Wednesday, July 18, 2007

சமூக அவலம்




ஈரோடு: வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் 75 வயது பாட்டியை சொந்த பேரன்களே குப்பை மேட்டில் வீசிச் சென்ற பரிதாப சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மாள்(75). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரு மகள்கள் லக்காபுரத்திலும், ஒரு மகள் திண்டலிலும் வசிக்கின்றனர். சின்னம்மாளின் கணவர் பழனியப்பன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். திண்டலில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த சின்னம்மாள் நடமாட முடியாமல் படுத்த படுக்கையாகவே இருந்தார். பெற்ற தாயை கவனிக்காமல் தினம்தோறும் மகளே வசைபாடியபடி இருந்துள்ளார்.

அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால், சகித்துக் கொள்ள முடியாத மகள் மற்றும் குடும்பத்தினர் பாட்டியை எங்காவது விட்டுவிட முடிவு செய்தனர். சின்னம்மாளின் பேரன்கள் இருவரும் சனிக்கிழமை இரவு அவரை துணியில் சுற்றி, ஒரு ஆட்டோவில் துõக்கி வந்தனர். திண்டல் அடுத்த மேட்டுக்கடை அருகே குப்பை மேட்டில் சின்னம்மாளை படுக்க வைத்து விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால், பாட்டியும் தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர முடியாமல் விடியும் வரை குப்பை மேட்டிலேயே முனங்கியபடி படுத்திருந்தார்.

அப்பகுதியில் வசித்து வரும் மோகனசுந்தரியும், அவரது கணவர் பெரியசாமியும் குப்பை மேட்டில் பாட்டியின் முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பேசுவதற்கு கூட திராணியின்றி படுத்திருந்த பாட்டிக்கு உணவு கொடுத்து விசாரித்தனர். "எனது மகளால் என்னை கவனிக்க முடியாததால், பேரன்கள் இருவரும் என்னை இங்கு வந்து அனாதையாக விட்டு சென்றனர்' என தழுதழுக்கும் குரலில் சின்னம்மாள் கூறியுள்ளார்.

மோகனசுந்தரி, "ஜெய்பாரத்' சமூகநல விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முருகேசன் மற்றும் அப்பகுதியினர் பாட்டிக்கு தேவையான உணவை கொடுத்து கவனித்து வந்தனர். குப்பையில் படுத்திருந்த பாட்டிக்கு, சேலை, படுக்க கட்டில் கொடுத்து எதிரே இருந்த மரத்தடியில் வைத்து பாதுகாத்து வந்தனர்.

மூன்று நாட்களாக பாட்டிக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்தவர்கள் நேற்று காலை சமூகநலத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சமூகநல அலுவலர்கள் விசாரித்து பாட்டியை துõக்கி சென்று கே.கே.நகரில் உள்ள கருணை இல்லத்தில் சேர்த்தனர்.

நன்றிங்க: தினமலர்

அட கல்நெஞ்சக்காரங்களா!

2 comments:

Jafar ali said...

நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது." (அல்குர்ஆன்: 31:14)


மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; "இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்" என்று கூறுவான். (அல்குர்ஆன்: 46:15)

முஸ்லிம் said...

Jafar safamaruva உங்கள் வரவுக்கு நன்றி.

பெற்றோர்களை பேணச்சொல்லி அறிவுருத்துவதில் இஸ்லாத்திற்கு நிகர் இஸ்லாமே! தாய், தந்தை பற்றிய அல் குர்ஆன் வசனங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.