02. 14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்
புதுடில்லி: டில்லியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர், 45 வயது நடன ஆசிரியை விரித்த காதல் வலையில் சிக்கி அவருடன் தலைமறைவாகி விட்டார்.
டில்லியில், பாஷ் மாவட்டத்தில் உள்ள கல்காஜியில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த தம்பதியர் வசிக்கின்றனர். இவர்களது மகன், அங்குள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். 14 வயதான அவருக்கு இன்டர்நெட்டில் "சாட்' செய்யும் பழக்கம் உண்டு. இன்டர்நெட்டில் "பேசியபோது' ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அறிமுகமான அப்பெண்ணின் வயது 45. திருமணமாகாதவர். அப்பெண், மயூர் விஹாரில் தன் தாயுடன் வசித்து வருகிறார்.
கமலா நகரில் உள்ள கிளாசிக் டான்ஸ் இன்ஸ்டிடியூட்டில், பெண் களுக்கு நடனம் கற்றுத்தரும் ஆசிரியையாக உள்ளார்.இன்டர்நெட்டில் ஆரம்பித்த இவர்களின் நட்பு, சிறிது சிறிதாக, காதலாக மாறியது. காதல் மயக்கத் தில் இவர்களுக்கு வயது ஒரு பொருட் டாக தெரியவில்லை. அடிக்கடி நேரிலும் சந்திக்க ஆரம்பித்தனர். சென்ற மாதம் இவர்கள் இருவரும் ஒன்றாக ரெஸ்ட்டாரன்டில் அமர்ந்து உணவருந்துவதைப் பார்த்த மாணவருடைய தந்தையின் நண்பர், இந்த காதல் விவகாரத்தை, தந்தையிடம் கூறினார்.
மாணவரின் தந்தை, மாணவரை அழைத்து விசாரித்தார். "அவரும், நாங்கள் இருவரும் நண்பர்களாகத் தான் பழகுகிறோம்' என்றார்.கடந்த ஆக., 27ம் தேதி மாணவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து சி.ஆர்.பார்க் போலீசில் மாணவரின் தந்தை புகார் கொடுத்தார். மேலும், பள்ளியில் தன் மகனுக்கு பெண் தோழிகளே கிடையாது என்றும் தெரிவித்தார். போலீசாரும் பல இடங்களில் தேடி, இறுதியாக, நடன ஆசிரியையின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவரது 70 வயதான தாயார் தான் இருந்தார். ஆசிரியை மாயமாகியிருந்தார்.அந்த மாணவர் தன்னுடைய மொபைல் போனை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றிருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. போலீசார் அந்த நடன ஆசிரியை போனை கண் காணித்தபோது, அவர் அந்த மாணவருடன் அரியானாவில் இருப்பது தெரிய வந்தது.இவர்களைத் தேடி போலீசார் அரியானா விரைந்துள்ளனர்.
நன்றிங்க
அட மக்கா!!!
இதைத்தான் காதலுக்கு வயசில்லை என்பாங்களோ!
10 comments:
முஸ்லிம் அவர்களே,
அந்த 14 வயது மாணவருக்கு அவருடைய பெற்றோர்களிடமிருந்து போதுமான அளவில் அன்பும் பாசமும் கிட்டாமல் இருந்திருக்கலாம். முக்கியமாக அதிபுதிசாலி சிருவர்களிடம் நாம் மிகவும் கவனமாக இருந்து அவர்க்ளை occupied ஆக வைத்திருக்க வேண்டும்.மேலும் அவர்களிடம் நண்பர்களாக பேச நாம் கற்றுக் கொள்ள வெண்டும். அந்த மாணவருடைய எதிகாலம் சரியாகப் பாதிக்கப் படும் என்பதில் சந்தேகமில்லை. அவனுடைய பெற்றோர்கள் மனம் விட்டு மகனிடம் பேசினால் ஒரளவு பயன் இருக்கும். இந்த ஆசிரியைக்கும் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும்.
kovi உங்கள் வரவுக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.
பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் நெருக்கமான அன்பு கிடைக்காதபோது அது கிடைக்கும் இடம் நோக்கி மனம் பாயும் என்பதை சரியாகச் சொன்னீர்கள்!
//அட மக்கா!!!
இதைத்தான் காதலுக்கு வயசில்லை என்பாங்களோ!//
"காமத்துக்குக் கண் இல்லை" என்பதும்"காதலின்"தொடர்ச்சிதாம்!ஆண்,பெண் இரு பாலர்களையும் பிரித்து வளர்க்கும்போது இத்தகைய பாரிய எதிர்பால் அழுத்தங்கள்-வினைகள் உருவாவதற்கு வாய்ப்புகள் இருப்பது உண்மை.இது அவர்களின் தவறல்ல.சமுதாய-பண்பாட்டுப் பலாத்தகாரத்தால் நிகழ்வது.
முஸ்லிம் அவர்களே,
நான் பத்து வரிகளில் கூறியதை மிகச் சிறப்பாக மூன்று வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.
பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் நெருக்கமான அன்பு கிடைக்காதபோது அது தவறான வழிக்கு திசை திருப்பக்கூடும்...
கோவி.
//14 வயது மாணவருடன் 45 வயது நடன ஆசிரியை ஓட்டம்.//
ஓ! அப்படியா?
பந்தயத்தில் ஜெயித்தது யாரு?
கப் குடுத்தாங்களா?
பரவாயில்லையே, இந்தியாவில வயசு வித்தியாசம் பாக்காம எல்லாரையும் சரிசமமா ஓட விடறாங்களே! வாழ்க இந்திய ஜனநாயகம். இந்த விசயத்தில் அமெரிக்கர்கள் நம்மிடம் நிறையவே பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
;-D
Sri Rangan உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
கோவி உங்கள் மீள் வருவுக்கு நன்றி.
மாசிலா உங்கள் வரவுக்கும் நகைச்சுவை எழுத்துக்கும் நன்றி.
:)
ஒரு 14 வயது பெண்ணுடன் யாராவது ஒரு 45 வயது ஆண் ஓடிப்போயிருந்தால், அவன் சிறுமியை கற்பழித்து விட்டான் (sex with a minor = rape) என்று அவனை உள்ளே அடைத்து, தூக்கு மேடை வரை கொண்டு போயிருப்பார்கள் ...
ஆனால் இப்போது ??
அந்தப் பெண் தப்பித்துவிடுவாள் ... அந்த சிறுவனின் வாழ்க்கை குளோஸ் ...
ஆகா என்ன சமநிலை ???
சிறு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றம் புரிவோரை ஒரே விதத்தில் தண்டிக்க வேண்டும்...
அந்தக் குழந்தை ஆணோ பெண்ணோ...குற்றம் செய்தவரை ஒரே விதத்தில் தண்டிக்க வேண்டும்
செய்தி கேட்ட வேதனையுடன்
விநாயக்
//செய்தி கேட்ட வேதனையுடன்
விநாயக்//
காலம் இப்படித்தான் இருக்கு விட்டு தள்ளுங்க விநாயக்
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment