Monday, April 30, 2007

தேசியக்கொடி

இந்திய தேசியக் கொடியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்பது நம் நாட்டுச் சட்டம்.



"As per the Prevention of Insults to National Honour Act, 1971, not only is this act unethical and insensitive, but it also amounts to an offence with a maximum of three years imprisonment or fine or both.

The Act stipulates, "Whoever in any public place or in any other place within public view burns, mutilates, defaces, defiles, disfigures, destroys, tramples upon or otherwise shows disrespect to or brings into contempt (whether by words, either spoken or written, or by acts) the Indian National Flag or any part thereof, shall be punished with imprisonment for a term which may extend to three years, or with fine, or with both."

நன்றிங்க

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலந்து கொண்டு வேகமாகத் திரும்பிய டெண்டுல்கர் தேசியக் கொடி போல் செய்யப்பட்டிருந்த கேக்கை வெட்டிக் கொண்டாடினார்.

டி.வி.வர்ணனையாளர் மந்திரா பேடி உலகக் கோப்பை அணிகளின் நாட்டு கொடியை சேலையாக அணிந்திருந்தார். அவசர அவசரமாக மன்னிப்பு கேட்டு புடவையை மாற்றி விட்டார்.

இதெல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால் சமீபத்தில் பா.ஜ.க. விலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சாமியாரினியும் முன்னாள் மத்திய்ப் பிரதேச முதல்வருமான உமா பாரதி, சிலமதாங்களுக்கு முன் தேர்தல் பிரச்சாரத்தின்போது நம் நாட்டு தேசியக் கொடியில் மூக்கைச் சிந்தியது!

கிரிக்கெட்டின் மூலம் தேசபக்தி வளரும் என்று நம்பும் கூட்டம், யாராவது பாகிஸ்தானுக்கு கிரிக்கெட்டில் சப்போர்ட் பண்ணினால் கூட தேவையின்றி சாமியாடும் ஒரு கூட்டம், நம் நாட்டு தேசியக் கொடியை அவமதிக்கும் இத்தகைய இந்துக்களை என்ன செய்யப் போகிறார்கள்?

மந்திரா பேடியையும் டெண்டுல்கரையும் பாகிஸ்தானுக்கு போகச் சொல்வாங்களா? அல்லது சட்டப்படி மூன்று வருடம் சிறைத்தண்டனை பெறுவாங்களா?

கம்பத்தில பறக்கிறவரைக்கும் அது கொடி,






அதையே கீழே விரிச்சிட்டா...???

பட உதவிக்கு நன்றிங்க.

2 comments:

பாபு said...

முஸ்லிம் அய்யா,
தேசக்கொடியை தன் காலில் விரித்துள்ள பெண்மணியைப் பற்றியும் நீங்கள் குறிப்புகள் தந்திருக்கலாமே!

தேசப்பற்றை ஒட்டுமொத்த குத்தகையில் வைத்திருக்கும் பரிவாரக்கூட்டம் ஏன் குதிக்கவில்லை என்பது புரிபடுவதற்காவது!

முஸ்லிம் said...

பாபு உங்கள் வரவுக்கு நன்றி.

//தேசக்கொடியை தன் காலில் விரித்துள்ள பெண்மணியைப் பற்றியும் நீங்கள் குறிப்புகள் தந்திருக்கலாமே!//

அங்கின விரிக்கிறதுக்கு கொடியல்லவா குடுத்து வச்சிருக்கணும்.:)

படம் பேசும் என்பதால் நானொன்னும் பேசாம இருந்து விட்டேன்.