பள்ளிவாசல் பூட்டை உடைத்து தொழுகை செய்ததால் பரபரப்பு
ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 11, 2007
கடையநல்லூர்: நெல்லை மாவட்டம் கடையநல்லூரில், பள்ளிவாசல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையநல்லூரில் 1994ம் ஆண்டு முபாரக் பள்ளிவாசல் துவங்கப்பட்டது. இந்த பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு சேக் உதுமான் தலைவராகவும், அப்துல் ஜலீல் செயலாளராகவும் இருந்து வந்தனர்.
சைபுல்லா ஹாஜா உள்பட பலர் நிர்வாக குழு உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தனர். செயலாளராக இருந்த அப்துல் ஜலீல் மறைவிற்கு பிறகு பள்ளிவாசலை நிர்வாகிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
பள்ளிவாசல் தங்களுக்குதான் சொந்தம் என ஜாக் மற்றும் தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் உரிமை கொண்டாடினர். இதையடுத்து பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றது. தென்காசி உரிமையியல் நீதிமன்றத்தில் ஜாக் அமைப்பினருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதைத் தொடர்ந்து ஜாக் அமைப்பினர் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.
தவ்ஹித் ஜமாத் அமைப்பினரும் இதே பள்ளிவாசலில் தொழுகை நடத்த முற்படவே பிரச்சனை ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தொழுகையின் போதும் அங்கு பதற்றம் ஏற்படவே நிரந்தரமாக பள்ளிவாசல் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதற்கிடையே தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முபாரக் பள்ளிவாசல் நிர்வாக குழு சார்பாக தென்காசி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் தவ்ஹித் அமைப்புக்கு சார்பாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து காலை இந்த அமைப்பினர் ஜாக் அமைப்பின் கட்டுபாட்டில் இருந்த பள்ளிவாசலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து தொழுகை நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இதுகுறித்து ஜாக் அமைப்பை சேர்ந்த முகமது சீராஜூதின் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார். கடையநல்லூர் போலீசார் முபாரக் பள்ளிவாசல் பூட்டுக்களை உடைத்து உள்ளே நுழைந்ததாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில துணைத் தலைவர் சைபுல்லா ஹாஜா, பள்ளிவாசல் தலைவர் ஷேகனா மற்றும் நிர்வாகிகள் ரஹ்மதுல்லா, ஷேக் உதுமான், களந்தல் இப்ராஹீம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நன்றிங்க
"பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன" (அல்குர்ஆன் 72:18)
பள்ளிவாசல் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்லாத்தில் தீர்வு இல்லையா?
இவர்கள் ஏடுகளை சுமக்கும் கழுதைகள்!
4 comments:
ஒரு பிரச்சினை சம்பந்தமாக தென்காசி அமர்வு நீதிமன்றமும்- தென்காசி உரிமையியல் நீதி மன்றமும் எப்படி இரு வேறு தீர்ப்புக்களை வழங்கியிருக்கின்ரன என்று குழப்பமாக இருக்கிறது.
குழப்பவாதிகள் என்று ஒரு சாராரை மற்றொரு சாரார் குற்றம் சாட்டும் - மேற்கண்ட (JAQH - TNTJ)) இரு சாராரும் மேலும் குழப்பத்திற்கு-சீரழிவிற்கு வழிசெய்யமல் - அவர்களின் கொள்கையாக முழங்கி (மட்டும்) வரும் 'குர் ஆன் - ஹதீஸ்' அடிப்படையில் 'இந்த' ஒரு பிரச்சினைக்காவது தீர்வு காண எத்தனிக்கலாம்..
பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
1. ஜம்மயத்துல் அஹ்லுல் குர்ஆன், ஹதீஸ்
2. தமிழநாடு தவ்ஹீத் ஜமாத்.
இந்த இரண்டு இயக்கங்களும் குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு அல்லாஹ்வை நினைவு கூரும் பள்ளிவாசல் பிரச்சினைக்கு குர்ஆன் சுன்னாவில் தீர்வு இல்லையென நம்புகிறார்கள்.
'இந்த இரண்டு இயக்கங்களும் குர்ஆன், சுன்னாவை பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு அல்லாஹ்வை நினைவு கூரும் பள்ளிவாசல் பிரச்சினைக்கு குர்ஆன் சுன்னாவில் தீர்வு இல்லையென நம்புகிறார்கள்'
-முஸ்லிம்.
அப்படியென்றால் மேற்கண்ட இரு சாராரும் - இந்தப்பிரச்சினை சுமூகமாக தீர்ந்துவிட்டால் 'நாகூர் ஆண்டவருக்கு' மொட்டை அடிப்பதாக நேர்ந்துக்கொள்லலாம்.
இயக்க உறுப்பினர்கள் அடித்துக்கொள்வதா அல்லது தலைமைக்கு அடிப்பதா என்பதை 'பொதுக்குழு' கூட்டி முடிவு செய்துகொள்ளலாம்..ஹி..ஹி..
//இயக்க உறுப்பினர்கள் அடித்துக்கொள்வதா அல்லது தலைமைக்கு அடிப்பதா என்பதை 'பொதுக்குழு' கூட்டி முடிவு செய்துகொள்ளலாம்..ஹி..ஹி..//
மந்தையைப் போல் இயக்கத்திற்குப் பின்னால் செல்லும் உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.
Post a Comment