Sunday, July 29, 2007

சேது திட்ட இயக்குனர் தகவல்.

இருப்பது மணல் திட்டு தான், பாலம் அல்ல நாஸா உறுதி- சேது திட்ட இயக்குனர் தகவல்

ஜூலை 28, 2007

சென்னை: சேது கால்வாய் தோண்டப்படும் ஆதாம் பால பகுதியில் இருப்பது வெறும் மணல் திட்டுக்கள் தான் எனவும், அங்கு மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் ஏதும் இல்லை எனவும் நாஸா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக இத் திட்டத்தின் இயக்குனர் ரகுபதி கூறியுள்ளார்.

சேது சமுத்திரத் திட்டப் பணி நடந்து வரும் இடத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் (ராமர் பாலம்) இருப்பதாகவும் அதை நாஸா உறுதி செய்துள்ளதாகவும் விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் கூறி வருகின்றன.

இதனால் அதை இடிக்க பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய சேது சமுத்திரத் திட்ட இயக்குனர் ரகுபதி, சேது சமுத்திரத் திட்டப் பணி நடந்து வரும் இடத்தில் இருப்பது வெறும் மணல் திட்டு தான் என நாஸா தெரிவித்துள்ளது.

அது மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என்றும் கூறியுள்ளது.

இது தொடர்பாக நாஸாவே சேது சமுத்திரத் திட்ட கமிஷனுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளது என்றார்.

நன்றிங்க
----------------------------------------------

//அது மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல என்றும் கூறியுள்ளது.//

''மனிதனால் உருவாக்கப்பட்ட பாலம் அல்ல'' என்பதுதானே பரிவாரங்களின் வாதமும், இல்லையா பின்னே...!?

No comments: