சத்தியமார்க்கம்.காம் நடத்தும் சர்வதேசத் தமிழ் இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி (அனைவரும் பங்கு கொள்ளலாம்)
இறைவனின் பெயரால், இஸ்லாமியக் கட்டுரைப்போட்டி ஒன்றை நடத்த சத்தியமார்க்கம்.காம் முன்வந்துள்ளது. இப்போட்டியின் மூலம் தமிழில் இஸ்லாமிய அடிப்படையிலான, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நோக்கங்களான ஒற்றுமை, சகோதரத்துவம், சமுதாயப் பிரச்சினைகளுக்கான சரியான தீர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை அறியத் தருவதோடு, ஆக்கங்களை சமர்ப்பிக்க முன்வருமாறு வாசக உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.
------------------------------------------
நடுவர்கள் : சத்தியமார்க்கம்.காம் நடுவர் குழு
------------------------------------------
(பரிசுகள் விபரம்: ஆண்கள் & பெண்கள்)
--------------------------------------------------
சிறப்பு முதல் பரிசு: x 1
லேப்டாப் (acer-aspire)
மற்றும் முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்
---------------------------------------------------
முதல் பரிசு: x 2
முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்
தப்ஸீர் இப்னு கதீர் (இதுவரை வெளியான பாகங்கள்)
ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்
ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்
ரஹீக் நூல் மற்றும் ஸிடி
---------------------------------------------------
இரண்டாம் பரிசு : x 2
முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்
ஸஹீஹுல் புகாரி ஏழு பாகங்கள்
ரஹீக் நூல் மற்றும் ஸிடி
--------------------------------------------------
மூன்றாம் பரிசு : x 2
முழுக்குர்ஆன் மல்ட்டிமீடியா ஸிடிரோம்
ஸஹீஹ் முஸ்லிம் நான்கு பாகங்கள்
ரஹீக் நூல் மற்றும் ஸிடி
---------------------------------------------
ஆறுதல் பரிசுகள் : x 10 (ஆண்கள் 5, பெண்கள் 5)
ரஹீக் நூல் மற்றும் ஸிடி
***************************************
கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்
திருக்குர்ஆன் உருவாக்கிய சமுதாயம்
சகோதரத்துவம் நிலைபெற…
வளைகுடா வாழ்க்கை - வரமா? சாபமா?
இஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை!
எது பெண்ணுரிமை?
இளைய தலைமுறை எதிர்நோக்கும் பிரச்னைகளும் தீர்வுகளும்
தமிழக முஸ்லிம்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய...
இஸ்லாமும் மேற்கத்திய கலாச்சாரமும்
உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் தீர்வுகளும்!
சியோனிசமும் உலக அமைதியும்!
ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்!
பெண்களின் சமூகப்பொறுப்புகள்
நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?
இஸ்லாமிய குடும்பச்சூழல்
இணையமும் இஸ்லாமும்
கல்வியில் உயர்நிலை/மேம்பாடு அடைய
கலாச்சார ஊடுருவல்
குழந்தைகளின் ஆரம்பக்கல்வி இஸ்லாம்!
மீடியாக்களின் மறைத்தலும் திரித்தலும்–தீர்வு என்ன?
ஊடகத்துறையில் முஸ்லிம்களின் பங்கு.
மீடியாவின் முக்கியத்துவம்
அசத்தியம் அன்றும், இன்றும்!
மனித உடல் - இறைவனின் அற்புதம்!
பயங்கரவாதமும் மேற்கத்திய உலகமும்!
போராட்டம் - நிலையான வாழ்விற்குரிய ஒரே வழி!
-------------------------------
கட்டுரைப் போட்டிக்கான விதிகள் :
-------------------------------
1. கட்டுரைப் போட்டியாளர் மேற்கூறப்பட்ட தலைப்புக்களில் குறைந்தபட்சமாக ஒன்றும் அதிகபட்சமாக மூன்று தலைப்புக்களையும் தேர்வு செய்யலாம்.
2. கொடுக்கப்பட்ட தலைப்பைத் தழுவி மட்டுமே கட்டுரை இருக்க வேண்டும்.
3. கட்டுரை ஆக்கியோன் தானே சொந்தமாய் எழுதியதாகவும் முன் எந்தத் தாளிகையிலுமோ இணையத் தளத்திலுமோ வெளியிடப்படாததாகவும் இருக்கவேண்டும்.
4. குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைத் தெளிவாக எண்களுடன் குறிப்பிட வேண்டும்.
5. கட்டுரை கண்ணியமிக்கதாக இருக்க வேண்டும். எந்த நாட்டினதும் சமயம், அரசியல் கட்சி, இயக்கங்கள் ஆகியவற்றையோ தனிமனிதரையோ இழித்துரைப்பதாகவோ தாக்குவதாகவோ இல்லாமல், ஓர் அழகிய இஸ்லாமியப் படைப்பு என்ற தகுதியை நாடுவதாகவும் நயத்துடனும் எழுதப்படவேண்டும்.
6. போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் அனைத்து ஆக்கங்களும் கட்டுரைப்போட்டி குழுவினர்களால் தணிக்கை செய்யப்பட்டு தளத்தில் பதிக்கப்படும்.
7. கட்டுரைப் போட்டியில் பங்குபெறுபவருக்கு வயதிற்கான வரம்பு ஏதுமில்லை.
8. பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அறிவிக்கப்படும்.
9. தமிழ் அறிந்த சர்வதேச அளவிலான அனைத்துலக வாசகர்களுக்கும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
10. சத்தியமார்க்கம்.காம் தளத்தின் நிர்வாகிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், குழு உறுப்பினர்கள், போட்டிகளில் பங்குபெற முடியாது.
11. நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
------------------------------
கட்டுரை எழுதுபவர் கவனத்திற்கு :
------------------------------
1. கட்டுரைகள் ஒருங்குறியிலோ(unicode) அல்லது ஒருங்குறிக்கு மாற்றக்கூடிய எந்த எழுத்துருவில் இருப்பினும் ஏற்றுக்கொள்ளப்படும். கையெழுத்துப் பிரதியை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.
2.கட்டுரையின் எழுத்துரு எண் 10 அளவை தேர்ந்தெடுத்துத் தட்டச்சு செய்யப்பட்டு, A4 தாள் அளவில் மூன்று பக்கங்களுக்குக் குறையாமலும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கட்டுரை வரைவதற்குத் துணை நின்ற நூல்கள், துணை ஆக்கங்களுக்கான குறிப்புக்களைக் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட வேண்டும். இணைய தளத்திலிருந்து எடுக்கப் பட்டிருந்தால் தள முகவரியைக் குறிப்பிட வேண்டும். சுட்டப்படும் ஆதாரங்கள் இணையத்தில் இல்லாத பட்சத்தில், குறிப்பிட்ட ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைக்கலாம். போட்டிக்குச் சமர்ப்பிக்கும் ஒவ்வொரு கட்டுரையின் துவக்கப் பக்கத்தில் கட்டுரைக்கான தலைப்பைக் குறிப்பிட வேண்டும். கட்டுரையைக் கண்டிப்பாக MS WORD Document ஆக சேமித்து இணைத்து மின்னஞ்சல் செய்ய வேண்டும். இதர வடிவங்களில் வந்து சேரும் ஆக்கங்களைப் பரிசீலிக்க இயலாது.
3. குர்ஆன், ஹதீஸ்களை பக்கபலமாக சேர்க்க விரும்புபவர்கள், மிகவும் அவசியப்பட்ட இடங்களில் மட்டுமே சேர்க்கவேண்டும். அதிக அளவில் இறைவசனங்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். இறைவசனங்கள், ஹதீஸ் சம்பவங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட்டு, சொல்லவரும் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சிறப்பு.
4. கட்டுரையாளரின் பெயர் மற்றும் தொடர்பு தொலைபேசி எண்ணிட்டு முழு முகவரியுடன் 10.10.2007 அன்று இந்திய நேரம் இரவு 12 மணிக்குள் அனுப்பிவிட வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு வந்து சேரும் ஆக்கங்கள் போட்டியில் சேர்ப்பிக்கப்படாது.
5. கட்டுரைகளை contest@satyamargam.comThis email address is being protected from spam bots, you need Javascript enabled to view it என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாக மட்டுமே அனுப்பி வைக்கவேண்டும். கட்டுரையாளரின் ஆக்கத்தை நிர்வாகம் பெற்றவுடன் அதை உறுதிப்படுத்தும் செய்தி கட்டுரையாளருக்கு மின்மடல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
6. போட்டியில் பங்குபெறுபவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசு வென்றவர்கள் தவிர்த்து ஏனைய அனைத்து பங்களிப்பாளர்களிலிருந்து ஒருவரைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஊக்கப்பரிசு ஒன்றும் வழங்கப்படும்.
7. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியிடப்படும். வெற்றியாளர்கள் விரும்பினால் அவர்களைப் பற்றிய ஓர் அறிமுகத்தையும் சத்தியமார்க்கம்.காம் வெளியிடும். பெயர்களை வெளியிட விரும்பாதவர்கள் இருப்பின் அவர்கள் வெளியிட விரும்பும் புனைப்பெயர்களின் விபரங்களைக் கட்டுரையின் முடிவில் குறிப்பிட வேண்டும்.
*************************************************************
போட்டி சம்பந்தமான மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர், ஆலோசனை வழங்க விரும்புவோர் நிர்வாகத்தை contest@satyamargam.com This email address is being protected from spam bots, you need Javascript enabled to view it எனும் மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
************************************************************
நன்றிங்க
No comments:
Post a Comment