16ம் தேதி சுனாமி வருமாம்-சொல்கிறார் 'நிபுணர்'!
புதன்கிழமை, நவம்பர் 7, 2007
மார்த்தாண்டம்: ஆசிய கண்டம் மற்றும் பசிபிக் பிராந்திய நாடுகளில் வருகிற 16ம் தேதி சுனாமி அலைகள் தாக்கலாம், பூகம்பம் ஏற்படலாம் என கேரளாவைச் சேர்ந்த 'நிபுணர்' பாபுகலாயில் என்பவர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தை தலைமையிடமாக கொண்டு பி.கே. ஆய்வு கழகம் மற்றும் ஈ.எஸ்.பி என்ற அமைப்பின் இயக்குனர் பாபுகலாயில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 2004 டிசம்பர் 26ல் உலகத்தையே உலுக்கிய சுனாமியின் வடு இன்னும் மறையவில்லை. ஆயிரக்கனக்கான உயிர்களை பலி வாங்கி மக்களின் பொருளாதாரத்தை தகர்த்தெறிந்த இந்த கோர சம்பவம் நடந்து 3 ஆண்டுகள் முடிவடைவதற்குள் மீண்டும் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களில் பூகம்பம் மற்றும் சுனாமி பேரலாயைல் பாதிப்பு வர வாய்ப்புள்ளது.
விண்வெளியில் ஏற்படும் கால நிலை மாற்றத்தால் பயங்கரமான பூகம்பமும், சுனாமி பேரலை போன்ற கடுமையான கடல் கொத்தளிப்பும் நவம்பர் 16ம் தேதியில் இருந்து வரும் 2008 ஜனவரி மாதம் 28ம் தேதிக்கு இடைப்பட்ட மாதங்களில் ஆசியா மற்றும் பசிபிக் கண்டங்களை தாக்கும் அபாயம் உள்ளது.
இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீனா, ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கூடுதல் பாதிப்பும், உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று பாபு கலாயில் கூறியுள்ளார்.
சும்மா இருக்க மாட்டார் போலிருக்கே...
நன்றிங்க
ம்ஹும்,
2 comments:
தற்போது மட்டும் என்ன வாழ்கிறதாம்,
சுனாமி இல்லை பினாமி ஆக நிறைய தாக்குதல்கள் வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்
என்ன கொஞ்ச நாள் மீன் சாப்பிட முடியாது அம்புட்தேன்
Poovannan உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அதென்ன அப்படி சொல்லிட்டிய அதான் சுனாமி வரும் தேதி தெரிஞ்சு போச்சில்லா நெறைய மீனை வாங்கி குளிர் சாதன்ப் பெட்டியில வெச்சு சும்மா உட்காந்து சாப்பிட வேண்டியது தானே.
சுனாமிக்கு பொறவு யாரு இருப்பா யாரு இருக்க மாட்டாகன்னு யாருக்கய்யா தெரியும்னா கேக்கிறிய.
Post a Comment