Saturday, September 29, 2007

04.இரட்டை டம்ளர் முறை ஒழிக!

04.இரட்டை டம்ளர் முறையை ஒழிக்ககோரி டீக்கடையில் முற்றுகை



தேனி: இரட்டை டம்ளர் முறையை ஒழிக்கக்கோரி அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்கம் டீ கடைகளில் முற்றுகை போராட்டம் நடந்தது.தேனி, காட்டுநாயக்கன்பட்டி டீ கடைகளில் இரட்டை டம்ளர் முறை உள்ளதாகக்கூறி, அருந்ததியர் மக்கள் முன்னேற்ற இயக்க சின்னமனுõர் ஒன்றிய பொறுப்பாளர் சுப்பையா தலைமையில் ஆண்டிபட்டி, போடி, தேனி பகுதிகளில் உள்ள நிர்வாகிகள் டீ கடைகளை முற்றுகையிட்டனர். எல்லா இனத்தவரையும் போல் அருந்ததியரையும் பெஞ்சில் உட்கார வைத்து டீ வழங்க வேண்டும். எல்லோருக்கும் ஒரே மாதிரியான டம்ளரில் வழங்கவேண்டும் என கூறி டம்ளர்களை உடைத்தனர்.

நன்றிங்க

பொதுவானவை.

4 comments:

G.Ragavan said...

மிக நல்ல போராட்டம். எல்லாரும் ஓர் நிறை. மனிதர்களுக்குள் பாகுபாடு பார்ப்பது மிகத் தவறு.

முஸ்லிம் said...

G.Ragavan உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

மாசிலா said...

அடப்பாவிங்களா!

சந்திரனுக்கு வின்கலம் அனுப்ப போவதகாக சொல்றது ஒரு பக்கம். இரட்டை டம்ளர் முறை மறு பக்கம்.

இந்த நாடு திருந்தவே திருந்தாதா?

என்னை பொறுத்தவரயில், இந்த அட்டகாசத்தை நடத்தறது சாதிகார தமிழனுங்கதான்.

பாப்பானுங்க பேர சொல்லி ஒரு பக்கம் மக்கள ஏமாத்தினு, மறு பக்கம் அவனுகளே இப்படிபட்ட அநியாயங்கள செய்துனு வர்ரானுங்க.

கடைசியில பாக்க போனா, பாப்பானாவது, பச்சையா, வெளிப்படையா ஒதுக்கப்பட்டவங்க, தீண்டப்படாதவங்கன்னு அக்மார்க் சர்டிபிகேட் குடுத்தான். இவனுங்களோ, ஒன்னும் தெரியாத நல்ல புள்ள மாதிரி இருந்துனு, மழுமையா கூட இருந்துனே குழி பறிச்சினு வர்ரானுங்க.

எம்மாம் நாளைக்குதான் இத மாதிரி உல்டா உட்டுனு வருவானுங்கனு பார்ப்போம்.

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கு நன்றி.