக்காக சட்டசபையிலும், நாடாளு மன்றத்திலும் வாதாடக்கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். எல்லா பிரதான அரசியல் கட்சிகளையும் தங்கள் பின்னால் ஓடிவரச் செய்தார்கள். ஆயுதங்களால் வெல்ல முடியாத காரியங்களை உயர் மதிநுட்பத்தால் வெற்றி கொள்கிறார்கள்.

மஹாராஷ்டிர மாநிலத்தில் மதவாதம் பேசித் திரிந்த பால் தாக்கரே போன்றவர்கள் பல பேர் கொல்லப்பட காரணமாக இருந்தாலும், மத்திய மாநில அரசுகள் பால் தாக்கரே மீது கைவைக்க தயங்குகின்றன. காரணம் பால் தாக்கரே போன்றோர் அறிவு என்றும் ஆயுதம் ஏந்தி மராத்திய மண்ணின் மைந்தர்களை ஒன்றிணைத்து, பல சட்டசபை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெற்றுக் கொண்டு, கோரிக்கைகள் மூலம் இவ்வுலகில் அவர்களுக்குத் தேவையானதை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஆயதம் ஏந்தி போராடிய அல்லது போராடிக் கொண்டிருக்கிற மற்ற அமைப்புகள் எல்லாம் மறைந்து கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு. உதாரணத்திற்கு காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக் குழு பல்வேறு பிரிவுகளாக பிளவுண்டு போயின. தவிர டீழுனுயுடுயுNனுஇ நாகலாந்து, ருடுகுயு போன்ற பல அமைப்புகள் இருந்த அடையாளமே தெரியாமல் மறைந்து போயின. ஆயுதம் ஏந்தி போராடிய போராட்டக் குழுக்களின் நிலை இது. ஆயுதம் ஏந்திய காஷ்மீர் போராட்டக்குழுக்களை இல்லாமல் ஆக்கியதுபோல் முஸ்லிம்களாகிய நம்மையும் இல்லாமல் ஆக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் மதவாத கட்சிகள் முஸ்லிம்களை ஆயுதம் ஏந்தத் தூண்டுகின்றன. ஆனால் அறிவு என்னும் ஆயுதம் ஏந்துவது தான் சரியான தீர்வு.

இந்திய முஸ்லிம்கள் அனவைரும் ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைவது. நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பது. கண்ட அரசியல் அமைப்பின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு நமக்கென நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங்களுக்கும் என பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பது. இறைவனின் நாட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் முயற்சியில் மேற்குறிப்பிட்ட செயல்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் இந்திய முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் நிச்சயம்.

இந்தியாவில் முஸ்லிம்களின் பலம்

மாநிலத்திற்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர் என்று கணக்கிட்டால் கூட இந்தியாவில் உள்ள 30 மாநிலங்களில் 150 நாடாளுமன்ற உறுப்பினர்களை முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க முடியும். இது பற்றி ஆழ்ந்து சிந்தித்து தலைமையேற்று நடைமுறைப்படுத்தி நடத்திச் செல்ல யார் தயாராக இருக்கிறார்கள்?

இந்திய முஸ்லிம்களுக்கு தமிழக முஸ்லிம்கள் வழிகாட்டட்டும்

இந்திய முஸ்லிம்களை ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்ல முன்னுதாரணமாக தமிழகம் வழிகாட்டட்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இஸ்லாமிய பொதுநல இயக்கங்கள் தவறான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருப்பதோடு ஒருவர் மீது ஒருவர் தேவையற்ற அநாகரீகமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்களாக இருக்கின்றனர். முஸ்லிம்களுக்கு முற்றிலும் எதிரியாக இருக்கக்கூடிய சில அரசியல் இயக்கங்களோடு கூட்டுச்சேர்ந்து கொண்டு, அவர்களின் கைப்பாவையாக செயல்படுவதுடன், எந்தவித பயனும் இல்லாத வழியில் மக்களிடையே பிரபலமடைய துடிக்கின்றனர். இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் முஸ்லிம்களிடையே எண்ணற்ற பிரிவுகளும், தேவையில்லா அமைப்புகளும் உள்ளன. இதன் காரணத்தால் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி உடைந்து, வலுவிழந்து நிற்கிறது. இன்ஷா அல்லாஹ் இந்த இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் நாடும் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் இஸ்லாமியர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது காலத்தின் கட்டாயமும் அவசியமுமாகும்.

