Tuesday, April 24, 2007

பின்னே வல்லரசுன்னா சும்மாவா!

அமெரிக்கா பாசிசப்பாதையில்: 10 அறிகுறிகள்

புதன், 25 ஏப்ரல் 2007

ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் மிக உன்னத நாடாகத் தன்னைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா எப்படி பாசிசப் பாதையில் படுவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை கார்டியன் பத்திரிக்கை அலசியுள்ளது.

1. மிகப்பயங்கரமாக நாட்டு மக்களைப் பயமுறுத்துதல்

'இஸ்லாமியத் தீவிரவாதம்' என்ற சொல்லை மந்திரம் போல் சொல்லி அதன் மூலம் பேரழிவு ஏற்படப் போவதைப் போல் ஒரு தோற்றத்தை உருவாக்குதல்.

2. மோசமான சூழலில் சிறை ஒன்றை உருவாக்குதல்

எல்லோரையும் பயமுறுத்தியாகிவிட்டதா, சட்ட எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சிறை உருவாக்கி அதில் மோசமான சூழலில் வழக்கே இல்லாமல் தனக்குப் பிடிக்காதவர்களைப் பிடித்து அடைத்துத் துன்புறுத்தல்

3. ரவுடிக்கூட்டத்தை உருவாக்குதல்

காவல் ரோந்து என்ற பணிக்கு ரவுடிக்கூட்டம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பும் அழித்தல். இந்தக் கூட்டம் வீடு புகுந்து என்ன வேண்டுமானாலும் செய்யும் நீங்கள் சந்தேக வளையத்தில் வந்தால்..

4. உள்நாட்டு பாதுகாப்பு என்ற பெயரில் எல்லாவற்றையும் கண்காணித்தல்

ஒரு தனிமனிதனுக்கு என்று தனிப்பட்ட சுதந்திரம், தனிப்பட்ட வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி தனிமனித சுதந்திரத்தில் தலையிடுதல்

5. மக்கள் உரிமைக் குழுக்களைச் சித்திரவதை செய்தல்

இதெல்லாம் என்ன நியாயம் என்று எந்த தனிநபரோ இயக்கமோ கேள்வி கேட்டால் அவர்களுக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தைக் கிளப்பி சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தல்

6. மனதுக்குத் தோன்றியபடி கைது செய்தல், விடுவித்தல்

ஒருவர் சந்தேக வளையத்தில் வந்துவிட்டாரா அவரை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்தல், பின்னார் வழக்கு ஏதும் அவர் மீது போட இயலாமல் விடுவித்தல் இதையே தொடர்ந்து செய்தல்.

7. முக்கிய ஆர்வலர்கள் / அரசு அலுவலர்களைக் குறிவைத்தல்

யாரேனும் மனித உரிமைச், சுதந்திரம் என்று பேசிவிட்டார்கள் எனில் அவர்களைப் பயமுறுத்தல், அரசு ஊழியர்கள் என்றால் அவர்களைத் தங்கள் ஆணைப்படி நடக்கவேண்டும் என்று மிரட்டுதல்

8. ஊடகங்களைக் கட்டுப்படுத்தல்

கருத்துச் சுதந்திர சொர்க்கமான அமெரிக்காவில் ஊடகக்கட்டுப்பாடா என்று வியக்க வேண்டாம். உண்மையில் அமெரிக்காவில் ஊடகங்களைக் கட்டுப்படுத்த இயலாது ஆனால் உண்மைகளை விட அதிகமான பொய்களைப் பெருமளவில் கலக்க விடுதலும் ஒரு வகையில் கட்டுப்படுத்தல் தானே?

9. விமர்சனம் என்பது தேசதுரோகம் என அறிவித்தல்

ஆட்சியில் இருப்பவர் செய்யும் அனைத்தையும் ஒத்துக் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் இல்லையேல் தேசதுரோகிப் பட்டம் கட்டி மூலையில் கிடத்தி விடுதல்.

10. சட்டம் ஒழுங்கு எல்லாம் ஏட்டளவிலேயே

புதிது புதிதாக சட்டத் திருத்தம் என்ற பெயரில் சட்டத்தையே இல்லாமல் செய்து விடுதல். அதாவது அமெரிக்க அதிபர் விரும்பினால், போர், இயற்கைச் சீரழிவு அல்லது அவர் தேவை என நினைக்கும் எந்த சூழலுக்கும் அமெரிக்கப் படையைப் பணியில் ஈடுபடச்செய்ய இயலும் என்பது போன்ற திருத்தங்கள் கொண்டுவருதல்.

இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் அமெரிக்கா பாசிசப்பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

நன்றிங்க

சட்ட ஒழுங்கை வெறும் ஏட்டளவில் வைத்து கொண்டு நான் வைச்சதே சட்டம் என்று அடக்கியாள்வதற்கு பெயர்தான் வல்லரசு.

சர்வாதிகாரத்துக்கு ஜனநாயக சாயம் பூசிக்கொண்டிருக்கிறது வல்லரசு அவ்வளவுதான்.

17 comments:

வித்யார்தி said...

ஏனுங்க, ஏதேனும் இஸ்லாமிய தீவிரவாத முயற்சி சமீபத்தில் முறியடிக்கப்பட்டதா? இவ்வளவு கடுப்புல எழுதியிருக்கீங்க.

நல்லடியார் said...

//ஏனுங்க, ஏதேனும் இஸ்லாமிய தீவிரவாத முயற்சி சமீபத்தில் முறியடிக்கப்பட்டதா? //

அறியாதவன்,

ஏனுங்க, ஏதேனும் பாசிச தீவிரவாத முகத்திரை சமீபத்தில் கிழிக்கப்பட்டதா? இவ்வளவு கடுப்புல எழுதியிருக்கீங்க?

கரு.மூர்த்தி said...

அடடா , என்ன உள்குத்து ,அமரிக்கா என்ற பெயரை ஏடுத்துவிட்டு தமிழ்மணம் என்று போட்டால் அப்படியே பொருந்துகிறதே ?

மரைக்காயர் said...

//ஏனுங்க, ஏதேனும் பாசிச தீவிரவாத முகத்திரை சமீபத்தில் கிழிக்கப்பட்டதா?//

என்னது.. கிழிக்கப்பட்டதாவா? நீங்க தமிழ்மணம் பக்கமெல்லாம் போறதில்லையா என்ன? முகத்திரை கிழிக்கப்பட்டவங்களும் கிழிபடப்போகுதுன்னு பயந்தவங்களும் துண்டைக் காணோம் துணியக்காணோம்னு ஓடிக்கிட்டிருக்காங்க!! நீங்க என்னன்னா 'பாசிச தீவிரவாத முகத்திரை சமீபத்தில் கிழிக்கப்பட்டதா?'ன்னு சாவகாசமா கேள்வி கேட்டுட்டிருக்கீங்க!!!

முஸ்லிம் said...

அறியாதவன் உங்கள் வருகைக்கு நன்றி.

நீங்கள் உண்மையாகவே அறியாதவன்தான்.

//இஸ்லாமிய தீவிரவாத முயற்சி//

என்ன செய்ய வெள்ளை கோழியை சாயத்தில் முக்கி விட்டால் செவப்பு கோழியாகிவிடும்னு நீங்கள் நினைத்து கொள்கிறீர்கள்.

தண்ணீர் பட்டால் உங்க சாயம் வெளுத்து விடும் என்பதை வசதியாக மறைத்து கொண்டு நீங்களே திருப்திபட்டு கொள்ளுங்கள்.

முஸ்லிம் said...

நல்லடியார் உங்கள் வருகைக்கு நன்றி.

//ஏனுங்க, ஏதேனும் பாசிச தீவிரவாத முகத்திரை சமீபத்தில் கிழிக்கப்பட்டதா? இவ்வளவு கடுப்புல எழுதியிருக்கீங்க?//

ஒரு ஜாலியான ஏதார்த்த பதிவும் அறியாதவனுக்கு கடுப்பாக தெரிகிறது என்றால் இவர் எரிச்சலின் எல்லையிலிருந்து கொண்டு பிறர் மீது எரிந்து விழுகிறார்.

நல்லடியார் said...

//அரிக்கா என்ற பெயரை டுத்துவிட்டு தமிழ்மணம் என்று போட்டால் அப்படியே பொருந்துகிறதே ? //

கரு.மூர்த்தி என்ற பெயரை எடுத்துவிட்டு சமுத்ரா என்று போட்டால் அப்படியே பொருந்துகிறதே !

நல்லடியார் said...

முஸ்லிம்,

என்னைப்போயி பின்னூட்ட கயமைத்தனம் பண்ணுறேன்னு சொல்றீங்களே. இது நியாயமா? :-)

வித்யார்தி said...

//என்ன செய்ய வெள்ளை கோழியை சாயத்தில் முக்கி விட்டால் செவப்பு கோழியாகிவிடும்னு நீங்கள் நினைத்து கொள்கிறீர்கள்.//

ஒண்ணுமே பிரியல போ!! கோழியப்பத்தி நமக்கென்ன தெரியும். நாம தான் சைவமாச்சுதுங்களே.

//தண்ணீர் பட்டால் உங்க சாயம் வெளுத்து விடும் என்பதை வசதியாக மறைத்து கொண்டு நீங்களே திருப்திபட்டு கொள்ளுங்கள்.//

இதில் //உங்க சாயம்// "உங்க" என்பது யாருங்க? என்னை மட்டுமா, இல்லை ஏதாவது Generalization ஆ. ஜாலியாகத்தான் கேட்டேன். உங்கள் பதிலில் தான் கடுப்பு தெரியுது.

முஸ்லிம் said...

//முஸ்லிம்,

என்னைப்போயி பின்னூட்ட கயமைத்தனம் பண்ணுறேன்னு சொல்றீங்களே. இது நியாயமா? :-)//

அதுக்காக இப்டியா கஞ்சத்தனம் செய்றது. இது நியாயமில்லீங்க :-)))

முஸ்லிம் said...

மரைக்காயர் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

//நீங்க என்னன்னா 'பாசிச தீவிரவாத முகத்திரை சமீபத்தில் கிழிக்கப்பட்டதா?'ன்னு சாவகாசமா கேள்வி கேட்டுட்டிருக்கீங்க!!!//

:)))

முஸ்லிம் said...

//இதில் //உங்க சாயம்// "உங்க" என்பது யாருங்க? என்னை மட்டுமா, இல்லை ஏதாவது Generalization ஆ. ஜாலியாகத்தான் கேட்டேன். உங்கள் பதிலில் தான் கடுப்பு தெரியுது.//

அறியாதவன் ஒருத்தர்தான்னா 'உங்க' ன்னு சொன்னது அறியாதவனை மட்டும்.

அட்றா சக்கை said...

முஸ்லிம் அய்யா!

பாவம் அறியாதவன் தன் குட்டு ஒடஞ்சு போனதுல (அல்லது) பாசிச முகத்திரை கிழிக்கப்பட்டதுல எங்க பாசிசம்னு கண்ல பட்டதும் உதறல் எடுக்க ஒளறுரார்..

அதான் ஒருவேளை நம்ம கூட்டத்த நோக்கி அந்த உண்மைய சொல்லிட்டீங்களோன்னு பதட்டத்தில ரெண்டாவது பின்னூட்டமும் போட்டுருக்கார்.

அவர் நெலமயயும் யோசிச்சு பாருங்க அய்யா!

வித்யார்தி said...

//அறியாதவன் ஒருத்தர்தான்னா 'உங்க' ன்னு சொன்னது அறியாதவனை மட்டும்.//

அறியாதவன் ஒருத்தர் தானுங்க.

//பாவம் அறியாதவன் தன் குட்டு ஒடஞ்சு போனதுல (அல்லது) பாசிச முகத்திரை கிழிக்கப்பட்டதுல எங்க பாசிசம்னு கண்ல பட்டதும் உதறல் எடுக்க ஒளறுரார்//

ஜாலியா கேட்டதுக்கு என்னை பாசிசம் ன்னு போகிற போக்கில் சொல்லிட்டீங்க. நன்றி.

ஒரு பழமொழி சொல்லுவாங்க. "பொய் கெடந்து பொலம்புது. மெய் கெடந்து முழிக்குது". திருடன், திருடன்னு கத்திகிட்டு தன்னை துரத்திகிட்டு வர்ற கூட்டத்தோட திருடனே ஓடுற மாதிரிதான் இதெல்லாம். இல்லை? :-)

நண்பன் said...

வல்லரசு அமெரிக்கா.

அனைத்து நிறுவனமயமான அரசுகளுக்கும், மற்றவர்களுக்கும் இது பொருந்துமே!!!

இன்னும் நிறைய எழுதலாம். அப்புறம் மீண்டும் பத்திக்கப்போகுது.....!!!

வாழ்த்துகள் - குறும்பு என்பதற்காக அல்ல, நிதர்சனம் சொல்லும் பதிவு என்பதற்காக.

அன்புடன்
நண்பன்

முஸ்லிம் said...

கரு.மூர்த்தி உங்கள் வரவுக்கு நன்றி.

//அடடா , என்ன உள்குத்து ,அமரிக்கா என்ற பெயரை ஏடுத்துவிட்டு தமிழ்மணம் என்று போட்டால் அப்படியே பொருந்துகிறதே ?//

அடடா நானும் உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்துவிட்டு பின் தவற விட்டு விட்டேனோ? போகட்டும்.

உள் குத்துன்னா எப்படி?

அமெரிக்கா ஏதாவது நிபந்தனையிட்டிருக்கிறதா?

வலைப்பதிவர்கள் திரட்டியில் இணைந்து கொள்ள சம்மதம் தெரிவிக்குமுன் இன்னின்ன நிபந்தனைகளை விதிக்கிறோம் என தமிழ்மணம் அறிவித்திருப்பதை போல,

வல்லரசு ஏதாவது நிபந்தனையை அறிவித்திருக்கிறதா?

முஸ்லிம் said...

நண்பன் உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.