Friday, September 14, 2007

"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'

"முஸ்லிம் இட ஒதுக்கீட்டை பா.ஜ., எதிர்க்கும்'

தஞ்சாவூர் : "முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அதை எதிர்ப்போம்' என்று பா.ஜ., தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

அவர் தஞ்சாவூரில் கூறியதாவது: ராமர், ராமாயணம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல; தெற்காசியா, இந்தோனேசியா போன்ற இடங்களில் கூட மதிக்கப்படுகிறது. இந்திய அரசியல் சாசன முதல் பிரதியில் கூட ராமாயணப் படம் உள்ளது. காந்தி கூட ராமராஜ்யம் அமைய வேண்டும் என்றார். மத்திய அரசு ராமர், சீதை இருந்தார்களா என கேள்வி எழுப்புகிறது. ராமர் சிறந்த அரசர். ராமர் சேது பிரச்னையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைக்காக மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அதை தாக்கல் செய்த அமைச்சரும், அதிகாரியும் நீக்கப்பட வேண்டும். சேது சமுத்திர திட்டத்தை வரவேற்கிறோம். ராமர் சேது பாலம் பாதிக்காமல் மாற்று திட்டம் செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் வகுப்புவாத இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஓட்டு அரசியலுக்காக தாக்கல் செய்துள்ளனர். அரசியல் சாசனம் கொண்டு வரப்பட்டபோதே, சமூக அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது நாட்டை பிளவுபடுத்தும். முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது; அதை கடைசி வரை எதிர்ப்போம். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

நன்றிங்க, DINAMALAR 14/09/2007

அதானே பார்த்தேன், என்னடா இது? முஸ்லிம்களுக்கு தமிழக அரசு இட ஒதுக்கீடு அறிவித்து இவ்வளவு நேரமாச்சே இந்த பா.ஜ.க காரங்களை இன்னும் காணலியே என்றிருந்தேன்!

3 comments:

மாசிலா said...

பா.ஜ.க வின் பரதேசி அரசியல். அவன் இன்னும் இந்த ராம பீடையை விடவில்லையா? இவனுகள திருத்தவே முடியாதாப்பா?
யாராவது அவனுக்கு ஒரு குச்சி மிட்டாய் வாங்கி கொடுத்து தாசா படுத்துங்க.

முஸ்லிம் said...

மாசிலா உங்கள் வரவுக்கு நன்றி.

என்னத்தே சொல்றது!

பிறைநதிபுரத்தான் said...

ஜனாதிபதி மற்றும் துனை ஜனாதிபதி தேர்தலில் - மூக்குடைக்கப்பட்டு - இந்திய மக்களால் மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 'அழிந்துவரும்' கட்சியாகிய பா.ச.க, தனது இருப்பை இதுபோன்ற 'அறிக்கை' மூலமாக காட்டிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். அதனால்தான் எதேதோ புலம்புகிறது..புலம்பிவிட்டு போகட்டும்..