Tuesday, December 18, 2007

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

யு.ஏ.இவில் தவித்த ஹஜ் பயணிகள்

புதன்கிழமை, டிசம்பர் 19, 2007

துபாய்: மெக்காவுக்கு அழைத்துச் செல்வதாக கூறி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இறக்கி விடப்பட்ட கிர்கிஸ்தான் ஹஜ் யாத்ரீகர்கள், அங்கிருந்து மெக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கிர்கிஸ்தானைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகள் அந்நாட்டைச் சேர்ந்த பயண ஏற்பாட்டாளரால் ஏமாற்றப்பட்டு சுற்றுலா விசாவில் புஜைராவில் இறக்கி விடப்பட்டனர்.

புஜைராவில் இறக்கி விடப்பட்ட அவர்கள் தாங்கள் வந்திருப்பது புனித மக்கா என நினைத்து அல்லாஹ¤ அக்பர் எனும் முழக்கத்துடன் வெளியே வந்தவர்களுக்கு ஏமாற்றம்.

பின்னர் இதனையறிந்த செம்பிறைச் சங்கம் அவர்களை பல்வேறு இடங்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளித்தது. மேலும் சவுதி அரேபியா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. இதற்கு ஷேக் கலீபா பவுண்டேஷன் மற்றும் சில தனவந்தர்கள் உதவி புரிந்தனர்.

தாங்கள் அமீரக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்த பயணிகள் நாடு திரும்பியதும் தங்களை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்படும் என தெரிவித்தனர்.

நன்றிங்க

மக்களின் ஆன்மீக ஆர்வத்தைப் பயன்படுத்தி வணக்க வழிபாடு என்ற பெயரால் ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்யும் கயவர்களை வன்மையாக தண்டிக்க வேண்டும்.

No comments: