பக்ரீத்: ஒட்டகம் வெட்ட தடை இல்லை
வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007
சென்னை: பக்ரீத் பண்டிகையொயைட்டி ஒட்டகத்தை பலி கொடுக்க தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையின்போது, ஆடுகள், ஒட்டகங்களை பலியிடப்படுவது வழக்கம். குர்பானி என்று இதற்குப் பெயர்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு குர்பானி கொடுக்கப்பட்டன. இதை எதிர்தது பிராணிகள் நலவாரியம், பல்வேறு அமைப்பினர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒட்டகம் வெட்ட தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் ஒட்டகத்தைப் பலி கொடுக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போதும் ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. தவ்ஹீத் ஜமாத் கட்சி சார்பில் நான்கு ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன
இதையடுத்து கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்த வக்கீல் ராஜேந்திரன் ஏற்கனவே இந்த வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி இதுதொடர்பாக முறையிட்டார்.
அவர் கூறுகையில், இந்த ஆண்டு 80 ஒட்டகங்களை குர்பானி கொடுக்க கொண்டு வந்துள்ளனர். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும், இதை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் எனவும் கோரினார்.
ஆனால் ஒட்டகம் வெட்டி குர்பானி கொடுப்பது மத வழக்கம் என்பதால் இதற்குத் தடை விதிக்க முடியாது. மேலும் இதை அவசர வழக்காகவும் விசாரிக்க முடியாது என்று கூறி நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சசீதரன் ஆகியோர் உத்தரவிட்டனர்.
நன்றிங்க
வளர்ப்பு பிராணிகளில் ஆடுகள், மாடுகள் போல் ஒட்டகமும் ஒரு வளர்ப்புப் பிராணி.
மதசார்பற்ற பாரத நாட்டில் அவரவர் மதத்தைப் பின்பற்ற எல்லா மதத்தினருக்கும் சுதந்திரம் உண்டு. பக்ரீத் பெருநாளில் ஆடு, மாடுகளைப் பலியிடுவது போல ஒட்டகத்தையும் பலியிடலாம் என்பது இஸ்லாமிய மதத்தின் வழிமுறை என்பது வழக்கு தொடுத்த வழக்குரைஞர் ராஜேந்திரனுக்குத் தெரியாமல் போய்விட்டது.
என்னவோ அவர் வீட்டு ஒட்டகத்தை அநியாயமாக அபகரித்து பலியிடுகிற மாதிரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
முஸ்லிம்கள் விலை கொடுத்து வாங்கிய பிராணிகளையே பலியிடுகிறார்கள் இதில் தலையிட்டு தடை செய்ய எவருக்கும் எந்த உரிமையும் இல்லை! இதை ராஜேந்திரன் போன்றவர்கள் உணர வேண்டும்.
2 comments:
அரபு நாடுகளில் ஒட்டகம்; நம் நாடுகளில் ஆடு மாடு போல்; அவை பால் இறைச்சிக்காக வளர்க்கப்படுபவை.
இதை வெட்டி இறைச்சியை விரும்புவோர் ,உண்பதில் இந்த வழக்கறிஞர் என்ன ??தவறு கண்டார்.
எதைப் பிரச்சனையாக்குவது எனும் விவஸ்தை இல்லையா?? இப்படி விவஸ்தை இல்லா வழக்குகளைத்
தாக்கல் செய்வோரை ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டுமெனும் சட்டம் கொண்டு வரவேண்டும்.
யோகன் பாரிஸ் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//இப்படி விவஸ்தை இல்லா வழக்குகளைத்
தாக்கல் செய்வோரை ஒரு மாதம் சிறையில் அடைக்க வேண்டுமெனும் சட்டம் கொண்டு வரவேண்டும்.//
சப்தமாக சொல்லாதீர்கள் பிறகு இதற்கும் வழக்கு போட்டு விடுவார்கள். :)
Post a Comment