"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Friday, November 23, 2007
06. உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தி...
06. உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தி முட்டை தயாரிக்க ஆலோசனை
பெங்களூரு: இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4,450 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
முட்டை உற்பத்தியில் உலகளவில் நான்காவது பெரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இருப்பினும், தேவைக்கு ஏற்ப முட்டை சப்ளை இல்லை. 2020ம் ஆண்டில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கோடி முட்டை தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறை யை போக்க உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முட்டை உற்பத்தியை அதிகரிக்கலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகள் மூலம் பெறப்படும் பொருட்களின் உற்பத்தியை பயோ டெக்னாலஜி (உயிரி தொழில்நுட்பம்) மூலம் அதிகரிப்பது தொடர்பான தேசிய கருத்தரங்கு பெங்களூரில் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற இந்திய விவசாய ஆய்வு கவுன்சிலின் துணை பொது இயக்குனர் டாக்டர் புஜபராக் தான் இந்த யோசனையை தெரிவித்தார். இந்த தேசிய கருத்தரங்குக்கு உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தும் நிறுவனங்களின் சங்கமும் (ஏ.பி.எல். இ.,) மற்றும் தேசிய பிராணிகளின் புரதசத்து, உடல்கூறு நிறுவனமும் ( என்.ஐ. ஏ.என்.பி.,) ஏற்பாடு செய்து இருந்தன. இந்தியாவில் முட்டைகள் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் பணியில் என்.ஐ.ஏ.என்.பி., ஈடுபட்டு வரு கிறது. இதன் இயக்குனர் டாக்டர் கே.டி.சம்பத் கூறுகையில், `தமிழகத்தில் நாமக்கலில் உள்ள மூன்றாயிரம் கோழிகளிடம் உயிரி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முட்டைகள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து முயற்சி மேற்கொண்டோம். அதில் நல்ல பலன் கிடைத்தது. முட்டைகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
இடைவெளி விட்டு தான் கோழிகள் முட்டைகள் போடும். இந்த இடைவெளியை குறைப்பதில் தான் உயிரி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாட்டு கோழிகளிடம் இருந்து ஒரு ஆண்டுக்கு 60 முதல் 70 முட்டைகள் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிற வகை கோழிகளிடம் இருந்து ஆண்டுக்கு 325 முட்டைகள் கிடைக்கின்றன. எனவே நாட்டு கோழிகளிடம் தான் முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றிங்க, தினமலர் 23/11/2007
சீக்கிரம் கண்டு பிடியுங்கள் இல்லேன்னா 2020ம் ஆண்டில் ஆம்லெட் போட முட்டை கிடைக்காது... :-)))
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment