Wednesday, November 28, 2007

பிச்சைகாரரின் உல்லாச வாழ்க்கை!

விமானத்தில் பறந்து போய் ரயிலில் பிச்சை * கேரள பிச்சைகாரரின் உல்லாச வாழ்க்கை

கொச்சி: பிச்சை எடுத்து உல்லாசமாக வாழ்கிறார் கேரள பிச்சைக்காரர் ஒருவர். விமானத்தில் பறந்து சென்று பிச்சை எடுத்த அனுபவம் கூட இவருக்கு உண்டு.
காசர் கோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி. வயது அறுபது. சொந்த ஊரில் அரை ஏக்கர் நிலமும் வீடும் உள்ளது. வங்கி வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் உள்ளது.

ஓட்டல்களில் தினமும் விலை உயர்ந்த உணவைத்தான் சாப்பிடுவார். ஒரு வேளையாவது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டார். மிகவும் பிரபலமான மில் தயாரிப்புகளில் 14 ஜோடி ஆடைகளை வைத்திருக்கிறார். சொந்த ஊரில் பெரும் தொழிலதிபர் போல் உடையணிந்துதான் நடமாடுவார். கவுரவமானப் பணியில் இருப்பதாக, ஊர்க்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வளவு ஆடம்பரமாக வசிக்கும் இவருக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது. பிச்சை எடுக்கிறார். அதுதான் இவரது தொழில். கேரளாவில் மசூதிகளில் தங்கி புதுப்புது இடங்களில் பிச்சை எடுப்பதில் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழ்கிறார். தினமும் 250 ரூபாய் வரை பிச்சை மூலம் பார்த்துவிடுவார். விசேஷ நாட்களில் ஆயிரம் ரூபாய் சாதரணமாகக் கிடைத்துவிடுகிறது.

கந்தல் அழுக்கான உடைகளைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுப்பார். தொழில் முடிந்ததும், டிப்டாப் உடைக்கு மாறிவிடுவார். கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவிடுவார்.விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை இவருக்கு ஏற்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தில் விசாரித்தார். டிக்கெட் வாங்கி, விமானத்தில் பயணம் செய்து கொச்சியில் இறங்கினார். அங்கிருந்து திரும்பி வர போதிய பணம் இல்லாததால், அழுக்கான லுங்கிக்கு மாறி, ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டே ஊர் திரும்பி விட்டார்.


நன்றிங்க, தினமல்ர் 28/11/2007

மிஸ்டர் பிச்சைகாரர் விமானத்தில் பறக்க கூடாதா?

விமானம் உயரே பறந்து ஒரு நிலைக்கு வந்தபின் அடுப்பில் மாட்டியுள்ள பெட்டை கழட்டி விட்டு, அவருக்கு விமானத்திலும் பிச்சை எடுக்கும் உரிமை வழங்க வேண்டும்!

பிச்சைகாரர் லட்ச ரூபாய் வைத்திருந்தால் அவரும் லட்சாதிபதிதான்.

''பிச்சைகார லட்சாதிபதி''

அட ...லாஜிக் இடிக்குதே

Tuesday, November 27, 2007

ஆங்கிலம் செய்த கொலை(!?)

ஆங்கிலம் தெரியாத விரக்தியால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
விடுதியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்

பூந்தமல்லி, நவ.27-

ஆங்கிலம் தெரியாததால் விரக்தி அடைந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.
என்ஜினீயரிங் மாணவர்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தை சேர்ந்தவர் நந்தகுமார் என்பவரின் மகன் விது(வயது 18).
இவர் சென்னையை அடுத்த குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் அவர் தங்கி இருந்தார்.

ஆங்கில பாடம் புரியவில்லை

மாணவர் விது மேல்நிலைப்பள்ளி வரையில் தமிழ் வழிகல்வி கற்பிக்கப்படும் பள்ளியில் படித்தவர். பிளஸ்-2 தேர்வில் 1,023 மார்க்கு பெற்று அரசு இடஒதுக்கீட்டில் என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்து சேர்ந்துள்ளார்.

ஆனால் என்ஜினீயரிங் கல்லூரியில் பாடத்திட்டம் ஆங்கிலத்தில் இருந்ததால் அவரால் அதனை சரியாக புரிந்து கொண்டு படிக்க இயலவில்லை. சமீபத்தில் நடந்த தேர்வுகளில் 5 பாடத்தில் அவர் தோல்வி அடைந்து விட்டார். இதனால் விது சோகமே உருவாக விரக்தியில் இருந்தார்.

தற்கொலை

இதுபற்றி அவர் தந்தையிடம் கூறி இருக்கிறார். அதற்கு அவரது தந்தை, ``எப்படியாவது கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வா'' என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவர் விது விடுதியில் உள்ள குளியல் அறையில் தனது லுங்கியை இரண்டாக கிழித்து அதை கயிறு போல திரித்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உருக்கமான கடிதம்

மாணவர் விது தங்கியிருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் கடிதம் ஒன்றை கண்டெடுத்தனர். அதில் விது எழுதியிருந்ததாவது:-

``எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் சிறு வயதில் இருந்தே தமிழ் வழிகல்வியில் படித்தேன். என்ஜினீயரிங் படிப்பில் எல்லாம் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆங்கிலத்தில் படிக்க இயலாத காரணத்தால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறேன்.''

இவ்வாறு அவர் கடிதத்தில் எழுதி இருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் ஆல்ட்ரின் ஈஸ்டர், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

நெஞ்சு கனக்கிறதய்யா!

மாணவ சமுதாயங்களே கல்வி என்பது வாழ்க்கைக்கு தேவையானதுதான். அதற்காக கல்விதான் வாழ்க்கை என்ற நிலை இல்லை என்பதை உணர்ந்து, பரீட்சையில் தோல்வி அடைந்தால் முனமுடைந்து தற்கொலை செய்வதை கைவிடுங்கள். எல்லா பிரச்சனைக்கும் தற்கொலைதான் தீர்வு என்பது கோழைத்தனம்.

நெஞ்சில் உறுதி வேண்டும்!

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ்...

மோட்டார் சைக்கிளில் சென்று
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


சென்னை, நவ.27-

மோட்டார் சைக்கிளில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கச்சங்கிலி பறிப்பு

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள புதூர் செங்குன்றம் சாலையை சேர்ந்தவர் ராயப்பன். தனியார் பள்ளி காவலாளி. இவருடைய மனைவி தெரசம்மாள் (வயது55).
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு தெரசம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் `ஹெல்மெட்' அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, தெரசம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

விரட்டி பிடித்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த தெரசம்மாள், `திருடன்' `திருடன்' என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் நின்ற பொதுமக்கள் கொள்ளையனை விரட்டினார்கள். அந்த ஆசாமி பதட்டமடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அந்த ஆசாமியை அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமாரிடம் ஒப்படைத்தனர்
சப்-இன்ஸ்பக்டர்

போலீஸ் விசாரணையில், வழிப்பறி செய்தவர், விருப்ப ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. அவருடைய பெயர் ஜார்ஜ் (வயது 44). சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்.

முதலில் வழிப்பறி செய்ததை அவர் மறுத்தார். தனது கண்ணெதிரே சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்ததாகவும், நானும் கொள்ளையனை பிடிக்க விரட்டி சென்றதாகவும், கீழே விழுந்த என்னை அவர்கள் தவறுதலாக பிடித்ததாகவும் தெரிவித்தார்.

கைது

போலீசார் இதை நம்பாமல் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் இன்னொரு தங்கச்சங்கிலி இருந்தது. இது பற்றி கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

போலீசார் துருவித்துருவி விசாரித்தபோது, செங்குன்றம் புழல் பகுதியில் ஒரு பெண் வக்கீலிடம் இந்த தங்கச்சங்கிலியை பறித்ததாக கூறினார். இதையொட்டி ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் எத்தனை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

வேலியே பயிரை மேய்கிறதுன்ன சொல்வாங்களே...

Monday, November 26, 2007

பணி முடிந்த விமானி!

பணி முடிந்த விமானி - பரிதவித்த பயணிகள்

திங்கள்கிழமை, நவம்பர் 26, 2007

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரிலிருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை செலுத்த வேண்டிய விமானி, தனது பணி முடிந்து விட்டதாக கூறி விமானத்தை எடுக்க மறுத்ததால், விமானம் ரத்தாகி பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரிலிருந்து நேற்றிரவு 8.15 மணிக்கு கொல்கத்தா செல்ல வேண்டிய இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்லவேண்டிய பயணிகள் அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால் விமானம் புறப்படுவது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

சுமார் 4 மணிநேரம் தாமதத்திற்கு பின்னர், நள்ளிரவு 12-30 மணிக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது எனகூறிய அதிகாரிகள் பயணிகளை ஹோட்டல்களில் தங்க வைத்தனர்.

என்ன என்று விசாரித்தபோது அந்த விமானத்தை செலுத்த வேண்டிய விமானி ஒருவரின் பணி நேரம் முடிந்து விட்டதாம். இதனால் விமானத்தை செலுத்த முடியாது என்று அவர் கூறி விட்டாராம். இதனால்தான் விமானத்தை எடுக்க முடியாமல் தாமதமாகியதாக தெரிய வந்தது.

நன்றிங்க

வானத்தில் விமானம் பறந்து கொண்டிருக்க எனக்கு பணி நேரம் முடிந்து விட்டது என்று எந்த விமானியும் சொல்லாமல் இருந்தால் சரிதான்.

Sunday, November 25, 2007

தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை!

சர்ச்சை எழுப்பக் கூடாது - தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

கொல்கத்தா: தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், லஜ்ஜா என்ற நூலை எழுதி வங்கதேசத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி, 1994ம் ஆண்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்த அவரை வெளியேற சொல்லி முஸ்லீம் மதத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் கலவரம் அங்கு வெடித்தது.

இதனை தொடர்ந்து அவர் வெளியேறி ராஜஸ்தானுக்கு சென்றார். ஆனால் அம்மாநில அரசு தஸ்லிமாவுக்கு தங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதால், அவர் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் லாலு தஸ்லிமாவுக்கு புது எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதி, தேவையில்லாமல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டார்.

முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லீம் மதத்தை பற்றி அவதூறாக சித்தரித்து எழுதியதற்காக அவரை கண்டிப்பாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், விசா நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என்று சில முஸ்லீம் அமைப்புகள் கூறி வருகின்றன.

இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு கூடி ஆலோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் லாலு.

நன்றிங்க

//முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.//

நல்லாத்தான் சொல்லியிருக்கார், அம்மணிக்கு உரைக்குமா...?

நன்றி விழா!

சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு நிறைவு தருகிறது: கருணாநிதி

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

சென்னை: சிறுபான்மை சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது மனதுக்கு நிறைவு தருவதாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்ட பெருமிதம் கிடைத்துள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக அரசு சிறுபான்மை சமூகத்தினருக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு அளித்து உத்தரவிட்டதற்காக, முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து சென்னையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் நேற்று விழா நடத்தப்பட்டது.

விழாவில் பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு வீர வாளும், செங்கோலும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், தமிழகத்தில் நன்றி கூறுவார்களா, அடடே ஆச்சரியமாக இருக்கிறதே என்று நான் எண்ணியதுண்டு. இப்போது நன்றி கூறுகிறவர்கள் இவ்வளவு பேரா என்று நான் மகிழ்ச்சி அடையக் கூடிய அளவில் நிலைமை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

சிறுபான்மையினருக்கு - இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு சம நிலையில் அளிப்பது என்று முடிவு செய்து அதை முதன் முதலாக அறிவித்தது 24.5.2006 அன்று ஆளுநர் உரையில். அதற்கு நன்றி கூறும் விழா இன்று 24ம் தேதி. தமுமுக 1995ம் ஆண்டு உதயமானது என்றார்கள். அந்த வருடத்தின் கூட்டுத் தொகை 24. அவ்வளவு ஏன், நான் பிறந்த ஆண்டே 1924. நம்மிடையே எவ்வளவு ஒற்றுமை இயல்பாக அமைந்திருக்கிறது.

நம்மையா பிரித்து விட முடியும் என்று இதை விட சிறப்பாக, எண் கணித ஜாதகம் என்று இல்லாமல், எண்ணத்தை வைத்து இந்த ஜாதகம் கணிக்கப்பட்டிருக்கிறது.

சிறுபான்மை சமுதாயம் முன்னேற வேண்டும், உரிமைகளைப் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட காலமாக குரல் கொடுத்து, கோரிக்கை விடுத்து, போராடி இந்த உண்மைகளை உணர்ந்து, உணர்வுகளை மதித்து, நாங்கள் செயல்பட்டு தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம் என்றால், மன்னிக்க வேண்டும், இது எங்கள் ரத்தத்தோடு ஊறிய சமாச்சாரம்.

தமுமுக 1995ல் தோன்றியபோது 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு நலிந்தவர்களுக்கு உதவியதாக கூறினார்கள். இப்போது 31 ஆம்புலன்ஸ்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த இயக்கத்தின் பணி, ஆக்க வேலை மக்களுக்குத் தொண்டாற்றுவது, சமுதாயத்தில் நலிந்த பிரிவினருக்கு நன்மை செய்வது, கருணை இல்லம், அன்பு இல்லம் போல இந்த இயக்கம் ஏற்றுக் கொண்டு மிகக் குறுகிய காலத்தில் 5 ஆம்புலன்ஸ், 31 ஆக பெருகியிருப்பது பாராட்டத்தக்கது.

என் பொறுப்பில், எனது சொந்தப் பொறுப்பில், இன்னும் 2 ஆம்புலன்ஸ்கள் வாங்க, அதற்குரிய நிதி எவ்வளவு என்று கூறினால், என் சொந்தப் பொறுப்பிலே இந்தத் தொகையை வழங்கி - இந்த நாள் நம் நினைவில் நிற்க வேண்டிய நாள். நலிந்தோருக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள - நமக்கு வழிகாட்டியாக உள்ளவர்களின் பெயரால் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றிய நாள் என்ற வகையிலே இது அமையும்.

நான் சிறப்பு விருந்தினர் அல்ல, விருந்தினர்களை வரவேற்கும் உங்களில் ஒருவன். என்னைப் பெருமைப்படுத்துவதாக எண்ணி வேறுபடுத்தி விடாதீர்கள். நீங்கள் வேறு, நான் வேறல்ல.

இளம் பிராயத்திலேயே ஒரு கையில், முஸ்லீம் லீக் பிறைக் கொடியையும், மற்றொரு கையில் திராவிட இயக்கக் கொடியும் பிடித்து வளர்ந்தவன்.


புதுச்சேரியில், நான் அடிபட்டு, உதைபட்டு உயிர் போய் விட்டது என்று அந்தக் கும்பல் விட்டுச் சென்றபோது நான் அங்கிருந்து தப்பிச் சென்று, பெரியாரிடம் அழைத்துச் செல்லப்பட்டபோது, மீண்டும் வேறு யாரும் என்னை அடையாளம் கண்டு தாக்கி விடக் கூடாது என்பதற்காக நான் கட்டிச் சென்ற ஆடை லுங்கிதான்.

பெரியார், அண்ணா, காயிதேமில்லத் இவர்கள் எல்லாம் நம்மை வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள். இந்த வழியிலே சகோதரர்களாக செல்வோம் என்று குறிப்பிட்டு - நான் ஒரு கூட்டத்தில் சொன்னதைப் போல இந்து முஸ்லீம் சீக் ஈ சாயி - ஆபஸ் மே ஹை பாயி பாயி என்ற அந்த தத்துவத்தை இந்தியாவிலே கடைப்பிடிப்போம் என்றார் கருணாநிதி.

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், தமிழக அரசு வழங்கியுள்ள இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தத் தடையைத் தாண்டி, இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளவர்கள் நாளை உச்சநீதிமன்றத்தையும் அணுகக் கூடும். எனவே இந்தத் திட்டங்களை முறியடித்து சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை பாதுகாக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

நன்றிங்க

//இளம் பிராயத்திலேயே ஒரு கையில், முஸ்லீம் லீக் பிறைக் கொடியையும், மற்றொரு கையில் திராவிட இயக்கக் கொடியும் பிடித்து வளர்ந்தவன்.//

அடிச்சிரய்யா "பஞ்ச்"

மேட்டர கச்சிதமா டச் பண்றதுல இவர விட்ட வேற ஆளு இல்லய்யா!

"நன்றியுடன் நடப்போருக்கு இறைவன் கூலி வழங்குவான்" (அல்குர்ஆன்,3:144)

கூடுதல் கட்டணம் வசூல்...!

கூடுதல் கட்டணம் வசூல் - 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

சென்னை: தமிழகத்தில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த 33 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.

எனவே, ஏஐசிடிஇ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை நாங்கள் ரத்து செய்ய முடியாது. பல்கலைக்கழக இணைப்பு அனுமதியை வேண்டுமானால் ரத்து செய்யலாம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏஐசிடிஇ தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலமாக புதிதாக 20 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பொது பல்கலைக்கழக சட்டம் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். அதற்கான தொடக்கநிலை பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

நன்றிங்க

சீக்கிரம் நடவடிக்கை எடுங்கப்பா, இவனுங்க லொள்ளு தாங்க முடியல..!

Saturday, November 24, 2007

எப்படியெல்லாம் பொழைக்கிறாங்கப்பா?

குருவுக்காக அல் கொய்தா பெயரில் மிரட்டல் - சிஷ்யர் கைது

சனிக்கிழமை, நவம்பர் 24, 2007

அயோத்தி: அயோத்தி ஸ்ரீராம் ஜென்மபூரி நியாஸ் தலைவரான சாமியார் நிருத்ய கோபால் தாஸுக்கு உயர் மட்ட பாதுகாப்பு பெறுவதற்காக, அல் கொய்தா பெயரில் தாஸுக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய அவரது சிஷ்யரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அயோத்தி ராம் ஜென்மபூமி இயக்கத்தில் மிகவும் முக்கியமாக செயல்பட்டு வருபவர் கோபால் தாஸ். இதுதொடர்பான ஸ்ரீராம் ஜென்மபூமி நியாஸ் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவருக்கு சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. அல் கொய்தா அமைப்பின் பெயரில் எழுதப்பட்ட அக் கடிதத்தில், நீங்களும் உங்களது சிஷ்யர்களும் முஸ்லீம்களாக மாறி விடுங்கள். இல்லாவிட்டால் கொல்லப்படுவீர்கள் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே கோபால் தாஸும், அவரது சிஷ்யர்களும் சரயு நதியில் குளிக்கச் சென்றபோது அவர்கள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. எனவே இந்த மிரட்டல் கடிதத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள விரும்பாத போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் சந்தோஷ் ஜெய்ஸ்வால் என்பவர் சிக்கினார். இவர் கோபால் தாஸின் சிஷ்யர்களில் ஒருவர். தனது குருவுக்கு விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களான அசோக் சிங்கால், பிரவீண் தொகாடியா ஆகியோருக்கு அளிக்கப்படும் அளவுக்கு உயர் மட்டப் பாதுகாப்பு தரப்படவில்லை என்ற கவலை சந்தோஷுக்கு இருந்தது.

எனவேதான், தனது குருவுக்கு உயர் மட்டப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அல் கொய்தா பெயரில் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார் சந்தோஷ் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

ஹரித்வாரில் வைத்து சந்தோஷை போலீஸார் கைது செய்தனர்.

நன்றிங்க

அட... இந்த குறுக்கு வழி பரவாயில்லையே!

Friday, November 23, 2007

டாலர் வீழ்ச்சி - ஈரோவுக்கு மாறும் திருப்பூர்.

டாலர் வீழ்ச்சி - ஈரோவுக்கு மாறும் திருப்பூர்

சனிக்கிழமை, நவம்பர் 24, 2007

திருப்பூர்: அமெரிக்க டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதால், இழப்புகளை சமாளிக்க ஈரோவில் தங்களது வியாபாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.

அமெரிக்க பொருளாதாரத்தில் சரிவு காணப்படுகிறது. இதன் காரணமாக டாலரின் மதிப்பும் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 20ம் தேதி முதல் அமெரிக்க டாலரின் மதிப்பை விட இந்திய ரூபாயின் மதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்வது இந்தியர்களுக்கு பெருமையாக இருந்தாலும் கூட, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, திருப்பூரில் பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன. இதன் எதிரொலியாக திருப்பூரில் இதுவரை 8000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனராம்.

இந்தியாவின் மிகப் பெரிய பின்னலாடை ஏற்றுமதி மையங்களில் திருப்பூருக்கு தனி இடம் உண்டு. இங்கிருந்து அமெரிக்காவுக்கு மட்டும் 30 சதவீத ஏற்றுமதி நடக்கிறது. இந்த ஏற்றுமதி வியாபாரத்தில் முக்கால்வாசி அமெரிக்க டாலரில்தான் நடந்து வந்தது. தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் நிலைமை மோசமாகியுள்ளது.

நிலைமை இப்படியே நீடித்தால், திருப்பூரில் உள்ள 7 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்களில் அடுத்த மார்ச் மாத்திற்குள் 1 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தவிர்க்க தற்போது திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் தங்களது வியாபாரத்தை டாலரிலிருந்து ஈரோவுக்கு மாற்றி விட்டனர்.

தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்திருப்பதால் அதை சமாளிக்க ஆடைகளின் விலையை உயர்த்தலாம் என்றால் அதை அமெரிக்க சந்தை ஏற்காது என்ற நிலை உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உதவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அது கிடைக்கும் வரை காத்திருக்க விரும்பாத பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள், தங்களது வர்த்தகத்தை டாலரில் மேற்கொள்வதை விட்டு விட்டு ஈரோவுக்கு மாறியுள்ளனர்.
காரணம் இந்திய ரூபாய்க்கு எதிராக ஈரோவின் மதிப்பு 1.4 சதவீதமும், இங்கிலாந்து பவுன்ட்டின் மதிப்பு 7.1 சதவீதமும்தான் குறைந்துள்ளன.

மேலும் உள்ளூர்ச் சந்தைக்கு அனுப்பும் ஜவுளிகளின் எண்ணிக்கையையும் அவர்கள் அதிகரித்துள்ளனர். இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளால் ஏற்பட்டுள்ள பாதிப்பை சமாளிக்க முடியும் என்பது திருப்பூர் ஏற்றுமதியாளர்களின் எண்ணம்.

கடந்த ஆண்டு திருப்பூரிலிருந்து ரூ. 11 ஆயிரம் கோடி அளவிலான ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

சரிதான்...

வியாபாரிகள் எப்போதுமே வர்த்தகத்தில் கண்ணும் கருத்துமாகவே இருக்கிறார்கள்!

06. உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தி...





06. உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தி முட்டை தயாரிக்க ஆலோசனை

பெங்களூரு: இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4,450 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முட்டை உற்பத்தியில் உலகளவில் நான்காவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப முட்டை சப்ளை இல்லை. 2020ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி முட்டை தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை யை போக்க உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் மூலம் பெறப்படும் பொருட்களின் உற்பத்தியை பயோ டெக்னாலஜி (உயிரி தொழில்நுட்பம்) மூலம் அதிகரிப்பது தொடர்பான தேசிய கருத்தரங்கு பெங்களூரில் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற இந்திய விவசாய ஆய்வு கவுன்சிலின் துணை பொது இயக்குனர் டாக்டர் புஜபராக் தான் இந்த யோசனையை தெரிவித்தார். இந்த தேசிய கருத்தரங்குக்கு உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தும் நிறுவனங்களின் சங்கமும் (ஏ.பி.எல். இ.,) மற்றும் தேசிய பிராணிகளின் புரதசத்து, உடல்கூறு நிறுவனமும் ( என்.ஐ. ஏ.என்.பி.,) ஏற்பாடு செய்து இருந்தன. இந்தியாவில் முட்டைகள் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் பணியில் என்.ஐ.ஏ.என்.பி., ஈடுபட்டு வரு கிறது. இதன் இயக்குனர் டாக்டர் கே.டி.சம்பத் கூறுகையில், `தமிழகத்தில் நாமக்கலில் உள்ள மூன்றாயிரம் கோழிகளிடம் உயிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முட்டைகள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முயற்சி மேற்கொண்டோம். அதில் நல்ல பலன் கிடைத்தது. முட்டைகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

இடைவெளி விட்டு தான் கோழிகள் முட்டைகள் போடும். இந்த இடைவெளியை குறைப்பதில் தான் உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டு கோழிகளிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு 60 முதல் 70 முட்டைகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிற வகை கோழிகளிடம் இருந்து ஆண்டுக்கு 325 முட்டைகள் கிடைக்கின்றன. எனவே நாட்டு கோழிகளிடம் தான் முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றிங்க, தினமலர் 23/11/2007

சீக்கிரம் கண்டு பிடியுங்கள் இல்லேன்னா 2020ம் ஆண்டில் ஆம்லெட் போட முட்டை கிடைக்காது... :-)))

Wednesday, November 21, 2007

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது!

'ஓயாத' கெளடா: 'நாடகம்' தொடர்கிறது

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

பெங்களூர்: காங்கிரஸை இரு முறையும், பாஜகவை இரு முறையும் ஏமாற்றி முடித்துவிட்ட மாஜி பிரதமர் தேவெ கெளடா மீண்டும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான தரம் சிங் அரசை கவிழ்த்துவிட்டு பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வரானார்.

ஒத்துக் கொண்டபடி 20 மாதத்தில் பாஜகவிடம் ஆட்சியை ஒப்படைக்காமல் காங்கிரசுடன் கைகோர்த்து குமாரசாமியை முதல்வர் பதவியில் அமர வைக்க முயன்றார்.

காங்கிரசுடன் பேச்சுவார்ததைகள் நடந்து கொண்டிருந்தபோதே மீண்டும் பாஜகவை ஆதரித்தார் கெளடா. இதையடுத்து பாஜக தலைவர் எதியூரப்பா முதல்வரானார்.

ஆனால், ஒரே வாரத்தில் அவரைக் கவிழ்த்தார்.

இந் நிலையில் கர்நாடக சட்டசபையை கலைக்க கவர்னர் ராமேஸ்வர் தாக்கூர் கொடுத்த பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றது. இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அவையைக் கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந் நிலையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என மதசார்பற்ற ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரகாஷ் கூறியுள்ளார்.

டெல்லிக்குப் ேபான கெளடாவும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு காத்துக் கொண்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவளிக்கத் தயார் என்பதை சோனியாவிடம் தெரிவிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், ஏற்கனவே கெளடாவால் ஏமாற்றப்பட்டுள்ளதால் சோனியா இதுவரை அவரை சந்திக்க முன் வரவில்லை.

கர்நாடகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்களான தரம்சிங், மல்லிகார்ஜூன கார்கே, பாட்டீல் போன்றவர்களுக்கு கெளடாவுடன் சேர்ந்து ஆட்சியைப் பிடிக்க ஆசை தான். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களான சித்தராமையா, சிவக்குமார் போன்ற தீவிர கெளடா எதிர்ப்பாளர்கள் இந்த முயற்சியை எதிர்த்துள்ளனர்.

தங்களது எதிர்ப்பை நேரடியாகவே டெல்லி தலைமையிடம் தெரிவித்துவிட்டனர்.

நன்றிங்க

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்!

ஏழைக் குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை.

ஏழைக் குழந்தைகளுக்கு அரசு உதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை!

புதன்கிழமை, நவம்பர் 21, 2007

சென்னை: வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அரசு நிதியுதவியுடன் தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.

இதன்படி இருதய அறுவை சிகிச்சையின் தன்மையைப் பொறுத்து ரூ. 10,000 முதல் ரூ. 70,000 வரை தமிழக அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவமனைகள் இந்த குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்.

இதற்கான ஒப்பந்தத்தில் 17 தனியார் மருத்துவமனைகள் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்திட்டன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

மக்களின் வாழ்க்கையில் தற்போதைய மாறிவரும் சூழ்நிலைகள், உணவுப் பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் போன்றவை காரணமாக இதய நோயினால் பாதிக்கப்படுவோர் குறிப்பாக, இளம் சிறார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதய நோயினால் பாதிக்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காகக் குழந்தைகள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது முதல்வர் கருணாநிதியின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் அரிய உயிர்களைக் காக்கும் பொருட்டுத் தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ள 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் செய்வதற்காக, ஆண்டு வருவாய் ரூ. 50,000க்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதற்கான புதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.

அதன்படி இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 10,000மும், சாதாரண திறந்த இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 30,000மும், கடினமான இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ரூ. 70,000மும் நிதியுதவி வழங்கும் புதிய திட்டத்திற்கான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தலைமை செயலகத்தில் இன்று கையொழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இயக்குனரும், 17 தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்து கொண்டு காத்திருக்கும் 20 குழந்தைகளுக்கு உடனடியாக அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள 10 தனியார் மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசின் சார்பில் அனுமதிகளை வழங்கி இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்திட தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள 17 தனியார் மருத்துவமனைகள் விவரம் வருமாறு:

1. ராமச்சந்திரா மருத்துவமனை, போரூர்

2. அப்பல்லோ மருத்துவமனை, சென்னை

3. பிராண்ட்டியர் லைப் லைன் மருத்துவமனை, சென்னை

4. ஆர்.வே ஹெல்த்கேர் லிமிடெட், சென்னை

5. மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், சென்னை

6. கே.ஜெ.மருத்துவமனை, சென்னை

7. சூரியா மருத்துவமனை, சென்னை

8. மியாட் மருத்துவமனை, மனப்பாக்கம், சென்னை

9. லைப்-லைன் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சென்னை

10. செட்டிநாடு மருத்துவமனை, கேளம்பாக்கம், காஞ்சீபுரம்

11. வடமலையான் மருத்துவமனை, மதுரை

12. அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மதுரை

13. மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை

14. பி.எஸ்.ஜி. மருத்துவமனை, கோவை

15. ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை, கோவை

16. கே.ஜி. மருத்துவமனை, கோவை

17. ஜி. குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனை, கோவை.

நன்றிங்க

ஏழைக் குழந்தைகளை காக்கும் அரசின் இவ்வுதவிகள் முறையாக முழுதுமாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு போய் சேர வேண்டும் என வாழ்த்துவோம்.

Monday, November 19, 2007

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி.

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி- விமானம் ஒரு நாள் 'லேட்'!!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007

டெல்லி: துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியா விமானம் 24 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வந்து விமானத்திலும் ஏறி அமர்ந்துவிட்ட பயணிகள் மணிக்கணக்கில் பரிதவித்தனர்.

டெல்லியிலிருந்து நேற்று காலையில் துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியாவின் ஏஐ-841 விமானம் தாமதமானதால், அதில் செல்லவிருந்த 150 பயணிகள் பிற்பகலுக்கு மேல் அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர். அனைவரும் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணிக்கு துபாய் செல்லவிருக்கும் விமானத்தில் பயணம் செய்வதற்காக அனைத்து பயணிகளையும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமானம் நிலையம் அழைத்து வந்து, சோதனைகளையும் முடித்து விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டனர்.

ஆனால் விமானம் 6.30 மணிக்கு கிளம்பவில்லை. பின்னர் 8.30 மணிக்கு விமானத்திற்குள் வந்த பைலட், எனது பணி நேரம் முடிந்து விட்டபடியால் தற்போது விமானம் செல்லாது என்று அறிவித்தார்.

இதைக் கேட்ட பயணிகள் அனைவரும் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அனைத்து பயணிகளும் மீண்டும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

மூன்று முறை ரத்து செய்யப்பட்ட அந்த விமானத்தைக் கிளப்ப, விமானியின் பணி நேரத்தை அதிகரித்தாக வேண்டுமாம். இதற்காக விமானத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் ஏர் இந்தியா அனுமதி கேட்டதாம். அனுமதி கிடைக்க ெபரும் காலதாமதம் ஏற்பட்டு, இப்போது தான் அந்த அனுமதி கிடைத்துள்ளதாம்.

இதனால் அந்த விமானம் எந்த நேரமும் கிளம்பலாம் எனத் தெரிகிறது.

இந்த விமானம் மட்டுமல்ல டொரன்டோ, நியூயார்க், மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் ஏர் இந்தியாவின் உலகப் புகழ் குளறுபடியால் நேற்று நள்ளிரவில் இருந்து பல மணி நேரம் கால தாமதமாகியுள்ளன.

மேலும் டெல்லியில் உள்ள 22 ஏர் இந்தியாவின் கெளண்டர்களில் 20 கெளண்டர்களில் ஆளே இல்லாததால், யாரிடம் போய் கேள்வி கேட்பது என்று கூட தெரியாமல் பயணிகள் டெல்லி குளிரில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

ஏர்-இந்தியாவின் 'டாக்ஸி சர்வீஸ்':

இதற்கிடையே சனிக்கிழமை காலையில் துபாயிலிருந்து கோழிக்கோடு செல்லும் ஏர்-இந்தியாவின் ஏஐ-980 விமானம் திருவனந்தபுரம்
வந்திறங்கியது.

திருவனந்தபுரம் பயணிகள் இறங்கிவிட்ட நிலையில் மீதமிருந்த 20 பேர் கோழிக்கோடு செல்ல விமானத்திலேயே உட்கார்ந்திருந்தனர்.

ஆனால், இந்த விமானம் கோழிக்கோடு செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டது. எரிச்சலான பயணிகள் இறங்க மறுத்தனர்.

ஆனால், ஏசியை ஆப் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக பயணிகளை இறக்கிய அதிகாரிகள்
அவர்களை டாக்ஸிகளில் கோழிக்கோடு அனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் 1.15 மணி நேரத்தில் கோழிக்கோடு செல்லும் பயணிகளுக்கு டாக்ஸிகளில்ல் கோழிக்கோடு செல்ல 14 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

எப்பத்தான் ஏர் இந்தியா நிர்வாகம் திருந்துமோ...?

Sunday, November 18, 2007

02. பிளஸ் 2 படிப்புடன் மூட்டை கட்டும் மாணவர்கள்.

02. பிளஸ் 2 படிப்புடன் மூட்டை கட்டும் மாணவர்கள் 69%: முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் `திடுக்' தகவல் -நமது சிறப்பு நிருபர்-

பிளஸ் 2 படிக்கும் மாணவர்களில் 69.45 சதவீதம் பேர் உயர்கல்வி பயிலாமல், படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உயர்நிலைப் பள்ளி அளவில் இது 42.45 சதவீதமாக இருக்கிறது. தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வை சராசரியாக எட்டு லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 பொதுத் தேர்வை ஆறரை லட்சம் மாணவர்களும் எழுதுகின்றனர்.

இரண்டு பொதுத் தேர்வுகளுக்குப் பிறகு உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. குறிப்பாக, பிளஸ் 2 படிப்பை முடிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோருக்கு உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதற்கு பொருளாதார பிரச்னை முக்கியமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2005-06ம் கல்வியாண்டு நிலவரப்படி, தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் இடை நிற்றல் (டிராப்-அவுட்) அளவு குறித்த விவரம் முத்துக்குமரன் கமிட்டி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்பப் பள்ளி வரையான மாணவர்களின் இடை நிற்றல் அளவு 2.74 சதவீதமாகவும், நடுநிலைப்பள்ளி அளவில் 5.22 சதவீதமாகவும் இருக்கிறது. உயர்நிலைப் பள்ளி அளவில் 42.45 சதவீதம் பேரும், மேல்நிலைப் பள்ளி அளவில் 69.45 சதவீதம் பேரும் மேல்படிப்பை தொடராமல் பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். கடந்த 1995-06ம் ஆண்டு நிலையுடன் ஒப்பிடும்போது, மாணவர்களின் இடைநிற்றல் அளவு தற்போது கணிசமாக குறைந்துள்ளது.

பத்தாண்டுகளுக்கு முன்பு ஆரம்பப் பள்ளி வரையான மாணவர்களின் இடைநிற்றல் அளவு 15.85 சதவீதமாகவும், நடுநிலைப் பள்ளி வரையான இடைநிற்றல் அளவு 32.54 சதவீதமாகவும் இருந்துள்ளது. உயர்நிலைப் பள்ளி அளவில் 63.87 சதவீத மாணவர்களும், மேல்நிலைப் பள்ளி அளவில் 81.40 சதவீதம் மாணவர்களும் படிப்பை தொடர முடியாமல் விட்டுள்ளனர். பிளஸ் 2 படிப்பிற்குப் பிறகு மாணவர்கள் படிப்பை தொடர முடியாததற்கு, தேர்வில் தோல்வி அடைவதும் ஒரு காரணமாக இருக்கிறது. அதை எல்லாம் மனதில் கொண்டு தான் பிளஸ் 2 தேர்வில் அதிகமான மாணவர்கள் தோல்வி அடையும் அறிவியல் பாடத்தில் பல்வேறு மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, எழுத்துத் தேர்வில் (தியரி) குறைந்தபட்சம் 40 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில் குறைந்தபட்சம் 30 மதிப்பெண்களும் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. இதில், பெரும்பாலான மாணவர்கள் எழுத்துத் தேர்வில் நிர்ணயித்த மதிப்பெண்களை பெற முடியாமல் தோல்வி அடைந்தனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பிறகு இந்த பிரச்னை கண்டறியப்பட்டு, மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக எழுத்துத் தேர்வில் 30 மதிப்பெண்களும், செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களும் எடுத்தால் தேர்ச்சி என்று மாற்றம் செய்யப்பட்டது. எனவே, வரக்கூடிய காலங்களில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இடைநிற்றல் அளவும் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிங்க, தினமலர் 18/11/2007

பொதுவானவை.

பாஜக ஆட்சி தப்புமா?

நாளை வாக்கெடுப்பு: பாஜக ஆட்சி தப்புமா? -கெளடாவின் நிபந்தனையால் புது
சிக்கல்


ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007

பெங்களூர்: நாளை கர்நாடக முதல்வர் எதியூரப்பா சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ள நிலையில் பாஜகவுக்கு புதிய நெருக்கடியை தந்துள்ளது மதசார்பற்ற ஜனதா தளம். இதனால் பாஜக ஆட்சி தப்புமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

ஆட்சியை நடத்துவதற்கான 12 விதிமுறைகளை வகுத்துள்ள மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கெளடா, அது தொடர்பாக ஒரு ஒப்பந்தத்தையும் உருவாக்கி அதில் பாஜக கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.

மேலும் பெங்களூர் நகர மேம்பாட்டுத்துறையையும் கனிம வளத்துறையையும் தனது கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என கோரி வருகிறார். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் பாஜக கையெழுத்திடாமல் இருந்து வருகிறது. இதையடுத்து இன்று வரை (ஞாயிற்றுக்கிழமை) பாஜகவுக்கு கெடு விதித்தார் கெளடா. ஆனால், அதையும் பாஜக கண்டுகொள்ளவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்தெல்லாம் போட முடியாது என எதியூரப்பா கூறினார். அப்படியென்றால் ஆதரவு வாபஸ் என கெளடா அறிவித்தார்.

இதையடுத்து சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபித்துவிட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக எதியூரப்பா கூறி வருகிறார். ஆனால், இதை ஏற்க கெளடா தயாராக இல்லை.

இந் நிலையில் தனது கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கெளடா இன்று அவசரமாகக் கூட்டியுள்ளார். இதையடுத்து கெளடாவை ஒதுக்கிவிட்டு அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியை சந்திக்க எதியூரப்பா திட்டமிட்டுள்ளார்.

ஆனால், இதை கெளடா விரும்பவில்லை. இதனால் நாளை (19ம் தேதி) சட்டமன்றத்தில் நடக்கவுள்ள ஓட்டெடுப்பில் பாஜக கூட்டணி அரசு தப்புமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஒப்பந்த விஷயத்தில் பாஜக இன்றைக்குள் வளைந்து கொடுக்காவிட்டால் நாளைய ஓட்டெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தளம் காலை வாரி விடும் சூழல் எழுந்துள்ளது.

இதையடுத்து நிலைமை குறித்து விவாதிக்க இன்று பாஜக எம்எல்ஏக்களின் கூட்டத்தை எதியூரப்பா கூட்டியுள்ளார். மேலும் கெளடாவின் மிரட்டல் குறித்துப் பேச மூத்த கர்நாடக பாஜக தலைவர்கள் சிலர் டெல்லி விரைந்துள்ளனர்.

சிக்கல் மோசமாகியுள்ளதையடுத்து மூத்த பாஜக தலைவரான யஸ்வந்த் சின்ஹா இன்று பெங்களூர் வருகிறார். அவர் கெளடா-குமாரசாமி தரப்புடன் பேசி நிலைமையை சரி செய்துவிட்டால் பாஜக ஆட்சி தப்பும்.

நன்றிங்க

மதில் மேல் பூனைகள்...!

Thursday, November 15, 2007

வரதட்சணையா! விவாகரத்தா!!

வரதட்சணையா வேண்டும்? இந்தா... மணவிலக்கு!

புதன், 14 நவம்பர் 2007

திருமணமான சில மணிநேரத்திலேயே அத்திருமணத்தை ரத்து செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஒரு முஸ்லிம் மணமகள். பீஹார் மாநிலத்தின் ராஞ்ச்சி நகரத்திலிருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்பாத் பிரதேசத்தின் பத்துரியா எனும் கிராமத்தைச் சேர்ந்த Guddi என்ற பெயருள்ள இந்த மணமகளுக்கு, இம்தியாஸ் அன்ஸாரி என்பவருடன் கடந்த சனிக்கிழமை (10-11-2007) திருமணம் நடைபெற்றது.

திருமண ஒப்பந்தம் முடிவடைந்த சில மணிநேரத்தில் மணமகனின் குடும்பத்தினர் மணமகளின் பெற்றோரை அணுகி, வரதட்சணை தருமாறு கோரியுள்ளனர். மணமகனின் சகோதரி சில எலக்ட்ரானிக் பொருள்களையும் பணத்தையும் வரதட்சணையாகக் கொடுத்தாக வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இத்தகைய வற்புறுத்தல்களின் மூலம் அதிர்ச்சி அடைந்த மணமகள், அதன் பின் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் மணமகனின் சகோதரியை ஓங்கி அறைந்த கையோடு நில்லாமல், மேற்கொண்டு என்ன செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்காமல் மணவிலக்கு அளிக்கும் துணிச்சலான முடிவுக்கு உடனடியாக வந்துள்ளார், மணமகளான "Guddi".

"தனது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து வரதட்சணை கேட்டு என்னை வற்புறுத்துவதைப் பார்த்தும் வாய் பொத்தி பேசாமல் நின்றிருக்கும் இவருடன் நான் எப்படி வாழ்நாள் முழுவதும் குடும்பம் நடத்த முடியும்?" என்று கேட்கும் "Guddi" மணமகனுடன் புகுந்த வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டார்.

ஆரம்பத்தில் மணவிலக்கு அளிக்க ஒத்துழைக்காத "Guddi" யின் பெற்றோர் அவரது உறுதியான இந்த வாதத்தில் கட்டுப்பட்டு அவர்களின் ஒப்புதலைத் தெரிவித்துள்ளனர். "திருமணமான சில மணி நேரத்துக்குள் மணமகனின் பெற்றோர் வரதட்சணை கேட்டு நச்சரித்த காரணத்தினால் எனது மகளின் குறுகிய காலத் திருமணத்தையும் அதன் பின் உடனடியாக நடந்த மணவிலக்கையும் பற்றி நான் கவலைப்படவில்லை. என் மகள் ஓர் அச்சமுள்ள பெண்ணாக இருந்து, இவர்கள் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டுச் சென்றிருந்தால் என்னென்ன கொடுமைகளைச் சந்தித்திருப்பாளோ என்று எண்ணினால் எனக்கு அச்சமே மேலிடுகிறது" என்று பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார் மணமகளின் தந்தையான ரியாஸாத்.

இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு படைத்தவனுக்கு மட்டுமே அஞ்சி வாழும் ஒரு முஸ்லிம், தன்னுடையத் திருமண வேளையில் மட்டும் படைத்தவனை மறந்து, தான் மணம் புரியப்போகும் பெண்ணிடம் அதற்காகக் கைக்கூலியை கௌரவப் பிச்சையாகப் பெறுவது அவமானமானது மட்டுமல்ல, படைத்தவனின் சட்டத்திற்கு எதிராக அவனுக்கே சவால் விடுவதற்கு ஒப்பானதாகும் என்பதை அத்தகைய கைக்கூலி மாப்பிள்ளைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வளர்ந்து வரும் தனது மகளை திருமணச் சந்தையில் போட்டியிட்டுக் கட்டிக்கொடுக்க இயலாத தனது வறுமையினைக் கண்டு பயந்து சிசுக்களிலேயே பெண் குழந்தைகளைக் கொன்று விடும் பெற்றோர்களின் அறிவீனச் செயல்களுக்கு இத்தகைய கௌரவப் பிச்சை பெறும் மாப்பிள்ளை மாடுகளும் ஒரு காரணமாவர் என்பதை இவர்கள் எப்பொழுதும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.

மணம் புரிந்த அடுத்த கணத்திலேயே கௌரவப் பிச்சைக் கோரிய வீட்டுக்காரர்களின் முன் மௌனமாக நின்று அச்செயலுக்குத் துணைபோன இந்த மாப்பிள்ளை மாட்டிற்குச் சகோதரி "Guddi" கொடுத்த செருப்படி வரவேற்கத்தக்கதாகும். ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்ற பழமொழியை நினைவில் கொண்டு, சகோதரி "Guddi" யின் முன்னுதாரணத்தைக் கையில் எடுக்கச் சகோதரிகளும் முன் வர வேண்டும்.

இஸ்லாம் வலியுறுத்தும் பெண்களின் திருமணக் கொடைகளை வாரி வழங்குவோம்!

வரதட்சணையை எதிர்ப்போம்! கௌரவப் பிச்சைக்காரர்களை ஒழிப்போம்!

நன்றிங்க

இப்படித்தான் இருக்கணும்!

Tuesday, November 13, 2007

02.இல்லாத போலீசுக்கு சம்பளம்.

02.இல்லாத போலீசுக்கு சம்பளம்: அசாம் மாநிலத்தில் புதுவகை ஊழல்

கவுகாத்தி: போலீஸ் வேலையில் இல்லாதவர்களின் பெயரில் சம்பள பில் தயார் செய்து 40 கோடி ரூபாய் சுருட்டிய ஊழல் போலீஸ் உயர் அதிகாரிகள் அசாமில் கைது செய்யப்பட்டனர்.அசாம் மாநில போலீஸ் துறையில் புதியவகை ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, போலீஸ் பணியில் இல்லாதவர்களையும் போலியாக சம்பளப்பட்டியலில் சேர்த்து போலீஸ் அதிகாரிகளே லட்சம் லட்சமாகக் கொள்ளையடித்துள்ளனர். கிட்டத்தட்ட ரூ. 40 கோடி ரூபாய் வரை இப்படி முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் எஸ்.பி., இந்திரா கோகோய், ஏ.எஸ்.பி., பினோய் ரஞ்சன் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு போலீஸ் எஸ்.பி., கிருஷ்ணதாஸ் தலைமறைவாகவுள்ளார்.மோசடி தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடியில் மாநிலத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் பங்கு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஐ.ஜி., ஜீவன் சிங், டி.ஐ.ஜி., பரேஷ் நியோக் ஆகியோரும் மோசடியில் உடந்தையாக இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. போலீஸ் மற்றும் கருவூலத் துறை உயர் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து நடத்திய ஊழல் இது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றிங்க, தினமலர் 13/11/2007

அடப்பாவிங்களா...!

Sunday, November 11, 2007

சமுதாய சீரழிவு.

பள்ளிவாசல் பூட்டை உடைத்து தொழுகை செய்ததால் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 11, 2007

கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், பள்ளிவாசல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையநல்லூரில் 1994ம் ஆண்டு முபாரக் பள்ளிவாசல் துவங்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சேக் உதுமான் தலைவராகவும், அப்துல் ஜலீல் செயலாளராகவும் இருந்து வந்தனர்.

சைபுல்லா ஹாஜா உள்பட பலர் நிர்வாக குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர். செயலாளராக இருந்த அப்துல் ஜலீல் மறைவிற்கு பிறகு பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.

பள்ளிவாசல் தங்களுக்குதான் சொந்தம் என ஜாக் மற்றும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் உரிமை கொண்டாடினர். இதையடுத்து பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றது. தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக் அமைப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து ஜாக் அமைப்பினர் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.

தவ்ஹித் ஜமாத் அமைப்பினரும் இதே பள்ளிவாசலில் தொழுகை நடத்த முற்படவே பிரச்சனை ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அங்கு பதற்றம் ஏற்படவே நிரந்தரமாக பள்ளிவாசல் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதற்கிடையே தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாக குழு சார்பாக தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் தவ்ஹித் அமைப்புக்கு சார்பாக தீர்ப்பு வந்தது.

இதையடுத்து காலை இந்த அமைப்பினர் ஜாக் அமைப்பின் கட்டுபாட்டில் இருந்த பள்ளிவாசலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதுகுறித்து ஜாக் அமைப்பை சேர்ந்த முகமது சீராஜூதின் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். கடையநல்லூர் போலீசார் முபாரக் பள்ளிவாசல் பூட்டுக்களை உடைத்து உள்ளே நுழைந்ததாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில துணைத் தலைவர் சைபுல்லா ஹாஜா, பள்ளிவாசல் தலைவர் ஷேகனா மற்றும் நிர்வாகிகள் ரஹ்மதுல்லா, ஷேக் உதுமான், களந்தல் இப்ராஹீம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நன்றிங்க


"பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன" (அல்குர்ஆன் 72:18)

பள்ளிவாசல் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்லாத்தில் தீர்வு இல்லையா?

இவர்கள் ஏடுகளை சுமக்கும் கழுதைகள்!

Saturday, November 10, 2007

சந்தேகத்திற்கிடமான 2 பேர் கைது!

முதல்வர் வீட்டருகே சந்தேகமான வகையில் நடமாட்டம்- 2 பேர் கைது

சனிக்கிழமை, நவம்பர் 10, 2007

சென்னை: சென்னை கோபாலபுரதில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிய இருவர் பிடிபட்டனர்.

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்குள் மர்ம நபர் புகுந்த பரபரப்பு அடங்குவதற்குள் இச் சம்பவம் நடந்துள்ளது.

நேற்று காலை மர்ம நபர் ஒருவர் கருணாநிதியின் வீட்டின் முன்பு ஸ்கூட்டரில் சுற்றினார். அந்த இடத்தையே சுற்றிச் சுற்றி வந்த அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர் கோடம்பாக்கத்தை சேர்ந்த பாபு சந்திரசேகர் (வயது 33) என தெரியவந்தது. போதையில் தள்ளாடிய அந்த நபர், நான் முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல வந்தேன். ஏராளமான போலீசார் நின்றதால் பயந்து போய் இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.

மேற்கொண்டு விசாரணைக்காக அந்த நபர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் கருணாநிதியின் சி.ஐ.டி. காலனி இல்லத்தின் முன் ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சிக்கி மாட்டியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த அந்த நபரை போலீசார் பிடிக்க முயன்ற போது அவர் தப்பினார். இதையடுத்து போலீசார் அவரை விரட்டிச் சென்று பிடித்தனர்.

விசாரணையில் அவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த பத்மநாபன் என்று தெரிய வந்தது. சிஐடி காலனி பகுதியில் உள்ள ஒருவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்ததாகவும், சில தினங்களுக்கு முன்பு வேலையை விட்டு நீக்கி விட்டதால் மீண்டும் வேலை கேட்க வந்ததாகவும் போலீசாரிடம் அவர் கூறினார்.

இதையடுத்து போலீசார் பத்மநாபனின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவரது தந்தையிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந் நிலையில் மீண்டும் நேற்று காலை பத்மநாபன் சந்தேகமான வகையில் முதல்வர் வீட்டருகே மீண்டும் சுற்றி வந்தார்.

இதையடுத்து போலீசார் அவரை மீண்டும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றிங்க

சபாஷ் சரியான போட்டி!

அரசியல்வாதிகளிடமிருந்து பொது மக்களுக்கு Z பிரிவு பாதுகாப்பு தேவைப்படுமா?

Friday, November 09, 2007

முதல்வர் குண்டு வீசினால் வெடிக்காதா?

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவானது வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழி வாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றிவிட்டது. அவர்களுக்குத் தேவையெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைப்புத்தான். வந்தார் மோடி. போலீஸை அழைத்து அவர்களை 'கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்' என்று கட்டளையிட்டார்.

இந்திய_ பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படுகொலை ஆரம்பித்தது. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன. படுகொலைகளை, கற்பழிப்புகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்காவிடம் சொல்கிறார்கள் அந்தக் கொலைகாரர்கள். ('ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்'). ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப்படையைத் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது? எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத்தனத்துடன் விவரிக்கிறார்கள்.

எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள். ஒருவர் சொல் கிறார் "மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்.'' கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை...

நன்றிங்க, குமுதம் 07/11/07 அரசு பதில்கள்

//"மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்."//

ஏன்.. முதல்வராக இருப்பவர் குண்டு வீசினால் வெடிக்காதா?

Thursday, November 08, 2007

தாய்மார்களின் கவனத்திற்கு!

குழந்தைகளை அறிவுஜீவிகளாக்கும் தாய்ப்பால்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 6, 2007

லண்டன்: புட்டிப் பால் குடித்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளே நல்ல அறிவுஜீவிகளாக வளர்வதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய அறிவியல் அகாடமி நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. தாய்ப்பாலில் உள்ள சிறப்பு வகை கொழுப்பு அமிலங்கள், புட்டிப் பாலில் இருப்பதில்லை. இதன் காரணமாக, தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைகள், புட்டிப் பாலை குடித்து வளரும் குழந்தைகளை விட நல்ல புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

ஐ.க்யூ அளவில், புட்டிப் பால் குடித்து வளரும் குழந்ைதகளை விட இந்தக் குழந்தைகளுக்கு 7 புள்ளிகள் அதிகம் இருக்கிறதாம்.

தாய்ப்பாலில் உள்ள FADS2 என்ற புதிய வகை ஜீன்தான், குழந்தைகளின் புத்திசாலித்தனம், ஆரோக்கியம், மகிழ்ச்சித்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க உதவுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்தில், 7, 9, 11 மற்றும் 13 வயது கொண்ட 1037 குழந்தைகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு 18 வயதானபோது அவர்களின் டி.என்.ஏ. மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன.

இதேபோல, இங்கிலாந்தைச் சேர்ந்த 2232 இரட்டையர்களின் ஐ. க்யூ அளவும் சோதிக்கப்பட்டது. அவர்களின் ஐ.க்யூ அளவு 5 ஆக இருந்தது.

இரு பிரிவு குழந்தைகளுக்கும் ஐ.க்யூ சோதனை நடத்தப்பட்டபோது, தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட ஐ. க்யூ அளவு 7 புள்ளிகள் அதிகம் இருந்ததாம்.

தாய்ப்பாலில் மட்டுமே பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளது என்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பசும்பாலில் இது இல்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு அமிலங்கள்தான் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொழுப்பு அமிலங்கள்தான் நரம்பின் மூலம் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. மேலும் நரம்பிழைகளின் வளர்ச்சியையும் இந்த கொழுப்பு அமிலங்கள்தான் தூண்டுவிக்கின்றன.

புத்திசாலித்தனத்திற்கும், தாய்ப்பாலுக்கும் தொடர்பு உள்ளது என்பது முதல் முறையாக 1929ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது ஆதாரப்பூர்வமாக மீண்டும் உறுதிபட நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுத்தால் இளமையும், அழகும் குறைந்து போய் விடும் என்ற கருத்து உள்ள இன்றைய இளம் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு நிச்சயம் கண்களைத் திறந்து விட உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றிங்க

பொதுவானவை.

பெண் தோழியைக் கொன்று 'தின்ற' நபர்!

கேர்ள் பிரண்டை கொன்று 'தின்ற' நபர்!

வெள்ளிக்கிழமை, நவம்பர் 9, 2007

அலிகேன்ட் (ஸ்பெயின்): பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது பெண் தோழியைக் கொலை செய்து அவரது உடல் உறுப்புகளை தின்றதாக பரபரப்பான வாக்குமூலம் தந்துள்ளார்.

பால் டியூரன்ட் என்ற அந்த நபரின் கேர்ள் பிரண்டான கேரன் டியூரெல் கடந்த 2004ம் ஆண்டு ஸ்ெபயினில் காணாமல் போனார்.

இது தொடர்பாக டியூரன்டின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது ரத்தக் கறையுடன் கூடிய கத்திகள் கிடைத்தன. இதையடுத்து டியூரன்ட் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை நடத்தியபோது கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து ேகரனின் உடல் சிதைந்து போன நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டார் டியூரன்ட். இந் நிலையில் ஒரு பத்திரிக்கைக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தனது கேர்ள் பிரண்டை வெட்டிக் கொன்ற பின் அவரது உடல் உறுப்புகளில் பலவற்றை தான் தின்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.

நன்றிங்க

ஆமா, நர மாமிசத்தை சாப்பிட்டவனுக்கு ஆபத்து ஏற்படும் என்பார்களே அது நிஜமில்லையா?

Wednesday, November 07, 2007

நீதிபதிகளின் நூதன போராட்டம் தற்காலிக வாபஸ்

நீதிபதிகளின் நூதன போராட்டம் தற்காலிக வாபஸ்

புதன்கிழமை, நவம்பர் 7, 2007

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மாஜிஸ்திரேட்டை தாக்கியதைக் கண்டித்து, மதிய உணவு இடைவேளை இல்லாமல், நூதனப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நீதிபதிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.

எழும்பூர் 5வது பெருநகர நீதிபதி முருகானந்தம் சமீபத்தில் வக்கீல்களால் தாக்கப்பட்டார். இதை கண்டித்த தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம், நேற்று உணவு இடைவேளையின்றி பணியாற்றும் நூதனப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

ஆனால் இந்தப் போராட்டத்தை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் ஷா.

அப்போது, தாக்கப்பட்ட சம்பவத்தில் மேல் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.

இதையடுத்து நீதிபதிகளின் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

நன்றிங்க

போராட்டங்களை தவிர்க்க ஆணையிடும் நீதியே போராட்டம் நடாத்தினால் என்னய்யா செய்ய முடியும்?

8 கை, கால்களுடன் பிறந்த குழந்தை.

8 கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு வாழ்வு தந்த டாக்டர்கள்



புதன்கிழமை, நவம்பர் 7, 2007

பெங்களூர்: 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த 2 வயது பெண் குழந்தைக்கு பெங்களூர் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அந்தக் குழந்தை 2 கை, கால்களுடையதாக மாற்றப்பட்டு தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பீகார் - நேபாள நாட்டு எல்லைப் புறத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்குப் பிறந்த குழந்தைதான் லட்சுமி. 2 வயதாகும் லட்சுமி பிறந்தபோதே நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தது. ஆனால் தலை மட்டும் ஒன்றுதான் இருந்தது.

இதற்கு என்ன காரணம் என்றால், லட்சுமியின் தாயார் கர்ப்பமானபோது அவரது கருப்பையில் இரட்டைக் குழந்தைகளுக்கான கரு உருவானது. ஆனால் அது குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒரு கரு வளராமல் அப்படியே நின்று விட்டது. இதனால் லட்சுமியுடன் ஒட்டியபடி இன்னொரு சிசுவின் கைகளும், கால்களும் வளர்ந்தன. இதனால்தான் லட்சுமி நான்கு கைகள், கால்களுடன் பிறக்க நேரிட்டது.

இப்படி குழந்தை பிறந்ததால் லட்சுமியின் பெற்றோர் பெரும் வேதனை அடைந்தனர். பல டாக்டர்களையும் அணுகி வழக்கமான குழந்தையாக லட்சுமிய மாற்ற முடியாதா என்று ஆலோசனை கேட்டனர். ஆனால் போன இடமெல்லாம் அவர்களுக்கு பாதகமான பதிலே கிடைத்தது.

50 ஆயிரம் பேரில் ஒரு குழந்தைக்குத்தான் இதுபோல பாராசைட் பிரச்சினை வருமாம். ஆனால் இதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளிடம் நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றதில்லை.

இந்த நிலையில்தான் பெங்களூரைச் சேர்ந்த ஸ்பர்ஷ் மருத்துவமனை, லட்சுமிக்கு புது உயிர் அளிக்க முன்வந்தது. அறுவைச் சிகிச்சை மூலம் 2 கைகளையும், கால்களையும் அகற்ற முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து லட்சுமியை எடுத்துக் கொண்டு அவளது பெற்றோர் பெங்களூர் விரைந்து வந்தனர். ஸ்பர்ஷ் மருத்துவமனையில் லட்சுமியை அனுமதித்தனர்.

குழந்தைகள் நல அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சரண் பாட்டீல் தலைமையில் 30 பேர் கொண்ட டாக்டர்கள் குழு லட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்வது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு சோதனைகள், ஆய்வுகளை மேற்கொண்டது.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை ஆபரேஷன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை தொடங்கிய இந்த ஆபரேஷன் இன்று காலை வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடந்த இந்த ஆபேரஷன் இந்தியாவிலேயே முதல் முறையாக நடந்துள்ள அரிய வகை ஆபரேஷன் ஆகும். உலக மருத்துவ வரலாற்றிலும் இந்த ஆபரேஷன் முக்கிய இடத்ைதப் பிடித்து விட்டது.

லட்சுமியின் உடலில் எக்ஸ்ட்ராவாக வளர்ந்திருந்த கைகளையும், கால்களையும் முதலில் டாக்டர்கள் துண்டித்து அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் குழந்தையின் முதுகு தண்டுவடத்தை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் சரி செய்தனர். இது மிகவும் சிக்கலான ஆபரேஷன் என்பதால் டாக்டர்கள் குழு மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது.

லட்சுமியின் உடலில் செயல்படும் தன்மையில் இருந்த ஒரு சிறுநீரகம், பாலியல் உறுப்புகள், சிறுநீரக பைகள் உள்ளிட்டவை சரி செய்யப்பட்டுள்ளன.

இடுப்பு எலும்பும் சீரமைக்கப்பட்டுள்ளது. கால்களும் சீர் செய்யப்பட்டுள்ளன. இதற்கு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வெற்றிகரமாக நடந்த இந்த அறுவைச் சிகிச்சை குறித்து டாக்டர் சரண் பாட்டீல் கூறுகையில், எங்களது எதிர்பார்ப்புகளையும் தாண்டி குழந்தையிந் உடல் உறுப்புகள் மிகவும் சீராக இயங்குகின்றன. லட்சுமி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.

இனி லட்சுமி வழக்கமான பெண் குழந்தையைப் போல அனைத்து நலமுடனும் வாழ வழி பிறந்துள்ளது என்றார்.

தற்போது லட்சுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு சில நாட்கள் டாக்டர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணிப்பார்கள்.

தங்களது மகளுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள டாக்டர்களுக்கு லட்சுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். தங்களது மகளுக்குப் புது வாழ்க்கை கொடுத்த டாக்டர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்வதாக லட்சுமியின் தந்தை சாம்பு கூறினார்.

லட்சுமி விரைவில் முழு குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.

நன்றிங்க

குழந்தை நலம் பெற பிரார்த்தனைகள்.

16ம் தேதி சுனாமி வருமாம் (!?)

16ம் தேதி சுனாமி வருமாம்-சொல்கிறார் 'நிபுணர்'!

புதன்கிழமை, நவம்பர் 7, 2007

மார்த்தாண்டம்: ஆசிய கண்டம் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் வருகிற 16ம் தேதி சுனாமி அலைகள் தாக்கலாம், பூகம்பம் ஏற்படலாம் என கேரளாவைச் சேர்ந்த 'நிபுணர்' பாபுகலாயில் என்பவர் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு பி.கே. ஆய்வு கழகம் மற்றும் ஈ.எஸ்.பி என்ற அமைப்பின் இயக்குனர் பாபுகலாயில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 2004 டிசம்பர் 26ல் உலகத்தையே உலுக்கிய சுனாமியின் வடு இன்னும் மறையவில்லை. ஆயிரக்கனக்கான உயிர்களை பலி வாங்கி மக்களின் பொருளாதாரத்தை தகர்த்தெறிந்த இந்த கோர சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் மீண்டும் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரலாயைல் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.

விண்வெளியில் ஏற்படும் கால நிலை மாற்றத்தால் பயங்கரமான பூகம்பமும், சுனாமி பேரலை போன்ற கடுமையான கடல் கொத்தளிப்பும் நவம்பர் 16ம் தேதியில் இருந்து வரும் 2008 ஜனவரி மாதம் 28ம் தேதிக்கு இடைப்பட்ட மாதங்களில் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களை தாக்கும் அபாயம் உள்ளது.

இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீனா, ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கூடுதல் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாபு கலாயில் கூறியுள்ளார்.

சும்மா இருக்க மாட்டார் போலிருக்கே...

நன்றிங்க

ம்ஹும்,

Monday, November 05, 2007

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் உயருகிறது.

யு.ஏ.இ.: வெளிநாட்டுத் தொழிலாளர்களின் ஊதியம் உயருகிறது

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 6, 2007

துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பார்க்கும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதிய விகிதத்தை உயர்த்துவது குறித்து விரிவான அறிக்கை வழங்குமாறு தொழிலாளர் துறையை, எமிரேட்ஸ் அமைச்சரவை கேட்டுக் கொண்டுள்ளது.

ஐக்கிய அரபி எமிரேட்ஸில் வேலை பார்த்து வரும் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் சமீப காலமாக ஊதிய உயர்வு கோரியும், முறையான வீட்டு வசதி கோரியும் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

சமீபத்திலும் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். அவர்களில் சிலரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது எமிரேட்ஸ்.

இந்த நிலையில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை உயர்த்துவது குறித்து எமிரேட்ஸ் அரசு பரிசீலிக்க தொடங்கியுள்ளது.
ஊதிய உயர்வு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொழிலாளர் நலத் துறைக்கு, எமிரேட்ஸ் அமைச்சரவை நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து தொழிலாள் துறை இணைச் செயலாளர் ஹூமைத் பின் தீமாஸ் கூறுகையில், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இதில் எந்தவிதமான சட்ட மீறலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்.

சில நிறுவனங்கள், தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்தி வைத்துள்ளன. இதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக அந்த நிறுவனங்கள் கூறும் எந்தக் காரணத்தையும் ஏற்க முடியாது என்றார்.

இந்தியா வரவேற்பு:

தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து எமிரேட்ஸ் அரசு எடுத்துள்ள முடிவை இந்தியத் தூதரகம் வரவேற்றுள்ளது. இது மிகவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை என்று இந்தியத் தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துபாயில், இந்திய தூதர் வேணு ராஜாமணி கூறுகையில், இந்த ஆய்வின் முடிவினை அறிய நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எமிரேட்ஸில் வாழிட செலவுகள் அதிகரித்து விட்டன என்பதை அனைவரும் அறிவார்கள். எனவே இந்த சமயத்தில் இப்படிப்பட்ட முடிவை எமிரேட்ஸ் அரசு எடுத்திருப்பது மிகவும் வரவேற்புக்குரியது என்றார்.

ஊதிய உயர்வோடு, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம வசதிகள் கொண்ட குடியிருப்புத் திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய எமிரேட்ஸ் அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் எமிரேட்ஸில் பணியாற்றும் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் சம அந்தஸ்துடன் கூடிய குடியிருப்பு வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமிரேட்ஸ் அரசின் இந்த இரண்டு முக்கிய முடிவுகளால் அங்கு வேலை பார்த்து வரும் இந்தியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பிறந்துள்ளது.

நன்றிங்க

எப்படியோ தொழிலாளர்களுக்கு அநீதி இழைக்காமல் கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்தால் சரி.

Sunday, November 04, 2007

01.சூதாட்டத்தில் மனைவி இழப்பு.

01.சூதாட்டத்தில் மனைவி இழப்பு பீகாரில் விசித்திரம்

பாட்னா :சூதாட்டத்தில் பணம், நிலம், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்தவன், கடைசியில் மனைவியையும் இழந்தான்.

மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல, இப்போதும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த சாக்செட் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா சங்கர் சவுத்ரி. அதே கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் சிங் என்பவருடன் சூதாட்டம் ஆடினார்.விளையாட்டில், பணம் எல்லாம் போனதும், வீட்டில் இருந்த பொருட்களை இழந்தார்; அடுத்து, நிலத்தை இழந்தார். கடைசியில், விளையாட்டு வெறியில் மனைவியை "பகடையாக' வைத்து ஆடினார். மனைவியையும் இழந்தார்.

"இப்போதே உன் மனைவியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று, வீட்டில் பழியாய் கிடந்தார், சூதாட்டத்தில் வெற்றி பெற்ற மனோஜ் சிங். நல்லவேளை, அன்றைய தினம், துர்கா பூஜைக்காக, பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்தார் உமா சங்கரின் மனைவி சுனான்யா தேவி. மனைவியை இழப்பதில் உமா சங்கருக்கு விருப்பமில்லை. அதற்கு ஈடாக பணத்தை தந்து விடுவதாக கூறிப் பார்த்தார். ஆனால், மனோஜ் விடுவதாக இல்லை. விவகாரம், கிராம பஞ்சாயத்துக்கு போனது.

"இருவரும் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும். மனோஜ் சிங்குக்கு உமா சங்கர் ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டும்' என்று பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டது.பீகார் மாநில கிராமங்களில் இப்படி நடப்பது சகஜம் தான் போலும். இன்னொரு கிராமத்தில், திருமணமான பெண், விளையாட்டாக தன்னையே "பகடை'யாக வைத்து, சூதாடினார். சூதாட்டத்தில் அவருக்கு எதிராக விளையாடிய கிராமத்து இளைஞர் வெற்றி பெற்றார். உடனே, அந்த பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.இரண்டு நாளில், பஞ்சாயத்தார் போய், அந்த பெண்ணை மீட்டு, அவரின் கணவனிடம் ஒப்படைத்தனர்.

நன்றிங்க, தினமலர் 04/11/2007

சூதாட்டத்தில் பணம், வீடு. நிலம், ஆடு. மாடுகளையும் வைத்து ஆடலாம். இவைகளெல்லாம் பேசத் தெரியா ஜடங்கள்.

மனைவி என்பவள் ஒரு மனுஷி, பேசத் தெரிந்த சுதந்திரமுள்ள ஜடம் என்பதை உமா சங்கர்கள் உணர்வார்களோ! மற்ற பொருள்களைப் போல மனைவியை விலை கொடுத்தா வாங்கினார்? தன் இஷ்டத்துக்கு சூதாட்டத்தில் வைத்து ஆட...!

Thursday, November 01, 2007

6. நிருபரை எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம்.

6. நிருபரை எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம்: பீகாரில் இன்று பந்த்

பாட்னா : பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் குழுவினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் ‌கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ.,வின் இந்த அராஜக தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று ஒருநாள் முழு அடைப்பு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அங்கு பந்த் நடந்து வருகிறது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எம்.எல்.ஏ., மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும்‌ என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கோரிக்கை வைத்துள்ளார்.

நன்றிங்க. தினமலர் 02/11/2007

அதான் நிருபரை அடிச்ச எம்.எல்.ஏவை கைது செஞ்சு சிறையடைச்சாசில்ல அப்பறம் எதுக்கய்யா பந்த்..?

எப்படியெல்லாம் அரசியல் பண்றாங்கப்பா!

சென்னை நீதிபதியைத் தாக்கிய வக்கீல் கைது

சென்னை நீதிபதியைத் தாக்கிய வக்கீல் கைது

வெள்ளிக்கிழமை, நவம்பர் 2, 2007

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முருகானந்தத்தை தாக்கிய வழக்கறிஞர்களில் தங்கத்துரை என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாகி விட்ட இன்னொரு வழக்கறிஞரைத் தேடி வருகின்றனர்.

எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், திருட்டு வழக்கில் கைதான 4 பெண்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இளங்கோவன் மற்றும் தங்கத்துரை ஆகியோர் நீதிபதியை தாறுமாறாக திட்டினர்.

பின்னர் நீதிபதியின் அறைக்குச் சென்று அவரை சரமாரியாக அடித்தும், மிதித்தும், முகத்தில் எச்சிலை உமிழ்ந்தும், குடும்பத்தினர் குறித்து அசிங்கமாக பேசியும் அவமானப்படுத்தினர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து நீதிபதி முருகானந்தம், சென்னை எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிபதி ராமராஜிடம் புகார் கொடுத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சந்தித்து புகார் கொடுத்தனர்.

மேலும், எழும்பூர் காவல் நிலையத்தில் தங்கத்துரை, இளங்கோவன் உள்ளிட்ட 20 வக்கீல்கள் தன்னை தாக்கி அவமானப்படுத்தியதாக நீதிபதி முருகானந்தம் புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் மின்னல் வேகத்தில் போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர்.

நேற்று இரவு தங்கத்துரையைக் கைது செய்தனர். சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்ட அவரை ரகசிய இடத்திற்குக் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சிறையில் கொண்டு போய் அடைத்தனர்.

உயர்நீதிமன்றம் நோட்டீஸ்:

இதற்கிடையே, நீதிபதி முருகானந்தம் தாக்கப்பட்ட விவகாரத்தை தானாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதை எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்பிரமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை நேற்று விசாரித்தது.

பின்னர் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு இரு வக்கீல்களுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வருகிற 29ம் தேதி இரு வக்கீல்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவை சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு வக்கீல்கள் சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரினர்.

மன்னிப்பு கேட்ட வக்கீல்கள்:

இதற்கிடையே, நீதிபதி முருகானந்தத்தை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று ஒன்றாக சென்று சந்தித்து நடந்த செயலுக்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்பதாக கூறினர். மேலும் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கோரினர்.

ஆனால் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு விட்டது. போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. தலைமை நீதிபதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதி முருகானந்தம் கூறி விட்டார்.

நீதிபதிகள் ஆலோசனை:

இந்த நிலையில், சென்னையில் உள்ள எழும்பூர், ஜார்ஜ்டவுன், சைதாப்பேட்டை ஆகிய நீதிமன்றங்களின் நீதிபதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதனால் நேற்று முழுவதும் பெரும்பாலான நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணிக்கு வரவில்லை.

நன்றிங்க

எல்லா துறைகளிலும் அடிதடி வெட்டு குத்து அளவுக்கு போய் விட்டது. தொழிலாளி அதிகாரிகளை அடிப்பதும் அதிகாரிகள் தொழிலாளிகளை பழி வாங்கவதும், அரசியல்வாதிகள் தெர்ணடர்களை சாத்துவதும் தொண்டர்கள் அரசியல்வாதிகளை போட்டு தாக்குவதும் என எல்லா துறையிலும் அடிதடிகள் இயங்கி வருகின்றன.

நீதி துறையிலும் வாய் சண்டை மாறி அடிதடி நுழைந்திருப்பதால் பெரிசா ஒன்றும் குடி முழுகிவிடாது. நீதிபதியை வழக்குரைஞர்கள் அடித்த மாதிரி நாளை வழக்குரைஞர்களை நீதிபதிகளும் தாக்கலாம். இதெல்லாம் உள்துறை குழப்பம்.

பார்க்கலாம், இந்த வழக்காவது சீக்கிரமா முடிகியுமா? என்று.

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்.

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்

வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007

ராஜபாளையம்: முதுகுளத்தூரில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக ராஜபாளையம், ஆண்டிபட்டி பகுதியில் இன்று கலவரம் நடந்ததில் அப்பகுதியில் வந்த அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.

முதுகுளத்தூர் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை 50 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கியது. இதனையடுத்து இரு தரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் வின்சென்ட் தாம்சன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்றிரவு ராஜபாளையம்-தென்காசி சாலையில் சோலைச்சேரி விலக்கு அருகே ஒரு கும்பல் அந்த பக்கம் வந்த இரண்டு அரசு பேருந்து, ஒரு தனியார் பேருந்து, லாரி, ஆட்டோ ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்திய் சீமான், சேவுகபாண்டி, ஜீவா மோகன், ராமமூர்த்தி, அழகுமலை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று கண்டமனூரில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக போலீசார் கலவரக்காரர்களை தேடி வருகிறார்கள்.

இந்த கல்வீச்சு சம்பவங்களால் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றிங்க

ஹலோ பப்ளிக்,

உங்களுக்கு கட்சிப்பற்று மிக அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டு பொருட்களை போட்டு உடைத்து நொறுக்கலாம். ஏன் உங்கள் வீட்டையே இடித்து நொறுக்கி தரை மட்டமாக்கலாம். வீட்டில் தாய் தந்தை மனைவி மக்கள் என உறவினர்களை போட்டு நல்லா சாத்தலாம்.

இதையெல்லாம் விடுத்து பொது மக்களை தாக்கி பொது சொத்துக்களை ஏன் அழிக்கிறீர்கள் முட்டாள் பப்ளிக்!