01.சூதாட்டத்தில் மனைவி இழப்பு பீகாரில் விசித்திரம்
பாட்னா :சூதாட்டத்தில் பணம், நிலம், உடைமைகள் எல்லாவற்றையும் இழந்தவன், கடைசியில் மனைவியையும் இழந்தான்.
மகாபாரதத்தில் பாண்டவர்கள் போல, இப்போதும் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த சாக்செட் கிராமத்தைச் சேர்ந்தவர் உமா சங்கர் சவுத்ரி. அதே கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் சிங் என்பவருடன் சூதாட்டம் ஆடினார்.விளையாட்டில், பணம் எல்லாம் போனதும், வீட்டில் இருந்த பொருட்களை இழந்தார்; அடுத்து, நிலத்தை இழந்தார். கடைசியில், விளையாட்டு வெறியில் மனைவியை "பகடையாக' வைத்து ஆடினார். மனைவியையும் இழந்தார்.
"இப்போதே உன் மனைவியை என்னிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று, வீட்டில் பழியாய் கிடந்தார், சூதாட்டத்தில் வெற்றி பெற்ற மனோஜ் சிங். நல்லவேளை, அன்றைய தினம், துர்கா பூஜைக்காக, பக்கத்து ஊரில் உள்ள கோவிலுக்குச் சென்றிருந்தார் உமா சங்கரின் மனைவி சுனான்யா தேவி. மனைவியை இழப்பதில் உமா சங்கருக்கு விருப்பமில்லை. அதற்கு ஈடாக பணத்தை தந்து விடுவதாக கூறிப் பார்த்தார். ஆனால், மனோஜ் விடுவதாக இல்லை. விவகாரம், கிராம பஞ்சாயத்துக்கு போனது.
"இருவரும் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும். மனோஜ் சிங்குக்கு உமா சங்கர் ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டும்' என்று பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டது.பீகார் மாநில கிராமங்களில் இப்படி நடப்பது சகஜம் தான் போலும். இன்னொரு கிராமத்தில், திருமணமான பெண், விளையாட்டாக தன்னையே "பகடை'யாக வைத்து, சூதாடினார். சூதாட்டத்தில் அவருக்கு எதிராக விளையாடிய கிராமத்து இளைஞர் வெற்றி பெற்றார். உடனே, அந்த பெண்ணை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டார்.இரண்டு நாளில், பஞ்சாயத்தார் போய், அந்த பெண்ணை மீட்டு, அவரின் கணவனிடம் ஒப்படைத்தனர்.
நன்றிங்க, தினமலர் 04/11/2007
சூதாட்டத்தில் பணம், வீடு. நிலம், ஆடு. மாடுகளையும் வைத்து ஆடலாம். இவைகளெல்லாம் பேசத் தெரியா ஜடங்கள்.
மனைவி என்பவள் ஒரு மனுஷி, பேசத் தெரிந்த சுதந்திரமுள்ள ஜடம் என்பதை உமா சங்கர்கள் உணர்வார்களோ! மற்ற பொருள்களைப் போல மனைவியை விலை கொடுத்தா வாங்கினார்? தன் இஷ்டத்துக்கு சூதாட்டத்தில் வைத்து ஆட...!
No comments:
Post a Comment