"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''
Sunday, December 30, 2007
ஹலோ புஷ்...
எதேச்சையாக மதுபானக் கூடத்தில் நுழைந்த அந்த இளைஞனுக்கு ஒரு எதிர்பாராத அதிர்ச்சி.
உற்சாக பானத்தில் மிதந்து கொண்டிருந்த அந்த இரு ஆசாமிகளும் அசப்பில் ஜார்ஜ் புஷ்ஷைப் போலவும்... அவரது பாதுகாப்பு அமைச்சரைப் போலவும் தெரிய வரவே... பரிமாறிக் கொண்டிருந்த ஆளை அழைத்து... அது அவர்கள்தானா? என்று விசாரிக்க...
‘‘அதுகளேதான்’’ என்றபடி நகர்ந்தார் பரிமாறுபவர்.
உற்சாக மிகுதியில் துள்ளிக் குதித்த அந்த இளைஞன்........
‘‘ஹலோ புஷ்........நீங்கள் இரு வரும் எதைப்பற்றி இவ்வளவு சீரியசாக விவாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?’’ என்றான்.
‘‘நாங்கள் இருவரும் அடுத்து வரப்போகும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றது புஷ்.
‘‘அட... அப்படியா? சரி, இந்த முறை அமெரிக்காவின் கைங்கர்யமாக என்ன செய்வதாக உத்தேசம்?’’ என்றான் இளைஞன்.
‘‘இந்த முறை நாங்கள் ஒரு கோடி ஈராக்கியர்களைக் கொல்வோம். அத்தோடு கூடவே அழகி ஒருத்தியையும் கொல்லப் போகிறோம்’’ என்றது புஷ்.
அதிர்ந்து போன அந்த இளைஞன்... ‘‘என்னது..? அழகி ஒருத்தியைக் கொல்லப் போகிறீர்களா? எதற்காக?’’ என்று ஆத்திரத்துடன் வினவ... புஷ் தனது பாதுகாப்பு அமைச்சரின் தோளில் கை போட்டபடி.. ‘‘மச்சான்... இவனுக எவளோ அந்த ஒரு பொம்பளையப் பத்தித்தான் கவலைப்படுவானுக........ஆனா அந்த ஒரு கோடி ஈராக்கியர்களைப் பற்றி கவலையே படமாட்டானுக....ன்னு நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..?’’ என்றது புஷ்.
அப்படித்தான் ஆயிற்று நமது நிலையும்.
ஈராக்கில் அமெரிக்கப்படைகள் நுழைந்தபோது
ஆர்ப்பாட்டம்........
தர்ணா........
கொடும்பாவி எரிப்பு........
உண்ணாவிரதம்........
மறியல்........
என்று ஆர்ப்பரித்ததோடு சரி.
இப்போது அவரவர் வழியில் அவரவர்.
ஆனால் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது ஈராக்கின் துயரம்.
மொத்த உலகமும் இவைகளுக்கு மௌன சாட்சியாய்........
நீச்சல் தெரியாதவர்களை துப்பாக்கி முனையில் ஆற்றில் குதிக்கச் சொல்லி துடிதுடித்துச் சாவதை ரசிப்பது........
கைகள் கட்டப்பட்ட ஈராக்கியர்களை மிக உயரமான மாடிகளின் மேல் இருந்து குதிக்கச் சொல்வது........
ஹெலிகாப்டரில் இருந்தபடியோ... ட்ரக்குகளில் ஊர்ந்தபடியோ... கண்ணில் பட்டவர்களை எல்லாம் சாவகாசமாக சுட்டுக் கொல்வது...
கொன்றதற்குப் பிற்பாடு அவர்களுக்கு...
கிரிமினல்கள்...
ஊடுருவல்காரர்கள்........
தீவிரவாதிகள்........
பயங்கரவாதிகள்........
எனப் பட்டம் சூட்டுவது........
(பேசாமல் சுருக்கமாக ‘அமெரிக்கர்கள்’ என்று சொல்லி இருக்கலாம்)
‘நோக்கம் எதுவுமில்லாமல் மனம் போன போக்கில் மனிதர்களைச் சுடுவது ஜாலியாக இருக்கிறது’ என்கிறான் ஒரு அமெரிக்க வீரன்.
நேற்றுவரை இப்படி ஜாலியாகக் கொல்லப்பட்ட ஈராக்கியர்கள் எண்ணிக்கை வெறும் பதினோறு லட்சத்து பதினெட்டாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி ஆறே பேர் மட்டுமே
இந்த இதழ் அச்சாகி உங்கள் கைகளில் தவழும்போது இன்னும் சில நூறு உயிர்கள் நம்மிடம் இருந்து விடை பெற்றிருக்கும். அவ்வளவே.
நாமோ, இந்த வார டாப் டென்னில் ‘பில்லாவா?’ அல்லது ‘மிருகமா?’ என்கிற கவலையில்.
இன்றல்ல என்றுமே மௌனம் தான் நமது எதிரி.
நன்றிங்க
//‘‘மச்சான்... இவனுக எவளோ அந்த ஒரு பொம்பளையப் பத்தித்தான் கவலைப்படுவானுக........ஆனா அந்த ஒரு கோடி ஈராக்கியர்களைப் பற்றி கவலையே படமாட்டானுக....ன்னு நான் அப்பவே சொன்னேன் கேட்டியா..?’’ என்றது புஷ்.//
:)))
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment