விமானத்தில் பறந்து போய் ரயிலில் பிச்சை * கேரள பிச்சைகாரரின் உல்லாச வாழ்க்கை
கொச்சி: பிச்சை எடுத்து உல்லாசமாக வாழ்கிறார் கேரள பிச்சைக்காரர் ஒருவர். விமானத்தில் பறந்து சென்று பிச்சை எடுத்த அனுபவம் கூட இவருக்கு உண்டு.
காசர் கோட்டைச் சேர்ந்தவர் முகமது அலி. வயது அறுபது. சொந்த ஊரில் அரை ஏக்கர் நிலமும் வீடும் உள்ளது. வங்கி வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் உள்ளது.
ஓட்டல்களில் தினமும் விலை உயர்ந்த உணவைத்தான் சாப்பிடுவார். ஒரு வேளையாவது பிரியாணி சாப்பிடாமல் இருக்க மாட்டார். மிகவும் பிரபலமான மில் தயாரிப்புகளில் 14 ஜோடி ஆடைகளை வைத்திருக்கிறார். சொந்த ஊரில் பெரும் தொழிலதிபர் போல் உடையணிந்துதான் நடமாடுவார். கவுரவமானப் பணியில் இருப்பதாக, ஊர்க்காரர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவ்வளவு ஆடம்பரமாக வசிக்கும் இவருக்கு வருமானம் எப்படி கிடைக்கிறது. பிச்சை எடுக்கிறார். அதுதான் இவரது தொழில். கேரளாவில் மசூதிகளில் தங்கி புதுப்புது இடங்களில் பிச்சை எடுப்பதில் பணம் சம்பாதித்து உல்லாசமாக வாழ்கிறார். தினமும் 250 ரூபாய் வரை பிச்சை மூலம் பார்த்துவிடுவார். விசேஷ நாட்களில் ஆயிரம் ரூபாய் சாதரணமாகக் கிடைத்துவிடுகிறது.
கந்தல் அழுக்கான உடைகளைக் கட்டிக் கொண்டு பிச்சை எடுப்பார். தொழில் முடிந்ததும், டிப்டாப் உடைக்கு மாறிவிடுவார். கிடைத்த பணத்தை உல்லாசமாக செலவிடுவார்.விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை இவருக்கு ஏற்பட்டது. கோழிக்கோடு விமான நிலையத்தில் விசாரித்தார். டிக்கெட் வாங்கி, விமானத்தில் பயணம் செய்து கொச்சியில் இறங்கினார். அங்கிருந்து திரும்பி வர போதிய பணம் இல்லாததால், அழுக்கான லுங்கிக்கு மாறி, ரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டே ஊர் திரும்பி விட்டார்.
நன்றிங்க, தினமல்ர் 28/11/2007
மிஸ்டர் பிச்சைகாரர் விமானத்தில் பறக்க கூடாதா?
விமானம் உயரே பறந்து ஒரு நிலைக்கு வந்தபின் அடுப்பில் மாட்டியுள்ள பெட்டை கழட்டி விட்டு, அவருக்கு விமானத்திலும் பிச்சை எடுக்கும் உரிமை வழங்க வேண்டும்!
பிச்சைகாரர் லட்ச ரூபாய் வைத்திருந்தால் அவரும் லட்சாதிபதிதான்.
''பிச்சைகார லட்சாதிபதி''
அட ...லாஜிக் இடிக்குதே
No comments:
Post a Comment