கூடுதல் கட்டணம் வசூல் - 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007
சென்னை: தமிழகத்தில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 33 பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்த 33 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.
எனவே, ஏஐசிடிஇ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை நாங்கள் ரத்து செய்ய முடியாது. பல்கலைக்கழக இணைப்பு அனுமதியை வேண்டுமானால் ரத்து செய்யலாம். அந்த கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏஐசிடிஇ தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்கள் மூலமாக புதிதாக 20 பொறியியல் கல்லூரிகள் துவக்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பொது பல்கலைக்கழக சட்டம் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும். அதற்கான தொடக்கநிலை பணிகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
நன்றிங்க
சீக்கிரம் நடவடிக்கை எடுங்கப்பா, இவனுங்க லொள்ளு தாங்க முடியல..!
No comments:
Post a Comment