சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்கிறார் பத்மலட்சுமி?
லண்டன் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 2 ஜூலை 2007 ( 17:52 IST )
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை அவரது மனைவி பத்மலட்சுமி விரைவில் வி வாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (60). இவரும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவரும், மாடல் அழகியுமான பத்மலட்சுமியும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.
இருவரும் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக கலந்துகொண்டனர்.
எனினும், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், சல்மான் ருஷ்டியை விவாகரத்து செய்ய பத்மலட்சுமி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் ருஷ்டியை திருமணம் செய்ததன் மூலம் தனது வாழ்க்கையை தானே கெடுத்து கொண்டதாகவும், இதனால் விரைவில் முறைப்படி அவரை விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தனது நணபர்களிடம் பத்மலட்சுமி கூறியதாக நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நன்றிங்க
விவாகரத்து செய்த கொண்ட மாடல் அழகியை திருமணம் செய்ய பலர் முன் வருவர். விவாகரத்தான ருஷ்டியின் நிலை...???
1 comment:
'சர்' பட்டம் வாங்கப் போற நேரத்துல இது என்னங்க புது தலைவலி?
இவரோட இந்த 'காதல் மனைவி'யப் பத்தி ஒரு நிருபர் கிசுகிசு எழுதினாருங்குறதுக்காக, நம்ம 'சர்' ஒரு பேட்டை ரவுடியா மாறி கட்டிப் புரண்டு சண்டை போட்டது நினைவுக்கு வருது!
Post a Comment