தமிழக முஸ்லிம்களின் பலம்

தமிழகத்தின் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கொண்ட நன்னிலம் சட்டமன்றத் தொகுதி தவிர, ஏரத்தாள 60க்கும் மேற்பட்டத் தொகுதிகள் 80ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை கொண்டவை. நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் 1லட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் இருந்தாலும் இன்றுவரை அந்த தொகுதியில் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளரோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சியோ தமிழகத்திற்காக இதுவரை நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவேயில்லை என்பது ஆச்சரியகரமான, அதே சமயம் வருத்தத்திற்குரிய செய்தியாகும். தமிழகத்தில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகள் முப்பதுக்கும் அதிகமாக இருக்கின்றது. அவைகளில் சிலவற்றை இங்கே காணலாம்:


1. நன்னிலம்
2. கடலாடி
3. கோயம்புத்தூர் மேற்கு
4. மதுரை மத்திய தொகுதி
5. திருச்சி
6. சேலம்
7. அரவக்குறிச்சி
8. குடியாத்தம்
9. ராணிப்பேட்டை
10. ஆற்காடு
11. சென்னை கடற்கரை
12. சேப்பாக்கம்
13. ஆயிரம் விளக்கு
14. திருவல்லிக்கேணி
15. எழும்பூர்
16. சென்னை பூங்காநகர்
17. இராயபுரம்
18. திண்டுக்கல்
19. நத்தம்
20. பெரியகுளம்
21. பாளையங்கோட்டை
22. திருச்செந்தூர்


இதுதவிர, தமிழகத்தில் 30 சட்டமன்றத் தொகுதிகள் எண்பதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. 23 சட்டமன்றத் தொகுதிகள் அறுபதாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை. தமிழக முஸ்லிம்கள் அனவைரும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைந்து நமக்கு நாமே உருவாக்கும் அரசியல் அமைப்புக்கு வாக்களிப்போம் எனில் தமிழகத்தில் மாத்திரம் 100 சட்டமன்றத் தொகுதிகளிலும், 16 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் காலடியில் விழ வைப்பதுடன், தமிழக அரசியலைப் பொறுத்தவரை நாம் வகுத்ததுதான் சட்டம் என்கிற நிலையையும் உருவாக்க முடியும்.

தமிழகத்தின் 6 மாநகராட்சிகளில் முஸ்லிம்களே மேயர்கள் என்பதையும் உறுதியாகக் கொள்ளலாம். சென்னையைத் தவிர தமிழகத்தில் மற்றுமுள்ள மாநகராட்சிகளில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் பெறுபவரே மேயர். மதுரை, திருச்சி மற்றும் கோவை மாநகராட்சிகள் 3 இலட்சம் முஸ்லிம் வாக்களர்களைக் கொண்டவை. சேலம் மற்றும் நெல்லை மாநகாராட்சிகள் இரண்டரை லட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டவை.

சென்னை மாநகராட்சி மாத்திரம் 20 இலட்சம் முஸ்லிம் வாக்காளர்களைக் கொண்டிருக்கிறது. தற்போதும், இதற்கு முன்னாலும், இப்போதும் மேயராக வெற்றிபெற்றிருக்கும் திரு. ஸ்டாலினுக்கு கிடைத்த வாக்குகள் 16 லட்சம் மாத்திரம்தான். சென்iனை மாநகராட்சிக்கு உட்பட்ட 186 பள்ளிவாசல்களைச் சார்ந்த ஜமாத்துக்கள் அனைத்தும் முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு மட்டுமே எல்லா முஸ்லிம்களும் வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள் எனில், 18 லட்சம் ஓட்டுக்களை ஒட்டுமொத்தமாகப் பெற்று மேயராக வெற்றி பெறக்கூடியவர் முஸ்லிம் வேட்பாளராகவே இருப்பார். இந்நிலை உருவாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவதைத் தவிர, மிகக் கடினமான பணிகள் செய்ய வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை.

சென்னையின் மேயர் ஒரு முஸ்லிம் என்றால் - அந்த மேயரால் அரசுத் திட்டங்களை மாற்றியமைக்க முடியாதா என்ன? சென்னை மாநகரில் உள்ள 14 சட்டமன்றத் தொகுதிகளில் ஏறத்தாழ 20 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் 10 சதவீதம் வாக்காளர்கள் வேறு அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்தாலும், மீதமுள்ள 18லட்சம் முஸ்லிம்களின் வாக்கு முஸ்லிம் வேட்பாளருக்கே கிடைக்கும். நெல்லை, கோவை, திருச்சி, சேலம் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் மேயர்களாக வெற்றிபெற்றுள்ளவர்கள் அனைவரும் சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகளை பெற்றவர்களே. ஆனால் குறிப்பிடப்பட்ட மாகராட்சிகளில் முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கையோ இரண்டு லட்சத்திற்கும் அதிகம். இந்த தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமது ஒட்டு மொத்த வாக்குகளையும் ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கு அளிப்பார்கள் எனில், தமிழகத்தில் உள்ள 6 மாநகராட்சிகளிலும் முஸ்லிம்களே மேயர்கள் என்பதை உறுதியாகக் கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ் அந்த நாள் விரைவில் வரும்.

தம்ழக சட்டசபை தொகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து தமது ஒட்டு மொத்த வாக்குகளையும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே அளிப்பார்கள் எனில், தமிழக சட்சடசபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் முஸ்லிம்களே என்கிற நிலை ஏற்படும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட முடியாது என்கிற நிலையை தமிழக சட்டசபையிலும் உருவாக்கமுடியும். தமிழகத்தில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா என இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள சட்டசபைகளிலும் இந்நிலையே உருவாகும். இதே நிலை தொடருமெனில் நாடாளுமன்றத்திலும் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெரும்பான்மை நிலைக்கு உயரும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 400 முதல் 800 பள்ளிவாயில்களை ஒன்றிணைப்பது மிகவும் எளிதான காரியம். தமிழகத்தில் உள்ள 8000 பள்ளிவாயில்களைச் சார்ந்த ஒன்றரை கோடி முஸ்லிம்களும் ஒரு பொது நலனுக்காக ஒன்றிணைவார்கள் எனில், நாம் நினைக்கும் எதையும் சாதிப்பது எளிது என்பதை முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். இது நேர்த்தியான, அதேசமயம் யாருக்கும் எந்தவித ஆபத்தும் இல்லாத அமைதியான முடிவு என்பதையும் முஸ்லிம்கள் அனைவரும் உணர வேண்டும். தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்கு இதைத்தவிர ஒரு சரியான தீர்வு இல்லையென்றே சொல்ல வேண்டும். அரசியல் செல்வாக்கு மற்றும் ஆட்சி அதிகாரம் இன்றி இந்த பூமியில் நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பது மட்டும் உறுதி.

தமிழகத்தில் மட்டுமில்லை இந்தியாவில் உள்ள சில அரசியல் கட்சிகள் தங்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்று பிரகடணப்படுத்திக் கொள்கின்றன. இதுபோன்றவர்களே நம்ப வேண்டிய அவசியமே இல்லை. அப்படியே நம்பிக்கை வைத்தாலும் நமக்கென்று ஒரு அரசியல் அமைப்பு இருக்கும்போது, இதுபோன்ற அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுபோன்ற பிற அரசியல் கட்சிகளுக்காக கொடி தூக்கி அவர்களை வெற்றிபெற செய்ய வேண்டுமா? அவர்கள் வெற்றி பெற்று ஆட்சிபீடம் ஏறிய பின்பு நம்முடைய அடிப்படை உரிமைகளுக்காக அவர்களிடம் கையேந்தி நிற்க வேண்டிய நிலை தேவைதானா? தேர்தல் காலங்களில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோமே. ஏன்? முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளருக்கே வாக்களிக்கட்டும். முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்று வந்த பின்புள்ள நிலைமையை ஆய்ந்தறிந்து, முஸ்லிம்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்களுக்கு நம்முடைய ஆதரவை வழங்கலாம். மானம் மற்றும் சுயமரியாதை ஈமானின் ஒரு பகுதி என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

மரியாதைக்குரிய முஸ்லிம்களே! இக்கட்டுரையை மீண்டும் மீண்டும் படியுங்கள். முஸ்லிம்களுக்கு நன்மை செய்யாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் நம்பாதீர்கள். முஸ்லிம்களே! அனைவரும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைவோம். நமது ஒற்றுமையின் மூலம் நாம் விரும்பியவைகளை உடனடியாகப் பெற முடியும். இந்த முடிவை சிந்தித்து செயல்படுத்துவது முஸ்லிம்களாகிய நம்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைவோம். நம் அன்றாட வாழ்க்கை எளிதாக அமையும். நாம் நமது அடிப்படை உரிமையான இறைவழிபாட்டு உரிமைகளை தங்கு தடையின்றி தொடரலாம். நம் வருங்கால தலைமுறையும் பாதுகாப்பான வாழ்வைத் தொடரும்.

எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! தேர்தலில் நாம் வாக்களிக்காமல் புறக்கணிப்போம் எனில் நஷ்டம் நமக்குத்தான். ஒவ்வொரு வாக்கும் விலைமதிப்பற்றது. நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஏராளமான மாற்றங்களை கொண்டுவரும். அரசை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நம்மில் சிலர் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். அதனால் ஏற்படும் நஷ்டம் நமக்கே! மற்ற அரசியல் கட்சிகள் நம்மை எள்ளி நகையாடுவதுடன், அதிக பயனடைவது அவர்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனதருமை முஸ்லிம் சொந்தங்களே! நமக்கென ஒரு தனி அரசியல் அமைப்பு காண்பதும், அந்த அமைப்பின் மூலம் நமக்காக பாடுபடக்கூடிய முஸ்லிம் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுமே இனி நம்முடைய தலையாய பணியாக இருக்க வேண்டும்.

அரசை எதிர்த்து பேராடுவதும், கண்டண ஊர்வலங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவதும் நிச்சயமாக நம்முடைய பொன்னான நேரத்தை வீணடிப்பதாகும். இதுபோன்ற செயல்களை செய்வதால் நாம் கேவலமான முறையில் ஊதாசீனப்படுத்தப்பட்டு, ஓரங்கட்டப்படுவோம் என்பது உறுதி. தேவையற்ற கண்டன ஊர்வலங்கள், போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் போன்றவை நம்முடைய நோக்கத்தை திசை திருப்பிவிடும். முஸ்லிம்களை ஒன்றிணைப்பது மாத்திரம் நம்முடைய பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். நாளைய உலகம் நம் கையில் என்பதை தெளிவாக தெரிந்த நாம், மரணித்த பிணம் போல் நடமாட வேண்டுமா?

நாம் நம்முடைய குறிக்கோளில் தெளிவாக இருப்போம். அனைத்து அரசியல் கட்சிகளையும் நம் பின்னால் கைகட்டி நிற்க வைப்போம். அமைதியாக நாம் நம்முடைய குறிக்கோளை எட்டுவோம். நமது உறுதிமொழி நம் வருங்கால தலைமுறையின் வாழ்வுரிமைக்கு அடிப்படையாக அமையட்டும். எந்த காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஒற்றுமை என்னும் அடிப்படை குறிக்கோளை விpட்டு நம் கவனம் சிதறாமல் இருக்கட்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் இதற்கு அருள் புரியட்டும்!

குறிப்பு: இக்கட்டுரை பல வருடங்களுக்கு முன் மின்னஞ்சல்களில் சுழல விடப்பட்டதாகும் அதன் சாரம்சத்தை இங்கு தமிழாக்கம் செய்து தந்துள்ளோம்.

மொழிமாற்ற உதவி : சகோ.அபு இஸாரா

நன்றிங்க!

Wednesday, April 11, 2007

பாரம்பர்யச் சின்னம்.

ராமர் பாலம் இடிப்பை தடுக்க பாஜக போராட்டம்

ஏப்ரல் 11,2007

சென்னை: சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிப்பதை தடுக்க மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவோம் என பாரதீய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

ராமர் பாலம் பாதுகாப்பு இயக்கம் சார்பில், ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம நடத்தி வருகிறது. இதை இல.கணேசன் மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியாசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கணேசன்,

ராமர் பாலம் தமிழகத்தின் பழமையான பாரம்பரிய சின்னம். உலக நாடுகள் தங்கள் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க கோடிக் கணக்கில் செலவழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகத்தில் அதை அழிக்க முயன்று வருவதை அனுமதி முடியாது .

இந்த திட்டத்தை நிறைவேற்ற பாரதீய ஜனதாவும விரும்புகிறது. ஆனால் இதன் மூலம் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.

இதை தடுக்க தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு ராமர் பால பாதுகாப்பு இயக்கத்திற்கு பாரதீய ஜனதா கட்சி, ஜனதா கட்சி மற்றும் அனைத்து இந்து இயக்கங்களும் முழு ஆதரவு கொடுக்கும் என்றார்.

நன்றிங்க

அடடா...! பாரம்பர்ய சின்னத்தைப் பாதுகாப்பது பத்தி இவங்கெல்லாம் பேசலாமா? பாரம்பர்ய சின்னமும் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமுமாகிய பாபர் மஸ்ஜிதைக் காக்கவும் போராடுவீங்களா சாமி?

Sunday, April 08, 2007

கேடிகளின் சிடி

தேர்தல் பிரச்சார ஒலிவட்டு: பாஜக தடைசெய்யப்படுமா?

ஞாயிறு, 08 ஏப்ரல் 2007

சர்ச்சைக்குரிய தேர்தல் பிரசார ஒலிவட்டு (CD) தொடர்பாக பாரதீய ஜனதா கட்சி மீது தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்து உள்ளது. மேலும் கட்சியை ஏன் தடை செய்யக்கூடாது என்று கேட்டு அது விளக்கம் கோரி இருக்கிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நிலையில், பாரதீய ஜனதா கட்சி, தேர்தல் பிரசாரத்தின் போது ஒலிவட்டு ஒன்றை வெளியிட்டது. இதை மூத்த தலைவர் லால்ஜி தாண்டன் வெளியிட்டார்.

அந்த ஒலிவட்டில் கோத்ரா ரெயில் எரிப்பு, பாபர் மசூதி இடிப்பு போன்ற காட்சிகளும், முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளும், இந்துத்துவா கருத்துகளும் இடம் பெற்று இருந்தன. இது பற்றி காங்கிரஸ் கட்சி, தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தது. தேர்தல் பிரசாரத்தின் போது, மதவாதத்தை தூண்டுவதாக, பாரதீய ஜனதா மீது, காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

ஜன்மோர்ச்சா கட்சித்தலைவர் வி.பி. சிங்கும், தலைமை தேர்தல் கமிஷனர் கோபால் சாமியை சந்தித்து புகார் கொடுத்தார். அதில், பாரதீய ஜனதா கட்சியை தடை செய்யவேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த புகார் மனுக்களை தேர்தல் ஆணையம் பரிசீலித்தது. இதுபற்றி தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாரதீய ஜனதா கட்சியின் தலைமைக்கு, முறைப்படி நோட்டீசு அனுப்பி வைக்கப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது தேர்தல் ஆணையம் போலீசில் புகார் கொடுக்கும்'' என்றார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நிருபர்களிடம் கூறியதாவது:

உத்தரபிரதேச தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜனதா கட்சி வெளியிட்ட சி.டி. ஆட்சேபகரமானது. அதில் உள்ள காட்சிகள், பேச்சுக்கள், மதவாதத்தை தூண்டுவதாக அமைந்து இருக்கிறது. பாரதீய ஜனதாவின் உண்மையான முகம் அதில் வெளியாகி இருக்கிறது.

பாரதீய ஜனதாகட்சியின் அங்கீகாரத்தை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பா.ஜனதா கட்சிக்கு அரசியல் அங்கீகாரம் கொடுக்க கூடாது. உத்தரபிரதேச தேர்தலில், அந்த கட்சி போட்டியிட தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு சிங்வி கூறினார்.

இது குறித்து பா.ஜனதா விளக்கம் அளித்து இருக்கிறது. இதுபற்றி, உத்தர பிரதேச பா.ஜனதா தலைவர் கேசரி நாத் திரிபாதி கூறியதாவது:-

பிரச்சினைக்குரிய இந்த சி.டி. தலைவர்களின் கவனத்துக்கு வராமலேயே வெளியாகி இருக்கிறது. இது தலைவர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், அந்த சி.டி. வாபஸ் பெறப்பட்டு விட்டது. இந்த சி.டி.யை வெளியிட்ட மனோஜ் மிஸ்ரா மீது, கட்சி மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இனி அந்த சி.டி. காட்சிகளை, தேர்தல் பிரசாரத்தின் போது பயன் படுத்த மாட்டோம்.

சி.டி. பிரச்சினை குறித்து தேர்தல் கமிஷனிடம் இருந்து எந்த வித நோட்டீசும் இதுவரை வரவில்லை. வந்தால், அதற்கு தகுந்த பதில் கொடுப்போம்.

இவ்வாறு திரிபாதி கூறினார்.

இதற்கிடையே சர்ச்சைக்குரிய சி.டி. தொடர்பாக பாரதீய ஜனதா கட்சிக்கு தலைமை தேர்தல் ஆணையம் நேற்று மதியம் நோட்டீசு அனுப்பியது. அதில் கூறி இருப்பதாவது:-

உத்தரபிரதேச மாநில பா.ஜனதா கட்சி தலைவர் லால்ஜி தாண்டனால் வெளியிடப்பட்ட சி.டி.யில் இடம்பெற்றுள்ள கருத்துக்களும், காட்சிகளும் மாறுபட்ட சமுதாயங்கள் இடையே விரோதத்தையும், வெறுப்பையும் தூண்டும் வகையில் உள்ளது. இதன்மூலம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டு உள்ளது. இதற்காக உங்கள் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?.

இதுபற்றி நாளை (இன்று) மதியம் 3 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பதில் வராத பட்சத்தில், தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் சர்ச்சைக்குரிய சி.டி. தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் மீது போலீசில் புகார் செய்யும்படி உ.பி. மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் நாராயணனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்பேரில் ஹஸ்ரத்கஞ்ச் போலீசில் அவர் உடனடியாக புகார் செய்தார். அதில் மத கலவரத்தை தூண்ட முயன்றதாக பா.ஜனதா அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், உத்தரபிரதேச மாநில தலைவர் லால்ஜி தாண்டன், சி.டி.யில் நடித்தவர், வசனம் எழுதியவர் மற்றும் வெளியீட்டில் தொடர்புடையவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் போலீசார் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்தனர். இச்சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீசுக்கு உரிய காலத்துக்குள் பதில் அளிக்கப்படும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்து உள்ளது.

நன்றிங்க

ஆமா... FIR ன்னா என்னங்க?

Tuesday, April 03, 2007

காந்தியின் பொம்மைகள்.




மெதுவாக கீழறங்கி >>>



>>>



>>>>




>>>>>



>>>>>>




>>>>>>




>>>>>>>






இந்தியா தோல்வியடைந்ததாகத் தெரியவில்லை.

குழுவினருக்கெதிரான ரசிகர்களின் ஆரவாரங்களைக் கேட்கவும் முடியவில்லை.

தோல்வியுறச்செய்யும் காரணிகளையும் ஊடகங்களுக்கு முன் பேச முடியவில்லை.


Can not see India losing.

Can not hear the audience outburst against the team

Can not speak in front of media about the causes of defeat.

Monday, April 02, 2007

தினமலரின் விஷமம்

இந்தியர்களை தேர்வு செய்ய சவுதி அரசு தடை

துபாய் : "இந்தியர் உட்பட எந்த வெளிநாட்டினரையும் வேலைக்கு அமர்த்தக் கூடாது' என 107 நிறுவனங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. அரேபியர்கள் மத்தியில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும், தங்கள் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கவும், மூன்று ஆண்டுகளுக்கு முன், சவுதி அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஒரு நிறுவனம் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்களில் 30 சதவீதம் பேர் சவுதி அரேபியர்களாக இருக்க வேண்டும். ஆனால், பல நிறுவனங்கள் இதைக் கடைப்பிடிக்கவில்லை.இதனால், சொந்த நாட்டவர்களை குறிப்பிட்ட அளவு பணியில் அமர்த்தாத 107 நிறுவனங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்நிறுவனங்கள் இந்தியர் உட்பட எந்த வெளிநாட்டினரையும் வேலைக்கு தேர்வு செய்யக் கூடாது என தெரிவித்துள்ளது.

நன்றிங்க: தினமலர், 01/04/2007

நாலு காசு சம்பாதிக்க வேண்டிய எப்படியெல்லாம் தலைப்பு வைக்கிறாங்க. உள்ளேயுள்ள செய்திக்கும் தலைப்புக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்கா? ''அயல் நாட்டினரை தேர்வு செய்ய சவூதி அரசு தடை'' இதுதாங்க உள்ளே இருக்கிற செய்திக்கு பொருத்தமான தலைப்பு ஆனா நம்ம தெனமலரு சவூதி மேல எப்படியெல்லாம் விஷத்த கக்குது.

''சொந்த நாட்டிலும் படிப்புக்கான வேலைக்கு அரசாங்கத்தில் இட ஒதுக்கீட்டு பிச்சையை எதிர்பார்க்க வேண்டிருக்கு. நம்பி வந்த அரபு நாடுகளும் ''அன்னியரே வெளியேறு!'ன்னு சட்டங்கள் போட்டா பாவி மக்கா ஆங்கிலம் படிக்கிறத ஹராமுன்னு சொல்லாம இருந்தா கொஞ்சமாச்சும் படிச்சு அமெரிக்கா கனடான்னு கிளை தாவி இருக்கலாம்லா"