கென்யாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தையடுத்து அங்கு வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியனரின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் கென்யாவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும். கென்யாவில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் அங்கு நடைபெறும் நிகழ்வுகளை கவனமுடன் கவனித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கென்யா அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நன்றிங்க, தினமலர் 03/01/08
கென்யாவில் வசிக்கும் இந்தியர்களின் நிலை பற்றிக் கவலைப்படும் நரஹத்தி மோடி குஜராத்தில் வாழ்ந்த குஜராத்தி(முஸ்லிம்)களைப் பற்றிக் கவலைப் படாதது ஏனோ...?
No comments:
Post a Comment