Monday, September 03, 2007

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி!

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி!

திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் கோவிலுக்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பூசாரி கைது செய்யப்பட்டார்.

ஓமலூர் அருகே உள்ளது பாகல்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவருடைய மகள் மேகலா (12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனது தோழிகளோடு சேர்ந்த நேற்று அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

கோவிலின் பூசாரியான கோவிந்தசாமி மேகலாவை தோழிகளிடமிருந்து தனியாக அழைத்து கோவிலின் மேல் தளத்திற்கு சென்றார்.

சிறிது நேரத்தில் மேகலா உதவி கோரி கூச்சல் போட்டார். அதைக் கேட்ட பொது மக்கள் மேல் தளத்துக்குச் சென்றபோது, தன்னை பூசாரி பலாத்காரம் செய்ய முயன்றதை மேகலா தெரிவித்தார்.

இதையடுத்து கோவிந்தசாமியை தாக்கிய பொது மக்கள் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் பூசாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நன்றிங்க

பூசாரியை ஏன் தாக்கினோம்...

2 comments:

╬அதி. அழகு╬ said...

பூசாரியைத் தாக்கினேன்! கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவனின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக ...

ம்ம்ம் ... அம்பத்தஞ்சி வருஷமும் ஆச்சி

முஸ்லிம் said...

அழகு உங்கள் வரவுக்கு நன்றி.

1952ல் வெளியாகிப் பாத்திர பேச்சு வெற்றிக்கு முக்கிய காரணமானது. மு.கருணாநிதி எழுதிய அடுக்கு மொழி வசனங்கள் ஒலி நாடாவில் இன்றளவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.