ஒரே பெண்ணை மணந்து, 7 குழந்தைகளுடன்
குடும்பம் நடத்தும் இரட்டையர்கள்!
திங்கள்கிழமை, செப்டம்பர் 3, 2007
லக்னோ: உ.பி. மாநிலத்தில் இரட்டையரான அண்ணனும், தம்பியும் ஒரே பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, 7 குழந்தைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருவது அந்த மாநிலத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டையராக பிறப்பவர்களுக்கு சிந்தனைகளும், பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரியாக இருப்பது பொதுவான ஒரு குணம். ஆனால் இருவரும் சேர்ந்து ஒரே பெண்ணைக் காதலிப்பது என்பது அபூர்வமான விஷயம். அப்படி ஒரு அபூர்வம் உ.பி. மாநிலம் பாலியா குஜார் கிராமத்தில் நடந்துள்ளது.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்வர்பால் சிங், சந்தர்பால் சிங் ஆகியோர் இரட்டையர். இருவருக்கும் அந்தக் கிராமத்தினர், ராம், ஷியாம் என செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள்.
இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் அன்போடும், பாசத்தோடும் இருப்பார்கள். இரு சகோதரர்களும் பட்ட மேற்படிப்புப் படித்தவர்கள். டெல்லியில் இவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் வேறு வேறு இடத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டியிருந்ததால், நம்மைப் பிரிக்கும் வேலை நமக்கு தேவையில்லை என்று கூறி வேலையையே விட்டு விட்டனர்.
சொந்த ஊருக்குத் திரும்பி விவசாயம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஒருமுறை கன்வர்பால் ஒரு பிரச்சினையில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இதைப் பார்த்த அவரது சகோதரர் சந்தர்பால் போலீஸாருடன் வேண்டும் என்றே சண்டை போட்டு கைதாகி தனது சகோதரருடன் தானும் சிறைக்குச் சென்றாராம்.
சகோதரர்களின் அன்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன போலீஸார் இருவரையும் விடுதலை செய்து விட்டனராம்.
இரு சகோதரர்களுக்கும் இடையே இதுவரை ஒரு சண்டை கூட வந்ததில்லையாம். மனக் கசப்பு ஏற்பட்டதில்லையாம். இருவரும் எப்போதும் சேர்ந்தே இருப்பார்கள். இருவரது உருவ ஒற்றமை கிராமத்தினரை பல சமயங்களில் குழப்பி விடுமாம்.
இந்த நிலையில், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மதுபாலா என்ற பெண்ணின் மீது அண்ணன், தம்பிக்கு காதல் பிறந்துள்ளது. இருவருமே மதுபாலாவை விரும்பினர்.
இருவரும் மதுபாலாவையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டு மதுபாலாவை, அண்ணன், தம்பிக்குத் திருமணம் செய்து வைத்தனர்.
இருவருக்கும் தற்போது 7 குழந்தைகள் உள்ளனர். அதில் மூத்த மகன் கல்லூரியில் படிக்கிறார். இளைய மகனுக்கு 5 வயதுதான் ஆகிறதாம்.
பள்ளி ஆவணங்களில் குழந்தைகளின் தந்தை பெயராக இரு சகோதரர்களின் பெயர்களும் சேர்ந்தே குறிப்பிடப்பட்டுள்ளன.
என்னத்த சொல்றது..!!
நன்றிங்க
அட, ஒன்னும் சொல்றதுக்கு இல்லீங்ணா!!!
2 comments:
eppa saami, kanna kattudhey..............................shhhhhh, ennatha solla
aani உங்கள் வரவுக்கு நன்றி.
அட, ஒன்னும் சொல்றதுக்கு இல்லீங்க!!!
Post a Comment