போலீசாருக்கு ஜெயலலிதா மிரட்டல்!!!
ஏப்ரல் 27, 2007
சென்னை: தமிழக காவல்துறை செயல் இழுந்து, உருகுலைந்து விட்டது என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக காவல்துறை மானிக் கோரிக்கை குறித்து சட்டசபையில் இரண்டு நாட்கள் விவாதம் நடைபெறும் என திமுக அரசு தெரிவித்துள்ளது. அதற்கான அவசியம் இல்லை. ஏனென்றால் ஒரு உருக்குலைந்து போன, செயல்திறன் இழந்து விட்ட ஒர் அமைப்பை பற்றி விவாதித்து இனி ஆகப்போறதென்ன.
ஒரு மாநிலத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பது என்பது ஒரு துறை சார்ந்த நடவடிக்கை அல்ல. இந்திய அரசியலைப்புச் சட்டத்தில் உள்ள பிரிவு 355ன் கீழ் ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசால் பாதுகாக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை கண்காணிக்க வேண்டும். மாநில அரசு அதை செய்ய தவறினால் சட்டம் ஒழுங்கு சீர் கேடான மாநிலம் என்று கருதி அங்கு அரசியல் சட்டம் 356ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்படும்.
இன்றைக்கு தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுக தான். இக்கட்சியின் பொறுப்பாளர்கள் திமுக குண்டர்களால் தாக்கப்பட்டும், வெட்டப்பட்டும், கொலை செய்யப்பட்டும், பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.
ஆனால் திமுக உறுப்பினர்கள், அமைச்சர்கள் மீதுள்ள வழக்குகள் அனைத்தும் திடீர், திடீர் என முடிவுக்கு வந்துள்ளது. உதாரணத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அவர் நீதிமன்றத்திற்கு போகமாலே முடிவுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் வெடிமருந்து கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த பயங்கார வெடிவிபத்து. பொது விநியோகத்திற்காக அளிக்கப்படும் அரிசி, லாரி, லாரியாக தமிழகத்தில் உள்ள சோதனை சாவடிகள் மூலம் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்பட்டுகின்றன.
கள்ளச்சாராயம் குடிசைச் தொழிலாய் தமிழகமெங்கும் நடந்து வருகிறது. கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் நக்சலைட் நடமாட்டம் பகிரங்கமாக காணப்படுகிறது. வீரப்பனை ஒழித்துக்கட்டிய காட்டில் புதிய வீரப்பனை உருவாக்கி வருகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் நடத்த வன்முறை மூலம் சங்க காலத்து போர்களத்தை தத்ரூபமாக திமுகவினர் நடத்தி காட்டியுள்ளனர். இதற்கொல்லமாம் வெண்சாமரம் வீசிக் கொண்டு இருந்தது தமிழக காவல் துறை.
செயல் இழந்த ஒரு அமைச்சரவை மத்தியிலும் இருக்கின்றது. பயந்து நடுக்கி செயல்படும் நபர் தமிழகத்தின் ஆளுநராக இருக்கிறார். இதனால் எதைபற்றியும் கவலைப்படாமல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பாவர்கள் பொது மக்கள் தான்.
தமிழகத்திற்கு அருகில் உள்ள ஒரு அண்டை நாட்டில் ஒரு பயங்கரவாத இயக்கம் வான்வழி தாக்குதல் நடத்தும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளதும் திமுக ஆட்சியில் தான். அவர்களுக்கு வேண்டிய அனைத்து வெடிபொருட்கள், ராணுவ தளவாடப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்திலிருந்து கருணாநிதியின் ஆட்சியில் தடையின்றி செல்கின்றன.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு நடமாடும் பொம்மையாக காவல் துறை தலைமை இயக்குனர் இருந்து கொண்டிருக்கிறார். காவல் துறையினருக்கு மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன். கருணாநிதியின் சொல்லைக் கேட்டு மக்கள் விரோத பாணியில் செயல்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுடியிருக்கும்.
இந்த ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்து விடும். அப்போது மக்கள் விரோதியாக காவல் துறை நின்று விடக்கூடாது என்பதற்காக இதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.
நன்றிங்க
அம்மா தாயே!?
முன்பு,
மாசம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய நீங்கள் 15.32 கோடி சொத்துக்களை வாங்கியதாக குற்றச்சாட்டு வழக்கு.
டான்சியிடமிருந்து 3.1 ஏக்கர் நிலமும் 2.698 சதுர மீ. கட்டிட பகுதியும் ஜெயா பப்ளிகேஷன் வாங்கியது. இந்த பேரத்தில் அரசு கல்லா பெட்டிக்கு 3.51 கோடி ரூபாய் நஷ்டம்.
பஞ்சாயத்துகளுக்காக கலர் டிவி பெட்டி வாங்கியதில் சந்தை விலையைவிட அதிகமாக ரூபாய் 14.500 வீதம் 45.302 கலர் பெட்டி அரசு வாங்கியது. இதில் 8.53 கோடி ரூபாய் கமிஷனாக நீங்கள் பெற்றது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்காக நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் 117 கோடி கமிஷனுக்கு திட்டம் தீட்டியது.
பிறந்தநாள் பரிசாக ஒரு அனாமதேயரிடமிருந்து 3லட்சம் டாலர் பெற்றது.
இன்னும் சென்னையிலும் ஹைதராபாத்திலும் இருக்கும் உங்கள் வீடுகளை சோதனை போட்டதில் கொள்ளை கொள்ளையாக பணமும் 30கிலோ தங்கம் - 350 ஜோடி வளையல். 800 கிலோ வெள்ளி. 90க்கும் மேற்பட்ட கைக்கடியாரங்கள். 150 க்கும் மேற்பட்ட கலை பொருட்கள். விலையுயர்ந்த கற்கள். 10.000 புடவைகள். இறக்குமதி செய்யப்பட்ட 750 ஜோடி செருப்புகளும் கிடைத்தன மொத்த மதிப்பு ரூபாய் 58 கோடியாகும் என்று கணக்கிடபட்டிருந்தது.
இப்படி உங்கள் மீது பல வழக்குகள் இருந்தும் அப்போதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் சட்ட ஒழுங்குகள் உருக்குலைந்துதான் இருந்தது என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். இதிலே மக்கள் விரோதியாக காவல்துறை நின்று விடக்கூடாதுன்னு நீங்கள் சொல்வது தப்புங்க தாயே!?
வேணும்னா,
நீங்கள் ஆட்சியில் இல்லாமல் எதிர்கட்சியாக இருக்கும்போது அதிமுகவுக்கு விரோதமாக காவல்துறை நிற்க கூடாதுன்னு நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்.
நீங்கள் ஆட்சியிலிருக்கும்போது திமுகவுக்கு விரோதமாக காவல்துறை நிற்க கூடாதுன்னு அவங்க சொல்லிக் கொள்ளட்டும்.
வீணாக,
மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் போல மாறி மாறி நீங்கள் அறிக்கை விடுவது உண்மையிலேயே சகிக்கவில்லையம்மா.
மக்கள் பாவம் அவர்களை விட்டு விடுங்கள் தாயே!?
No comments:
Post a Comment