Thursday, September 13, 2007

ஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை!

ஹெல்மட் சட்டத்துக்குத் தடை இல்லை
உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு


வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007

சென்னை:

தமிழக அரசின் கட்டாய ஹெல்மட் சட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன.

இந்த நிலையில், கடந்த வாரம் ஒரு சமூக சேவகி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில் கட்டாய ஹெல்மட் சட்டத்தால், பெண்கள், நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்த சட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கோரினார்.

இதை இன்று விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா மற்றும் பால் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் கட்டாய ஹெல்மட் சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

நன்றிங்க

அப்படிப் போடுங்க ஹெல்மெட்டை!

சரி, இந்த சட்டம் இறுதிவரை நீ...டிக்குமா..?

No comments: