Wednesday, April 18, 2007

பாஜக எம்.பியின் பித்தலாட்டம்.

மனைவி பாஸ்போர்ட்டில் வேறு பெண் : டில்லி விமான நிலையத்தில் பா.ஜ.க.எம்.பி.கைது

புதுடில்லி : மனைவி பாஸ்போர்ட்டில் வேறு பெண்ணை கனடாவுக்கு அழைத்து செல்ல புதுடில்லி விமான நிலையம் வந்த பா.ஜ.க.எம்பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.எம்பி பாபுபாய் கட்டாரா. இன்று அதிகாலை அவர் ஒரு பெண்ணுடன் புதுடில்லி விமான நிலையம் வந்தார். கூடவே 14 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் வந்தான். இவர்கள் மூவரும் கனடாவில் உள்ள டோரன்டோ நகருக்கு பயணம் செய்ய இருந்தனர். இம்மிகிரேஷன் பிரிவிற்கு அவர்கள் வந்தபோது அந்த பெண்னை தன் மனைவி சாரதாபென் என்று எம்பி கூறினார். இதில் சந்தேகமடைந்த இம்மிகிரேஷன் அதிகாரிகள் துருவி துருவி விசாரித்ததில் அந்த பெண் சாரதாபென் இல்லை என்றும், அவரது உண்மையான பெயர் பரம்ஜித் என்றும் தெரியவந்தது. பரம்ஜித் என்ற பெண்னை தன் மனைவி சாரதாபென் என்று பொய் சொல்லி, போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு கூட்டிச்செல்ல முயன்ற எம்பி பாபுபாய் கட்டாரா போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். அந்த
பெண்னை பாபுபாய் கட்டாரா கனடா கூட்டி செல்வதற்கு ரூ.30 லட்சம் பெற்றதாக தெரிகிறது.

நன்றி: இன்றைய தின மலர், 18,04.2007

ஒரு பொறுப்புள்ள நாடளுமன்ற உறுப்பினரின் யோக்கியதையை பாருங்கள்.

ரூபாய் முப்பது லட்சங்களை வாங்கி கொண்டு தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல பித்தலாட்டம் செய்தவருக்கு எம்பி பதவி வகிக்க தகதியுள்ளவரா?

வலை பதிவு உறுப்பினரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை ஆள் மாறாட்டும் செய்யும் இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே...

19 comments:

VSK said...

இவர் ஒரு பித்தலாட்டக்கார இந்து எனச் சொல்லுங்கள் திரு. முஸ்லீம்.

வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.

இதற்கு பா.ஜ.க. என்ன செய்யும்?

அவர்களா இவரைச் செய்யச் சொன்னார்கள்?

கொஞ்சம் மனசாட்சியுடன் பதிவிடுங்கள்!

இவர் ஒரு காங்கிரஸ்காரராக இருந்தாலும் அதுவும் இந்துக்களுக்கு இழிவே!

மனித நேயத்தைப் போற்றுவோம்.

இவர் செய்தது இந்தியர் எனச் சொல்லும் அனைவருக்கும் இழுக்கு!

அழகப்பன் said...

//இதற்கு பா.ஜ.க. என்ன செய்யும்?

அவர்களா இவரைச் செய்யச் சொன்னார்கள்?

கொஞ்சம் மனசாட்சியுடன் பதிவிடுங்கள்!//

இவர் பித்தலாட்டம் செய்யாமல் ஏதாவது சாதனை செய்திருந்தால் பா.ஜ.க. எம்.பியின் சாதனை என்றுதான் எழுதியிருப்பார்கள். இவர் செய்தது பித்தலாட்டம். எனவே பா.ஜ.க. எம்.பியின் பித்தலாட்டம் என தலைப்பிட்டிருப்பதில் என்ன தவறு கண்டீர்?

சுல்தான் said...

//வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.
இதற்கு பா.ஜ.க. என்ன செய்யும்?//

ஒன்னும் செய்யாது. இது போன்ற தவறிழைப்பர்கள் ஒரு பொறுப்புள்ள நாடாளுமன்ற பதவி வகிக்கத் தகுதியானவர் இல்லை என அந்தக் கட்சிக்கு எண்ணத்தோன்றாது.
அது தேசியக் கட்சியல்லவா?

முஸ்லிம் said...

mariya உங்க மறுமொழியில் காரம் கொஞ்சம் அதிகம். அதனால தணிக்கை செய்திருக்கிறேன். sorry :)

*******************************
Mariya has left a new comment on your post "பாஜக எம்.பியின் பித்தலாட்டம்.":

//இதற்கு பா.ஜ.க. என்ன செய்யும்?//

நாக்கைப் பிடிங்கி நான்டுகிட்டு சாகலாம். ஆனால் செய்ய மாட்டாங்க.

முஸ்லிம்,

அரசியல்வாதிங்கன்னாலே அவங்க தனி ஜாதி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படனும். மதச்சாயம் பூசக் கூடாது.

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by Mariya to முஸ்லிம் at 10:33 PM

 

முஸ்லிம் said...

திரு, VSK உங்கள் வரவுக்கு நன்றி.

அரசு ஊழியரின் பித்தலாட்டம் என்று எழுதினால்

இதற்கு அரசு என்ன செய்யும்?

அரசாங்கமா இவரை செய்ய சொன்னது என்று கேட்பீர்களோ?

இவர் ஒரு பித்தலாட்டக்கார இந்து என்று எழுதினாலும்

இதற்கு இந்து மதம் என்ன செய்யும்?

இந்து மதமா இவரை செய்ய சொன்னது? என்ற கேள்வியெழத்தானே செய்யும்.

கடாரா என்பவர் எந்த பதவியிலும் இல்லாமலிருந்தால் அவரை பாஜகவோடு இணைத்து எழுதுவது கண்டிக்கத்தக்கது. கடாரா ஒரு எம்.பி.

கடாரா எம்.பி பித்தலாட்டக்காரர் என்று மொட்டையாக எழுதாமல் அவர் எந்த கட்சியை சார்ந்தவர் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். செய்தியும் பாஜக எம்.பி கைது என்றே தலைப்பிட்டுள்ளது.

புனிதம் என்கிற ஃபில்டரில் வடிகட்டின கட்சியா பாஜக?

எல்லா அரசியல் கட்சி மாதிரி பாஜகவும் ஒரு அயோக்கிய கட்சி.

இன்னும் சொன்னால் அனைத்து கட்சிகளையும் விட பாஜக கட்சியின் அயோக்கியத்தனம் மிதமானது.

என்னவோ பாஜ கட்சியின் புனிதத்தன்மைக்கு நான் பங்கம் விளைவித்த மாதிரி பேசாமல் நீங்களும் கொஞ்சம் மனசாட்சியுடன் மறுமொழி எழுதுங்கள்!

இது இன்றைய செய்தி

டில்லி: பா.ஜ.கட்சியை சேர்ந்த கடாரா தனது மனைவி பெயரில் மற்றொரு பெண்னை வெளிநாட்டுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர்கள் கடும் பாய்ச்சலில் உள்ளனர்கள். இது பற்றி கூறுகையில், பா.ஜ கட்சியினர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இது மிக பெரிய குற்றம் எனவும் இவருக்கு தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளதா என்பது பற்றி விசாரிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த அபிஷேக் தெரிவித்தார்.
பின்னர் இது பற்றி பா.ஜ., கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரகாஷ் கூறுகையில், இது குறித்து மேலிடத்தில் விவாதித்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.


அது என்ன சஸ்பெண்ட்?

கையும் களவுமா பிடிபட்ட கயவரின் பதவியை பறித்து கொண்டு தண்டிக்க வேண்டியதுதானே.

நாளை, பாஜக எம்.பி கடாராவுடன் டில்லி விமான நிலையத்துக்கு வந்தது அவரின் மச்சினிச்சி.

கடாராவின் மனைவி சாராதாபென்னின் தங்கையை மேல்படிப்புக்காக கனடாவுக்கு அழைத்து செல்லும்போது எதிர் கட்சியினரின் சதியால் அநியாயமாக பாஜக எம்.பி கடார பழிசுமத்திப்பட்டார் என்று வழக்கை சாவகாசமாக திசை திருப்ப இந்த சஸ்பெண்ட் அவகாசம் தேவையாகயிருக்கிறது அதானே.

முஸ்லிம் said...

அழகப்பன் உங்கள் வரவுக்கு கருத்துக்கும் நன்றி

//இவர் பித்தலாட்டம் செய்யாமல் ஏதாவது சாதனை செய்திருந்தால் பா.ஜ.க. எம்.பியின் சாதனை என்றுதான் எழுதியிருப்பார்கள். இவர் செய்தது பித்தலாட்டம். எனவே பா.ஜ.க. எம்.பியின் பித்தலாட்டம் என தலைப்பிட்டிருப்பதில் என்ன தவறு கண்டீர்?//

சரியாக கேட்டீர்கள்.

முஸ்லிம் said...

சுல்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

Anand Vaitheeswaran said...

i think you are genaralising too much.
I can make some other comment and i am sure that you will delete it!!!.
What ever the MP did is not correct and he should be punished for that.
Blaming a party for such activity is not correct.
Rahul Gandhi made a senseless comment the other day. So did you blame congress for it

முஸ்லிம் said...

மரியா உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

//அரசியல்வாதிங்கன்னாலே அவங்க தனி ஜாதி. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படனும். மதச்சாயம் பூசக் கூடாது.//

சரியாக சொன்னீர்கள்.

அரசியல்வாதிங்க ஆட்சியை பிடிக்க எதுவும் செய்வார்கள். ஆட்சி கிடைக்காமல் போனாலும் தரங்கெட்ட செயலை செய்தாவது சம்பாதித்து கொள்வார்கள். அதற்கொரு முன்னுதாரணம் இந்த பாஜக எம்.பி கடாரா.

நண்பன் said...

முஸ்லிம் - இது குறித்த செய்தி, என் வலைத்தளத்தில் நண்பன் வாசித்தவை என்ற தலைப்பில் வாசித்தவற்றைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் செய்தி கொடுத்து இருக்கிறேன்.

எத்தனை தான் சொன்னாலும் இவர்களால் என்றுமே ராமராஜ்யத்தை உருவாக்கிட முடியாது. எல்லோரையும் போல இவர்களும் சாதாரண மனிதர்கள் தான். இவர் எம்.பி. ஆக இருந்து விட்டார். அவ்வளவு தான்.

பாஜக ஒரு அடிப்படைவாத மதவாத கட்சி தான். அவர்கள் தொண்டர்கள் என்னதான் கூரை மீது ஏறி நின்று அடுத்தவர்களைக் குறை கூறி கூவினாலும், தங்கள் முதுகிற்குப் பின்னால் சேரும் அழுக்கைக் காண சக்தியற்றவர்கள்.

வேறு என்ன சொல்ல?

புதுச்சுவடி said...

//அரசு ஊழியரின் பித்தலாட்டம் என்று எழுதினால்

இதற்கு அரசு என்ன செய்யும்?

அரசாங்கமா இவரை செய்ய சொன்னது என்று கேட்பீர்களோ?

இவர் ஒரு பித்தலாட்டக்கார இந்து என்று எழுதினாலும்

இதற்கு இந்து மதம் என்ன செய்யும்?

இந்து மதமா இவரை செய்ய சொன்னது? என்ற கேள்வியெழத்தானே செய்யும்.

கடாரா என்பவர் எந்த பதவியிலும் இல்லாமலிருந்தால் அவரை பாஜகவோடு இணைத்து எழுதுவது கண்டிக்கத்தக்கது. கடாரா ஒரு எம்.பி.

கடாரா எம்.பி பித்தலாட்டக்காரர் என்று மொட்டையாக எழுதாமல் அவர் எந்த கட்சியை சார்ந்தவர் என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். செய்தியும் பாஜக எம்.பி கைது என்றே தலைப்பிட்டுள்ளது.

புனிதம் என்கிற ஃபில்டரில் வடிகட்டின கட்சியா பாஜக?

எல்லா அரசியல் கட்சி மாதிரி பாஜகவும் ஒரு அயோக்கிய கட்சி.

இன்னும் சொன்னால் அனைத்து கட்சிகளையும் விட பாஜக கட்சியின் அயோக்கியத்தனம் மிதமானது.

என்னவோ பாஜ கட்சியின் புனிதத்தன்மைக்கு நான் பங்கம் விளைவித்த மாதிரி பேசாமல் நீங்களும் கொஞ்சம் மனசாட்சியுடன் மறுமொழி எழுதுங்கள்!//

முஸ்லிம்,


இந்த எம்.பி. சாதாரண பி.ஜே.பி. எம்.பி. அல்லன். ஆயிரக் கணக்கில் முஸ்லிம்களைக் கொன்றொழித்த
இந்துமதத் தீவிரவாதக் குழுவான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் குஜராத் பிரிவின் முன்னணித் தலைவன். தாழ்த்தப் பட்டவர்க்கென ஒதுக்கப் பட்ட தொகுதியின் எம்.பி. இதற்கு முன் இரு முறை வெளிநாட்டுப் பயணம் (ஒருமுறை அமெரிக்கா, மற்றொருமுறை கானடா) மேர்கொண்டுள்ளான். அது பற்றியும் இப்போது விசாரிக்கப் படுகிறது.

இவன் கூட்டிச் சென்ற பையன் இவனுக்கோ கூடவே சென்ற பெண்ணுக்கோ எந்த உறவுமில்லை. அவன் வேறொருவரின் மகன். இப்படி இரட்டை மோசடியில் ஈடுபட்டவந்தான் இந்த "தேசபக்த சிங்கம்".

முஸ்லிம் said...

திரு ஆனந்த் வைத்தீஸ்வரன் உங்கள் வரவுக்கு நன்றி.

பதிவு தொடர்பாக மறுமொழியாக இருந்தால் அனுமதிக்கலாம். தொடர்பில்லாத பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டிய அவசிமில்லை.

எந்த கட்சியையும் உசத்தி நான் பேசவில்லை.

ஊழல் குற்ற சாட்டுகள் என்று எடுத்து கொண்டால் பெரும்பான்மை அரசியல்வாதிகள் அதிலிருந்து தப்ப முடியாது. ஊழல்களுக்கான சாட்சியங்கள் சந்திக்கு வந்த பின்னும் புலன் விவசாரணைகள் பாதியிலேயே மயமாக மறைந்துவிடும்.

நரசிம்மராவின் அமைச்சரவையிலிருந்த அனைவரும் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளானவர்கள். அன்று நீதிமன்றங்களின் நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ், நீதிமன்றத்தின் தலையீடு வரம்பு குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் தனி அமர்வையே கூட்டுமாறு கேட்டு கொண்டது. (பழைய செய்தி)

அரசியல்வாதிகள் ஊழல்கள் செய்வது புதுசு இல்லை.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித கடத்தலில் ஈடுபடுவதும் புதிதல்ல.

பாஜக மக்களவை உறுப்பினர் ஒருவர் இவ்வாறு மனிதக்கடத்தல் (Human Trafficking) வேலையில் ஈடுபடுவது இது முதன்முறையன்று. இதற்கு முன்னர் இராஜஸ்தான் மாநிலம் பயானா தொகுதியைச் சேர்ந்த முன்னாள் பாஜக மக்களவை உறுப்பினர் கங்காராம் கோஹ்லி ஒன்பது நபர்களை நெதர்லாந்து நாட்டுக்குக் கடத்தியிருப்பதாகவும் அவர்கள அனைவரும் அங்கு சென்றபின் காணாமல் போய் விட்டதாகவும் CBI விசாரணை நடத்தி வருகிறது.

பொறுப்புள்ள நாடாளுமன்ற பதவியில் இருப்பவர்கள் தேச துரோக செயல்களில் இறங்கினால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் வாதிகளுக்கு எதிரான விசாரணைகள் என்றுமே அவர்களை தொட்டதில்லை. தவறு செய்தவருக்கு அந்த அரசியல்வாதியின் கட்சியே அரணாக இருந்து அவருக்கு பாதுகாப்பு வழங்கி விடுகிறது. இதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கு இல்லை.

//What ever the MP did is not correct and he should be punished for that.//

பாஜாக எம்.பி கடாரா தண்டிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் சொன்னதுக்கு மகிழ்ச்சி.

பார்க்கலாம்: இவ்வுளவு தெளிவான சாட்சியங்களுடன் பிடிபட்ட ஒரு குற்றவாளி எத்தனை வருடத்தில் தண்டிக்கப்படுவார் என்று.

முஸ்லிம் said...

நண்பன் எங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

பாரதம் ஒரு மதசார்பற்ற நாடு என்பதை மறக்கிறார்கள்.

ராமராஜ்ய கனவு அதை மறைக்கிறது.

முஸ்லிம் said...

''நண்பன் உங்கள்'' வரவுக்கும்...

என திருத்திக் கொள்ளவும்.

முஸ்லிம் said...

புதுச்சுவடி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//இவன் கூட்டிச் சென்ற பையன் இவனுக்கோ கூடவே சென்ற பெண்ணுக்கோ எந்த உறவுமில்லை. அவன் வேறொருவரின் மகன். இப்படி இரட்டை மோசடியில் ஈடுபட்டவந்தான் இந்த "தேசபக்த சிங்கம்"//

''தேசத்துக்கே அசிங்கம்''

முஸ்லிம் said...

பெண் கடத்தல் பாஜக எம்பியின் பிஏ கைது

ஏப்ரல் 21, 2007

டெல்லி: பெண் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ள பாஜக எம்பி பாபுபாய் கதாராவின் உதவியாளரான ராஜீந்தர் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநில பாஜக எம்பியான பாபுபாய் கதாரா குஜராத் மதக் கலவரத்திலும் தொடர்புடையவர். இவரது தன் மனைவி எனக் கூறி இன்னொரு பெண்ணை பணத்துக்காக கனடாவுக்கு கடத்த முயன்ற போது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது இதுபோன்று போலி பாஸ்போர்ட் மூலம் பலரை பல வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பது கண்டறியப்பட்டது.

இந் நிலையில் அவருடைய செயலாளரான ராஜீந்தர் சிங்கையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவரும் தன் மனைவி மற்றும் மகன் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு ஆள் கடத்தி வருவது தெரிய வந்துள்ளது.

இவருக்கு உதவியாக டிராவல்ஸ் உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரிக்க ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு போலீஸ் குழு விரைந்துள்ளது.

நன்றிங்க

Mariya said...

டெல்லி: குஜராத் மாநில பாஜக எம்பி கத்தாராவுக்கு செக்ஸ் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தோகப்படுகிறார்கள்.பாபுபாய் கத்தாரா சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் பாஸ்போர்ட்டை பயன் படுத்தி வேறு ஒரு பெண்ணை கனடாவுக்கு அழைத்து செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார்.

இவரது சூட்கேஸை பரிசோதித்தபோது செக்ஸ் ஊக்கம் தரும் மருந்துகள் இருந்தன.

இந் நிலையலில் கத்தாரா வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் 12 போலி பாஸ்போர்ட்டுகள் சிக்கின. மேலும் அவரது வீட்டில் வயாகரா மாத்திரைகளும், ஏராளமான ஆபாச சிடிக்களும் சிக்கின.

இதுவரை பல பெண்களை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ள கத்தாராவுக்கு செக்ஸ் கும்பல்களுக்கும் தொடர்பு இருந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://thatstamil.oneindia.in/news/2007/04/23/bjp.html

உள்ளக் குமுறலைச் சொன்னேன். மட்டுறுத்தி விட்டீர்கள். இதையாச்சும் மட்டுறுத்தாம வெளியிடூவீங்களா?

முஸ்லிம் said...

mariya செய்தியை பகிர்தமைக்கு நன்றிங்க.

//உள்ளக் குமுறலைச் சொன்னேன். மட்டுறுத்தி விட்டீர்கள். இதையாச்சும் மட்டுறுத்தாம வெளியிடூவீங்களா?//

உங்கள் வருத்தம் எனக்கு புரிகிறது sorry :(

முஸ்லிம் said...

6. ஆள் கடத்தல் வழக்கு விசாரணை : எம்.பி.,க்கள் ஆஜராகவில்லை

புதுடில்லி : ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்ட, நான்கு எம்.பி.,க்கள் நேற்று விசாரணைக்காக போலீசார் முன் ஆஜராகவில்லை. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ., எம்.பி., பாபுபாய் கடாரா, தனது மனைவி மற்றும் மகன் பெயரில் உள்ள பாஸ்போர்ட் மூலம் வேறு இருவரை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக டிராவல் ஏஜென்ட் ராஜேந்தர் மற்றும் இடைத்தரகர் சுந்தர் லால் யாதவ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாபுபாய் கடாராவைத் தவிர, பா.ஜ.,வைச் சேர்ந்த ராம்சொரூப் கோலி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது தாகிர் கான், அஷோக் குமார் ரவாத் மற்றும் மித்ரசென் யாதவ் ஆகியோரும் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்ட சுந்தர் லால் யாதவ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். நான்கு எம்.பி.,க்களும் விசாரணைக்காக டில்லி போலீசாரிடம் ஆஜராகவேண்டும் என்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், நேற்று நான்கு எம்.பி.,க்களும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இது குறித்து டில்லி போலீஸ் கமிஷனர் (குற்றப்பிரிவு) நீரஜ் தாக்கூர் கூறுகையில், ""ராம் சொரூப் கோலி தற்போது, ராஜஸ்தானிலுள்ள தன்னுடைய சொந்த ஊரான பயானாவில் இருப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று தகவல் தெரிவித்தார். முகமது தாகிர் கான் மற்றும் அஷோக் குமார் ரவாத் ஆகிய இருவரும், உ.பி., தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். மித்ராசென் யாதவ் இதுவரை எந்த பதிலும் அனுப்பவில்லை,'' என்று கூறினார். ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகரராவின் பெயரையும் சுந்தர் லால் தெரிவித்திருந்தார்.

25.04.2007 தினமலருக்கு நன்றிங்க.