Sunday, November 25, 2007

தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை!

சர்ச்சை எழுப்பக் கூடாது - தஸ்லிமாவுக்கு லாலு அறிவுரை

ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 25, 2007

கொல்கத்தா: தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், லஜ்ஜா என்ற நூலை எழுதி வங்கதேசத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி, 1994ம் ஆண்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார். கொல்கத்தாவில் தங்கியிருந்த அவரை வெளியேற சொல்லி முஸ்லீம் மதத்தின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் கலவரம் அங்கு வெடித்தது.

இதனை தொடர்ந்து அவர் வெளியேறி ராஜஸ்தானுக்கு சென்றார். ஆனால் அம்மாநில அரசு தஸ்லிமாவுக்கு தங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறிவிட்டதால், அவர் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் லாலு தஸ்லிமாவுக்கு புது எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், இஸ்லாம் மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதி, தேவையில்லாமல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாகி விட்டார்.

முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லீம் மதத்தை பற்றி அவதூறாக சித்தரித்து எழுதியதற்காக அவரை கண்டிப்பாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், விசா நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என்று சில முஸ்லீம் அமைப்புகள் கூறி வருகின்றன.

இதுகுறித்து வெளியுறவு துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அரசு கூடி ஆலோசித்து தான் முடிவெடுக்க வேண்டும் என்றார் லாலு.

நன்றிங்க

//முஸ்லீம் மதத்திற்கு எதிராக மட்டுமல்ல, இனிமேல் தஸ்லிமா எந்தவொரு மதத்திற்கும் எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை எழுதுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.//

நல்லாத்தான் சொல்லியிருக்கார், அம்மணிக்கு உரைக்குமா...?

No comments: