Thursday, January 03, 2008

முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து

10. முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து: குடும்ப நல கோர்ட் உத்தரவு

சென்னை: முஸ்லிம் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட் உத்தரவிட்டது.

தங்களை பிரித்து வைக்கும்படி கேட்டு சென்னையில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் முஸ்லிம் தம்பதி மனு தாக்கல் செய்திருந்தனர். "இனிமேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாது' என்று இரு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு முதன்மை நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பிலும் விருப்பத்துடன் விவாகரத்து கேட்கும்போது அதை அனுமதிக்க இஸ்லாமிய சட்டத்தில் இடம் இருக்கிறதா என்று கோர்ட் விசாரணை நடத்தியது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தது.

இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சிறப்பு திருமணச் சட்டம் 1954ன் படி திருமணம் செய்து கொண்டவர்களுக்கு பொருந்தக் கூடிய விவாகரத்து நடைமுறை முஸ்லிம்களுக்கும் பொருந்துமா என்றும் கேள்வி எழுப்பப் பட்டது.வாதங்களை கேட்டறிந்த நீதிபதி தேவதாஸ்,

"தலாக் நடைமுறை எந்த வகையில் இருந்தாலும் அல்லா ஏற்க மாட்டார். அல்லாவின் கட்டளைகளை நிறைவேற்ற முடியாத தம்பதிகள் பிரிவதற்கு நிச்சயம் அல்லா அனுமதிப்பார் . இந்த தம்பதிகளால் அல்லாவின் இல்லற கடமைகளை நிறைவேற்ற முடியாது. எனவே, தங்கள் முழு விருப்பத்துடன் பிரிவதற்கு அனுமதிக்கிறேன்' என்று உத்தரவிட்டார்.

நன்றிங்க, தினமலர் 03/01/08

அல்லாஹ் அனுமதித்தவற்றில் அவனுக்கு வெறுப்பானது தலாக் - விவாகரத்து.

ஆனாலும் தம்பதிகள் ஒன்றாக இணைந்து வாழவே முடியாது என்ற நிலையில் அல்லாஹ் தலாக்கை - விவாகரத்தை அனுமதிக்கிறான்.


இதைத்தான் ஜட்ஜய்யா சொல்ல வருகிறார் என்று நினைக்கிறேன்.

No comments: