இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.
தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து?
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவானது வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழி வாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றிவிட்டது. அவர்களுக்குத் தேவையெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைப்புத்தான். வந்தார் மோடி. போலீஸை அழைத்து அவர்களை 'கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்' என்று கட்டளையிட்டார்.
இந்திய_ பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படுகொலை ஆரம்பித்தது. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன. படுகொலைகளை, கற்பழிப்புகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்காவிடம் சொல்கிறார்கள் அந்தக் கொலைகாரர்கள். ('ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்'). ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப்படையைத் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது? எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத்தனத்துடன் விவரிக்கிறார்கள்.
எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள். ஒருவர் சொல் கிறார் "மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்.'' கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை...
நன்றிங்க, குமுதம் 07/11/07 அரசு பதில்கள்
//"மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்."//
ஏன்.. முதல்வராக இருப்பவர் குண்டு வீசினால் வெடிக்காதா?
2 comments:
//"மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்."//
ஏன்.. முதல்வராக இருப்பவர் குண்டு வீசினால் வெடிக்காதா?//
வெடித்திருக்கும். ஆனால் ஒரு மாநில முதல்வர் என்ற நிலையில் அனைவரையும் கொல்ல அனைத்து இடங்களுக்கும் போகவேண்டியது கட்டாயமாகிவிடும். எனவேதான் அவர் குண்டு வீசப் போகவில்லை.ஆனால் குண்டு வீச்சாளர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் அரசு உதவிகளை அள்ளி வழங்கினார் என்பதே மேற்சொன்ன செய்திகளின் சாரம்.
வணங்காமுடி உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
முதல்வர் குண்டு வீசவில்லை!
முதல்வர் குண்டை வீசச் சொன்னார்!
இரண்டுக்கும் வித்தியாம் எதுவுமில்லை.
Post a Comment