Tuesday, November 27, 2007

பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ்...

மோட்டார் சைக்கிளில் சென்று
பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


சென்னை, நவ.27-

மோட்டார் சைக்கிளில் சென்று பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.

தங்கச்சங்கிலி பறிப்பு

சென்னையை அடுத்த அம்பத்தூர் அருகே உள்ள புதூர் செங்குன்றம் சாலையை சேர்ந்தவர் ராயப்பன். தனியார் பள்ளி காவலாளி. இவருடைய மனைவி தெரசம்மாள் (வயது55).
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அருகில் உள்ள கடைக்கு தெரசம்மாள் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் `ஹெல்மெட்' அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி, தெரசம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

விரட்டி பிடித்தனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த தெரசம்மாள், `திருடன்' `திருடன்' என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அருகில் நின்ற பொதுமக்கள் கொள்ளையனை விரட்டினார்கள். அந்த ஆசாமி பதட்டமடைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

அந்த ஆசாமியை அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமாரிடம் ஒப்படைத்தனர்
சப்-இன்ஸ்பக்டர்

போலீஸ் விசாரணையில், வழிப்பறி செய்தவர், விருப்ப ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. அவருடைய பெயர் ஜார்ஜ் (வயது 44). சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர்.

முதலில் வழிப்பறி செய்ததை அவர் மறுத்தார். தனது கண்ணெதிரே சங்கிலி பறிப்பு சம்பவம் நடந்ததாகவும், நானும் கொள்ளையனை பிடிக்க விரட்டி சென்றதாகவும், கீழே விழுந்த என்னை அவர்கள் தவறுதலாக பிடித்ததாகவும் தெரிவித்தார்.

கைது

போலீசார் இதை நம்பாமல் அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பையில் இன்னொரு தங்கச்சங்கிலி இருந்தது. இது பற்றி கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

போலீசார் துருவித்துருவி விசாரித்தபோது, செங்குன்றம் புழல் பகுதியில் ஒரு பெண் வக்கீலிடம் இந்த தங்கச்சங்கிலியை பறித்ததாக கூறினார். இதையொட்டி ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மேலும் எத்தனை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றிங்க

வேலியே பயிரை மேய்கிறதுன்ன சொல்வாங்களே...

No comments: