6. நிருபரை எம்.எல்.ஏ. தாக்கிய விவகாரம்: பீகாரில் இன்று பந்த்
பாட்னா : பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி நிருபர் குழுவினர் தாக்கப்பட்டனர். இதையடுத்து எம்.எல்.ஏ., ஆனந்த் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ.,வின் இந்த அராஜக தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் இன்று ஒருநாள் முழு அடைப்பு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து அங்கு பந்த் நடந்து வருகிறது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எம்.எல்.ஏ., மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கோரிக்கை வைத்துள்ளார்.
நன்றிங்க. தினமலர் 02/11/2007
அதான் நிருபரை அடிச்ச எம்.எல்.ஏவை கைது செஞ்சு சிறையடைச்சாசில்ல அப்பறம் எதுக்கய்யா பந்த்..?
எப்படியெல்லாம் அரசியல் பண்றாங்கப்பா!
No comments:
Post a Comment