மனைவி பாஸ்போர்ட்டில் வேறு பெண் : டில்லி விமான நிலையத்தில் பா.ஜ.க.எம்.பி.கைது
புதுடில்லி : மனைவி பாஸ்போர்ட்டில் வேறு பெண்ணை கனடாவுக்கு அழைத்து செல்ல புதுடில்லி விமான நிலையம் வந்த பா.ஜ.க.எம்பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.எம்பி பாபுபாய் கட்டாரா. இன்று அதிகாலை அவர் ஒரு பெண்ணுடன் புதுடில்லி விமான நிலையம் வந்தார். கூடவே 14 வயது மதிக்கத்தக்க ஒரு பையனும் வந்தான். இவர்கள் மூவரும் கனடாவில் உள்ள டோரன்டோ நகருக்கு பயணம் செய்ய இருந்தனர். இம்மிகிரேஷன் பிரிவிற்கு அவர்கள் வந்தபோது அந்த பெண்னை தன் மனைவி சாரதாபென் என்று எம்பி கூறினார். இதில் சந்தேகமடைந்த இம்மிகிரேஷன் அதிகாரிகள் துருவி துருவி விசாரித்ததில் அந்த பெண் சாரதாபென் இல்லை என்றும், அவரது உண்மையான பெயர் பரம்ஜித் என்றும் தெரியவந்தது. பரம்ஜித் என்ற பெண்னை தன் மனைவி சாரதாபென் என்று பொய் சொல்லி, போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு கூட்டிச்செல்ல முயன்ற எம்பி பாபுபாய் கட்டாரா போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். அந்த
பெண்னை பாபுபாய் கட்டாரா கனடா கூட்டி செல்வதற்கு ரூ.30 லட்சம் பெற்றதாக தெரிகிறது.
நன்றி: இன்றைய தின மலர், 18,04.2007
ஒரு பொறுப்புள்ள நாடளுமன்ற உறுப்பினரின் யோக்கியதையை பாருங்கள்.
ரூபாய் முப்பது லட்சங்களை வாங்கி கொண்டு தனது மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல பித்தலாட்டம் செய்தவருக்கு எம்பி பதவி வகிக்க தகதியுள்ளவரா?
வலை பதிவு உறுப்பினரிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வரை ஆள் மாறாட்டும் செய்யும் இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே...