கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 21, 2007
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கந்துவட்டி தொழில் தலை விரித்தாடுகிறது. இந்த மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன். இவரது நண்பர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தேவபிரகாஷ் கந்துவட்டிக்கு பணம் கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறாரார்.
வெங்கடேசன் தனது நண்பனான பைனான்சியர் தேவபிரகாஷிடம் ரூ.2 லட்சம் கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார். கந்துவட்டி என்றால் வாங்கிய நாளிலிருந்து அசல் தொகையை திருப்பி தரும் வரை தினமும் வட்டி கட்ட வேண்டும்.
ஆனால் வெங்கடேஷன் வாங்கிய கடனுக்கு அசல், வட்டி எதுவும் கொடுக்கவில்லை. இதனால் தேவபிரகாஷ் நண்பர் என்று கூட பார்க்காமல் வெங்கடேசனை மிரட்டியுள்ளார்.
மிரட்டலுக்கு பயந்து வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தேவபிரகாஷ் மீண்டும் வெங்கடேசன் வீட்டிற்கு வந்து அவரின் தந்தை ராஜேந்திரனிடம் மிரட்டியுள்ளார்.
இதனால் ராஜேந்திரன் வடசேரி போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து தேவபிரகாஷ், பாலகணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
நன்றிங்க
பொதுவானவை.
No comments:
Post a Comment