இந்தியா நாட்டு எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புக்காக இராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு சலுகைகள் அதிகமா? அல்லது மாநிலங்களில் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கு சலுகைகள் அதிகமா? இந்த இரு துறைகளிலும் யார் பாவம்?
இராணுவமா?
காவல் துறையா?
இப்படி பட்டி மன்றம் தரத்தில் உங்கள் பதிவு அமைந்திருக்கிறது.
அன்பர் செந்தில் அழகு பெருமாள் அய்யா,
வாழ்க பாரதம் என்ற பதிவில் உள்ள செய்திகளை மறுபடியும் படித்துவிட்டு வாருங்கள்.
//06.சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் "கிடா' வெட்டி பூஜை: விபத்து, கொலையை தவிர்க்க "கிடா ரத்தம்' தெளிப்பு
சங்ககிரி: சங்ககிரி போலீஸ் எல்லைக்குள் அடிக்கடி நடக்கும் விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க எண்ணிய
போலீசார், போலீஸ் ஸ்டேஷனில் கிடா வெட்டி, சிறப்பு பூஜை நடத்தினர்.//
சங்ககிரி காவல் நிலையம் எல்கைக்குள் நடக்கும் விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க எண்ணிய போலீசார்...
என்று கூறப்பட்டிருக்கிறது. செ.அ.பெருமாள் அய்யா நன்றாக மீண்டும் நிதானமாக வாசிக்கவும், விபத்து, கொலை சம்பவங்களை தடுக்க என்பதுதான் செய்தி.
செ.அ.பெருமாள் அய்யா சொல்லுகிற மாதிரி, கிடாய் வெட்டி புஜை செய்துவிட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் செல்வதாக செய்தியில் இல்லை. எப்படி இருக்கிறதென்றால் விபத்து, கொலையை தவிர்க்க - தடுக்க என்று உள்ளது. கொலையைத் தடுக்கவும், விபத்தைத் தவிர்க்கவும் புஜை செய்யப்பட்டிருக்கிறது. புஜை செய்து விட்டால் கொலைகள்
நடக்காமல் போய்விடும், விபத்துகள் நிகழாமல் தவிர்க்கப்பட்டுவிடுமாம்.
இதைத்தான் காவல் துறையின் கையாலாகத்தனம் என்று விமர்சித்தேன்.
பொதுவில்,
பில்லி சூனியம் வைக்கிற மாதிரி, பூஜைகள் செய்து விபத்துகளையும், கொலைகளையும் தடுத்து விடலாம் என்றால். பூஜைகள் செய்தால் போதுமே, காவல்துறை தேவையில்லையே என்று கேட்டிருந்தேன் அவ்வளவுதான்.
ஆன்மீகவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது வெளிப்படை. கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள், தாம் செய்யத் துவங்கும் ஒவ்வொரு செயலுக்கு முன் கடவுளை நினைவு கூருவார்கள். கடவுள் துணை, ஆண்டவன் துணை, இறைவன் துணை தனது காரியங்கள் அனைத்துக்கும் கடவுளின் துணை வேண்டும் என்றும் வேண்டிக்கொள்வார்கள்.
இறைவனின் துணை வேண்டும் என்பது போன்ற வார்த்தைகள் ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்பதாகும். ஒரு முஸ்லிம் தனது காரியங்களை செய்யத் துவங்குமுன் இறைவனை நினைவு கூருவதே பிஸ்மில்லாஹ் என்று
சொல்லிக்கொள்வது.
காவல்துறையில் பணியாற்றும் ஒரு முஸ்லிம், துப்பு துலக்கு முன், விசாரணையைத் துவங்கு முன், குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க செல்லுமுன், இவ்வாறு தம் தொழில் தொடர்பான செயல்களைத் துவங்கு முன்னும், தனது வாழ்க்கையின் செயல்களிலும் இறைவனை நினைவு கூருவதற்காகவே ''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று
சொல்ல வேண்டும்.
''பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்'' என்று சொல்லிவிட்டால் திருட்டுகள் நடக்காமல் போய்விடும் என்று எண்ணிச் சொல்வதில்லை. இதைப் புரிந்து கொண்டிருந்தால் விபத்தைத் தவிர்க்கவும், கொலைகளைத் தடுக்கவும் எண்ணிய காவல்துறையின் கிடா வெட்டிய புஜையோடு ஒப்பிட்டு எழுதியிருக்க மாட்டீர்.
ஏற்கெனவே முதலில் மதத்தைப் பற்றி எழுதிய நீங்களே, இப்போது மதத்தைப் பற்றி எழுதமாட்டேன் என்று எழுதியிருப்பது நல்ல முன்னேற்றமான கருத்து.
மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன், ஒரு போலீஸ் பூஜை செய்யக்கூடாது, திருடனைப்
பிடிக்க போகுமுன் சாமி கும்பிடக்கூடாது என்று நான் எங்கும் சொல்லலேங்க.
குறிப்பு: தொடர்ந்து வருவது நீங்கள் எனக்கு பதிலாக எழுதியது -
//காவல் துறையினர் பற்றி...
எனது முந்தைய பதிவுக்கு பதில் எழுதிய நண்பருக்கு இது பதில் கொடுப்பது போன்று அமையும்.
எனது அன்பு இசுலாமிய நண்பருக்கு, நான் மேலும் மதத்தைப் பற்றி பேசி ஒரு மதக் கலவரத்தை உண்டாக்க விரும்பவில்லை, ஏன்னெனில் எமக்கு எம்மதமும் சம்மதமே! சொன்னால் நம்ப மாட்டீர் எனக்கு இசுலாமிய மதத்தில் தான் நிறைய நண்பர்கள் உள்ளனர். மதத்தைப் பற்றி பேசி நான் அவர்கள் மனதைப் புண் படுத்த விரும்பவில்லை. நான் மதத்தைவிட மனிதர்களின் மனதை மதிப்பவன். இதற்கு முன்னர் எழுதிய மடலால் எவர் மனமாவது புண் பட்டிருந்தால் என்னை தயவு செய்து மன்னிக்கவும். சற்று சாதி சமயத்தை மறந்து வேறு திசையில் சிந்தித்துப் பார்ப்போம்.
நீங்கள் எப்படி காவல் துறையினர் கிடா வெட்டுவதோடு நிறுத்திவிட்டனர், குற்றாவாளிகளைக் கண்டுபிடிக்க மேற்கொண்டு முயற்சிகள் செய்ய வில்லை என்கிறீர்கள்? நீங்கள் எந்த ஒருச் செயலைச் செய்யும் முன்னே "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்" என்று சொல்லிவிட்டுதானே துவங்குகிறீர் அதைப் போல், அவர்கள் (காவல் துறையினர்) கிடா வெட்டி விட்டு அவர்கள் குல தெய்வத்திற்குப் படைத்துவிட்டு பின்னர் குற்றாவாளியை தேட ஆரம்பிக்கலாம் அல்லவா? தயவு செய்து காவல் துறையினரை பலிக்காதீர் நண்பரே. நாம் இந்தியாவில் இத்தனை சுதந்திரமாக இருக்கிறோமேயானால் அதற்கு அவர்கள் உழைப்பு தான் காரணம். நாம் நிம்மதியாக கண் தூங்குவதற்கு அவர்கள் இரவு பகல் பாராது கண் விழித்துத் தன் கடமையை நிறைவேற்றுகிறார்கள்.
அவர்களுக்கு இந்த சமுதாயமும் அரசாங்கமும் என்ன செய்கிறது? இராணுவத்தில் இருப்பவற்கு இலவச ரேசன், கண்டீன் வசதி, ஓய்வு பெற்றோருக்கு வேலை வாய்ப்பு போன்று பல சலுகைகள் உள்ளன. பாவம் காவல் துறையினருக்கு என்ன உள்ளது?
இராணுவத்தினருக்கு போர்க்காலத்தில் தான் வேலை, ஆனால் காவல் துறையினருக்கோ வருடம் 365 நாட்கள், வாரம் 7 நாட்கள், ஒரு நாளுக்கோ 24 மணி நேரம் வேலை!! ஆனால் இறுதியில் நாம் என்ன சொல்கிறோம் காவல் துறை தூங்குகிறது, இலஞ்சம் வாங்குகிறது, குற்றவாளிகளைப் பிடிக்காமல் கிடா வெட்டுகிறது என்று!!
ஓரிரு காவல் துறை அதிகாரி இலஞ்சம் வாங்குவதால் நாம் ஒட்டு மொத்த காவல் துறையையும் குற்றம் சொல்லலாகாது. அப்படிப் பார்த்தால் நாட்டைக் காக்க வேண்டிய இராணுவத்தினரும், இத்தனைச் சலுகைகள் இருந்தும் பணம் வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லையா? ஒரு உயிரைக்காக்க வேண்டிய மருத்துவரும், நீதிபதியும் காசு கொடுக்காததால் அவர்கள் கடமையைச் சரிவரச் செய்யத் தவறவில்லையா? அவர்களுக்கு காவல் துறையினர் எவ்வளவோ மேல்.
- சம்பந்தமில்லாமல் ஏதேதோ எழுதிவிட்டீர்!
2 comments:
வெளங்காத கேஸு, விடுங்க!
அழகு உங்கள் வரவுக்கு நன்றி.
//வெளங்காத கேஸு, விடுங்க!//
கொஞ்சமாவது வெளங்க வைக்கலாமேன்னுதான்...
Post a Comment