04. புரி ஜெகநாதருக்கு "மனைவி' தேவை...! : இதுவரை யாரும் விண்ணப்பிக்கல
புரி : ஒரிசா மாநிலம் புரி கோவிலில் வீற்றிருக்கும் ஜெகநாத சாமிக்கு, மனைவியாக, ஒரு பெண்ணை நியமிக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை; இதுவரை, எந்த பெண்ணும் விண்ணப்பிக்கவில்லை.
புரி ஜெகநாதர் கோவிலில், தேவதாசி முறை, ஆயிரம் ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. கடவுளின் மனைவியாக கருதப்படுபவர் தேவதாசி. கோவிலில் கடவுளுக்கு நடக்கும் எல்லா சடங்குகளிலும், தேவதாசியின் பங்கு முக்கியம். காலையில், கடவுளை எழுந்திருக்க செய்வதற்கும், இரவில் தூங்க வைப்பதற்கும் அவர் பாடுவது முக்கியம்.புரி கோவிலில், தேவதாசியாக இருந்து வருபவர் சசிமணி தேவி; வயது 85.
தினமும் காலையிலும்,இரவிலும் கோவிலில் இவர் பாடுவதை பார்க்க பலர் கூடுகின்றனர். புரி ஜெகநாதரின் கடைசி "மனிதகுல' மனைவியாக இருக்கும் இவருக்கு வயதாகி விட்ட நிலையில், புதிய தேவதாசியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதற்காக, புரி மன்னரும், ஒரிசா அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், தேவதாசியாக இருக்க எந்த பெண்ணும் இதுவரை முன்வரவில்லை. அதனால், புரி கோவிலில் ஆயிரம் ஆண்டாக இருந்த தேவதாசி நடைமுறை, முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.
சசிமணி தேவி கூறுகையில்,"எனக்கு ஆறு வயதாக இருந்தபோது, என்னை ஜெகநாதரின் மனைவியாக்கி விட்டனர். என் அப்பா, அம்மா யார் என்று கூட எனக்கு தெரியாது. அந்த வயது முதல் கோவிலே கதியாக இருக்கிறேன். எனக்கு அம்மா, அப்பா, கணவன் எல்லாம் புரி ஜெகநாதர் தான். அவர் நிழலில் தான், வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தினமும் கோவிலில் வந்து என் "கணவன்' முன் பாடுவேன். நடனம் ஆட எனக்கு தெரியாது. அதனால், ஆடுவதில்லை ' என்று கூறினார். அவர் கைகளில் சிவப்பு வளையல்கள் குலுங்க, பட்டுப்படவை ஜொலிக்க ஜெகநாதர் சன்னிதிக்கு போய்க் கொண்டிருந்ததை பலரும் பார்த்து வியந்தனர்.
நன்றிங்க
''மணமகள் தேவை'' என்று எல்லா ஊடகங்களிலும் விளம்பரம் கொடுக்கலாம்!
No comments:
Post a Comment