Thursday, November 01, 2007

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்.

ராஜபாளையம், ஆண்டிபட்டியிலும் கலவரம்

வியாழக்கிழமை, நவம்பர் 1, 2007

ராஜபாளையம்: முதுகுளத்தூரில் நடந்த கலவரத்தின் எதிரொலியாக ராஜபாளையம், ஆண்டிபட்டி பகுதியில் இன்று கலவரம் நடந்ததில் அப்பகுதியில் வந்த அரசு பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.

முதுகுளத்தூர் அருகே தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை 50 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கியது. இதனையடுத்து இரு தரப்பினருக்கு இடையே நடந்த கலவரத்தில் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் வின்சென்ட் தாம்சன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக நேற்றிரவு ராஜபாளையம்-தென்காசி சாலையில் சோலைச்சேரி விலக்கு அருகே ஒரு கும்பல் அந்த பக்கம் வந்த இரண்டு அரசு பேருந்து, ஒரு தனியார் பேருந்து, லாரி, ஆட்டோ ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, பேருந்துகளின் மீது தாக்குதல் நடத்திய் சீமான், சேவுகபாண்டி, ஜீவா மோகன், ராமமூர்த்தி, அழகுமலை ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று கண்டமனூரில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியது. இது தொடர்பாக போலீசார் கலவரக்காரர்களை தேடி வருகிறார்கள்.

இந்த கல்வீச்சு சம்பவங்களால் அப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றிங்க

ஹலோ பப்ளிக்,

உங்களுக்கு கட்சிப்பற்று மிக அதிகமாக இருந்தால் உங்கள் வீட்டு பொருட்களை போட்டு உடைத்து நொறுக்கலாம். ஏன் உங்கள் வீட்டையே இடித்து நொறுக்கி தரை மட்டமாக்கலாம். வீட்டில் தாய் தந்தை மனைவி மக்கள் என உறவினர்களை போட்டு நல்லா சாத்தலாம்.

இதையெல்லாம் விடுத்து பொது மக்களை தாக்கி பொது சொத்துக்களை ஏன் அழிக்கிறீர்கள் முட்டாள் பப்ளிக்!

1 comment:

*** said...

இறுதி பாரா சூப்பர். :-).

வேண்டியவருக்கு உறைத்தால் சரி!