Wednesday, July 25, 2007

ஆசானும், சிறுவனும்.

சமூக அவலம்

பிளாட்பாரத்தில் இரவில் பெண்ணிடம் சில்மிஷம்-தடுத்தவரை கொன்ற சிறுவன்


ஜூலை 25, 2007  

சென்னை: பிளாட்பாரத்தில் வசிக்கும் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற சிறுவனை தட்டிக் கேட்டவர், அந்த சிறுவனாலேயே கொல்லப்பட்டார்.

சமீப காலமாக சென்னையில் சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் வேலு (19). ஸ்டீல் பட்டறையில் கூலி வேலை பார்த்து வந்த இவர் தனது நண்பர் வெங்கடேசனுடன் சேர்ந்து சினிமா பார்த்து விட்டு இரவு 2 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அதே பகுதியை சேர்ந்தவன் மோகன்(15). இவன் இரவு நேரத்தில் கொருக்குப்பேட்டை பகுதியில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களோடு கூட்டத்தோடு கூட்டமாக படுப்பதை வழக்கமாக கொண்டவன்.

நேற்று முன் தினம் இரவு பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த வசந்தா என்ற பெண்ணின் பக்கத்தில் போய் படுத்து மோகன் சில்மிஷம் செய்துள்ளான்.

இதையடுத்து வசந்தா அவனை தாறுமாறாக திட்டியுள்ளனர். இவர்கள் இரவில் சண்டை போடுவதை பார்த்த வேலுவும், வெங்கடேசனும் விசாரித்து சிறுவன் மோகனை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் பக்கத்தில் இருக்கும் தனது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வேலுவையும், வெங்கடேசனையும் விரட்டியுள்ளான். அவர்கள் இருவரும் பயந்து ஓடியுள்ளனர்.

இதில் வேலு ஓடும்போது தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து வேலுவின் மீது ஏறி அமர்ந்து அவரது தொண்டையில் கத்தியால் பலமுறை குத்தினான்.

இதில் வேலு அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதையடுத்து மோகன் அங்கிருந்து தப்பி ஓடினான். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.கே நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி, கத்தியுடன் ஓடிக் கொண்டிருந்த மோகன் மீது சந்தேகப்பட்டு அவனை விரட்டிச் சென்று பிடித்தார்.

சிறுவன் மோகனுக்கு போதை பழக்கங்களும், பெண்களிடம் தகாத உறவும் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நன்றிங்க

------------------------------------நன்றிங்க

சிறுவனிலிருந்து, விரிவுரையாளர்வரை, அதுவும் கல்வியை போதிக்கும் ஆசிரியர் பயிற்சிக்கான வகுப்பு எடுக்கும் ஆசானாகிய விரிவுரையாளர்வரை பெண்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்,

காமம்!

அதற்குத் தடையாக குறுக்கே எவர் வந்தாலும் அவரைக் கொலை செய்ய சிறுவனும் தயங்க மாட்டான்.

கல்வியை போதிக்கும் ஆசிரியராக இருந்தாலும் காமத்திற்காக பண்பாட்டை இழக்கவும் தயாராகி விட்டார்.

நாகரீகம், கட்டுப்பாடற்ற இந்த செயல்களுக்கு, விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும், சினிமா உட்பட அனைத்து ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்.

4 comments:

Jafar Safamarva said...

//நாகரீகம், கட்டுப்பாடற்ற இந்த செயல்களுக்கு, விஞ்ஞானத்தில் முன்னேறியிருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ளும், சினிமா உட்பட அனைத்து ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்//

மிகச்சரியாக சொன்னீர்கள்!!

வணங்காமுடி said...

கோவிலுக்குள் சிறுமியை கற்பழிக்க
முயன்ற பூசாரி-பொது மக்கள் தர்ம அடி

ஜூலை 26, 2007

சென்னை: கோவிலுக்குள் சிறுமியை அழைத்துச் சென்று அவரைக் கற்பழிக்க முயன்ற காமக் கொடூர பூசாரியை பொதுமக்கள் வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை மேற்கு முகப்பேரில் பிளாட்பாரம் ஒன்றில் முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பூசாரியாக கோபிநாத் (40) என்பவர் இருந்து வந்தார். இவருக்கு சிவகங்கை சொந்த ஊராகும்.

தனது பெரியம்மா வீட்டில் தங்கி பூசாரியாக இருந்தார். கல்யாணம் ஆகாதவர் கோபிநாத். இந்தக் கோவிலுக்கு அருகே ஒரு தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. அந்தப் பள்ளியில் 6வது வகுப்புப் படித்து வரும் சிறுமி ரேணுகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

ரேணுகா மீது கோபிநாத்துக்கு காமவெறி எழுந்தது. பள்ளிக்குப் போகும்போதும், வரும்போதும் சாந்தியை காமப் பார்வை பார்த்து பேச்சும் கொடுப்பாராம்.

இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி விட்டதும் ரேணுவா வெளியே வந்தார். அப்போது சாந்தியை அழைத்த கோபிநாத், நீ தேர்வுகளில் அதிக மார்க் வாங்குவதற்காக சிறப்புப் பூஜை செய்யப் போகிறேன். எனவே கோவிலுக்கு வா என்று கூப்பிட்டுள்ளார்.

அதை நம்பிய ரேணுகாவும் பூசாரியுடன் கோவிலுக்குள் சென்றார். அப்போது கோவில் என்றும் பாராமல், காமவெறி தலைக்கேற கோவிலுக்குள்ளேயே ரேணுகாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் வக்கிரப் புத்தி கொண்ட கோபிநாத்.

அந்த சமயம் பார்த்து ஒரு மூதாட்டி சாமி கும்பிட வந்தார். அவர், கோபிநாத்தின் செயலைப் பார்த்து அதிர்ந்துபோய் கூச்சல் போட்டார்.

இதையடுத்து திரண்டு வந்த பொதுமக்கள் கோபிநாத்தை மடக்கிப் பிடித்து வெளியே கொண்டு வந்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.

cortesy:-

Thatstamil 26/07/07

முஸ்லிம் said...

jafar safamarva உங்கள் வரவுக்கு நன்றி.

முஸ்லிம் said...

வணங்கமுடி அய்யா உங்கள் வரவுக்கும், செய்தியைப் பகிர்ந்தமைக்கும் நன்றிகள்.

நீங்கள் பின்னூட்டத்தில் பதிந்த செய்தி,

கோயில் பூசாரியை ஏன் தாக்கினேன்?

பராசக்தி நீதிமன்ற வசனங்களை நினைபடுத்துகிறது.