நீதிபதிகளின் நூதன போராட்டம் தற்காலிக வாபஸ்
புதன்கிழமை, நவம்பர் 7, 2007
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் மாஜிஸ்திரேட்டை தாக்கியதைக் கண்டித்து, மதிய உணவு இடைவேளை இல்லாமல், நூதனப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த நீதிபதிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
எழும்பூர் 5வது பெருநகர நீதிபதி முருகானந்தம் சமீபத்தில் வக்கீல்களால் தாக்கப்பட்டார். இதை கண்டித்த தமிழ்நாடு நீதிபதிகள் சங்கம், நேற்று உணவு இடைவேளையின்றி பணியாற்றும் நூதனப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
ஆனால் இந்தப் போராட்டத்தை நீதிபதிகள் திரும்பப் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கத்தைத் தொடர்பு கொண்டு பேசினார் ஷா.
அப்போது, தாக்கப்பட்ட சம்பவத்தில் மேல் நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.
இதையடுத்து நீதிபதிகளின் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படுவதாக நீதிபதிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நன்றிங்க
போராட்டங்களை தவிர்க்க ஆணையிடும் நீதியே போராட்டம் நடாத்தினால் என்னய்யா செய்ய முடியும்?
No comments:
Post a Comment