ஒட்டகப்பால் குடித்தால் நீரிழிவு நோய் வராது
ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு
கொல்கத்தா, டிச.3-
ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதன் காரணமாக நீரிழிவு நோயால் அவதிப்படுவோருக்கு ஒட்டகத்தின் பால் சிறந்த மருந்து என்று ராஜஸ்தான் மாநிலம் பிகானீரில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் நீரிழிவு நோய் பிரிவு தலைமை டாக்டர் ஆர்.பி.அகர்வால் தெரிவித்து உள்ளார்.
கடந்த 7 வருடங்களாக நீரிழிவு நோய் பற்றியும், அதற்கான மருந்துகள் பற்றியும் இவர் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார். கடந்த வருடம் முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து ஒட்டகப்பால் நீரிழிவு நோயை குணப்படுத்துவது பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தார். இதில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஒட்டகப் பால் பெருமளவில் குறைப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
கொல்கத்தாவில் இந்திய நீரிழிவு நோயாளிகளுக்கான ஆராய்ச்சி சங்கம் நடத்திய விழாவில் கலந்து கொண்ட டாக்டர் அகர்வால் இந்த தகவலை வெளியிட்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஒட்டகப்பால் அருந்தும் மக்களுக்கு நீரிழிவு நோய் வருவதில்லை என்றும் அவர் அப்போது கூறினார்.
ஜெய்பூர், ஜெய்சால்மர், பிகானீர் ஆகிய பகுதிகளில் வழக்கமாக ஒட்டகப்பால் அருந்தும் 2 ஆயிரம் பேரிடம் ஆராய்ச்சி மேற்கொண்டதில் அவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இயல்பான நிலையிலேயே இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றும் அவர் சொன்னார். இதைத் தொடர்ந்து ஒட்டகப்பாலை பவுடராக தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நன்றிங்க
நீரழிவு நோய் உள்ளவர்களெல்லாம் ராஜஸ்தான் மாநிலத்துக்கு குடியேற வேண்டியதுதான்.
2 comments:
ஒட்டகப்பால் குடிக்கத்தயாராக உள்ளோம்.
நாங்கள் வசிக்குமிடங்களில் இது கிடைப்பதில்லையே!
//இதைத் தொடர்ந்து ஒட்டகப்பாலை பவுடராக தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.//
வரவுக்கு நன்றி.
பால் கிடைக்க வழி இல்லாதோருக்கு ஒட்டகப் பால் பவுடர் விரைவில் கிடைக்கலாம்.
Post a Comment