Monday, November 19, 2007

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி.

ஏர்-இந்தியாவின் 'மெகா' குளறுபடி- விமானம் ஒரு நாள் 'லேட்'!!

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 18, 2007

டெல்லி: துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியா விமானம் 24 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாகியுள்ளது. இதனால் விமான நிலையத்துக்கு வந்து விமானத்திலும் ஏறி அமர்ந்துவிட்ட பயணிகள் மணிக்கணக்கில் பரிதவித்தனர்.

டெல்லியிலிருந்து நேற்று காலையில் துபாய் செல்லவிருந்த ஏர்-இந்தியாவின் ஏஐ-841 விமானம் தாமதமானதால், அதில் செல்லவிருந்த 150 பயணிகள் பிற்பகலுக்கு மேல் அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் அமர வைக்கப்பட்டனர்.

பின்னர் எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு 2 மணி நேரத்திற்கு பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டனர். அனைவரும் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று காலை 6.30 மணிக்கு துபாய் செல்லவிருக்கும் விமானத்தில் பயணம் செய்வதற்காக அனைத்து பயணிகளையும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமானம் நிலையம் அழைத்து வந்து, சோதனைகளையும் முடித்து விமானத்திற்குள் அமர வைக்கப்பட்டனர்.

ஆனால் விமானம் 6.30 மணிக்கு கிளம்பவில்லை. பின்னர் 8.30 மணிக்கு விமானத்திற்குள் வந்த பைலட், எனது பணி நேரம் முடிந்து விட்டபடியால் தற்போது விமானம் செல்லாது என்று அறிவித்தார்.

இதைக் கேட்ட பயணிகள் அனைவரும் கொந்தளித்து விட்டனர். இதையடுத்து அனைத்து பயணிகளும் மீண்டும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

மூன்று முறை ரத்து செய்யப்பட்ட அந்த விமானத்தைக் கிளப்ப, விமானியின் பணி நேரத்தை அதிகரித்தாக வேண்டுமாம். இதற்காக விமானத்துறையின் டைரக்டர் ஜெனரலிடம் ஏர் இந்தியா அனுமதி கேட்டதாம். அனுமதி கிடைக்க ெபரும் காலதாமதம் ஏற்பட்டு, இப்போது தான் அந்த அனுமதி கிடைத்துள்ளதாம்.

இதனால் அந்த விமானம் எந்த நேரமும் கிளம்பலாம் எனத் தெரிகிறது.

இந்த விமானம் மட்டுமல்ல டொரன்டோ, நியூயார்க், மஸ்கட் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களும் ஏர் இந்தியாவின் உலகப் புகழ் குளறுபடியால் நேற்று நள்ளிரவில் இருந்து பல மணி நேரம் கால தாமதமாகியுள்ளன.

மேலும் டெல்லியில் உள்ள 22 ஏர் இந்தியாவின் கெளண்டர்களில் 20 கெளண்டர்களில் ஆளே இல்லாததால், யாரிடம் போய் கேள்வி கேட்பது என்று கூட தெரியாமல் பயணிகள் டெல்லி குளிரில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.

ஏர்-இந்தியாவின் 'டாக்ஸி சர்வீஸ்':

இதற்கிடையே சனிக்கிழமை காலையில் துபாயிலிருந்து கோழிக்கோடு செல்லும் ஏர்-இந்தியாவின் ஏஐ-980 விமானம் திருவனந்தபுரம்
வந்திறங்கியது.

திருவனந்தபுரம் பயணிகள் இறங்கிவிட்ட நிலையில் மீதமிருந்த 20 பேர் கோழிக்கோடு செல்ல விமானத்திலேயே உட்கார்ந்திருந்தனர்.

ஆனால், இந்த விமானம் கோழிக்கோடு செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டது. எரிச்சலான பயணிகள் இறங்க மறுத்தனர்.

ஆனால், ஏசியை ஆப் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக பயணிகளை இறக்கிய அதிகாரிகள்
அவர்களை டாக்ஸிகளில் கோழிக்கோடு அனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் 1.15 மணி நேரத்தில் கோழிக்கோடு செல்லும் பயணிகளுக்கு டாக்ஸிகளில்ல் கோழிக்கோடு செல்ல 14 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிங்க

எப்பத்தான் ஏர் இந்தியா நிர்வாகம் திருந்துமோ...?

2 comments:

பிறைநதிபுரத்தான் said...

இத்தனை குளறுபடிகள் உள்ள ஏர்-இந்தியாவில் இனிமேல் யார்தான் 'ஏறு'வார்ர்கள்.
ஏர்-இந்தியா - பயனிகள் 'ஏறா' இந்தியாவாக மாறுவதற்கு முன் காப்பாற்றப்படவேண்டும்.

முஸ்லிம் said...

பிறைநதிபுரத்தான் உங்கள் வரவுக்கு நன்றி.