Wednesday, April 25, 2007

25.இப்படியும் சில முஸ்லிம்கள்.

05.உடுமலை அமராவதி ஆற்றில் வீசி மகனையே நரபலி கொடுத்த தந்தை

உடுமலை: பெற்ற மகனையே நரபலி கொடுப்பதற்காக அமராவதி ஆற்றில் வீசி கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.

உடுமலை அருகே சோழமாதேவியை சேர்ந்த முகம்மது அலி மகன் முகம்மது இக்பால் (32).மாந்திரீகம் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இதே பகுதியில் வசிக்கும் மாந்திரீகர் ஜாபருடன் சேர்ந்து மாந்திரீகம் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தார். இதனால், இக்பால் மனைவி ஜமீலா தனது சொந்த ஊரான கேரளா மாநிலம் சோலக்கரைக்கு சென்றுவிட்டார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வந்து திண்டுக்கல்லில் அமைதியாக குடும்பம் நடத்தினார். இந்நிலையில், இவரின் மகன் ஆரீப்கான் (3) பிணமாக அமராவதி ஆற்றில் மிதந்தார்.

இச்சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, குழந்தையின் தந்தை முகம்மது இக்பால் மற்றும் மாந்திரீகவாதி ஜாபர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளனர். இதில், சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிர படுத்தினர்.

குழந்தை நரபலி : கொலை நடந்த அமராவதி ஆற்றுக்கு முகம்மது இக்பாலை போலீசார் அழைத்து சென்று, கொலை நடந்தது எப்படி என்பது குறித்து கேட்டனர். அப்போது, ஜாபர் முதலில் குழந்தையை ஆற்றுக்கு அழைத்து வந்ததை மட்டும் கூறியுள்ளார். பின்னர், குழந்தையை பாறை மீது அமரவைத்து தண்ணீருக்குள் தள்ளியதாகக் கூறியுள்ளார்.

போலீசார் கூறும் போது, "அதிக மாந்திரீக ஈடுபாடு காரணமாக கொலை நடந்துள்ளது. முகம்மது இக்பால் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. பிரேத பரிசோதனையிலும், குழந்தை தண்ணீருக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. கொலைக்கான காரணம், கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விரைவில் தெரியவரும்' என்றனர்.

24.04.2007 தினமலர் செய்திக்கு நன்றிங்க.

பெற்ற பிள்ளையாகட்டும் மற்ற பிள்ளைகளாகட்டும், பிள்ளைகளை பலியிடுவது இஸ்லாத்தில் இல்லை. மந்திர சடங்குகள் ஒருவனை எந்த அளவுக்கு மூடனாக்கி விடுகிறது. பெற்ற பிள்ளையை மாந்தீரிகத்துக்காக நரபலி கொடுக்க முன் வருபவன் கல்நெஞ்சகனாகவே இருப்பான்.

மாந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம் என்ற மூடநம்பிக்கைகளுக்கு முஸ்லிம்களும் விதிவிலக்கானவர்கள் இல்லை. இதற்கு இந்த செய்தியே சான்றாக இருக்கிறது.

குழந்தைகளின் மீதான அன்பு பாசம் இரக்கம் இந்த பண்புகளை இவர்களிடமிருந்து இறைவன் பறித்து விட்டான்!

இப்படியும் சில முஸ்லிம்கள்!!!

4 comments:

பாபு said...

என்னத்தச் சொல்ல..!

"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்'' - என்பதைத்தவிர!

Unknown said...

எப்பொழுது ஒருவன் ஆண்டவனை மறந்து மந்திரத்தில் நம்பிக்கை வைத்துவிட்டனோ அந்தக்கணமே அவன் இஸ்லாத்திலிருந்து விலகிவிட்டான்.

முஸ்லிம் said...

babu உங்கள் வருகைக்கு நன்றி.

//என்னத்தச் சொல்ல...!//

இப்படியும் சில முஸ்லிம்கள்!!!

முஸ்லிம் said...

kabeer உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

//எப்பொழுது ஒருவன் ஆண்டவனை மறந்து மந்திரத்தில் நம்பிக்கை வைத்துவிட்டனோ அந்தக்கணமே அவன் இஸ்லாத்திலிருந்து விலகிவிட்டான்.//

சரியாக சொன்னீர்கள்.