Friday, December 21, 2007

உங்கள் கருத்துக் கணிப்பில்...

சிறந்த முதல்வர் எம்.ஜி.ஆர். - கருணாநிதிக்கு 3வது இடம்!

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 21, 2007

சென்னை: தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே மறைந்த எம்.ஜி.ஆர்தான் சிறந்தவர் என லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. கருணாநிதிக்கு 3வது இடமும், ஜெயலலிதாவுக்கு 4வது இடமும் கிடைத்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் சார்பில் அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படும். நடப்பு அரசியல், சமூக பிரச்சினைகளை மையமாக வைத்து இந்தக் ககருத்துக் கணிப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு கருத்துக் கணிப்பை லயோலா கல்லூரி நடத்தியுள்ளது. பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் தமிழகத்தில் 350 இடங்களில் 3281 பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் வெளியிட்டார். இதில் தமிழகத்தில் இதுவரை இருந்த முதல்வர்களிலேயே சிறந்தவர் எம்.ஜி.ஆர்.தான் என்று பெருவாரியான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தை பெருந்தலைவர் காமராஜர் பெறுகிறார். 3வது இடத்தில் முதல்வர் கருணாநிதி உள்ளார். 4வது இடத்தில் ஜெயலலிதா இருக்கிரார். பேரறிஞர் அண்ணாவுக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

திமுக ஆட்சி மீது திருப்தி:

கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சி நன்றாக உள்ளதாக 51.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சியின் பல்வேறு நலத் திட்டங்களுக்கும் மக்களிடையே நல்ல ஆதரவு இருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அதேசமயம் திமுகவுக்கு கடந்த கருத்துக் கணிப்பில் இருந்ததை விட இம்முறை கணிசமாக மக்கள் ஆதரவு குறைந்துள்ளதாகவும், அதிமுகவுக்கு கடந்த முறையை விட இந்த முறை கணிசமான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்து அரவணைத்துச் சென்றால்தான் திமுக அரசு முழுமையாக பதவிக்காலத்ைதப் பூர்த்தி செய்ய முடியும் என 18.5 சதவீதம் பேர் கருத்து ெதரிவித்துள்ளனர்.

சாதிப்பார் விஜயகாந்த்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களிடையே நல்ல ஆதரவு காணப்பட்டது. எதிர்காலத்தில் அவர் பெரும் சாதனை படைப்பார் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுளாக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தேமுதிக செயல்படுவதாக 48.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசியலில் விஜயகாந்த் பெரும் சக்தியாக வருவார் என்று 47.9 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், சரத்குமாருக்கு மக்களிடையே ஆதரவு இல்லை. அவர் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார் என வெறும் 4.3 சதவீதம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். கார்த்திக்குக்கு 4.1 சதவீத ஆதரவே கிடைத்துள்ளது. டி.ராஜேந்தருக்கு 1.3 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதல்வர் ஜெயலலிதா:

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு 32.1 சதவீதம் பேர் ஜெயலலிதா என்று கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு 27.9 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. விஜயகாந்த் 24.3 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. தயாநிதி மாறனுக்கும் இதில் இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 6.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தப் பட்டியலில் டாக்டர் ராமதாஸுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது.

ரஜினி வர மாட்டார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அவர் சினிமாவிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என 45.2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்மீகத்தில் ஈடுபடுவார் என 23.8 சதவீதம் பேரும், அரசியலுக்கு வர வேண்டும் என 11.3 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அன்புமணிக்கு ஆதரவு:

கட்டாய கிராமப்புற சேவையை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டும் மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த திட்டம் சரியானதே என்று 82.7 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இது நிச்சயம் பாமக தரப்புக்கு சந்தோஷம் கொடுக்கும் செய்தியாகும்.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என 72.4 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே ராமர் பாலம் தொடர்பான சர்ச்சையில், மக்கள் சேது சமுத்திரத் திட்டம் பக்கம் இருப்பது தெரிய வருகிறது.

அடுத்த பிரதமர் சோனியா:

சோனியா காந்திதான் அடுத்த பிரதமராக வருவார் என 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்திக்கு 10.6 சதவீதம் பேரும், அத்வானிக்கு 6.6 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு இடைத் தேர்தல் வருவதை தைரியமாக ஆதரிக்கும் கட்சிகள் எதுவும் இல்லை என்று 53.8 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என 53.4 சதவீதம் பேர் கருதுகின்றனர். 19.3 சதவீதம் பேரின் ஆதரவே பாஜக கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.

நன்றிங்க

போட்டி பொறாமையை வளர்த்து வன்முறையில் இறங்கியாவது அடுத்தவனை வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியை வளர்ப்பது இந்த கருத்துக் கணிப்பு.

உங்கள் கருத்துக் கணிப்பில் தீயை வைக்க...!

No comments: