Thursday, November 08, 2007

தாய்மார்களின் கவனத்திற்கு!

குழந்தைகளை அறிவுஜீவிகளாக்கும் தாய்ப்பால்

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 6, 2007

லண்டன்: புட்டிப் பால் குடித்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளே நல்ல அறிவுஜீவிகளாக வளர்வதாக இங்கிலாந்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய அறிவியல் அகாடமி நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. தாய்ப்பாலில் உள்ள சிறப்பு வகை கொழுப்பு அமிலங்கள், புட்டிப் பாலில் இருப்பதில்லை. இதன் காரணமாக, தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தைகள், புட்டிப் பாலை குடித்து வளரும் குழந்தைகளை விட நல்ல புத்திசாலிகளாக இருக்கிறார்கள்.

ஐ.க்யூ அளவில், புட்டிப் பால் குடித்து வளரும் குழந்ைதகளை விட இந்தக் குழந்தைகளுக்கு 7 புள்ளிகள் அதிகம் இருக்கிறதாம்.

தாய்ப்பாலில் உள்ள FADS2 என்ற புதிய வகை ஜீன்தான், குழந்தைகளின் புத்திசாலித்தனம், ஆரோக்கியம், மகிழ்ச்சித்தன்மை ஆகியவற்றை அதிகரிக்க உதவுவதாக இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நியூசிலாந்தில், 7, 9, 11 மற்றும் 13 வயது கொண்ட 1037 குழந்தைகளிடம் இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு 18 வயதானபோது அவர்களின் டி.என்.ஏ. மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டன.

இதேபோல, இங்கிலாந்தைச் சேர்ந்த 2232 இரட்டையர்களின் ஐ. க்யூ அளவும் சோதிக்கப்பட்டது. அவர்களின் ஐ.க்யூ அளவு 5 ஆக இருந்தது.

இரு பிரிவு குழந்தைகளுக்கும் ஐ.க்யூ சோதனை நடத்தப்பட்டபோது, தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட ஐ. க்யூ அளவு 7 புள்ளிகள் அதிகம் இருந்ததாம்.

தாய்ப்பாலில் மட்டுமே பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளது என்பதும் இந்த ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பசும்பாலில் இது இல்லை. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு அமிலங்கள்தான் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொழுப்பு அமிலங்கள்தான் நரம்பின் மூலம் செய்திகளை மூளைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. மேலும் நரம்பிழைகளின் வளர்ச்சியையும் இந்த கொழுப்பு அமிலங்கள்தான் தூண்டுவிக்கின்றன.

புத்திசாலித்தனத்திற்கும், தாய்ப்பாலுக்கும் தொடர்பு உள்ளது என்பது முதல் முறையாக 1929ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது ஆதாரப்பூர்வமாக மீண்டும் உறுதிபட நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுத்தால் இளமையும், அழகும் குறைந்து போய் விடும் என்ற கருத்து உள்ள இன்றைய இளம் தாய்மார்களுக்கு இந்த ஆய்வு நிச்சயம் கண்களைத் திறந்து விட உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றிங்க

பொதுவானவை.

No comments: