Saturday, December 08, 2007

பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன்!

பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுகிறேன் - கல்யாண்சிங்

வெள்ளிக்கிழமை, டிசம்பர் 7, 2007

மதுரா (உத்தரப்பிரதேசம்): பாபர் மசூதியை இடித்ததற்காக பெருமைப்படுவதாக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் கூறியுள்ளார்.

மதுராவில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து அவர் கூறுகையில்,
அயோத்தியில் 15 வருடங்களுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்டது எனக்கு பெருமையாக உள்ளது.

தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கு ராமர் கோவில் இருந்தது என தெரிவித்துள்ளார்கள். ஆதாரம் இல்லாமல் நான் பேசவில்லை. அதை நிரூபிக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்ததுதான் உ.பியில் பாஜக செய்த மிகப் பெரிய தவறு. எப்போது நான் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரித்ததில்லை. இப்போது பாஜகவும் அதை உணர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மாஃபியா கும்பலையும், அடியாட்களையும் வைத்து தான் மாயாவதி ஆட்சி நடத்தி வருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த பல எம்.எல்.ஏக்கள் மீது கொலை, கற்பழிப்புப் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

உமா பாரதி மீண்டும் பாஜகவுக்கு திரும்பினால் கட்சி பலப்படும். அதுதொடர்பான வழிமுறைகளை பாஜக தலைமை காண வேண்டும் என்றார் கல்யாண் சிங்.

நன்றிங்க

ஐயா கல்யாண் சிங்!

நீர் ஓர் இந்துத்துவ பயங்கரவாதி என்பதை உம்முடைய வாயால் சொல்லாமலேயே நாட்டு மக்கள் அறிந்து வைத்துள்ளனர்!

1 comment:

சிந்திக்க உண்மைகள். said...

இராம சென்ம பூமிப் பிரச்சினைக்கு மரண அடி கொடுக்கும் அறிவாயுதம்.

பந்தர்பூர், பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன் திருப்பதி கோயில் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்தர் விகாரமே!

பந்தர்பூர், பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகாரங்களாகேவே இருந்து, பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்து மதக் கோயில்களை எல்லாம் மாற்றி மீண்டும் புத்த விகாரங்களாக வடிக்கும் ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டியிருக்கும்.

பாபர் மசூதி இருக்கும் இடம் இராமன் பிறந்த இடம்:
இராமன் கோயிலை இடித்துவிட்டுத்தான் அந்த இடத்திலேயே பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்று பார்ப்பனர்கள் கூறிப் பாபர் மசூதியை இடித்துவிட்டு, அதே இடத்திலே இராமர் கோயில் எழுப்பப்பட வேண்டும் என்று வெறிப் பிரச்சாரம் செய்து,

நாட்டில் மதத்தின் பெயரால் இரத்த வெள்ளத்தைப் பெருக்கோடச் செய்யத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்

“Tirupati Balaji was a Budhist Shrine” என்ற ஒரு நூல் வெளி வந்துள்ளது. அதை மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. சமனாதாசு F.R.C.S என்பவர் எழுதியுள்ளார். இந்நூலைப் பற்றிய குறிப்புரை இதோ:-

Lord Venkatesvara, the Presiding Deity on the famous Tirumala Hills. popularly known as Balaji of Tirupati. is an important Vaishnava Shrine of South India.

The nature of Lord Venkatesvara has always been a matter of dispute for centuries.Some Consider him as Vishnu. some as Siva. some as Sakthi, some as Skanda and some as Harihara.

Infact it was an old Buddhist worshlp during the general fall of Buddhism. He was a god of Tribal Buddhists and was Vaishnavized by pundits to his present form.

The weapons on Him are not original but provided at a latter date. How this was brought about. is explained with all historical and archaeological evidences/ Cults of Vitthala of Pandharpur, Jagannatha of puri. Ayappa on Sabarimla etc., which were originally Buddhist are discussed and many other Buddhist shriness which were hinduized and the history of india in general and South india in particular from, seventh to tenth century, during the period of fall, of Buddhism and rise of Brahmanic Tirupatl,is traced.

”“வெங்கடாசலபதி கடவுள் இருக்கும் திருப்பதி கோயில் என்பது தென்னகத்தில் உள்ள புகழ் பெற்ற விட்டுணுக் கோயிலாகும். வெங்கடாசலபதியின் வடிவம் பல நூற்றாண்டுக் காலமாகப் பிரச்சினைக்குரியதாகவே இருந்து வந்திருக்கின்றது.

சிலர் அந்தக் கடவுளை விட்டுணு என்றும், வேறு சிலர் சிவா என்றும், சக்தி என்றும் கந்தா என்றும் அரி அரண் என்றும் பலவாறாகக் கருதுகிறார்கள்.

உண்மையிலேயே திருப்பதி கோயில் என்பது தொடக்கத்தில் புத்தர் கோயிலாகவே இருந்தது; உள்ளே இருக்கும் மூர்த்தி சிலை என்பது புத்தபிரானே ஆவார்.

புத்த மார்க்கம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தபோது, அது பார்ப்பனீயத்தால் தங்களுடைய வழிபாட்டிக்குரிய இடமாக மாற்றப்பட்டது.

புத்தர் கோயில் வைணவ கோயிலாக இப்போதுள்ள தன்மையில் பார்ப்பன மயமாக்கப்பட்டது அப்பொழுது இந்தப் பார்ப்பனப் பண்டிதர்களால். தொல்பொருள் ஆய்வு, வரலாற்று ஆய்வு அடிப்படையிலே இந்தக் கருத்தை இந்நூலில் நூலாசிரியர் நிறுவியுள்ளார்.

பந்தர்பூர், பூரி செகந்நாதர், சபரிமலை அய்யப்பன் இவையெல்லாமே ஒரு காலத்தில் புத்த விகாரங்களாகேவே இருந்து, பிற்காலத்தில் இந்துக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

7 ஆம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை புத்த மார்க்கம் வீழ்ச்சி அடைந்த காலகட்டத்தில் இந்தியத் துணைக் கண்டத்திலும், சிறப்பாகத் தென்னிந்தியாவிலும், புத்த விவகாரங்கள் எல்லாம் இந்துக் கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன பற்றி இந்நூல் விவரிக்கிறது” என்று இந்நூலைப் பற்றிய குறிப்புரை கூறுகின்றது.

“பவுத்தமும் தமிழும்” என்ற நூலிலும் மயிலை சீனி வெங்கடசாமி அவர்களும் இதுபோல ஏராளமான தகவல்களைக் கொடுத்துள்ளார் என்பதைக் தமிழ்நாட்டு மக்கள் ஓரளவு அறிந்துள்ளார்கள்.

இந்த வகையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் கே. சமன்தாசு எழுதியுள்ள புதிய நூல். இராம சென்ம பூமிப் பிரச்சினைக்கு மரண அடி கொடுக்கும் அறிவாயுதம் மட்டுமன்று.

பார்ப்பனீயத்தை வேறு கோணத்தில் பார்ப்பனரல்லாதார் அனைவரும் பார்க்கும் ஒரு கண்ணோட்டத்தையும் வழங்கியுள்ளது என்றே கூறவேண்டும்.

வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்து, இராமர் கோயில் இருந்த இடத்தில்தான் அதனை இடித்துவிட்டுப் பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்கிறது. எனவே பாபர் மசூதியை இடித்துவிட்டு, அதன்மேல் மீண்டும் இராமர் கோயிலைக் கட்டவேண்டும் என்று பார்ப்பனீயம் அழுத்தம் கொடுக்குமேயானால், அதே கண்ணோட்டத்தில், திருப்பதி கோயில் உள்பட பல கோயில்களையும் வரலாற்று முறையாகவும், தொல்பொருள் ஆராய்ச்சி முறையாகவும் கணித்து, இந்து மதக் கோயில்களை எல்லாம் மாற்றி மீண்டும் புத்த விகாரங்களாக வடிக்கும் ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டியிருக்கும்.

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்கிற தன்மையில் இராம சென்ம பூமி பற்றி மட்டும் பார்ப்பனீயம் பேசுமானால், அதனைச் சந்திக்கக் கோடானகோடி ஒடுக்கப்பட்ட மக்கள் தயார்! தயார்!

இராமன் என்பவன் கலாச்சார சின்னம் என்று பார்ப்பனர்களால், பாரதீய சனதாவால், ஆர்.எசு.எசு., விசுவ இந்து பரிசத்து வகையறாக்களால் கூறப்படுவது உண்மைதான். ஆம்; அது பார்ப்பனர்களின் கலாச்சாரச் சின்னம்தான்.
ARTICLE FROM " VIDUTHALAI.com "
----------------------------------------------------
http://idhuthanunmai.blogspot.com/2007/12/blog-post_06.html